Advertisement

23
வருடம் ஒன்று கடந்து போனது. இதே நாளில் தான் விஸ்வா வீட்டைவிட்டு சென்றிருந்தான். 
காஞ்சனா அதை நினைத்து மருகாத நாளில்லை. அவன் வீட்டை விட்டு சென்ற அன்று அவனை நினைத்து நினைத்து அழுதாள்.
அன்றைய நாள் இன்றும் படம் போல் அவள் முன் தோன்றியது. 
வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்று சொன்னதுமே “விஷ்வா எங்கே போறீங்க??” என்றாள் காஞ்சனா.
“நீங்க யாருமே இல்லாத இடத்துக்கு போறேன்…”

“விஷ்வா ப்ளீஸ், நான் உங்ககிட்ட பேசணும்…”
“தேவையில்லை. எனக்கு யாரோடையும் பேச வேணாம். நான் இந்த வீட்டில பிறந்தது தவிர வேற என்ன தப்பு செஞ்சேன்”
“என்னை ஏன் எல்லாரும் இப்படி தூக்கிப்போட்டு பந்தாடினீங்க…”
“ஒரு உறவு கூட எனக்கு உண்மையாவே இல்லை. எல்லாருமே நடிச்சு இருக்கீங்க…”
“விஸ்வா…” என்றார் சகுந்தலா கரகரத்த குரலில்.
“இல்லைம்மா நீங்க கூட என்கிட்ட உண்மையா இல்லை. என்கிட்ட சொல்லியிருக்கலாம்லம்மா… நான் என்ன உங்களை இங்க இருந்து பிரிச்சி கூட்டிட்டு போய் இருப்பேனா என்ன…”
“யாருமே என்னை நம்பலை…” நீண்ட நெடிய பெருமூச்சை விட்டவன் “என்னை விட்டிடுங்க…”
“எங்க விஷ்வா?? அதெல்லாம் முடியாது…”
“வேணாம் காஞ்சனா நாம பேச வேணாம். எனக்கு வர்ற கோபத்துக்கு உன்னை என்ன செய்வேன்னு சொல்ல முடியாது. நீ இப்போ பேசாம இருக்கறது தான் உனக்கு நல்லது…”
“நான் எங்கயோ போறேன் இப்போதைக்கு திரும்பி வரமாட்டேன். நல்லா தெரிஞ்சுக்கோங்க, உங்க மேல உள்ள கோவத்துல நான் போகலை, வருத்ததுல தான் போகறேன்”
“என்னோட ஏமாந்த முகத்தை உங்க முன்னாடி யாருக்கும் காட்ட பிடிக்காம தான் போறேன்…”
“இங்க இருந்தா திரும்ப திரும்ப நான் ஏமாந்திட்டேன்னு எனக்கு தோணிட்டே இருக்கும், இப்படியே இருந்தா எனக்கு பைத்தியமே பிடிச்சிடும்…”
“உன்னை பார்த்ததுல இருந்தே எனக்கு சோதனை ஆரம்பிச்சுடுச்சு. ஒவ்வொரு நாளும் எனக்கு பைத்தியம் பிடிக்க வைச்சு கடைசில இப்படி நடுத்தெருவுல நிக்க வைச்சுட்டல்ல…” என்று குற்றம் சாட்டினான் அவளை பார்த்து.
“விஷ்வா… வேணாம் விஷ்வா…” என்று சொன்ன காஞ்சனாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது அவன் பேசுவது கண்டு.
“நீ இது வரைக்கும் நடிச்சதே போதும். இது வேண்டாம் காஞ்சனா…”

“நான் நடிச்சேன்னு இப்போ தான் கண்டுப்பிடிச்சீங்களா… இதுக்கு முன்னாடி உங்களுக்கு தெரியலையா…”
“தெரியும்டி சொல்லிட்டு தானே நீ செஞ்சே?? ஆனா அப்போ எனக்கு தெரியாதுடி எல்லாரும் சேர்ந்து என் முதுகுல குத்தியிருக்கீங்கன்னு…”
“நேத்து தாத்தா ஒரு பத்திரத்துல என்கிட்ட கையெழுத்து வாங்கினார். ஹ்ம்ம்.. பேங்க் லோன்க்குன்னு சொன்னார். நான் முட்டாள் இல்லை… இந்த சொத்துக்காக தான் எல்லாம்ன்னா எனக்கு இது வேணாம்…”
“அந்த பேப்பர்ல மொத்த சொத்தையும் உங்க பேருலயே மாத்தி எழுதிக்கோங்க…”
“விஷ்வா இது உங்களுக்கு உரிமைப்பட்டது…”
“வேணாம் எனக்கு அது வேணாம்…” என்று கத்தினான்.
“எத்தனை உயிரை அது காவு வாங்கிருக்கு, மிச்சமிருக்க என் உயிரும் போகணுமா உனக்கு… சொல்லு போகணுமா உனக்கு…” என்றான் ஆத்திரமாய்.
“என்னை யாரும்…” என்று சுற்றுமுற்றும் பார்த்தவன் “வேற யாரும் தேட மாட்டாங்க அதுக்கு வாய்ப்பும் இல்லை… எனக்கே எப்போ வரணும்ன்னு தோணுதோ அப்போ நானா தான் திரும்பி வருவேன்”
“நீங்க யாரும் என்னை தேடி வரணும்ன்னு நினைக்காதீங்க. என்னை தேடறீங்கன்னு எனக்கு தோணினா கூட நான் ஜென்மத்துக்கும் திரும்பி வரவே மாட்டேன்…” என்று எச்சரிக்கையாக சொன்னான்.
“விஷ்வா உங்களோட நானும் வர்றேன்…” என்ற காஞ்சனாவை முறைத்தான்.
“உன்னோட நான் போக விருப்பப்படலை. அப்படி இருக்கணும்ன்னு நினைச்சா நான் ஏன் போக போறேன். உன்னை பார்க்கும் போது தான் நான் எந்தளவுக்கு முட்டாள்த்தனமா இருந்திருக்கேன்னு எனக்கு தோணுது”
“நான் நல்லபடியா திரும்பி வரணும்ன்னு நினைச்சா, என்னோட வரணும்ன்னு நினைக்கறதை விட்டுடு”
“நான் எல்லாத்தையும் மறக்கணும், தெரிஞ்சவங்க யாருமே இல்லாத இடத்துக்கு போகணும்… என் மனசு ஆறணும், அது என்னைக்கு ஆறுதோ, என்னைக்கு எனக்கு உன்னையும் அம்மாவையும் பார்க்கணும்ன்னு தோணுதோ அன்னைக்கு தான் வருவேன்…”
“எனக்காக நீ காத்திட்டு இருக்கறதா இருந்தா இருக்கலாம். இல்லையா நீ வேற வாழ்க்கையை தாராளமா அமைச்சுக்கலாம்…” என்றவன் வேகமாய் அவன் இருந்த வீட்டிற்கு சென்றான்.
கையில் கிடைத்த துணிமணிகளை ஒரு பையில் எடுத்து வந்திருந்தவன் அவளிடம் ஒரு பேப்பரை நீட்டினான். “கையெழுத்து போட்டிருக்கேன், உனக்கு வேற வாழ்க்கை அமையப் போகுதுன்னா அப்போ இது தேவைப்படும்…”
“வர்றேன்ம்மா, வர்றேன்…” என்று அந்த இருவரிடம் மட்டும் சொன்னவன் மற்ற எவரையும் திரும்பிக் கூட பார்க்கவில்லை அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவன் சென்றும் அங்கேயே மடிந்து அமர்ந்து அழுதவள் தான் உடன் சகுந்தலா இருந்தார். மற்றவர்கள் கலைந்து சென்றிருந்தனர்.
தெய்வானை பாட்டி வந்து ஆறுதல் சொன்னார். ரம்யாவும், சௌம்யாவும் கூட உள்ளே செல்வது போல சென்று மீண்டும் வந்து அவளுக்கு துணையாய் நின்றனர்.
கண்ணைத் துடைத்து நிமிர்ந்தாள் காஞ்சனா. வேகமாய் எழுந்து உள்ளே சென்றாள் அவள் பின்னேயே ஓடினார் சகுந்தலா.
“எங்கம்மா போறே??”
“அவர் இல்லாத இடத்துல நான் மட்டும் என்னத்தை செய்யப் போறேன்… எனக்கும் இங்க இருக்கவே பிடிக்கலை…”
“நான் தாத்தா வீட்டுக்கு போறேன்…”
“அந்த வீடு இப்போ…”
“அந்த வீடு இப்போ அமுதன் பேர்ல தான் இருக்கு. அப்பா அவரோட நண்பருக்கு தான் அந்த வீட்டை கொடுத்திருந்தார்”
“உனக்கு எப்போ பணம் வருதோ அப்போ கொடுத்திட்டு வீட்டை எடுத்துக்கோன்னு அப்போவே அவர் சொல்லியிருந்தாராம்…”
“பாருங்களேன் அத்தை உறவுகள் தான் அவருக்கு கைக்கொடுக்கலை, ஆனா நட்பு கைக்கொடுத்திருக்கு பாருங்களேன்…”
“அவர்கிட்ட அப்பா வாங்கின பணத்தை கொடுத்து மேல கொஞ்சம் காசையும் கொடுத்து வீட்டை வாங்கியாச்சு…”
“நானும் உன்னோட வர்றேன் காஞ்சனா…”
“வேணாம் அத்தை நீங்க இங்கவே இருங்க…”
“என்னால முடியாது. இனியும் என்னால இங்க இருக்க முடியாது. என் பொண்ணுக்காகவும் புள்ளைக்காகவும் தான் நான் எல்லாம் பொறுத்திட்டு இருந்தேன்…”
“அத்தை சொல்றதை புரிஞ்சுக்கோங்க. அவர் நீங்க இங்க இருந்து வர்றதை விரும்ப மாட்டார்…”
“நான் இங்க இருக்கறதையும் அவன் விரும்பமாட்டான்…”
“நிச்சயம் அவர் அப்படி நினைக்க மாட்டார்… நீங்க இங்க தான் இருக்கணும் அத்தை, நான் காரணமா தான் சொல்றேன்…” என்று அழுத்தமாய் சொல்ல சகுந்தலா மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை.
அதே ஊரில் அவளின் தாத்தா வீட்டில் தான் வசிக்கிறாள் காஞ்சனா. தன் வேலைக்கென்று ஒரு மடிக்கணினி மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு அவளால் இயன்ற நகை மாதிரிகளை வரைந்து கொடுத்து தன் வாழ்க்கைப்பாட்டை பார்த்துக்கொண்டாள்.
அவ்வப்போது சகுந்தலா வந்து பார்த்து செல்வார். ரம்யா, சௌம்யா கடைக்கு செல்வது போல் இங்கு வந்து செல்வர். பாட்டி கூட ஓரிருமுறை வந்து சென்றிருக்கிறார்.
அந்த வீட்டில் இருந்து வராத பெண்மணி ரத்தினவேலின் மனைவி செண்பகவள்ளி, அங்கயற்கண்ணி மற்றும் ராதிகா மட்டுமே.
அமுதன் ரேகாவுடன் இடையில் வந்து ஒரு முறை பார்த்து சென்றான். மணிமேகலை பாட்டி அவளுக்கு துணையாக அங்கு தானிருக்கிறார் இப்போது.
மும்பை மாநகரம்
———————————-
எள் விழுந்தால் கூட பொறுக்க முடியாத அளவுக்கு விதவிதமான மனிதத் தலைகள் இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர்.
பல வண்ணங்களில், பல மாதிரிகளில் கார், பஸ், பைக் என்று சாலைகளில் நகர்ந்த வண்ணமே இருக்கும் எப்போதும்.
இந்தியாவின் வர்த்தக நகரமாக விளங்கும் மும்பை மாநகரம். பாந்திராவின் மேற்கு பகுதியில் அமைந்திருந்த பலமாடி கட்டிடம் அது. அதன் பதினோறாவது மாடியில் அமைத்திருந்த சங்கமித்ரா இன்டீரியர்ஸ் அண்ட் டிசைனிங்க்ஸ் உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள் அந்த நவநாகரீக யுவதி.
அவள் சங்கவி அங்கிருந்தோர் அவளுக்கு குட் மார்னிங் சொல்ல அவள் ஒரு தலையசைப்புடன் உள்ளே சென்றாள்.
நான்காவது அறையை தாண்டும் போது உள்ளே எட்டிப்பார்த்து பின் தன் அறைக்கு சென்றவள் தன் மேஜையில் இருந்த போனை எடுத்து ரிசப்ஷனுக்கு அழைத்தாள்.
“மித்ரன் வந்தாச்சா??”
“வந்திட்டார் மேடம், சார் ஒரு மீட்டிங்ல இருக்கார் தர்ட் பிளோர்ல. விஜய் சார் வந்து கூட்டிட்டு போனார்…” என்று தகவல் சொல்ல போனை வைத்துவிட்டு அவள் அடுத்து அடித்தது மித்ரனுக்கு.
அவன் அவளின் அழைப்பை ஏற்காமல் கட் செய்ய இவளுக்கு பீபி எகிறியது. “இடியட் என்னை கால் தூசிக்கு கூட மதிக்க மாட்டேங்குறான். இவனோட சேர்ந்து ஏன் தான் நான் இந்த கம்பெனியை ஆரம்பிச்சேனோ…” என்று எப்போதும் போல் அப்போதும் நினைத்தாள்.
பின் தன் மடிக்கணினியை ஆன் செய்து வந்திருந்த மெயில் எல்லாம் பார்த்து அதற்கு தக்க பதிலை சொல்லிக் கொண்டிருந்தவள் ஜுஹுவில் புதிதாய் கட்டி முடித்திருந்த அந்த இருபது மாடி கட்டிடத்திற்கான இன்டீரியர் வேலைகளை பார்க்க பொழுது ஓடியது.
இரண்டு மணி நேரத்திற்கு பின்னே தான் சற்று ஆசுவாசம் அடைந்தவள் வெளியே எழுந்து சென்று பேன்ட்ரி போலிருந்த அந்த அறையில் நுழைந்தாள்.
அங்கிருந்த காபி மேக்கரில் தனக்கு பிடித்தவாறு காபியை கலந்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றவள் அங்கிருந்த கண்ணாடி ஜன்னலின் வழியே தெரிந்த கடலை பார்த்துக் கொண்டே காபியை அருந்தினாள்.
அறைக்கதவு தட்டப்பட “எஸ்” என்றுவிட்டு இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
அங்கு மித்ரனை கண்டதும் முகம் கடுகடுவென மாறியது அவளுக்கு. “ஒரு போன் பண்ணா எடுக்க மாட்டியா நீ??” என்று பொறிந்தாள்.
“உனக்கு அறிவில்லையா ரிசப்ஷன்க்கு போன் பண்ணி கேட்டே தானே நான் மீட்டிங்ல இருக்கேன்னு ஷிவானி சொன்னால்ல உன்கிட்ட, அப்புறமும் எனக்கு கால் பண்ணுறே” என்று அவன் பதிலுக்கு முறைத்தான் இவளை.
“ஐ ஹேட் விஜய், அவனுக்கெல்லாம் எதுக்கு நீ ப்ராஜெக்ட் பண்ணுறே??”
“யூ ஜஸ்ட் ஷட் அப் சங்கவி. விஜய் உனக்கு பிடிக்கலைங்கறதுக்காக எல்லாம் என்னால ப்ராஜெக்ட் விட முடியாது”
“இந்த வேலை என்னோட பேஷன், அதை நீ சொல்ற மாதிரி கேட்டு கெடுத்துக்க விரும்பலை நான்…”
“அப்போ உனக்கு நான் முக்கியமில்லையா” என்றவள் அவனை ஆழ்ந்து பார்க்க “ரொம்பவும் முக்கியம் தான் பிகாஸ் யூவர் மை பெஸ்ட் பிரண்ட்” என்றான் அழுத்தி.
“அப்போ அவ்வளவு தான் இல்லை…”
“எப்போமே அவ்வளவு தான்…”
“கெட் அவுட்” என்று கத்தினாள்.
“இந்த கத்தற வேலை எல்லாம் என்கிட்ட வைச்சுக்காத… ரொம்ப காபி குடிச்சா இப்படி தான் கத்தத் தோணுமாம், ஒரு புக்ல படிச்சேன்…” என்று சும்மா அடித்துவிட்டான் மித்ரன்.
“நீ முதல்ல இங்க இருந்து போ… அப்போ தான் எனக்கு நிம்மதியே”
“என்ன பேபி இப்படி சொல்லிட்ட??”
“பேபின்னு சொல்லாத மேன்”
“சரி பாப்பா” என்றவனை அடித்துவிடும் பார்வை பார்த்தாள் அவள்.
“பீ சீரியஸ்” என்றாள்.
“இதை நான் சொல்லியிருந்தா நீ ரொம்ப பேசியிருப்ப, இப்போ நீயாவே சொல்லிட்டல்ல கம் டு தி பாய்ன்ட்…” என்றவன் அடுத்து வேலையை பற்றி அவளிடம் டிஸ்கஸ் செய்ய நொடிகள் வேகமாய் கரைந்துக் கொண்டிருந்தது.
“ஓகே நான் கிளம்பறேன்… நீ உன்னோட பார்ட் முடிச்சிட்டு எனக்கு அனுப்பு” என்றான்.
“நீ தான் முடிச்சுட்டு எனக்கு அனுப்பணும்” என்றாள்.
“சொன்னதை செய் கவி…”
“நான் சொல்றதை நீ என்னைக்காச்சும் செய்யறியா?? நீ சொல்றதை தான் என்னை செய்ய வைக்கிறே??” என்று கத்தினாள்.
“கத்தாத வேணும்ன்னா இன்னொரு காபி தரச்சொல்றேன்”
“போய்டு மரியாதையா” என்று அவள் சொல்ல வாயிலில் நின்றிருந்தவன் கதவை திறக்கப் போக “ஒன் மினிட் மித்ரன்”
சென்றவன் நின்று பார்த்தான் அவளை. “ஐ லவ் யூ…”
அவன் பதில் ஒன்றும் சொல்லவில்லை வெளியேறி சென்றுவிட்டான். ‘எவ்வளவு நாளைக்கு தான் இப்படி ஓடிட்டே இருப்பே’ என்று மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டு அடுத்த வேலையை பார்க்கச் சென்றாள் சங்கவி.
தன்னறைக்கு வந்து அமர்ந்த மித்ரன் தன் மடிக்கணினியை இயக்கி வேலைகளை பார்க்க ஆரம்பித்தான். சங்கவி பேசியது அவனை சற்றும் கூட பாதித்திருக்கவில்லை.
“மே ஐ கம் இன் சார்…”
“உள்ள வாங்க கிரிகாலன்” என்றான் மித்ரன்.
“சார் கரிகாலன் சார்…” என்றான் அவன்.
“என் பேரை எதுக்கு சார் இப்படி கொலைப் பண்றீங்க??” என்றான் எப்போதும் போல்.
“நான் என்ன செய்யட்டும் உங்களோட பேருக்கு ஏத்த மாதிரி நீங்க வீரமா இருந்திருந்தா நானும் அதே மாதிரி உங்களை கூப்பிடுவேன்…”
“ஏனோ உங்களை பார்த்தா எனக்கு கிரிகாலன்னு தான் கூப்பிட தோணுது…”
“அதுக்கு உங்க மீசையும் ஒரு காரணமா இருக்கலாம்…” என்று சிரித்தான் அவன்.
“சார் நான் ஸ்டைலா மீசை வைச்சா இப்படி சொல்றீங்க… நாளைக்கு நான் மீசையை எடுத்திட்டு வருவேன் அப்போ பாருங்க என்னை. ரன்பீர் கபூர் மாதிரி இருப்பேன்…” என்று பீற்றினான் அவன்.
“அப்போ கூட நீ வடிவேல் சார் மாதிரி தான்டா இருப்பே”
“போங்க சார்… நீங்க பேசி என் மூடை ஆப் பண்ணிட்டீங்க…”
“சரி சரி வந்த விஷயத்தை சொல்லுங்க காலன்…”
“இதுக்கு நீங்க கிரிகாலன்னே என்னை கூப்பிட்டிருக்கலாம். நீங்க காலன்னு கூப்பிடுறது பார்த்தா எமான்னு கூப்பிட்டுற மாதிரியே கேட்குது…”
“என்ன பேரு வைச்சு கூப்பிடுறதுன்னு அப்புறம் யோசிக்கலாம், என்ன வேலையா என்னை பார்க்க வந்தீங்கன்னு சொல்றீங்களா”
“அது வந்து சார்… அது வந்து…” என்று அவன் யோசிக்க அவன் மண்டையில் ஒரு தட்டு தட்டினான் மித்ரன்.
“ஞாபகம் வந்திடுச்சு சார்… நீங்க கேட்ட டீடைல் எடுத்திட்டேன், உங்களுக்கு மெயில் பண்ணியிருக்கேன் பாருங்க சார்…”
“ஓகே நான் பார்க்கறேன், நீங்க கிளம்புங்க…”
“சார் வந்து… அது யாருன்னு…”
“நன் ஆப் யூவர் பிசினஸ்”
“சாரி சார்…”
அவன் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு அந்த மெயிலை ஓபன் செய்தான் மித்ரன். திரையில் தெரிந்ததை வெகு நேரமாய் பார்த்துக் கொண்டிருந்தவன் சில நொடிகள் அசையாமல் இருந்தான்.
அறைக்கதவு தட்டப்பட அவசரமாய் மெயில் பாக்ஸில் இருந்து வெளியில் வந்தான். சங்கவி வந்திருந்தாள். என்னவென்பது போல் அவளை பார்த்தான். 
“நான் உன்கிட்ட ஒண்ணு சொன்னேன்”
“என்ன சொன்னே??”
“திரும்பவும் என் வாயால கேட்கணுமா உனக்கு…”
“வேணாம்…”
“அப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…”
“எனக்கு பிடிக்கலை”
“என்னையவா…”
“நான் அப்படி சொல்லலை…”
“என்கிட்ட ஏதாவது குணம் சரியில்லையா மாத்திக்கணுமா சொல்லு மித்ரன்”
“நீ ஏன் எனக்காக மாறணும் சங்கவி??”
“நான் என்ன பண்ணா உனக்கு என்னை பிடிக்கும்…”
“நீ என்ன பண்ணாலும் எனக்கு உன்னை பிடி…” என்று நிறுத்தியவன் “பிடிக்கும்…”
அவள் முகம் சட்டென்று மலர அவனோ “நீ என்னோட மதிக்க தகுந்த தோழி… யூவர் மை பெஸ்ட்டின்னு சொல்லுவேன்…”
அவள் முகம் கடுகடுத்தது.
“விஜய் ஒரு விஷயம் சொன்னான்…”
“அவனைப்பத்தி என்கிட்ட பேசாத…”
“ஹி லவ்ஸ் யூ”
“ஐ ஹேட் ஹிம்”
“ஏன்??”
“எனக்கு அவனை பிடிக்காது… பிடிக்காது, பிடிக்காது ஏன்னு எல்லாம் தெரியாது. பிடிக்காது…”
“என்னை ஏன்??”
“தெரியாது, எப்போ எங்க எப்படின்னு தெரியலை. நீ என்கிட்ட எப்போ பார்த்தாலும் சண்டை தான் போடுறே ஆனாலும் எனக்கு ஏன் உன்னை பிடிச்சு தொலைக்குதுன்னு எனக்கே தெரியலை”
“விஜய் கூட அப்படித்தான்…”
“அவனும் நீயும் ஒண்ணில்லை…”
“அவனால தான் எனக்கு உன்னைத் தெரியும்”
“அந்த ஒரே காரணத்துக்காக தான் அவனை எனக்கு பிடிக்கலைன்னாலும் அவன் பேசினா நின்னு பதில் பேசிட்டு போறேன்…”
“ஐ திங் நான் உன்கிட்ட பேசி என் நேரத்தை வீணாக்குறேன்னு நினைக்கிறேன். வில் யூ ப்ளீஸ் கெட் அவுட்”
“நான் உன்னை கெட் அவுட்ன்னு சொன்னேன்னு நீ என்னை பதிலுக்கு சொல்றியா… ஐ ஹேட் யூ டூ” என்று கத்திவிட்டு சென்றுவிட்டாள் அவள்.

Advertisement