Friday, May 3, 2024

    Viswakarma 42 2

    Viswakarma 42 1

    Viswakarma 41

    Viswakarma 40 2

    Viswakarma 40 1

    Viswakarma

    Viswakarma 28 2

    “அப்போவே அவருக்கு மெயில் பண்ணிட்டேன். நைட் பேசறேன்னு சொல்லியிருக்கார், அவர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன்...” “உங்கம்மா எங்க இருக்காங்க??” “அவங்க வீட்டில இருக்காங்க...” “போகும் போது வீட்டுக்கு கூட்டிட்டு போங்க, அவங்களை பார்த்துட்டு போறேன்...” என்றாள். “அவங்க அவங்களோட வீட்டில இருக்காங்க காஞ்சனா. இங்க நான் தனியா தான் என் பிரண்ட் கூட தங்கியிருக்கேன்...” “ஆபீஸ் இங்க இருந்து கொஞ்சம்...

    Viswakarma 28 1

    28 “என்ன... என்ன கேட்கறீங்க??” “இல்லை ஹிஸ் மை மேன்னு சொன்னீங்களே, யாரை சொல்றீங்கன்னு கேட்டேன்” என்றான் மித்ரன். ‘நான் மனசுக்குள்ள தானே சொல்லிக்கிட்டேன், ஒரு வேளை வெளிய சொல்லிட்டனா...’ என்று புரியாமல் அவனை ஏறிட்டாள். “என்னையா சொன்னீங்க??” “இல்லை நா... நான் ஏதோ யோசிச்சுட்டு இருந்தேன்” என்று இவள் கடுப்பாய் மொழிந்தாள். விஷ்வா காரை எடுத்துக்கொண்டு வர அதில் ஏறிக்கொண்டாள் அவள்....

    Viswakarma 27 2

    “அதுல தனிஷ்க் போல ஷாப் ஒண்ணு கட்டியிருக்கார். அதுக்காக பெஸ்ட் டிசைன்ஸ் எல்லாம் தேடிட்டு இருந்தோம், அப்போ உங்களோடது பார்த்திட்டு இவன் சொன்னான். அதுக்காக தான் பேசலாம்ன்னு உங்களை இங்க கூப்பிட்டது...” “அப்புறம்...” என்றாள் அவள் கதை கேட்கும் பாவனையில். “நான் உங்களுக்கு கதை சொல்ல கூப்பிடலை, ஷோ மீ யூவர் மாடல்ஸ்” என்றான் அதிகாரமாய். “காட்ட முடியாது...” “வந்த...

    Viswakarma 27 1

    27 விஜய் காஞ்சனாவை அழைத்துக் கொண்டு அவன் அலுவலகத்திற்குள் நுழைந்தான். அது கட்டுமானக் கம்பெனி போல அவளுக்கு தோன்றியது. ‘இந்த கம்பெனி வைச்சுட்டு நம்மளை ஏன் இவங்க கூப்பிட்டாங்க’ என்ற யோசனை அவள் சிந்தனையை குடைய அவன் பின்னே சென்றாள். “இந்த ரூம்ல வெயிட் பண்ணுங்க. எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு நான் முடிச்சிட்டு வந்திடறேன், என்னோட பிரண்டு...

    Viswakarma 25 1

    25 “விஜய்” “சொல்லுடா” “இன்னைக்கு உனக்கு ஒரு இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கு தெரியும்ல...” “ஹ்ம்ம் அதெப்படி மறப்பேன்... நான் பார்த்துக்கறேன், யூ டோன்ட் வொரி மேன்...” “தேங்க்ஸ்டா...” “போடா...” “சரி நேத்து சங்கவியை ரொம்ப திட்டிட்ட போல...” “பின்னே கோபம் வராதாடா... நானும் பொறுமையா தான் இருக்கேன், என்னை ரொம்ப கடுப்பேத்துறா?? ஒரு இடத்துக்கு போகணும்ன்னா சரியான நேரத்துல போக வேண்டாமா இப்படி இருந்தா எப்படிடா??” “அவ...

    Viswakarma 24 2

    காஞ்சனா கன்னியாகுமரி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தாள். இரு கரம் கூப்பி அந்த அம்மனை பார்த்து மனதார வேண்டிக் கொண்டிருந்தாள். ‘ஏன்மா உனக்கு என் மேல கோபம். நான் செஞ்சது தப்பு தான் அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திட்டியேம்மா... நானும் உன்னை மாதிரி தனியாவே இருந்திடுவேனாம்மா...’ என்று சொல்லும் போது கண்களில் மாலை மாலையாய் கண்ணீர்...

    Viswakarma 24 1

    24 சங்கவி அழகான மும்பை தமிழ் பெண். ஜீன்ஸ் குர்த்தா தான் எப்போதும் அவள் அணியும் உடை. மித்ரன் அவளுக்கு விஜயின் மூலமாக அறிமுகம். விஜய் அவளின் அத்தை மகன். அவள் தந்தை தமிழ்நாடு, தாய் மும்பை தமிழர். அவர்களின் அலுவலகம் இருந்த அந்த கட்டிடம் அவளின் தந்தைக்கும் விஜயின் தந்தைக்கும் சொந்தமானது ஆகும். விஜயின் தந்தை சங்கவியின்...

    Viswakarma 23

    23 வருடம் ஒன்று கடந்து போனது. இதே நாளில் தான் விஸ்வா வீட்டைவிட்டு சென்றிருந்தான்.  காஞ்சனா அதை நினைத்து மருகாத நாளில்லை. அவன் வீட்டை விட்டு சென்ற அன்று அவனை நினைத்து நினைத்து அழுதாள். அன்றைய நாள் இன்றும் படம் போல் அவள் முன் தோன்றியது.  வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்று சொன்னதுமே “விஷ்வா எங்கே போறீங்க??” என்றாள் காஞ்சனா. “நீங்க...

    Viswakarma 22 2

    “தெரியும்ப்பா... நீங்களும் பாட்டியும் சின்ன வயசுல இருந்து சொல்லிட்டே இருப்பீங்களே, அத்தையோட பையன் தானேப்பா...” என்று சொன்ன போது லேசாய் ஒரு வெட்கம் வந்தது அவளுக்கு. அதை கண்டுகொண்டார் பெற்றவர். “உங்க தாத்தாவுக்கு உன்னை விஸ்வாவுக்கு கட்டிக் கொடுக்கணும்ன்னு ஆசை...” “என்னப்பா சொல்றீங்க?? நான் பிறக்கும் போதே தாத்தா உயிரோட இல்லை, அப்புறம் எப்படி தாத்தாக்கு அந்த...

    Viswakarma 22 1

    22 அப்போதும் கூட கனகுவும் ரத்தினவேலும் சும்மாயிருக்கவில்லை ஏதாவதொரு விதத்தில் தொந்திரவு செய்துக் கொண்டு தானிருந்தனர். பொறுத்து பார்த்தவர் வேறு கடைக்கு மாறிவிட்டார். அவர் மனைவி மனோரஞ்சிதமும் உடல் நலக்குறைவால் இறந்துவிட அதன் பின் பிள்ளைக்களுக்கென வாழ ஆரம்பித்தார் அவர். தேவி மூன்று குழந்தைகளையும் ஒரே மாதிரி தான் பார்த்துக் கொண்டார். அவருக்கு, விஸ்வா வேறு, ராதிகா வேறு,...

    Viswakarma 21 2

    “உனக்கும் வாழ்க்கையில என்ன பிடிப்பு இருக்கு. உன்னோட மாமனாரும் உடம்பு சரியில்லாம இருக்காரு. நாளைக்கு உங்கண்ணனுக்கு கல்யாணம் ஆகிப்போச்சுன்னா அவன்கிட்ட போய் நிக்க முடியுமா சொல்லு...” “நீ வெளிய போய் வேலை பாக்குற அளவுக்கு உன்னைய நான் படிக்க வைக்காம விட்டுட்டேனேடா... உனக்குன்னு என்ன இருக்கு...” “இந்த கடை இருக்குலப்பா அதை நான் பார்த்துக்க மாட்டேனா??” “உனக்கு அங்க...

    Viswakarma 21 1

    21 மாலை தேவி விளக்கேற்றி சாமி கும்பிட்டு குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். தேவியின் அன்னை குழந்தைக்கு ஐந்து மாதம் முடிந்ததுமே தங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டார். தேவி வீட்டிற்கு வந்ததும் கதிர்வேலும் வழமை போல் தங்கள் கடைக்கு செல்லவாரம்பித்தார். தேவி குழந்தைக்கு பாலைக் கொடுத்து தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க விஸ்வா உறங்கியிருந்தான். குழந்தையை படுக்க வைத்துவிட்டு வாயிலை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்...

    Viswakarma 20 2

    குமரனின் மனைவி குழந்தையை தூக்கி வைத்திருக்க வேலு அவர் அருகில் சென்று தன் குழந்தையை பார்த்தான். தன்னை கொண்டு தன் மகன் பிறந்திருக்கிறான் என்பதில் அவ்வளவு ஆனந்தம் அவருக்கு. விஷயம் கேள்விப்பட்டு கதிர்வேலும் அப்போது தான் அங்கு வந்து சேர்ந்தார். தன் பேரக்குழந்தையை கண்டவருக்கு மகிழ்ச்சி கொள்ளவில்லை. அவர்கள் இப்படி நின்றிருந்த வேளையில் தான் கனகவேல் அவசர...

    Viswakarma 20 1

    20 “காஞ்சனா” அதட்டினான் விஸ்வா. “நீங்க பேசாம இருங்க, நீங்க இப்படி இருக்க போய் தான் இவங்க ஏய்ச்சுட்டு திரியறாங்க. ஒரு குமரனும், சங்கரனும், வேலுவும் போதும் நீங்களும் ஏமாந்திட்டு நிக்காதீங்க...” என்றாள் படபடவென்று. அவள் சொல்லிய பெயர்களை கேட்ட பெரியவரும் அவர்களின் பிள்ளைகளும் அவளையே வெறித்திருக்க விஸ்வாவிற்கு வேலுவை தவிர யாருமே தெரியவில்லை. அதுவும் கூட வேலு...

    Viswakarma 19 2

    “நீ எங்கிருந்து வந்தே??” அவர் கேள்வியே சொன்னது அவர் இவளைப் பற்றி தெரிந்தே தான் கேட்கிறார் என்று.  அமுதன் ரேகா திருமணத்தின் போதே யாரேனும் கேட்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தாள்.  “உங்களுக்கு தான் தெரிஞ்சிருக்கே பாட்டி” என்றாள். “எதுக்காக??” “அதுவும் உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே??” “வேணாமே...” “வேணாம்ன்னு தானே போனோம். தேடி வந்து அடிச்சா தப்பில்லையா...” பாட்டியிடம் பதிலில்லை பின் மெதுவாய் “சகுந்தலாக்கு தெரியுமா??” என்றார். “அதை நீங்க அவங்ககிட்ட...

    Viswakarma 19 1

    19 முதல் நாள் சண்டைக்கு பிறகு மறுநாள் இருவருக்குமே ஒரு சவாலான பொழுதாகவே விடிந்திருந்தது. தனித்து சமைக்க போகிறோம் என்று சொல்லியாயிற்று. அதற்கு தேவையானது எதுவுமே அந்த வீட்டில் இல்லை. “காஞ்ச்சு...” “சொல்லுங்க...” “இல்லை வீட்டில எந்த திங்க்ஸ் இல்லை, இன்னைக்கு காலையில டிபன் நான் கடையில வாங்கிட்டு வந்திடறேன், ஈவினிங் சீக்கிரம் வந்து நமக்கு தேவையானது எல்லாம் வாங்கிட்டு...

    Viswakarma 18

    18 “தம்பி... தம்பி...” என்ற குரல் தடுக்க கடைக்குள் நுழையச் சென்றவன் திரும்பி பார்த்தான். அங்கிருந்தவரை எங்கோ பார்த்தது போல இருந்தது. “என்ன தம்பி என்னை அடையாளம் தெரியலையா??” “பார்த்தா மாதிரி இருக்கு, சாரிங்க ஞாபகமில்லை...” “நான் உங்களுக்கு தூரத்து சொந்தம் தான் தம்பி, மாமா முறையாகணும். உங்க பெரியம்மா எனக்கு அக்கா முறையாவுதுங்க...” “ஓ!!” “என்ன தம்பி இப்படி பண்ணிட்டீங்க??” “என்ன பண்ணேன்??” “திடுதிப்புன்னு...

    Viswakarma 17 2

    “நம்ம பேத்தியோட கடையையும் நம்ம கடையோட இணைச்சுட்டா என்ன. நமக்கும் சென்னையில ஒரு கடை இருந்தா நல்லா தானே இருக்கும்” “அங்க நாம புதுசா ஒரு கடை பார்த்து எல்லாம் ரெடி பண்ணி செய்யறதுக்கு நம்ம நேம் போர்டு அங்கயும் செஞ்சிட்டா என்ன?? ஏம்மா காஞ்சனா உனக்கு அதுல எதுவும் ஆட்சேபனை இருக்காம்மா??” என்று இப்போது...

    Viswakarma 17 1

    17 காஞ்சனா உள்ளே சென்றிருக்க விஸ்வா ஒரு முடிவோடு இருந்தான் இன்று எதுவும் தெரியாமல் விடப்போவதில்லை என்று. அவன் எழுந்து அவள் பின்னோடு சென்றான்.  காஞ்சனா சன்னலை வெறித்தவாறே நின்றிருந்தாள். இவன் வரும் அரவம் கேட்க திரும்பி நின்றாள். “விஷ்வா நான் கேக்கறதுக்கு நீங்க பதில் சொல்லுங்க??” “நான் கேள்வி கேட்டா நீ பதில் சொல்ல மாட்டே?? ஆனா நீ...

    Viswakarma 16

    16 “விஷ்வா...” வெகு நாளைக்கு பிறகான அவளின் அழைப்பு அவன் நடையை தடை செய்தது. கடுமை கண்டிருந்த முகத்தில் இப்போது மென்மையின் சாயல் தெரிவதாய். “எதுக்கு இப்படி நடக்கறீங்க?? வந்து படுங்க...” அவளின் கேள்வி அவனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்திருந்தது, முகம் இறுக “நான் இப்போ படுக்கற நிலையில இல்லை...” “அதான் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிடுச்சுல்ல விஷ்வா...” அவளின் அந்த அழைப்பு...
    error: Content is protected !!