Advertisement

அத்தியாயம் –14
 
“டேய்பவள் உன்னை எங்கெல்லாம் தேடுறது. நீ இங்கயா இருக்கே??” என்றவாறே அவனருகே வந்து அமர்ந்தான் ராகேஷ்.
 
“எதுக்கு நீ என்னை தேடினே??”
 
“ஏன்டா நான் உன்னை தேடக் கூடாதா??”
 
“அதான் கேக்குறேன் நீ என்னை என்ன விஷயத்துக்காக தேடினேன்னு??” என்றான் அவன்.
 
“சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம்ன்னு தேடினேன் அது ஒரு குத்தமாடா”
 
“நான் எவ்வளவு முக்கியமான வேலையில இருக்கேன் அதை வந்து டிஸ்டர்ப் பண்ணுற…” என்ற பிரியனின் பேச்சு மட்டும் தான் நண்பனிடத்தில்.
 
கண்களோ தொலைவில் நடந்து வந்துக்கொண்டிருந்த வதனாவின் வதனத்தைவிட்டு அகலவில்லை.
 
“தெரியும்டா இப்படியெல்லாம் நடக்கும்ன்னு அன்னைக்கே தெரியும். அதான் நீ சொன்னதும் நான் கேட்டேன்…” என்ற நண்பனின் குரலில் கலைந்தவன் திரும்பி பார்த்தான் ராகேஷை.
 
“மொச புடிக்கிற நாயை மூஞ்சியை பார்த்தா தெரியாதா” என்றான் அவன் தொடர்ந்து.
ஒன்றும் சொல்லாமல் சிரித்தவன் “அப்போ நீ என்னை நாய்ன்னு சொல்றியா??” என்றான்.
 
“இல்லைன்னு சொல்லிடுவியா என்ன??” என்றான் ராகேஷும் விடாமல்.
 
“எப்படி கண்டுப்பிடிச்சே??” என்றவன்பார்வைஇப்போது மீண்டும் தன்னவளின் புறம் திரும்பியிருந்தது.
 
“உனக்கு வந்த கோபத்தை பார்த்து தான்… எங்க நான் அவகிட்ட எதுவும் சொல்லிருவனோன்னு பைக் எடுத்திட்டு வந்து இடிக்க பார்த்தியே… அப்போவே கன்பார்ம் பண்ணிட்டேன்”
 
“ஹ்ம்ம்” என்று சொல்லிக்கொண்டே இன்னமும் பார்வையை விலக்காமல் இருந்தவனின் முதுகில் ஒன்று வைத்தான் ராகேஷ்.
 
“இப்படியாடா வெறிக்க வெறிக்க பார்ப்பே??”

“நீ தான் சொல்லிட்டியே நாய்ன்னு… வெறிக்க பார்த்தா வெறி நாய்ன்னு வைச்சுக்கோ” என்று அலட்டாமல் சொன்னான் பிரியன்.
 
“பைத்தியம் தான் பிடிச்சிருச்சு உனக்கு” என்று தலையிலடித்துக் கொண்டான் ராகேஷ்.
 
“அவளை பைத்தியம்ன்னு சொன்னேகொன்னுடுவேன் ராஸ்கல்” என்றான் மற்றவன்.
 
“நான் எப்போடா அப்படி சொன்னேன்” என்றான் ராக்கி பாவமாய்.
 
“பைத்தியம் பிடிச்சிருக்குன்னு சொன்னே தானே”
 
“ஆமா சொன்னேன் அதுக்கென்ன இப்போ??”
 
“எனக்கு அவளை பிடிச்சிருக்கு அதை தானே அப்படி சொன்னே” என்ற அவன் விளக்கத்தில் தூ வென்று துப்புவது போல செய்தான் ராகேஷ்.
 
அதற்குள் வதனா அவள் வகுப்பறை சென்று மறைந்திருந்தாள். ஒருவழியாய் பிரியனின் பார்வை நண்பனை நோக்கி திரும்பியது.
 
“இப்போ சொல்லு என்ன விஷயம்??” என்று முதலில் இருந்து ஆரம்பித்தான் அவன்.
 
“ஹ்ம்ம் சுரைக்காய்க்கு உப்பில்லை” என்று வாய்க்குள் முணுமுணுத்த ராகேஷுக்கு தொலைவில் தன் பைக்கை நிறுத்திவிட்டு வந்துக்கொண்டிருந்த ராம் கண்ணில்ப்பட்டான்.
 
‘இவனிடம் ராமை பற்றி கேட்கவேயில்லையே மறந்தே போனோமே’ என்று எண்ணியவன் எப்படி ஆரம்பிக்கலாம் என்று தனக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான்.
 
“என்னடா என்ன யோசனையா இருக்கே??” என்று ராகேஷின் கவனத்தை பிரியனின் குரல்.
“ஹ்ம்ம் ஒண்ணுமில்லைடா எல்லாம் அந்த ராமை பத்தி தான் யோசனை”
 
“ராம் பத்தியா அவனை பத்தி உனக்கு என்ன யோசனை??”
 
“இல்ல பார்க்க ஞானப்பழம் மாதிரி இருந்துட்டு என்ன வேலை எல்லாம் பண்றான் தெரியுமா அவன்??” என்று நைசாக ஆரம்பித்தான் அவன்.
 
“என்னன்னுபுரியற மாதிரி சொல்லுடா” என்று அதட்டினான் நண்பனை.
 
“இவனைரொம்ப நல்லவன்னு நினைச்சுட்டு இருந்தேன்டா இவ்வளவு நாளும்”
 
“ஏன் இப்போ அந்த எண்ணத்துக்கு என்ன வந்துச்சு??”
 
“இவன் வம்சிக்கு அண்ணனா இருப்பான் போலடா” என்று ராக்கி சொன்னதும் “சீய்!! உன் வாயை கழுவு. வம்சியோட எல்லாம் இவனை சேர்க்காதே”
 
“டேய் உனக்கு தெரியாதுடா வம்சி எப்படி பொண்ணுங்கன்னா ஓடி ஓடி ஒளிவான். ஆனா பண்ணது பூரா பொறுக்கித்தனம் தானே”
 
“இவனும் அப்படித்தான்டா…. ஆஆஆஆஆஆ” அவன் சொல்லி முடிக்கும் முன்னே அவன் கன்னத்தில் அறைந்திருந்தான் பிரியன்.
 
அவன் அடித்த அதிர்ச்சியில் கண்கள் கலங்கிவிட “டேய் எதுக்குடா இப்போ நீ என்னை அடிச்சே??” என்றான்.
 
“ராம்க்கு என்னை பிடிக்காது எனக்கு அவனை பிடிக்காது தான். அதுக்காக அவன் தப்பானவன்னு எல்லாம் உளறாதே…”
 
“தப்பே செய்யாத ஒருத்தரை தப்பா பேசுறது எவ்வளவு தப்பு தெரியுமா… உனக்கு அவனை பிடிக்கலைன்னா கண்ட மாதிரியும் பேசலாமா” என்று முறைத்திருந்தான் அவன் ராக்கியை.
 
“எங்க இருந்துடா வர்றீங்க ரெண்டு பேரும். நீ வேற ஊரு அவன் வேற ஊரு ஆனா பேசுறது பூரா ஒரே மாதிரியே இருக்கு”
 
“உன்னை அவன் தப்பா நினைக்க மாட்டேங்குறான். நீ நல்லவன் அப்படிங்கறான், நீ அவனை தப்பாவே பேச விடமாட்டேங்குற!!” என்று அடி வாங்கிய அதிர்ச்சியில் அவன் உளற “என்ன சொன்னே??” என்றிருந்தான் பிரியன்.
 
“இல்லை அது வந்து ஒண்ணுமில்லை”
 
“ராம் எப்போ என்னை நல்லவன்னு சொன்னான்” என்றதும் ராகேஷ் அன்று நடந்ததை முழுக்க சொல்ல சலனமில்லாமல் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான் பிரியன்.
 
அன்று அவன் மனதில் ராமை பற்றிய ஒரு அழுத்தமான நம்பிக்கை விழுந்ததை அவனே உணரவில்லை.
 
ஆனால் அந்த நம்பிக்கை தான் அவனிடத்தில் உதவியும் கேட்க வைத்ததை அன்று வேண்டுமானால் உணராமல் இருந்திருக்கலாம். இன்று அவன் அதை உணர்ந்தே தானிருந்தான்.
 
மாதங்கள் மெதுவாய் கடந்து கொண்டிருந்தது. முதல் செமஸ்டர் முடிந்திருந்தது அவர்களுக்கு.
 
வதனாவிற்கு அவள் மனம் நன்றாகவே புரிய ஆரம்பித்திருந்தது.
 
ஆனாலும் அதை அவளாகவே சென்று பிரியனிடத்தில் சொல்ல வெகுவான தயக்கமும் வெட்கமும் தடை போட்டது.
 
அவனை கடந்து செல்லும் போது அவனறியாமல் அவனை தனக்குள் பதித்துக் கொண்டிருந்தாள் அவள்.
 
அன்று கல்லூரியின் ஆண்டுவிழா தினம். அதற்கு என்ன உடை அணியலாம் என்று முதல் நாளிலிருந்தே அவளுக்குள் யோசனை தான்.
 
சென்ற முறை அவளின் பிறந்தநாளுக்காய் இல்லத்தில் இருந்தவர்கள் எல்லாம் சேர்ந்து அவளுக்கு புதிதாய் புடவை ஒன்றை வாங்கி கொடுத்திருந்தனர்.
 
அதன் பிளவுஸ் எல்லாம் தைக்கப்பட்டிருந்தும் அவள் தான் இதுநாள் வரை அதை கட்டியதேயில்லை. ஏனோ ஆண்டுவிழாவிற்கு அதை உடுத்திக்கொள்ள வேண்டும் என்று உள்ளம் பரபரத்தது.
 
அதை தனக்கு பிடித்தவனுக்கு காட்டும் எண்ணம் தான் அதில் அதிகமிருந்தது என்பதை வசதியாக மனம் ஒதுக்கி வைத்து விழாவிற்கு கட்டிக் கொள்கிறேன் என்று பேர் பண்ணிக் கொண்டாள்.
 
ஆண்டுவிழாவில் அவள் ஒரு பாடல் வேறு பாடுவதாய் இருந்தாள், அதையும் உடன் சாக்கிட்டுக் கொண்டாள்.
 
எப்போதடா விடியும் என்று இருக்க ஆண்டுவிழா நாளும் விடிந்து இதோ அவள் ஹாஸ்டலில் இருந்து கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்.
 
நடந்து வரும் போதே அவளை யாரோ பின் தொடர்வது புரிந்தது. ஒரு மாதமாகவே அவளுக்கு இப்படி ஒரு உணர்வு இருந்து கொண்டு தானிருக்கிறது.
 
இன்று அது யாரென்று பார்த்துவிடும் முடிவுடன் மெதுவாகவே நடந்தாள். வெகு அருகில் ஷுவின் சப்தம் சமீபித்தது.
 
மெதுவாய் கண்களை பக்கவாட்டில் திருப்பஅவள் துறையில் படிக்கும் பிரவீன் வந்துக் கொண்டிருந்தான்.
 
‘நல்ல வேளை இவன் கூட வர்றான்.பின்னாடியாராச்சும் வந்தா இவன்கிட்ட சொல்லிறணும்’ என்றுஎண்ணிக்கொண்டே அவனை திரும்பி சிநேகமாய் பார்த்து இவள் சிரிக்க அவனோ இப்போது அவளுக்கு மிக அருகில் நெருங்கி வந்திருந்தான்.
 
“பிரியா… ஐ வான்ட் டு டாக் டு யூ, ப்ளீஸ் ஸ்பென்ட் பைவ் மினிட்ஸ் பார் மீ” என்றான்.
 
‘இவன் என்ன பேசப் போறான், என்கிட்ட’ என்று யோசித்துக்கொண்டே “யா டெல் மீ” என்றிருந்தாள் அவள். (அவர்கள் பேச்சை தமிழிலேயே தொடருவோம்)
 
“ரொம்ப நாளா உன்னை பார்த்திட்டு இருக்கேன். உன்கிட்ட இதை சொல்லணும்ன்னு இன்னைக்கு ஒரு முடிவோட தான் வந்திருக்கேன்” என்றுவிட்டு நிறுத்தினான் அவன்.
 
அவளுக்குள்ளே தடதடவென்றிருந்தது. “ஐ லவ் யூ பிரியா… ஐ லவ் யூ சோ மச்… உன்னோட விருப்பத்தை தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்” என்று அங்கேயே நின்றிருந்தான் அவன்.
 
அவளுக்கு ஏனோ பிரியன் அவளிடத்தில் அவளை பிடித்திருக்கிறது என்று சொன்ன தருணம் மட்டுமே மனதிற்குள் வந்து போனது.
 
என் மீது எந்த விருப்பத்தையும் திணிக்காமல் அவன் விருப்பம் மட்டுமே சொல்லிச் சென்றவனின் முகம் கண்முன்நிழலாடியது இப்போது.
 
“பிரியா கேன் யூ ஹியர் மீ”
பிரவீன் மீண்டும் மீண்டும் அவளை அழைப்பது புரிய “சாரி பிரவீன், எனக்கு உங்க மேல அப்படி எந்த அபிப்பிராயமும் இல்லை” என்றாள்.
 
அது அவனை லேசாய் உசுப்பேற்றி விட்டிருக்க வேண்டும். “ஏன்??” என்றான் ஒற்றைச் சொல்லாய்.
 
“ஐ யம் நாட் இன்ட்ரஸ்ட்டட் பிரவீன்”
 
“அதான் ஏன்?? நான் நல்லா தானே இருக்கேன்”
 
“பிரவீன்திஸ் இஸ் டூ மச்… பிடிக்கிறதும் பிடிக்காததும் என்னோட இஷ்டம் நீங்க எதுக்கு என்னை கட்டாயப்படுத்தறீங்க” என்றாள் கொஞ்சம் கோபமாகவே.
 
“அப்போ உனக்கு அந்த ரவுடியை தான் பிடிக்குதோ… காலேஜ்லயே அவனை டிஸ்மிஸ் பண்ணாங்க தெரியும்ல… அவனெல்லாம் ஒரு ஆளா, பொம்பிளை பொறுக்கி” என்று அவன் தன் இஷ்டத்துக்கும் பேச “போதும் நிறுத்து” என்றுவிட்டு அவள் அங்கிருந்து நகரப்போக அவள் கைப்பிடித்து தடுத்தான் அவன்.
 
ராம் அந்நேரம் தன் பைக்கில் தற்செயலாய் அந்த வழி வர அங்கு நடப்பதை பார்த்து பைக்கை அவர்களருகே கொண்டு சென்று நிறுத்தினான்.
 
அவனுக்கு பிரியாவை ஞாபகமிருந்தது, பிரியன் குற்றம் சாட்டப்பட்டதில் அவள் பங்கும் உண்டென்று அவனுக்கு தெரியும்.
அன்றொரு நாள் பிரியன் கல்லூரிக்கு திரும்ப வந்த அன்று மரத்தடியில் அமர்ந்து அவள் அழுதுக்கொண்டிருந்த போது அவளை பார்க்க பாவமாக தோன்றியது அவனுக்கு.
 
அருகில் சென்று என்னவென்று கேட்கலாம் என்று தோன்றிய போதும் அவ்வளவாக பேசி பழக்கம் இல்லாததால் பேசாமல் அன்று கடந்து சென்றுவிட்டான்.
 
இன்று அவளுக்கு ஏதோ பிரச்சனை என்பது போல் தெரிய பைக்கை அவர்களுக்கருகில் நிறுத்தியிருந்தான்.
 
“என்ன பிரச்சனை??”
 
“ஹாய் சீனியர்…” என்று அவள் கையை விடாமல் கூலாய் ராமிற்கு வணக்கம் வைத்தான் பிரவீன்.
 
அவள் கையை அவனிடமிருந்து விடுவிக்க அவள் போராடிக் கொண்டிருந்தாள்.
 
“என்ன நடக்குது இங்கன்னு கேட்டேன்??” என்றான் அவன் அழுத்தமாய்.
 
“ஒண்ணுமில்லை சீனியர்,ஒரு சின்ன லவ்வர்ஸ் பைட் அவ்வளவு தான். நீங்க போங்க நாங்க இப்போ வந்திடுவோம்” என்று அவனே பதில் கொடுத்தான்.
 
ராம் அப்போதும் அங்கிருந்து நகராமல்“கொஞ்சம் அவங்க கையை விடறியா??” என்றுவிட்டு“என்ன பிரச்சனை??” என்றிருந்தான் இப்போது அவளை பார்த்து.
“லவ் பண்றேன்னு சொல்லிட்டு பதிலுக்கு நீயும் லவ் பண்ணுன்னு டார்ச்சர் பண்றான். எனக்கு விருப்பமில்லைன்னு சொன்னதும் கண்டபடி பேசி கையை பிடிக்கிறான்” என்ற போது கண்களில் மளுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது.
 
“நீ கிளம்பு…” என்று அவளை அனுப்பிவிட்டு பிரவீனை நோக்கித் திரும்பினான்.
 
“இனிமே உன்னை அவ பின்னாடி பார்த்தேன்னு வை… அப்புறம் நீ என்னாவேன்னு தெரியாது…” என்று கடுமையாய் எச்சரித்து அங்கிருந்து நகர்ந்தான்.
 
நல்ல மனநிலையுடன் கல்லூரிக்கு கிளம்பி வந்தவளுக்கு காலையிலேயே மூட் அவுட் ஆகிவிட சோர்ந்த முகத்துடன் கல்லூரிக்குள் நுழைந்தாள்.
 
அங்கு இவளுக்காகவே தவம் கிடந்தவன் உள்ளே வந்தவளை பார்த்தது பார்த்தபடியே நின்றிருந்தான். அவள் இருந்த மனநிலையில் அவனை கவனிக்காமலே கடந்து சென்றிருந்தாள் அவள்.
 
எப்போதுமே அப்படி தான் அவள் செல்லுவாள். ஏனோ இன்று அவள் அவனை பார்க்காமல் சென்றது அவனுக்குள் வருத்தத்தை கொடுத்தது. ‘கொஞ்சம் திரும்பி பார்த்திருக்கலாம்’ என்று தான் பார்த்திருந்தான்.
 
ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்து அங்குமிங்கும் அலைந்தவன் ராக்கியை இழுத்து தன்னருகில் அமர வைத்துக்கொண்டு ஒரு வரிசையில் சென்று அமர்ந்தான்.
 
அங்கிருந்து பார்த்தால் உள்ளே யார் யார் நுழைகிறார்கள் என்று பார்க்க முடியும். அவள் வரவினை ஆவலாய் எதிர்பார்த்து காத்திருந்தான்.
 
சற்று நேரத்தில் அவள் தன் தோழிகள் புடைசூழ உள்ளே வந்ததை கண்டதும் கால்கள் தானாய் எழும்பி அவள் பின்னே செல்லத் தூண்டியது அவனை.
 
“டேய் எங்கடா போறே?? என்னை இழுத்து உட்கார வைச்சுட்டு” என்ற ராக்கி குரல் எல்லாம் அவனுக்கு கேட்கவேயில்லை.
 
அப்போது தான் இயல்பிற்கு திரும்பி தோழிகளுடன்சிரித்து பேசிக் கொண்டிருந்தவளின் பின்னே சென்றிருந்தான்.
 
அவள் இவனை கவனிக்கவேயில்லை. எவ்வளவு நேரம் தான் அப்படியே நிற்பது கொஞ்சம் ஓவராய் தான் இருக்கோ என்று எண்ணிக்கொண்டு மீண்டும் தோழனின் அருகில் வந்து அமர்ந்தான் அவன்.
 
“என்ன தேவியார் உன்னை பார்க்கலையா??”
 
“ஹ்ம்ம் ஆமாடா என்னை கண்டுக்கவே மாட்டேங்குறா” என்றான் பிரியன் கொஞ்சம் சலிப்பான குரலில்.
 
“பார்த்தா அப்படி தெரியலையே, தேவி உனக்காக ஸ்பெஷல் தரிசனம் கொடுக்குற மாதிரி தெரியுதே” என்ற ராக்கியை சந்தோசமாய் பார்த்தான் பிரியன்.
 
“நிஜமாவா சொல்றே…”
 
“இருக்கலாம்ன்னு சொன்னேன்”
 
“போடா…” என்றவன் ஏதோ அவனிடம் மேலே பேசிக் கொண்டிருக்கும் போதே வதனா அவன் முன் வந்து நின்றிருந்தாள்.
 
அவள்முகமோவாடியிருந்தது. “என்னாச்சு??” என்று கேட்டவாறே எழுந்து நின்றிருந்தான் அவன் இப்போது.
 
“இல்லைஅது வந்து ஒரு ஹெல்ப்”
 
“சொல்லு”
 
“ஒண்ணு கேட்கணும்”
 
‘என்ன வேணாலும் கேளு என்னையே தரேன்’ என்று மனம் வேறு சம்மந்தமேயில்லாமல் ஆஜர் ஆனது.
 
“நான் இன்னைக்கு இங்க ஒரு ஈவன்ட்ல பார்டிசிபேட் பண்றேன்”
 
“சரி”
 
“அதுல தமிழ் பாட்டு தான் பாடலாம்ன்னு இருந்தேன்”
“இப்போ வந்து அந்த பாட்டு பாடக்கூடாதுன்னு சொல்றாங்க”
 
“யார் சொன்னா??”
 
“இதை கோஆர்டினேட் பண்றவங்க…”
 
“நான் என்ன பண்ணணும்??”
 
“ஏன் நான் தமிழ் பாட்டு பாடக் கூடாதா??” என்று கேட்பவளிடம் இல்லை என்று சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை.
 
தன்னைத்தேடி உதவி என்று வந்து கேட்கிறாள் தான் இதில் என்ன செய்ய என்று யோசித்தவன் சற்றே திரும்ப அவன் அடிமை ராகேஷ் கண்ணில் சிக்கினான்.
 
“ராக்கி…”
 
“போறேன்டா போறேன் அந்த கோஆர்டினேட் பண்ணுறவனை இழுத்திட்டு வர்றேன் போதுமா” என்று எழுந்திருந்தான் அவன்.
 
“அந்த அண்ணாவை ஏன் அனுப்பறீங்க??” என்றாள் வதனா.
 
“என்ன சொன்னே??”
 
“அவங்களை ஏன் அனுப்பறீங்கன்னு கேட்டேன்”
 
“அதுக்கு முன்னாடி ஒண்ணு சொன்னியே??”
 
“அண்ணாவா…”
 
“ஆமா… அதை அவன் திரும்பி வரும் போது அவன் முன்னாடி சொல்றியா??”
 
“ஏன்??” என்று கேட்டாள்.
 
“ப்ளீஸ் எனக்காக…” என்றதும் அவள் தலை வேறு தன்னைப் போல் ஆடியது சரியென்று.
 
“ஆமா நீ ஏன் தமிழ் பாட்டு செலக்ட் பண்ணே… இங்க பெரும்பாலும் எல்லாரும் தெலுங்கு தானே பேசுறாங்க… இல்லை ஹிந்தி பாட்டுன்னா கூட ஓகே தானே”
 
“இல்லை எனக்கு பாடணும்ன்னு தோணுச்சு, அதான் பேர் கொடுத்தேன். அப்போவே சொன்னேன் தமிழ் பாட்டு தான்னு சரின்னு சொன்னாங்க… இப்போஜட்ஜஸ்க்கு தமிழ் தெரியாது அது இதுன்னு சொல்றாங்க”
 
“உனக்கு தெலுங்கு பாட்டு ஒண்ணு கூட தெரியாதா??”
 
“கீர்த்தனைகள் பாடுவேன், அதுல கொஞ்சம் தெலுங்கு பாட்டு வரும்” என்றாள்.
 
“கீர்த்தனைகளா அதெல்லாம் எப்போ கத்துக்கிட்ட??”
 
“எங்கம்மாகிட்ட!!”
“அம்மா….”
 
“ஹ்ம்ம் எனக்கு மூணு வயசு இருக்கும் போதே அவங்க கத்துக் கொடுத்தாங்களாம். திடிர்னு அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போயி அப்புறம் தான் என்னை இல்லத்துல விட்டாங்களாம்”
 
“அவங்க சாகறதுக்கு கொஞ்சம் முன்னாடி தான் நான் இல்லத்துல சேர்ந்தேன். முதல்ல எல்லாம் நான் அடிக்கடி பாடுவேன்னு இல்லத்துலயும்என்னை பாட வைச்சு கேட்பாங்க”
 
“எல்லாருக்கும் நானே பாட்டு சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சேன் எனக்கு தெரிஞ்ச அளவுல. ஸ்கூல்ல நான் நல்லா பாடுறது பார்த்து எங்க மியூசிக் மிஸ் அவங்களாவே எனக்கு கத்துக் கொடுத்தாங்க” என்றாள்.
 
“அப்போ உங்கப்பா பத்தி எதுவும் தெரியாதா??”
 
“அம்மா மட்டும் தான் வந்து சேர்த்ததா சொன்னாங்க… அப்பா பத்தி தெரியலை”
 
“ஹ்ம்ம்…” என்று கேட்டுக்கொண்டவன் “சரி அப்போ நீ அந்த கீர்த்தனைகள்ல ஒண்ணை பாடேன். அப்புறம் அது முடிஞ்சதும் வேணா ஒரு தமிழ் பாட்டு பாடு… அப்போ யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்றான்.
 
“நிஜமாவா…” என்று மைவிழி விரித்து கேட்க அதில் அப்படியே வீழ்ந்து போனானவன்.
 
அடுத்த ஐந்து நிமிடத்தில் ராக்கி வர “டேய் அவன் கண்டிப்பா தெலுங்கு பாட்டு பாடியே ஆகணுங்கறான்டா…” என்றான்.
 
“பரவாயில்லைஅண்ணாநான் தெலுங்கு பாட்டே பாடுறேன். இப்போ தான் இவர் சொன்னார் அதே பாடச் சொல்லி… தேங்க்ஸ்அண்ணா எனக்காக போய் பேசிட்டு வந்ததுக்கு” என்று அவள் நொடிக்கொரு அண்ணா போடவும் நொந்தே போனான் ராகேஷ்.
 
“சட்டை கிழிஞ்சிருச்சு தைச்சு முடிச்சிறலாம் நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்” என்று வேண்டுமென்றே ராகேஷின் காதில் பாடி வைத்தவனை முறைத்தான் அவன்.
 
வதனாபிரியனிடம் கண்களால் விடைபெற்று நகர்ந்திருந்தாள். “டேய் இதெல்லாம் உனக்கு ஓவரா இல்லை… அவ என்னை டேய் வாடா போடான்னு பேசியிருந்தா கூட எனக்கு ஒண்ணும் தோணியிருக்காது”
 
“என்ன இருந்தாலும்… சரி சரி முறைக்காதே, அண்ணான்னே கூப்பிடட்டும் நான் ஒண்ணும் சொல்லலை” என்று இருக்கையில் அமர்ந்து கொண்டான் ராகேஷ்.
 
மேடையில் அவள் அவன் சொன்னது போல ஒரு தெலுங்கு கீர்த்தனை பாடியவள் பின்னர் தனக்கு பிடித்த பாடல் என்று சொல்லிநீயொரு காதல் சங்கீதம் என்றுபாட அதில் அவள் குரல் குழைந்த வண்ணம் ஒலிக்கபிரியனின் பார்வை நொடிபொழுதும் அவளைவிட்டு பிரியவேயில்லை.
 
அவள் பார்வையுமே அவனையே தழுவித் தானிருந்தது. பிரியனுக்கு ஏனோ அவன் காத்திருப்புக்கு இன்று பதில் கிடைத்துவிடும் என்று ஒரு நம்பிக்கை தோன்றியது.
 
கிளம்புமுன் அவளிடம் பேசிட வேண்டும் என்று முடிவே எடுத்துவிட்டான். பாடி முடித்திருந்தவள் ஆடிட்டோரியம் விட்டு வெளியில் செல்ல அவளை கண்டுக்கொண்டிருந்தவன் விழிகளும் காலும் அவளை தொடர்ந்தன.
 
அவள் பின்னேயே செல்ல அவளும் இவனைக் கண்டுவிட்டு இவனை நோக்கியே வந்தாள். “உங்ககிட்ட தனியா பேசணும்ன்னு தான்வெளியவந்தேன்” என்றாள்.
 
அவனுள்ளே காட்டாறாய் மகிழ்ச்சி ஊற்று ஓடவாரம்பித்தது. தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு “என்ன” என்றான்.
 
“நான் நல்லா பாடினேனா??”
 
‘இதை கேட்க தான் கூப்பிட்டியாடி…’ என்று மனம் அவளுக்கு கொட்டு வைத்தது.
 
“அதைநான் வேற தனியா சொல்லணுமா…”
 
“நீங்க சொன்னா இன்னும் சந்தோசமா இருக்கும்…” என்ற அவள் பதில் அவனை ஸ்பெஷலாக உணரவைத்தது.
 
“ரொம்ப நல்லா பாடினே… எனக்காக நீ இன்னும் நெறைய பாட்டு பாடி காட்டுவியா…”
 
“கண்டிப்பா பாடுறேன்… உங்களுக்கு பிடிச்ச பாட்டு சொல்லுங்க, அடுத்த பங்ஷன்ல பாடிக்காட்டுறேன்”
 
“எல்லார் முன்னாடியும் வேண்டாம் தனியா எனக்கே எனக்காக…” என்றவனின் குரலில் அதீத எதிர்பார்ப்பிருந்தது.
 
“ஹ்ம்ம்…” என்று மட்டும் அவள் தலையாடியது.
 
“சரி நான் உள்ள போறேன்” என்றாள்.
 
“இதைதான் என்கிட்ட தனியா பேசணும்ன்னு நினைச்சியா??”
 
“ஆமா…”
 
“வேற ஒண்ணுமில்லையா??”
 
“இல்லையே…” என்று உதடு பிதுக்கினாள் அவள். அந்த சுழிப்பில் மனம் சுருண்டது அவனுக்கு.
 
“உன்கிட்ட இதை கேட்கக் கூடாது போர்ஸ் பண்ணக்கூடாதுன்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கு கேட்கணும் போல இருக்கு. பதில் கிடைக்கும்ன்னு நம்பி கேட்குறேன்” என்றான்.
 
‘அப்பாடா இப்போவாச்சும் கேட்கணும்ன்னு தோணிச்சே உங்களுக்கு. நானா எப்படி சொல்றதுன்னு நினைச்சுட்டே இருந்தேன்’ என்று தான் அவள் மனசாட்சி எண்ணியது.
 
“அந்த பெஞ்சில உட்கார்ந்து பேசுவோமா…” என்று அன்று அவன் மனம் திறந்து அவளிடம் பேசிய அதேஇடத்தை சுட்டிக்காட்டினான்.
 
அவளும் தலையசைக்க இருவருமாய் அங்கு சென்று அமர்ந்தனர். “கேட்கவா…”
 
“என்ன கேட்கணும்??”
 
“அன்னைக்கு இங்க வைச்சு நான் ஒரு விஷயம் சொன்னேன், ஞாபகமிருக்கா”
 
“ஹ்ம்ம்…”
 
“அதுக்கு உன்னோட பதில் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்றான் குரலில் ஒருவித எதிர்பார்ப்பை தேக்கி.
 
“என்ன சொல்லணும்??” என்றவளை என்ன சொல்ல என்று பார்த்திருந்தான்.
 
“பிடிச்சிருக்குன்னா சொல்லு பிடிக்கலைன்னா எதுவும் சொல்ல வேணாம் நீ எழுந்து போய்டு” என்றான்.
 
அவள் சற்றும் தாமதியாமல் எழுந்து சென்றாள். செல்லும் அவளையே ஒருவித இயலாமையுடன் பார்த்தவன் தலை தானாய் கீழே தொங்கியது.
 
சென்றவள் மீண்டும் திரும்பி வந்து அவன் பின்னே நின்றிருந்தாள்.
 
“நீங்க கேட்டது உங்களுக்கேசரின்னு தோணுதா… இன்னைக்குன்னுபார்த்து பார்த்து உங்களுக்காக அலங்காரம் பண்ணிட்டு வந்திருக்கேன்”
 
“உங்களுக்காக எல்லாரும் என்ன சொன்னாலும் பரவாயில்லைன்னு தமிழ் பாட்டு எல்லாம் பாடியிருக்கேன்”
 
“நீங்க பார்க்காத போது உங்களை சைட் அடிச்சிருக்கேன். என்னைப் பார்த்து பிடிக்கலைன்னா எழுந்து போன்னு எப்படி சொல்லலாம்” என்று மெல்லிய குரலில் அவள் கேட்க அவன் மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது.
 
“ஹேய் நிஜமாவா சொல்றே” என்றவன் அவள் பின்னே செல்ல அவள் வேகமாய் முன்னே ஓடினாள். எதிரில் பேராசியர் ஒருவர் வர அவள் அப்படியே ப்ரீஸ் ஆகி நின்றாள்.
 
பின்னால் ஓடிவந்தவனை பார்த்து “டேய் என்னடா நடக்குது இங்க??” என்றார் பேராசிரியர்.
 
“சார் லவ்ஸ் சார் கண்டுக்காதீங்க…”
 
“இது காலேஜ்டா…”
 
“தெரியும் சார்…”
 
“பார்த்துடா…”
 
“பார்த்திட்டே தான் சார் இருக்கேன்…” என்றான் அவளை பார்த்துக்கொண்டே.
 
“தலையெழுத்துடா… இப்போவே உங்களுக்கு செட் ஆகுது,எனக்கெல்லாம் எதுவும் செட் ஆக மாட்டேங்குதேடா…” என்று முணுமுணுத்துக் கொண்டே நகர்ந்தார் அவர்.
 
அந்த பேராசியர் பிரியனின் துறையில் இருப்பவர். மாணவர்களிடம் சகஜமாய் பழகுபவர். பிரியன் எப்போதும் அவரிடம் வெகு இயல்பாய் பேசுவான் இப்போதும் ஒளியாமல் உண்மையை அவரிடம் சொன்னான்.
 
“அந்த சார் தெரியுமா உங்களுக்கு…”
 
அவளைப் பார்த்து கண்ணடித்து “எங்க சார் தான், கண்டுக்காதே…” என்றவன் அவள் தோள் மேல் கைப்போட “இதானே வேணாங்கறது” என்றாள்.
“எனக்கு இது தான் வேணும் பேசாம வா…” என்று அப்படியே அவளை உள்ளே இழுத்து சென்றான்…
 
சிறிதானபூசல்அதில்
அறியாகோணம்
தெரியாகுணம்
தெளியாதமனம்
தெளிந்தபின்
விட்டகலாதபார்வை
பகிர்ந்தஅன்பு
பகிராநிர்பந்தம்
தொடர்ந்தபார்வை
இதுவேபந்தமாக்கியது
புரிந்தமனம்
உடன்பகிர்ந்தநான்
கொண்டாடும்நீ
இனி
திண்டாடச்செய்வாயா??
வினைசூழும்உலகில்
சூலாககாப்பாயா??
இல்லை
எனைசூழவிடுவாயா??

Advertisement