Advertisement

வதனாவின் முகத்தில் இன்னமும் குழப்ப ரேகைகள் கண்ட பிரியன் அவளை கூட்டத்தில் இருந்து தனியே பிரிந்து சற்று தள்ளிச் சென்றான்.

 

“வது என்னாச்சு?? ஏன் இவ்வளவு டல்லா இருக்கே?? நம்ம கல்யாணம் நடந்ததுல உனக்கு சந்தோசமில்லையா??”

 

“நம்ம கல்யாணம் நடந்ததுல சந்தோசம் தான்… ஆனா…”

 

“என்ன ஆனா??”

 

“ரொம்ப அவசரப்பட்டுடோமோன்னு இருக்கு…”

 

“நான் இப்போ கட்டலைன்னா நாளைக்கு அந்த பிரவீன் அதைத்தான் செஞ்சிருப்பான்… என்னை பார்த்திட்டு சும்மா இருக்க சொல்றியா??” என்றவனுக்குள் லேசாய் கோபம் துளிர்த்து.

 

 

 

“வா…” என்ற பிரியன் அவள் கைப்பிடித்து அழைத்துச் சென்றான். சாவியை அவளிடம் கொடுத்து கதவை திறக்கச் சொன்னான்.

 

இருவரும் சேர்ந்து உள்ளே நுழைந்ததும் அவன் கதவை அடைத்துவிட்டு வந்து அவளை பின்னிருந்து அணைத்துக் கொள்ள இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது அவளுக்கு.

அந்த அணைப்பு அவளுக்கும் தேவையானதாய் இருந்தாலும் ஏதோ தவறு செய்யும் உணர்வு அவளுக்கு.

 

தனக்கும் அவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்பதை கழுத்தில் அணிந்திருந்த தாலி உறுதி செய்தாலும் மனம் இன்னும் அதற்கு முழுதாய் தன்னை தயார்ப்படுத்தியிருக்கவில்லை.

 

“என்னாச்சு நெர்வஸா இருக்கியா…” என்றவன் இப்போது அவளைப் பிரிந்து சற்று தள்ளி வந்தான்.

 

“கொஞ்சம் பயமாயிருக்கு…”

 

“உட்காரு…” என்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டவன் உட்கார யோசிக்கும் அவளின் கைப்பிடித்து அமர வைத்தான்.

 

“இங்க பாரு நீ பயப்படுறன்னு எனக்கு தெரியுது… நம்ம கல்யாணம் முடிஞ்சதுல ஒரு சின்ன எக்சைமென்ட் எனக்கு அதுனால உன்னை ஹக் பண்ணிட்டேன்”

 

“மத்தப்படி நான் வேற எதுவும் யோசிக்கலை இந்த நிமிஷம் வரை. அப்படி ஒரு எண்ணத்தோட எல்லாம் உன்னை இங்க அழைச்சிட்டும் வரலை, என்னை நீ நம்புற தானே…”

 

ப்ரியபாலாமழலைகள்இல்லம்வெளியில் இருந்து பார்க்க சிறு கட்டிடமாய் தோன்றினாலும் இறங்கி உள்ளே செல்ல நீண்டிருந்ததுஅந்த கட்டிடம்.

 

சிறு குழந்தையாய் இறங்கி உள்ளே ஓடியவளை பார்த்துக்கொண்டே பின்னோடு பிரியனும் இறங்கி அவள் பின்னே சென்றான்.

 

தாய் வீட்டிற்கு சென்ற மகளைப் போலிருந்தது அவள் குதூகலம். உண்மையில் இது அவளுக்கு தாய் வீடு தானே என்ற எண்ணம் ஓடியது அவனுக்கு.

 

உள்ளே நுழைந்தவுடன் மஞ்சள்நிற சரக்கொன்றை மரம் அவர்களை வரவேற்கும் விதமாய் மஞ்சள் பூக்களை வழியெங்கும் அள்ளி தெளித்திருந்தது…

 

கொஞ்சம் நடந்து உள்ளே சென்ற பின்னே இடதுபுறமாய் இருந்த அந்த சிறிய கட்டிடத்துக்குள் நுழைந்தாள் வதனா.

 

அவளுடனே பிரியனும் உள்ளே நுழைந்திருந்தான். “சீதாம்மா… சீதாம்மா…” என்று அழைத்துக் கொண்டே சென்றாள் அவள். அவனை கண்டுக்கொள்ளவேயில்லை. பிரியன் வரவேற்பு போல் இருந்த அந்த அறையிலேயே தேங்கிவிட்டான்.

 

தூரத்தே தெரிந்த மலையில் ஓரிரு இடத்தில் வெளிச்சப்புள்ளிகள்… இப்படி தான் தன் வாழக்கையிலும் ஆங்காங்கே வெளிச்சம் தோன்றி மறைகிறதோ என்று அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

அது வாடைக்காலம் என்பதால் லேசாய் வீசிய காற்று உடலுக்குள் பாய்ந்து ஊடுருவிச்செல்ல மயிர் கூச்செறிந்தது அவளுக்கு.

 

அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவினால்இழுத்துப் போர்த்துக் கொண்டாள். வண்டிகளின் இரைச்சல் எல்லாம் சற்றே அடங்க ஆரம்பித்த நேரமென்பதால் இந்த இரவு அவளுக்கு அமைதியானதாயிருந்தது.

 

எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ அவள் பின்னால் மெதுவாய் வந்து நின்ற பிரியனின் உடல் சூடு அவள் மேல் படவும் திரும்ப முயற்சித்தவளை திரும்பவிடாது அவளை பின்னிருந்து அணைத்திருந்தான் பிரியன்.

Advertisement