Advertisement

“தெரியாது, நான் யார் வீட்டுக்கும் போனதில்லை. ரூம்ல தான் ஸ்டே, தென் படிக்கப் போவேன் அவ்வளவு தான் என் ஆக்ட்டிவிட்டிஸ் எல்லாம்”
“விஜய் தமிழ் அப்படிங்கறதுனால தான் பேசவே ஆரம்பிச்சோம். அவன் வேற படிக்க வந்தான், நான் வேற படிக்க போனேன்”

“கடைசியில ரெண்டு பேரும் சேர்ந்து இன்டீரியர் டிசைனிங் ஒண்ணா சேர்ந்து படிச்சோம் ஒரு ஆறு மாசம். என்னை எனக்காகவே நேசிச்ச உறவு அவன். அவனோட நட்பு தன்னலமில்லாதது” என்று சொல்லும் போது பெருமையாய் உணர்ந்தான்.
“இவ்வளவு தான் எங்க பிரண்ட்ஷிப் கதை”

“சங்கவிக்கு கூடவா தெரியாது??”
“சங்கவியையே எனக்கு இந்த ஒரு வருஷமா தான் தெரியும்”
“அ… அவ… அவங்களுக்கு முதல்ல உங்களை தான் பி… பிடிச்சுதா” என்று எங்கோ பார்த்துக் கொண்டு கேட்டாள்.
விஸ்வா அவளை தன் புறம் திருப்பி அவள் விழிகளோடு கலந்தவன் “அவ சின்னப்பொண்ணு காஞ்ச்சு என்னை பார்த்ததும் ஒரு அட்ராக்ஷன் அவ்வளவு தான் அது லவ் இல்லைன்னு அவளுக்கு தெரியலை. இட்ஸ் ஜஸ்ட் ஹீரோ வொர்ஷிப், அவளுக்கு கூடவே வளர்ந்த விஜய் மேல தான் லவ்”
“அது அவளுக்கே புரியலை. சும்மா என் பின்னாடி சுத்திட்டு இருந்தா, நான் வேணான்னு சொல்லவும் பிடிவாதம் வேணும்ன்னு”
“நிஜமாவே அவ்வளவு தானா??”
“நீ என்னை நம்பலையா??”

“சங்கவி பத்தி எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனா நீங்க என்னை ரொம்பவே வெறுப்பேத்துனீங்க தானே… கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு. அந்த பொண்ணு ஷிவானி உங்களை கிஸ் பண்ணா. அப்புறம் அந்த காஜல் உங்க கையை பிடிச்சுட்டு நின்னா”
“நான் மித்ரன்னு நிரூபிக்க சும்மா விளையாட்டு பண்ணேன். அப்புறம் ஷிவானி கிஸ் பண்ணதுலாம் தப்பா எடுத்துக்காதே, அதெல்லாம் அங்க கொஞ்சம் சகஜம்”
“எனக்கு அது சகஜமில்லை”
“சரி இனி அது போல நடக்காது போதுமா”
“ஹ்ம்ம்…”
“அதான் நீ கேட்டது எல்லாம் சொல்லிட்டனே”
“ஹ்ம்ம்…”
“எனக்கு…” என்று அவன் ஆரம்பிக்கும் போதே அவன் வாயை அவள் கரங்களால் மூடினாள் “போதும் விஷ்வா அதே சொல்லி என் மானத்தை வாங்காதீங்க”
“நோ நோ மை டியர், இனி இதை வைச்சு தான் நம்ம முழு வாழ்க்கையும் ஓட்டுவேன். எனக்கு எப்போலாம் தோணுதோ அப்போலாம் இந்த கதை சொல்வேன், நீயா வந்து கொடுத்திட்டா சேதாரம் இல்லாம போகும். நானா ஆரம்பிச்சா சேதாரம் பலமா இருக்கும்” என்றான் அவன் குறும்பாய்.
“விஷ்வா உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்ன்னு நினைச்சேன்”
“என்ன??”
“அந்த செயின்??” என்று அவள் கேட்க “ஒரு நிமிஷம் இங்கயே இரு” என்றுவிட்டு வேகமாய் கீழே சென்றவன் அதே வேகத்துடன் சில நொடிகளில் கையில் ஒரு சிறு நகைப்பெட்டியுடன் வந்தான்.
“என்ன விஷ்வா இது??”
“இரு” என்றவன் அதை திறந்து அதில் இருந்த தாலி செயினை எடுத்துக்காட்ட காஞ்சனா சிலையாக நின்றாள்.
கண்களில் குளமாகிவிட்டது ஒரு நொடியில். “ஹேய் என்னாச்சு?? அப்படியே நிக்கறே?? இது என்னன்னு உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா” என்று கேட்க அவள் தலையாட்டினாள்.
“எப்போ செஞ்சேன்னு தெரியுமா?? இதை வரைஞ்ச கொஞ்ச நாள்லேயே செஞ்சு வைச்சுட்டேன். ஆனா அப்போ நீ தான் தனியா தவிக்கவிட்டு போய்ட்ட” என்று அவன் சொல்ல அவள் அவனை எட்டி கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்தாள்.
“ஐ லவ் யூ விஷ்வா” என்று அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.
“நல்ல நாள் பார்த்து தாலியை இதுல கோர்த்து போட்டுக்கோ” என்று அவளிடம் கொடுத்தான்.
“அப்புறம் அதுல நீ கொடுத்த செயினும் இருக்கு, அதை நீயே என் கழுத்துல போட்டுவிடு” என்றான்.
“அப்போ நான் உங்களுக்கு தாலி கட்டுறனா??”
“ஆமா அப்படின்னு கூட வைச்சுக்கலாம், எங்க போட்டு விடு பார்ப்போம்” என்றான்.
அவள் அதை எடுத்து அவன் கழுத்தில் மாட்டிவிட விஸ்வா அவளை இறுக்கமாய் அணைத்திருந்தான். “ஆமா அந்த கேமரா வைச்ச டாலரை எப்படி அம்மா எனக்கு போட்டுவிட்டாங்க அதை நீ சொல்லவே இல்லையே”
“உங்களுக்கு பிரியா தெரியும்ல நம்ம தக்கலை கடையில தான் இருந்தா. கொஞ்ச நாள் நானும் அவளும் ஒண்ணா தான் வேலை பார்த்தோம்”
“அப்போ தான் அவ எனக்கு பழக்கம், அவ கன்னியாகுமரி கடைக்கு மாறிட்டா அப்போ. அத்தை சரியான முருகர் பைத்தியம்ன்னு எனக்கு தெரியும். அதனால தான் அவங்க ஒரு நாள் கடைக்கு வந்தப்போ அவங்க பார்வையில படுற மாதிரி அந்த முருகர் டாலரை வைக்க சொன்னேன்”
“எனக்கு தெரியும் வருஷத்துல ஒரு நாள் வீட்டுல இருக்கற லேடிஸ் எல்லாம் நீங்க கடைக்கு கூட்டிட்டு வருவீங்கன்னு. அதை வைச்சு தான் அப்படி செஞ்சேன்”
“அன்னைக்கு உங்க பிறந்தநாளா இருக்கவும், அத்தையும் உங்களுக்கு அந்த டாலர் வாங்கி பரிசா கொடுத்திட்டாங்க”
“விஷ்வா போதுமே ரொம்ப நேரமாச்சு போய் தூங்கலாம்…” என்று அவள் விலகப் போக, “மேடம் இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்” என்றான் அவன்.
“விஷ்வா” என்று சிணுங்கினாள் அவள்.
“பின்னே நீ என் கழுத்துல தாலி கட்டியிருக்க அப்போ நமக்கு இன்னைக்கு பர்ஸ்ட் நைட் தானே” என்று அவன் சொல்ல “ஆளை விடுங்க சாமி, எனக்கு இப்போ தூங்கணும்” என்றாள் அவள்.
அவள் காதில் ரகசியமாய் “எனக்கு என்னமோ நீ சொல்றதை கேட்கும் போது தூங்கணும்ன்னு கேட்கலை, தொடங்கணும்ன்னு கேட்குது” என்று சொல்ல அவள் முகம் சிவந்தது.
——————–
“ஏன்டா ஒரு பிளாஷ்பேக் தானே கேட்டேன், அதுக்கு எதுக்கு இம்புட்டு நீளமா இழுத்து ஒரு எபிசோட் முடிஞ்சிருச்சு போ…” என்றான் விஜய் கிண்டலாய்.
“அடேய் உனக்கு போய் சொன்னேன் பாரு” என்று தலையில் அடித்துக் கொண்டான் விஸ்வா.
மறக்காமல் தன் நண்பனை வீட்டிற்கு வருமாறு மீண்டுமொருமுறை அழைத்துவிட்டு சங்கவிக்கும் போன் செய்து அழைப்பு விடுத்தான்.
——————–
ரம்யா, சௌம்யா தான் வருவார்கள் என்று காஞ்சனா சொல்லியிருக்க உடன் சரவணனும் கார்த்திக்கும் வந்தது விஸ்வா எதிர்பார்த்திருக்கவில்லை. காஞ்சானாவின் குரல் கேட்டு அவனும் எழுந்து வாயிலுக்கு வந்திருந்தான். 
அவன் திரும்பி காஞ்சனாவை பார்க்க அவளுமே அதிர்ச்சியாய் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்பது தானே முறை இருவருமே வாயார “வாங்க…” என்றழைத்து உபசரித்தனர் அவர்களை.
“என்ன விச்சு நாங்க எல்லாரும் ஒண்ணா வந்ததை பார்த்ததும் பேச்சே வரலை போல…” என்றாள் ரம்யா.
“அப்படியெல்லாம் இல்லை… நீங்க எல்லாரும் வரணும்ன்னு தானே நாங்க விரும்பினோம். இப்படி நீங்க சேர்ந்து வந்தது எனக்கும் சந்தோசமா தான் இருக்கு” என்றான் விஸ்வகர்மா.
காஞ்சனா அவர்களுக்கு குடிக்க ஜூஸ் கொண்டு வந்திருந்தாள். வந்ததில் இருந்து சரவணனும், கார்த்திக்கும் அதிகம் பேசவில்லை.
ரம்யாவும் சௌம்யாவும் தான் காஞ்சனாவிடம் வளவளத்துக் கொண்டிருந்தனர். தங்கள் வீட்டில் அவர்கள் இப்படியெல்லாம் பேசி அண்ணன் தம்பி இருவரும் பார்த்ததில்லை.
அவர்களே ஆச்சரியமாய் தான் பார்த்தனர் தங்கள் மனைவிமார்களை. அதை கண்டுவிட்டு விஸ்வா லேசாய் சிரித்துக் கொண்டான்.
அவர்கள் ஏதோ பேசத்தான் வந்திருக்கிறார்கள் என்று தெரியும். அவர்களாய் ஆரம்பிக்கட்டுமே என்று அமைதியாய் இருந்தான் விஸ்வகர்மா.
“என்னங்க உங்க வாய்ல என்ன கொழுக்கட்டையா இருக்கு. உங்க தம்பிகிட்ட பேசத்தானே வந்தீங்க. அதைவிட்டு பேசாம எங்களை வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க”
“ஏன் காஞ்ச், நீ ஜூஸ் தானே இவங்களுக்கு கொடுத்தே, கோந்து ஒண்ணும் கொடுக்கலையே. வாய் ஒட்டிக்கிச்சா என்ன” என்று ரம்யா பேச சௌம்யாவும் அதை ஆமோதித்தாள்.
“என்ன பேசன்னு எனக்கு தெரியலை?? நீயே பேசு கார்த்தி” என்றான் சரவணன்.
“என்ன விஷயம்??” என்றான் இப்போது விஸ்வா அவர்களை பார்த்து நேரிடையாக.
“உன்கிட்ட சண்டை போடவெல்லாம் ஈசியா வருது…”
“சரி…”
“ஆனா இதை எப்படி பேசன்னு எனக்கு தெரியலை…”
“எதை பேச??”
“அப்பாவும் தாத்தாவும் பண்ணதை பத்தி தான்…”
“புரியலை எனக்கு??”
“நீ எப்படி அவங்க பண்ணதை எல்லாம் கேட்டுட்டு பொறுமையா வந்தே?? இதுவே நாங்களா இருந்தா இப்படியெல்லாம் அமைதியா இருந்திருக்க மாட்டோம் விஸ்வா” என்றான் சரவணன்.
“நீங்க இன்னும் கொஞ்சம் தெளிவா பேசலாமே??”
“நாங்க இப்போ உன்கிட்ட சாரி எல்லாம் கேட்க வரலை, எங்களுக்கு அது வரவும் வராது. ஆனா மனசு கேட்கலை அதான் உன்னை பார்க்கக் வந்தோம், நீயும் எங்களோட தான் வளர்ந்தே”
“உன்னை எங்களுக்கு பிடிக்காம எல்லாம் இல்லை விச்சு. உன்னை உயர்த்தி பேசி பேசி எங்களை இப்படி ஆக்கி வைச்சதே அவங்க தான்…”
“அதனால தான் எல்லாத்துக்கு அடம், பிடிவாதம், முரட்டுத்தனம் எல்லாமே எங்ககிட்ட அதிகமாச்சு. உன்னை கீழே தள்ளி மேல வரணும்ன்னு நாங்க என்னைக்குமே நினைச்சதில்லை. அதை சொல்லிட்டு போகலாம்ன்னு தான் வந்தோம்…”
“இப்பவும் உன்னை பார்த்தா எங்களுக்கு பொறாமையா தான் இருக்கு. ஒண்ணுமே இல்லாம தான் ஊரைவிட்டு போனே, ஆனா நீ நல்லாவே இருக்க, வீடு வாங்கி இருக்க, எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா எங்களுக்கு”
“உன்னை பார்த்து கத்துக்கணும்ன்னு சின்ன வயசுல அவங்க சொன்னதை நாங்க சரியா புரிஞ்சுக்கலை அதான் இப்படி வளர்ந்து நிக்கறோம். எங்களுக்கு அப்போ பொறாமை மட்டும் தான் இருந்துச்சு”
“எனக்கு இவ்வளவு டயலாக் எல்லாம் பேசியே பழக்கமில்லை. கடைசியா ஒண்ணு சொல்றேன் விச்சு, உனக்காக யாருமில்லைன்னு நீ நினைக்க வேணாம். நாங்க இருக்கோம், இருப்போம்” என்றான் கார்த்திக்.
“தாத்தாவும் அப்பாவும் சாகற வரை இப்படித்தான் இருப்பாங்க. சித்தப்பாவும் அவங்களோட சேர்ந்து உங்களுக்கு கஷ்டம் கொடுத்திட்டார்ன்னு நினைச்சு அவரை கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டோம்”
“ஆனா அவரு தாத்தா, அப்பா மாதிரியில்லைன்னு அப்புறம் தான் புரிஞ்சது. நாங்களும் ஒண்ணும் நல்லவங்க இல்லை தான், ஆனா உனக்கு நாங்க எந்த கெடுதலும் கேடும் எப்பவும் நினைக்க மாட்டோம் இனி. அதை உன்கிட்ட சொல்லத்தான் வந்தோம்”
“நாங்க கிளம்பறோம், ரம்யாவும் சௌம்யாவும் இங்க இருந்திட்டு சாயங்காலம் வீட்டுக்கு வரட்டும்…” என்று இருவரும் எழ அதுவரை அவர்கள் பேச்சில் குறுக்கே புகாத விஸ்வாவும் காஞ்சனாவும் ஒரு சேர பேசினர்.
“இருந்து சாப்பிட்டு ஒண்ணாவே கிளம்புங்க” என்று.
கார்த்திக்கிற்கும் சரவணனுக்கும் காஞ்சனாவின் முகம் பார்க்கவே முடியவில்லை. எங்கோ பார்த்துக் கொண்டு அவர்கள் இவளிடம் பேச முயல “உங்களுக்கு சாரி கேட்க வராதுன்னு இவர்கிட்ட சொன்னதை நானும் கேட்டேன்” 
“உங்க சாரி எங்களுக்கு வேணாம். நீங்க திடீர்ன்னு எல்லாம் திருந்திட்டீங்கன்னு சொன்னா நான் மட்டுமில்லை, இந்த ஊரே நம்பாது. ரம்யாக்காவும், சௌம்யாக்காவும் உங்களை நம்பறாங்க”
“உங்களோட தப்பான சில விஷயங்களை நீங்க இவங்களுக்காக மாத்திக்கோங்க. உங்களை நம்பி தான் வந்திருக்காங்க, அவங்களை சந்தோசமா வைச்சுக்கோங்க”
“நாங்க பேசினதை நீ நம்பலைன்னு நினைக்கிறேன்” என்றான் கார்த்திக்.
“இவர் விஷயத்துல நீங்க பேசின எல்லாமே உண்மைன்னு நானும் நம்பறேன், இவரும் நம்புறாரு. சந்தேகம்ன்னா உங்க தம்பியை நீங்களே கேளுங்க” என்றாள் அருகில் நின்றிருந்தவனை பார்த்து.
“இங்க பாருங்கண்ணா உங்க ரெண்டு பேர் மேல மட்டுமில்லை யார் மேலயும் எனக்கு வருத்தமில்லை. உங்க பேச்சுல உண்மை இருக்குன்னு நம்புறேன், இதை இத்தோட விட்டிருவோம்” என்றான் விஸ்வா.
“இல்லை நாங்க தாத்தாகிட்ட சொத்து எழுதி தரச்சொல்லி கேட்டிருக்கோம். வந்ததும் உன் பேர்…” என்று சொன்ன சரவணன் உண்மையிலேயே அதை மனமார சொல்லியிருக்கவில்லை.
நன்றாய் அதிகாரம் செய்தும் செலவு செய்தும் பழக்கப்பட்டவர்கள், அதெல்லாம் ஒரே நாளில் இழந்துவிட அவர்கள் விரும்பியிருக்கவில்லை. ஆனால் விஸ்வா விஷயத்தில் வீட்டினர் செய்ததை அவர்களால் ஒரேதாய் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.
ஆனாலும் ரம்யாவும் சௌம்யாவும் சில மாதங்களாகவே தங்கள் கணவர்களிடம் பேசி பேசி அவர்களை கொஞ்சம் மாற்றியிருந்தனர். ஒரேடியாய் எல்லாம் அவர்கள் மாறியிருக்கவில்லை.
ஆனால் விஸ்வாவின் பேச்சு, பொறுமை, அவனின் நல்ல மனது அவர்களுக்கு வராது என்று மட்டும் நன்றாகவே உணர்ந்தனர் இருவருமே.
“அந்த மாதிரி எல்லாம் செய்யாதீங்க. கொடுத்தது கொடுத்தது தான், அது எனக்கு எப்பவும் தேவையில்லை”
“அது உன்னோ…” என்று கார்த்திக் சொல்ல விஸ்வா இடையிட்டான்.
“நாம எல்லாருமே அதுல நம்மை உழைப்பை போட்டிருக்கோம். எங்க தாத்தா கொடுத்தார் ஆனா அதை காப்பாத்தினது உங்க தாத்தா, உங்கப்பா, செந்திலப்பா தானே…” என்று உங்க என்பதில் அவன் கொடுத்த அழுத்தத்திலேயே புரிந்தது அவன் அவர்களை எட்டவே நிறுத்திவிட்டான் என்று.
“இனி சொத்தை பத்தி பேசவே வேணாம். எனக்கு உங்களோட உறவு மட்டும் போதும், நீங்க எப்பவும் இங்க வரலாம் போகலாம்” என்றுவிட்டு தன் மனைவியை பார்க்க அவளும் திருப்தியாய் அவனை பார்த்தாள்.
அதன்பின் அவர்கள் இருந்து சாப்பிட்டு கிளம்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற பின்னே விஸ்வாவை தேடி வந்தாள் காஞ்சனா. அவன் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான் நிலவை பார்த்தபடி. 
அவனிடம் கார்த்திக், சரவணன் வந்ததை பற்றியும் அவர்கள் பேசியதை பற்றியும் அவள் கேட்க விஸ்வாவோ “அவங்க வருவாங்கன்னு எனக்கு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரம் வந்தது அதிர்ச்சி தான்”
“உங்களுக்கு எப்படி தெரியும் அவங்க வருவாங்கன்னு”
“ஒருத்தன் வாழ்க்கையில ஒரு முறை ஏமாந்து இருக்கலாம், எப்பவும் ஏமாளியா தான் இருக்கக்கூடாது” என்றான் புதிராய்.

Advertisement