வதனா முதன் முறையாக அந்த வீட்டிற்கு வருகிறாள். வீடுஅனைத்து வசதிகளும் செய்யப்பட்டு புத்தம் புதிதாய் இருந்தது.

 

எதையும் அவள் வாங்குவதற்கு அவசியமேயில்லை… கேட்டால் இந்த ராம் இந்த வீட்டை அவன் வாங்கவில்லை என்று சொல்கிறான்… அப்படியென்றால் இது யார் வீடாய் இருக்கும் என்று தான் யோசனை அவளுக்கு.

 

மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் அவள் பாலை காய்ச்சி முடித்தாள். “இதை கிளாஸ்ல ஊத்தி எடுத்திட்டு போவோம்…” என்ற சுகுணா அதை அங்கிருந்த கோப்பைகளில் நிரப்பினாள்.

 

“எதுக்கு இத்தனை கிளாஸ்ல ஊத்தறீங்க சுகுணா… நாம தானே, பசங்க குடிக்க மாட்டாங்க…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே “எடுத்திட்டு போங்க…” என்றுடிரேயை அவளிடம் நீட்டினாள்.

 

வெளியில் வந்த பின்னே தான் தெரிந்தது அது யார் வீடு என்று. ராமின் அருகில் பிரியன் அமர்ந்திருந்தான். முகம் கடுக்க அவர்களை நோக்கி அவள் வரவும் “அப்பா நீங்க எப்போ வந்தீங்க??” என்று இசை ஓடிவந்து அவனை கட்டிக் கொண்டாள்.

 

‘அப்பாவா… இது எப்போ நடந்துச்சு??’ என்று ரீதியில் பார்த்த வதனா இப்போது ராமை முறைத்திருந்தாள்.

 

“உன் பொண்டாட்டி எதுக்குடாஎன்னை முறைக்கிறா??” என்று அவனருகில் அமர்ந்திருந்தவனை இடித்தான்.

 

“அதை நீ அவகிட்ட தான் கேட்கணும்…” என்று பதில் கொடுத்தான் பிரியன்.

வேகமாய் வந்து கையில் இருந்ததை லொட்டென்ற சத்தத்துடன் அங்கிருந்த டிபாயின் மீது வைத்தவள் “இங்க எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தே??”

 

“வேற எங்க போயிருக்கணும்??” பேசியது பிரியன்.

 

“நான் உன்கிட்ட கேட்கலை…”

 

“நான் உன்கிட்ட தான் சொன்னேன்…”

 

“ராம்…”

 

“எனக்கு காது கேட்குது… எதுக்கு இப்படி கத்துறே??” என்றானவன்.

 

 

கிளம்புமுன் பிரியனிடம் வந்தவன்“என்னடா உன் பொண்டாட்டி என்னை இந்த முறை முறைக்கிறா… நியாயமா உன்னை தானே முறைக்கணும்…”

 

“நான் என்ன அவளை முறைக்க வேணாம்ன்னா சொன்னேன்… எங்க நமக்கு அந்த கொடுப்பினை எல்லாம்…” என்று சலிப்பாய் சொன்னான் பிரியன்.

 

“நான் கிளம்பினதும் உன்னை தான் முறைப்பா, அப்போ என்ன பண்ணணும்ன்னு நீயே முடிவு பண்ணு ராசா…”

 

“நீ என்கிட்டே இப்படி நின்னு பேசிட்டு இருக்கறதுக்கே உனக்கு பூசை பண்ணுவா நீ கிளம்பு ராம்…”

 

“அதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன்…” என்று அவன் சொல்லும் போதே அவர்களை நோக்கி வந்தாள் வதனா.

 

“உனக்கு இங்க என்ன பேச்சு வேண்டி கிடக்கு…” என்று மீண்டும் தன் முறைப்பை ஆரம்பித்தாள்.

 

“உனக்கு எதுக்கு எங்களை பார்த்து பொறாமை” என்று கேட்டு வைத்தான் ராம்.

 

“லூசு மாதிரி ஏன் உளர்ற?? எனக்கு என்ன பொறாமை உங்களை பார்த்து…”

 

“நானும் வல்லாவும் பிரண்டாகிட்டோம் அதான் உனக்கு பொறுக்கலை…”

 

“மண்ணாங்கட்டி…”

 

“அப்படின்னா…”

 

“உன் மண்டையில களிமண்ணு…”

 

“இல்லைன்னா உன் கூட பிரண்டா இருக்க முடியுமா…” என்று ராம் பதிலுக்கு அவளை வார பிரியன் வாய்விட்டு சிரித்தான்.

 

“எதுக்கு இந்த சிரிப்பு??” என்று சிடுசிடுத்தாள்.

 

பிரியனோ சுற்றி முற்றி பார்த்துவிட்டு “என்கிட்டயா பேசினே??” என்று சொன்ன பின்னே தான் அவனிடம் பேசினோம் என்பது புரிய அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டாள் வதனா.

 

“சரி வல்லா பார்த்துக்கோ அவளை… எப்படியோ உங்களை ஒண்ணா ஒரே இடத்துல இருக்க வைக்க என்னால முடிஞ்சதை செஞ்சிட்டேன்… இனி நீங்க பேசி சரியாகணும்… நான் கிளம்பறேன்” என்று நண்பனிடம் சொல்லி கிளம்பியிருந்தான் ராம்.

 

 

“அந்த ராம் ஒழுங்கா தானே இருந்தான்… திடிர்னு என்னாச்சு அவனுக்கு… எதுக்கு இப்படி மாமா வேலை பார்த்திட்டு திரியறான்…”

 

“அவளுக்கு உதவி பண்ணதுனால தான் அவன் நல்லாவே இருந்தான்… இனிமே அப்படி நடக்காது…” என்றார் அவர்.

 

“அப்பாஅவன் இல்லைன்னா இன்னைக்கு அந்த பொண்ணு இல்லைப்பா… நெறைய ஹெல்ப் பண்ணியிருக்கான் அவளுக்கு”

 

“அதுக்காக தான் அவன் இவ்வளவு நாள் நல்லா இருந்ததே… எப்போ இப்படி ஒரு வேலை செஞ்சானோ இனிமே அவன் நல்லாவே இருக்கக் கூடாது…” என்றார் அவர்.

 

“என்னப்பா சொல்றீங்க??”

 

“அவ தொழிலை முடக்குங்க முதல்ல… அடிப்பட்டா தான் தப்பு செய்ய மாட்டான்…” என்றுவிட்டு அவர் உள்ளே சென்றுவிட்டார்.