Advertisement

“தென்றல்…”

“ஓகே க்கா. குட்நைட்…” என சொல்லி போனை சோலையம்மாவிடம் தர,

“என்னம்மா அது உறங்குமா?…”

“சொல்லிருக்கேன் ம்மா…” சோர்ந்த குரலில் அவள் சொல்ல,

“சரி நா பாத்துக்கிடுதேன். நீ உன் சோலியை பாரு. இங்கயே பேசினா அங்க பொழைப்பை யார் பாக்க?…” என்று சொல்லி வைத்துவிட்டார்.

மறுபக்கம் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டதும் போனை வானதியிடம் ஜீவா நீட்ட,

“இப்போ ஓகே வா? வேலையை பார்ப்போமா?…” என கேட்க தலையை அசைத்தவள் கணினியில் இருந்தாலும் உள்ளே சென்றவன் ஏன் இன்னும் வரவில்லை என்று நினைத்துக்கொண்டே இருந்தாள்.

நேரம் பதினொன்றரையை தாண்ட கண்கள் சொருகிக்கொண்டு வந்தது. வானதி இன்னொரு டீயை வரவழைத்து குடிக்க ஜீவா மறுத்துவிட்டாள்.

லேசாய் கண்ணயர முயன்று வந்த உறக்கத்தை விரட்டியபடி அமர்ந்திருந்தாள் ஜீவன்யா.

“தூக்கம் வந்தா நீ ரெஸ்ட் எடு. நான்  பார்த்துக்கறேன். ஏன் இவ்வளோ ஸ்ட்ரெய்ன் பன்ற?…”

“தென்றல் கூப்பிடுவா…”

“கூப்பிட்டா எனக்கு உன்னை எழுப்ப தெரியாதா? தூங்கு. வேலையும் ஆல்மோஸ்ட் முடிஞ்சது. ந்யூ என்ட்ரி வந்தா மட்டும் தான். தூங்கு ஜீவா…” என்றாள் வானதி.

“ஓகே…” என்றவள் மேஜையின் மீதே தலையை கவிழ்த்து கண்ணயர தடுப்பு அவளை மறைத்துக்கொண்டது.

அரைமணி நேரம் கடந்திருக்கும், வானதி மெல்ல எழுந்து கைகளை கழுவ நகர பாலா வந்துவிட்டான் அந்த நேரம்.

ரிசப்ஷனில் வானதியை காணாமல் எட்டி பார்க்க ஒருக்களித்து முகத்தை திருப்பி உறங்கிக்கொண்டிருந்த அந்த கன்னி மயில் மேல் பார்வையை நொடிப்பொழுதில் நிலைக்கவிட்டு விலக்கிக்கொண்டான்.

பின் தனது போனை எடுத்து எதையோ பார்த்துக்கொண்டிருக்க அதற்குள் வானதி வந்துவிட்டாள்.

அவன் நின்ற விதம் பக்கென்று இருந்தது. வானதி வந்த அரவத்தில் அவன் அவளை பார்த்ததும் கூட சற்று கண்டிப்புடன் இருந்தது.

“ஸார்…” படபடப்புடன் அவள் தன் இருக்கையினருகே வந்து கேட்க வானதியை பார்த்தவன் ஜீவாவையும் பார்த்துவிட்டு,

“இங்க உங்களை ரெஸ்ட் எடுக்க வேண்டாம்ன்னு சொல்லி யாரும் சொல்லலை. ஆனா உங்க சீட்டை விட்டு எழுந்து போகும் போது அடுத்த ஸ்டாஃப்பை அலார்ட் பண்ணிட்டு போகனும்னு தெரியாதா?…” என்றவனின் குரலில் வானதிக்கு என்னவோ போல் ஆனது.

அதில் உறக்கம் களைந்து ஜீவாவும் நிமிர்ந்து பார்க்க பாலாவை கண்டதும் கண்ணை நன்றாக துடைத்துவிட்டு வானதியை பார்த்தாள்.

“என்னாச்சு?…” என கேட்க வானதி அவளிடம் ஒன்றும் சொல்லவில்லை.

“ஸாரி ஸார்…” பாலாவை பார்த்து சொல்ல,

“இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும்…” என சொல்லியவன்,

“ரெஸ்ட் எடுக்கனும்னா ஸ்டாஃப் ரூம்க்கு போகலாம்ன்னு இங்க ரூல் இருக்குது தானே?…” என்றதும் ஜீவாவிற்கு முகம் கசங்கி போனது.

இவனிடமேல்லாம் பேச்சு வாங்கவேண்டிய நிலையாகிவிட்டதே என தன்னையே நொந்துகொண்டு பார்த்தாள் பாலாவை.

“இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும்…” என சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.

“ஹப்பா…” என வானதி அக்கடாவென்று அமர்ந்துகொண்டாள்.

“இதென்ன இவன் ஹாஸ்பிட்டலா? இந்த ரூல்ஸ் எல்லாம் இவனுக்கு கிடையாதாமா? நினைச்ச நேரம் வரதும், போறதும்….” என வானதியிடம் கேட்டவள்,

“எல்லாம் உன்னால, நான் உட்கார்ந்தவது இருந்திருப்பேன். அட்லீஸ்ட் என்னை நீ எழுப்பிருக்கலாம் தானே? இப்ப அசிங்கமா போச்சு…”  என புலம்ப அதற்கு சரோவிடம் இருந்து போன்.

“சரோ மேம் கூப்பிடறாங்க. என்னன்னு பேசிட்டு வரேன்…” என வானதி எழுந்து செல்ல,

“வானதி, இது விஷயமாவா?…” என்றாள் ஜீவா.

“ச்சே ச்சே. அதெல்லாம் இருக்காது. வேற ஏதாவதா இருக்கும். வந்திடறேன். நீ ஓகே தானே?…”

“ஹ்ம்ம், ஆல்ரைட்…” என்றதும் வானதி கிளம்பி செல்ல தண்ணீரை குடித்துவிட்டு தென்றலிடம் இருந்து போன் எதுவும் வந்துள்ளதா என பார்த்துக்கொண்டு இருக்க,

“ஹாய்…” என்று மீண்டும் வந்துவிட்டான் பாலமுரளிகிருஷ்ணா.

“தூக்கம் கலைஞ்சிருச்சா?…” என சிரித்துக்கொண்டே கேட்க,

“அது உங்களுக்கு அநாவசியம். ஏன் திரும்ப வந்தீங்க?…”

“இது உங்களுக்கு அநாவசியம்…” என்றான் திருப்பி அவளுக்கு பதிலாய்.

அவனின் பதிலில் எரிச்சல் மிக பார்த்தவள் முகத்தை திருப்ப அங்கே இருந்து கார் கீயை எடுத்துக்கொண்டான்.

அவன் மீண்டும் வந்த காரணம் புரிய ஒன்றும் சொல்லாமல் அவன் ஒருவன் இருப்பதையே சட்டை செய்யாமல் அவள் இருக்க கிளம்ப போனவன்,

“ஆமா என் பேரை என்னன்னு லெட்ஜர்ல என்ட்ரி போட்டீங்க?…” என்றான் வேண்டுமென்றே.

“பூச்சின்னு…” என்று அவள் சொல்லவும் அதுவரை கிண்டலாய் நின்று பேசிக்கொண்டிருந்தான் முகத்தில் குறுஞ்சிரிப்பு படர,

“வெல், குட் நேம். நல்லா இருக்கு…” என சொல்லவும்,

“ஹலோ, இது நீங்க உங்களை சொன்னது. நீங்க என்ன பேர் சொன்னீங்களோ அதை தான் நான் சொன்னேன். என்னவோ நான் பேர் வச்ச மாதிரி இருக்கு உங்க எக்ஸ்ப்ரஷன்…” என பொடுபொடுத்தாள்.

“அதானே உண்மை. நீங்க தானே கேட்டீங்க, வெறும் பூச்சியா இல்லை பிள்ளை பூச்சியான்னு…”

பாலா நக்கலாய் சொல்லவும் எரிச்சலுடன் முகத்தை திருப்பிக்கொண்டாள். அவனை இங்கே சந்தித்த நாளில் இருந்தே இப்படித்தான் ஏடாகூடமாகவே நடந்துகொண்டு இருக்கிறது.

“ஓகே, குட்நைட்…” இனி அவள் பேசமாட்டாள் என்று தெரிந்து கிளம்பிவிட தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

“இப்படியே இருந்தா திரும்ப தூக்கம் வரும்…” பாலாவின் குரல் மீண்டும் கேட்க இன்னும் போகலையா என்பதை போல அவனை தேடினாள்.

வெளியே அவனின் கார் செல்வது தெரிய அதன் பின்னர் தான் சற்றே ஆசுவாசமாய் அமர்ந்தாள் ஜீவா.

————————————————————

அந்த கான்பரென்ஸ் ஹாலே அல்லோலகப்பட்டுக்கொண்டு இருந்தது. காதில் கொய்ங்கென்ற இரைச்சல் சத்தம் வேறு கேட்டுக்கொண்டிருக்க வேடிக்கை பார்த்தபடி கொட்டாவி விட்டான் பாலா.

ஒரே இடத்திற்கு இருவர் போட்டி போட்டுக்கொண்டு இருக்க ஒரு மணிநேரமாய் இந்த வாக்குவாதம்.

இருவருக்கிடையில் ஆரம்பித்தது இப்போது அடுத்தடுத்த சீட்களுக்கும் நடந்தேற அரங்கநாதன் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார் தீவிரமாக.

ஆக்ரோஷமான வாதங்களை வைத்துக்கொண்டிருந்ததென்னவோ ஆளவந்தான் தான்.

அனுபவசாலி, சீனியர், திறமை வாய்ந்தவர் என்று அவருக்கு தன்னை நியாயப்படுத்த என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அத்தனையும் இறக்கிக்கொண்டு இருந்தார்.

ஆதரவாளர்களும் அவருக்கு சார்பாக வாக்குவாதம் செய்ய சந்தைக்கடை போன்று இருந்தது அந்த ஹால்.

இடையிடையே பாலாவை தனக்கு பேச வருமாறு சைகை வேறு செய்தார் ஆளவந்தான்.

அவர் தலையசைத்தால் கண்ணடித்தான். வா என்று வாய்விட்டே அழைத்தால்  இவன் வாய் குவித்தான்.

அவனின் அடாவடியில் இவர் தான் அவ்வப்போது ப்யூஸ் போன பல்பாக அப்படியே திகைத்து நிற்க வேண்டியதாக இருந்தது.

ஆனால் கடைசி வரையிலும் பாலா ஆளவந்தான் சார்பாக பேச வரவில்லை. யாருக்கும் சார்பாகவும் பேசவில்லை.

அழைத்ததற்கு வரவேண்டிய கடமை, வந்துவிட்டேன் என்பதை போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்ன என்ன ஸார் இதெல்லாம்? நீங்க இருக்கும் போதே இவ்வளவு பேசறாங்க. நீங்களும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?…” என்று அரங்கநாதனை தனியே அழைத்து ஆளவந்தான் சொல்ல,

“ஹாய் ஆளு அங்கிள்…” என்று அங்கே வந்தான் பாலமுரளிகிருஷ்ணா.

“ஸார் இவனை பேச வேண்டாம்ன்னு சொல்லுங்க. எனக்காக ஒரு வார்த்தை பேசலை இவன்…”

“என்னை நீங்க கூப்பிடவே இல்லையே?…” என ஆளவந்தானிடம் கேட்டுக்கொண்டே அங்கிருந்த குளிர்பானத்தின் தம்ளரை எடுத்துக்கொள்ள,

“நீங்களும் குடிங்க. மூச்சுவாங்குது…”

“பாருங்க ஸார்…” என்ற ஆளவந்தான்,

“உன்னை நான் கூப்பிட்டும்…”

“நான் கூட டேட்டிங்க்கு கூப்பிடறீங்கன்னு நினைச்சேன். சண்டைக்கா கூப்பிட்டீங்க?…” என்றதும் அப்போதுதான் தண்ணீரை எடுத்து இரண்டு மடக்கு விழுங்கிய ஆளவந்தானுக்கு புரையேறியது.

“டேட்டிங்கா?…” என அதிர்ச்சியுடன் ஆளவந்தான் பார்க்க அரங்கநாதன் திகைத்து போனார்.

“ஆமா, நீங்க கூப்பிட்டது அப்படித்தான் இருந்துச்சு. என்னவோ நான் உன் ஆளா ஆளான்னு கேட்டுட்டு. மனசுல எவ்வளவு ஆசை அங்கிள் உங்களுக்கு….” என்று அவர் கன்னத்தை இடிக்க வேறு செய்தான் பாலா.

“பார்த்தீங்களா? இவன்லாம் என்ன மரியாதை தெரிஞ்சவன்? நான் எதுக்கு கூப்பிட்டா நினைப்பை பாருங்க. நான் பேச கூப்பிட்டா கண்ணடிக்கிறான், முத்தம் குடுக்கற மாதிரி வாயை குவிக்கிறான்…”

“அச்சோ இதுதான் சொல்றேன், உங்க மனசுல என்னவோ வேற ஆசை இருக்குது போல. நீங்க முதல்ல கூப்பிட்டபோ கண்ணு துடிச்சது, அதான் படபடன்னு அடிச்சு பார்த்தேன்…”

“அப்ப வாய்?…”

“அதுவா, ரெண்டாவது கூப்பிட்டப்போ வாய்க்கிட்ட இச்சிங்கா இருந்துச்சு. அது உங்களுக்கு நான் இச்சிங் வச்ச மாதிரி இருந்திருக்கு. இதெல்லாம் காட்சி பிழை ஆளு அங்கிள்…”

“கிருஷ்ணா மரியாதை, மரியாதை…”

“அதான் உங்க மரியாதை உள்ள டர்ர்ர்ருன்னு கிழிஞ்சதே பார்க்கலையா?…”

“கிருஷ்ணா…” பல்லை கடித்தார்.

அரங்கநாதன் இனி அங்கே நிற்கமுடியாது மீண்டும் உள்ளே சென்றுவிட ஆளவந்தான் பாலாவை முறைத்தார்.

“இதுக்கு அந்த கிருஷ்ணனை கும்பிட்டாளாச்சும் நமக்குள்ள ஏதாவது நல்லது நடக்கான்னு பார்ப்போம். போங்க போங்க. போய் உங்க சீட்டை வாங்க பாருங்க. நெக்ஸ்ட் பார்ட்டி குடுக்கணும் ஒரு ரேசார்ட்ல. நான் டேபிள் புக் பன்றேன்…” என்று சொல்லியவன்,

“அப்பறம் ஆளு, நான் வாஷ் ரூம் போறேன். என்னை காணும்னு தேடி தவிக்காதீங்க. போய்ட்டு பைவ் மினிட்ஸ், வந்திருவேன். பை…” என்று சொல்லிவிட்டு அவரின் குண்டு கன்னத்தை தட்டி கிள்ளியவன்,

“சப்பி சீக்ஸ். ஐ லைக் இட்…” என்று சொல்லி செல்ல ஆளவந்தானுக்கு அவனை எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை.

Advertisement