Thursday, May 2, 2024

    siru pookkalin thee(yae)vae

      “ஆனா உங்க ரெண்டு பேரோட பிரியமும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சது இல்லைன்னு மட்டும் புரிஞ்சுது...”   பார்த்திபன் பேசிக்கொண்டிருக்க வதனாவின் பார்வை முழுதும் பிரியனிடத்திலேயே... ‘இவன் இன்னும் மாறவில்லை, அன்று போல் இல்லையில்லை இன்னமும் அதிகமாய் தன் மேல் நேசம் வைத்திருக்கிறான் இவன்’ என்று எண்ணினாள் அவள்.   பிரிவு அன்பை பலப்படுத்தும் சத்தியமான உண்மை அது  என்பது அப்போது அவளுக்கு...
      இப்போது சோபாவிற்கு அடுத்திருந்த ஒற்றையிருக்கை முட்டி நிற்க அதையும் காலால் மெதுவாய் நகர்த்தப் போக அது பின்னால் சாயப் பார்த்தது.   இடக்கையால்அதைபிடித்து மெதுவாய் நகர்த்தினான். ஏற்கனவே டெலிபோன்இன்டெக்ஸ்சில் இருந்து ராமின் வீட்டு எண்ணை பார்த்து வைத்திருந்தான்.   ராமின் அப்பாவின் பெயரில் இருந்த அந்த எண் சரியானது தானா என்று கூட அவனுக்கு தெரியாது. ஆனாலும் முயற்சித்து பார்க்காமல்...
    அத்தியாயம் –14   “டேய்பவள் உன்னை எங்கெல்லாம் தேடுறது. நீ இங்கயா இருக்கே??” என்றவாறே அவனருகே வந்து அமர்ந்தான் ராகேஷ்.   “எதுக்கு நீ என்னை தேடினே??”   “ஏன்டா நான் உன்னை தேடக் கூடாதா??”   “அதான் கேக்குறேன் நீ என்னை என்ன விஷயத்துக்காக தேடினேன்னு??” என்றான் அவன்.   “சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம்ன்னு தேடினேன் அது ஒரு குத்தமாடா”   “நான் எவ்வளவு முக்கியமான வேலையில இருக்கேன் அதை...
    “வது அதெல்லாம் விட்டு தள்ளு” “எப்படிங்க விட முடியும், இப்படி ஒரு உறவு வேணும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லையேங்க... எங்க இருந்துங்க எல்லாரும் வந்தாங்க இப்போ” “உங்களை எப்படிங்க என்கிட்ட இருந்து அவங்க பிரிக்கலாம், எனக்கு மனசே ஆற மாட்டேங்குதுங்க. செத்தாலும் நான் அவங்களை மன்னிக்கவே மாட்டேங்க, அவங்களை சும்மாவும் நான் விடுறதாயில்லை” என்றவள் கேவி கேவி...
    அத்தியாயம் – 3   பிரியன் கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்திருந்தான். நடந்துவிட்ட நிகழ்வுகளை அவனால் மாற்ற முடியாது தான் ஆனால் சரிசெய்ய முடியுமே!!   அந்த எண்ணத்தில் தான் அவன் தொலைத்ததை தேடிச் சென்றான். அது லேசில் கிட்டாது என்று தெரிந்தும் சென்றான் தான்.   கடைசியில் தன்னால் தானே எல்லாம் என்ற குற்றவுணர்வு அவனுக்கு எழாமலில்லை. இதற்கெல்லாம் காரணமாயிருந்தவர்கள் மட்டும்...
    அத்தியாயம் – 33 அன்றைய தினசரியில் விகேபி குடும்பத்தின் வாரிசு அரசியல் பற்றிய செய்தியே முதலிடம் பிடித்திருந்தது. அரசியலில் மட்டும் தான் வாரிசென்பதில்லை, இவர்கள் ஊழலை கூட வழி வழியாய் தான் செய்கிறார்கள் என்பது போல் செய்திகள் தான் அதில் முதலிடம் பிடித்திருந்தது. விகேபியின் அதிகாரத்திற்கும் அகந்தைக்கும் கிடைத்த பெரிய அடி அது. இப்போதும் அவர் வீட்டில்...
    வதனாவின் முகத்தில் இன்னமும் குழப்ப ரேகைகள் கண்ட பிரியன் அவளை கூட்டத்தில் இருந்து தனியே பிரிந்து சற்று தள்ளிச் சென்றான்.   “வது என்னாச்சு?? ஏன் இவ்வளவு டல்லா இருக்கே?? நம்ம கல்யாணம் நடந்ததுல உனக்கு சந்தோசமில்லையா??”   “நம்ம கல்யாணம் நடந்ததுல சந்தோசம் தான்... ஆனா...”   “என்ன ஆனா??”   “ரொம்ப அவசரப்பட்டுடோமோன்னு இருக்கு...”   “நான் இப்போ கட்டலைன்னா நாளைக்கு அந்த பிரவீன் அதைத்தான்...
    அத்தியாயம் – 19   பிரியன் தன் நினைவில் இருந்து வெளியில் வந்திருந்தான் இப்போது. ராமிடம் பேசியதற்கு பின் நடந்த நிகழ்வுகளை அவன் இக்கணமும் நினைக்க விரும்பவில்லை.   கொடும் அந்த நாட்களின் தகிப்பு இன்னமும் அவன் மனதிலும் உடலிலும் தோன்றுவதாய் உணர்ந்தான். அன்று தான் எந்த தைரியத்தில் ராமிடம் உதவி கேட்டோம் என்று இன்று வரை அவனுக்குமே விளங்கவில்லை.   ராகேஷ்...
    வதனா முதன் முறையாக அந்த வீட்டிற்கு வருகிறாள். வீடுஅனைத்து வசதிகளும் செய்யப்பட்டு புத்தம் புதிதாய் இருந்தது.   எதையும் அவள் வாங்குவதற்கு அவசியமேயில்லை... கேட்டால் இந்த ராம் இந்த வீட்டை அவன் வாங்கவில்லை என்று சொல்கிறான்... அப்படியென்றால் இது யார் வீடாய் இருக்கும் என்று தான் யோசனை அவளுக்கு.   மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் அவள் பாலை காய்ச்சி முடித்தாள்....
    அத்தியாயம் – 5   “ஏன்டா இப்படி பார்த்து வைக்குற??”   “ஏய் என்ன உன்னோட வம்பா போச்சு... நான் எப்பவும் போல தான் இருக்கேன். என்னை எதுக்கு வம்புக்கு இழுக்குறே நீ இப்போ??”   “இல்லை நீ என்னமோ எண்ணை ஒரு மாதிரியா தான் பார்க்குற??” என்று மறுபடியும் சொன்னாள்.   “சுகுணா...” என்றழைத்தான்.   “என்னங்க??” என்றவாறே வந்தவள் “ஹேய் ஹாய் இப்போ தான் வந்தீங்களா......
    அத்தியாயம் – 6   அவனால் உறுதியாய் அவளை தன்னிடத்தில் பேச வைக்க முடியும். ஆனால் அவன் அதை செய்ய மாட்டானே!!   அவர்கள் இருவரும் மின்னலே படத்தில் வரும் அப்பாஸ், மாதவன் போல் தான். எப்போதுமே மோதல் தான் இருவருக்குள்ளும்.   சாதாரணமாய் நடந்து சென்றால் கூட ஏனென்றே தெரியாமல் அவர்கள் இருவரின் பார்வையும் வெட்டியே செல்லும் எப்போதும்.   எதனால் இந்த மோதல்...
    அத்தியாயம் – 15 வாரயிறுதி நாள் அது, பிரியன் வதனாவை எப்படியோ பேசி சரிக்கட்டி சஞ்சீவையா பார்க்கிற்கு அழைத்து வந்திருந்தான். இருவரும் அந்த பார்க்கை சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்த இருக்கை ஒன்றில் வந்து அமர்ந்தனர். “ஐஸ்கிரீம் சாப்பிடறியா??” என்றான் பிரியன். “இப்போ எதுவும் வேணாம்... நீங்க வந்ததுல இருந்து எதாச்சும் வாங்கி கொடுத்திட்டே இருக்கீங்க... போதும்” என்றிருந்தாள். “ஆமா நீங்க ஏன்...
    அத்தியாயம் – 18   மறுநாள் அதிகாலையிலேயே ஹைதராபாத் வந்து இறங்கியிருந்தனர் இருவரும். நாட்கள் அதன் போக்கில் மெல்ல நகர ஆரம்பித்திருந்தது.   வதனா கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். அந்த வருட படிப்பிற்கான மொத்த பணமும் அவள் ஸ்பான்சரின் மூலம் முன்பே செலுத்தப்பட்டிருந்தது.   பிரியன் அவளின் மற்ற தேவைகளை கவனித்துக் கொண்டான். முதலில் ஹாஸ்டலில் இருந்து அவளை தன் வீட்டிற்கே அழைத்து...
    “அப்போ என்னை அனுப்பினது நீங்க தான்... ஏன் அனுப்புனீங்க??”   “நான் கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு”   “என்னோட கேள்விக்கு பதில் வேணும்...” என்றான் அவனும் விடாப்பிடியாய்.   “வதனாவோட சித்தப்பா நான்...” என்ற வார்த்தையில் சாதாரணமாய் அமர்ந்திருந்தவன் சற்று நிமிர்ந்து அமர்ந்தான்.   “இம்பாசிபிள்...”   “பாசிபிள் தான்... அது உனக்கு வேணா தெரியாம இருக்கலாம்...”   “வதுக்கு இது தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லை...”   “ஹ்ம்ம் ஆமா வாய்ப்பில்லை...
    அத்தியாயம் – 1   சுவாமியே சரணம் ஐயப்பா ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா சக்தி வடிவேலன் சோதரனே சரணம் ஐயப்பா மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா...   இன்று காலை   கார்த்திகை மாதம் முதல் தேதி பிறந்தாலே விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஏராளம்.   அதில் பிரியனும் ஒருவனே. அதிகாலையில்...
    அத்தியாயம் – 2   வதனா தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். ‘எப்படி?? எப்படி?? இந்த தகவல் மீடியாவிற்கு சென்றது. போதாதிற்கு இந்த படம், இது யார் கொடுத்திருப்பார்??’   ‘இவனை யார் இங்கே வரச்சொன்னது, இவ்வளவு நாள் தொலைந்து தானே போயிருந்தான். அது போல் தொலைந்து போயிருக்கக் கூடாதா’ என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது அவன் மேல்.   எதையோ அவசரமாய்...
    அத்தியாயம் – 20   சுகுணாவின் பின்னேயே அவளறைக்கு சென்றவனுக்கு இருக்கையை அவள் காட்ட அவன் அமரவும் அவள் நின்ற வாக்கிலேயே இருக்க “உட்காரு” என்றான்.   “என்னை பத்தி உங்க வீட்டில சொல்லியிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சோ நான் என்ன பேசணுமோ டைரக்ட்டாவே பேசிடறேன்” என்றுவிட்டு நிறுத்தினான் ராம்.   “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு நான் கேட்பேன்னு நீ...
    அத்தியாயம் – 30 நடந்ததை சொல்லி முடித்திருந்த பிரியனின் விழிகள் நன்றாய் சிவந்திருந்தது. அவன் அனுபவித்த ஒட்டுமொத்த வலியும் அவனின் முக இறுக்கத்திலே பார்த்திபனால் உணர முடிந்தது. யாருக்கும் இப்படியொரு பிரிவும் கஷ்டமும் நேரக்கூடாது என்று மனதார எண்ணினான் அவன். “என்ன பார்த்தி அமைதியா இருக்கே??” “என்ன சொல்றதுன்னே தெரியலை சார், ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காங்க... நீங்க ரொம்பவும் வேதனை...
    அத்தியாயம் –28   எது நடக்கக்கூடாது என்று பிரியன் நினைத்தானோ அது நடந்தேவிட்டது.மீண்டுமொரு பிரிவு நிகழ்ந்தேவிட்டது.   கடுங்கோபத்தில் இருந்தான் பிரியன், அழைப்பு மேல் அழைப்பாய் விடுத்துக்கொண்டிருந்தான் ராம். குழந்தை வீட்டிற்கு வந்ததும் பிரியனுக்கு நன்றியுரைக்க அவன் போன் செய்திருக்க நடந்தது வேறாய் போயிருந்தது.   இதை ராம் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. “வல்லா என்ன செய்ய போறோம்??”   “நான் முட்டாள் இல்லை ராம், இதுக்கு...
    “உங்களை பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க...”   “யாரு?? என்னை எதுக்கு அவங்க பார்க்கணும்?? என்ன விஷயமா??” என்று கேள்விகளாய் தொடர்ந்தாள்.   “அவங்க பர்சனலா உங்களை பார்க்க வந்திருக்காங்க...” என்று சொல்லி முடித்துவிட்டான்.   “பர்சனலாவா!! யாரு?? அவங்க பேரென்ன??”   “மேம் அவங்க நம்ம சாரோட...”   “எந்த சாரோட??”   “வல்லவரையன் சாரோட...” என்று இப்போதும் அவன் முடிக்காமல் இருக்கவும் அவள் முகம் யோசனைக்கு தாவியது.   “அவருக்கு என்ன??”   “அவரோடபேரன்ட்ஸ்தான்...
    error: Content is protected !!