“உங்களை பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க…”

 

“யாரு?? என்னை எதுக்கு அவங்க பார்க்கணும்?? என்ன விஷயமா??” என்று கேள்விகளாய் தொடர்ந்தாள்.

 

“அவங்க பர்சனலா உங்களை பார்க்க வந்திருக்காங்க…” என்று சொல்லி முடித்துவிட்டான்.

 

“பர்சனலாவா!! யாரு?? அவங்க பேரென்ன??”

 

“மேம் அவங்க நம்ம சாரோட…”

 

“எந்த சாரோட??”

 

“வல்லவரையன் சாரோட…” என்று இப்போதும் அவன் முடிக்காமல் இருக்கவும் அவள் முகம் யோசனைக்கு தாவியது.

 

“அவருக்கு என்ன??”

 

“அவரோடபேரன்ட்ஸ்தான் வந்திருக்காங்க மேடம்…” என்று சொல்ல வந்ததை சொல்லிவிட்டான்.

 

‘அவங்க… அவங்க எதுக்கு என்னை?? இத்தனை வருஷமா என்னை பார்க்காம இருந்தவங்க, பார்க்கணும்ன்னு கூட நினைக்காதவங்க இப்போ எதுக்கு?’ என்ற கேள்விகள் அவள் மண்டைக்குள் ஊர்வலம் செய்தது.

 

பார்த்திபன் அவள் பதில் எதிர்பார்த்து காத்திருப்பது புரிய என்ன முடிவெடுக்க என்ற குழப்பம் ஒரு நொடி அவள் மனதில்.

 

 

‘நாங்க யாருன்னு தெரிஞ்சுமா இப்படி இருக்கா… கொஞ்சம் திமிர் பிடிச்சவளா இருப்பாளோ… அதான் பவளா தள்ளியிருக்கானோ…’ என்ற யோசனை உமையாளுக்கு.

 

ஆளவந்தான் அப்படி எதுவும் யோசிக்கவில்லை, வதனாவின் முகம் மட்டுமே பார்த்திருந்தார் எதையோ படித்துவிடுபவர் போல்.

 

“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து…” என்று அவர் ஆரம்பிக்கும் போதே “மன்னிக்கணும் குறுக்க பேசுறதுக்கு… நடக்காத விஷயத்தை பத்தி பேச வேண்டாமே…” என்றாள்.

 

“ஏன்??”

 

அவர் கேள்விக்கு பதில் சொல்லாமல் “திடிர்னு உங்களுக்கு எப்படி எங்க மேல அக்கறை வந்தது??” என்று எதிர் கேள்வி கேட்டாள்.

 

“திடிர்னு எல்லாம் அக்கறை வராது… எப்பவும் இருக்கறது தான்…”

 

“இத்தனை வருஷத்துல உங்களுக்கு எங்களை பார்க்கணும்ன்னு தோணினதே இல்லையே…” என்று கேட்டுவைத்தாள்.

 

“உனக்காச்சும் நாங்க யாருன்னு தெரிஞ்சிருக்கு. பவளன் கண்டிப்பா நாங்க எந்த ஊர்ல இருக்கோம்ன்னும் உனக்கு சொல்லியிருப்பான். எதையும் ஒளிச்சு மறைக்கறவனில்லை அவன்”

 

“ஆனா எங்களுக்கு உன்னை பேப்பர்ல பார்த்த பிறகு தான் தெரியும். உங்க கல்யாண போட்டோவை பார்க்கலைன்னா நீ யாருன்னு கண்டிப்பா எங்களுக்கு தெரிஞ்சிருக்காது”

 

 

அவர்கள் எழவும் பார்த்திபன் அவளுக்கு அழைக்கவும் சரியாக இருந்தது. “யாரு??” என்று கேட்டவளின் முகம் மாறிக்கொண்டிருக்க “அனுப்புங்க….” என்றுவிட்டு இருக்கையில் அமர்ந்தாள்.

 

‘இன்னைக்கு குடும்பமா வந்து என்னை ஒரு வழி செய்யணும்ன்னு முடிவு பண்ணிட்டாங்களா…’ என்று ஆயாசமாயிருந்தது அவளுக்கு.

 

போனில் அழைத்த பார்த்திபன் வல்லவரையன் வந்திருக்கிறான் என்று சொன்னானே!! என்று வாசல் பார்த்தாள்.

 

உள்ளே வரும் முன் “எக்ஸ்கியூஸ் மீ மே ஐ கமின்” என்றான்.

 

அவனை பார்த்து பல்லைக்கடித்தவள் தலையசைக்க “தேங்க்ஸ்” என்றுவிட்டு உள்ளே வந்தவன் இப்போது அவளை நோக்கவில்லை.

 

“நீங்க எதுக்கு இங்க வந்தீங்க??” என்று ஆளவந்தானையும் உமையாளையும் பார்த்து கேட்டான்.

 

“இல்லை பவளா பேசலாம்ன்னு வந்தோம்… நீங்க ரெண்டு பேரும்…” என்று அவர் சொல்லி முடிக்கும் முன் “என்னை கேட்காம நீங்க இங்க வந்திருக்க கூடாது…”

 

 

“என் மேல உள்ள கோபத்தை எங்கம்மா அப்பாகிட்டகாட்டாம இருந்ததுக்கு”

 

“நான் ஏன் அவங்க மேல கோபத்தை காட்டணும், அவங்க என்ன தப்பு செஞ்சாங்க…”

 

“புரிஞ்சா சரி…” என்றவனின் பேச்சு அவளுக்கு புரியாமல் போனது.

 

“என்ன புரியாம போச்சு இப்போ எனக்கு…” என்றாள் கோபமாய்.

 

“புரியாதபிரியம் பிரியும் போது புரியும்ன்னு சொல்வாங்க… அது நம்ம விஷயத்துல உல்டா ஆகிடுச்சுல” என்று அவன் சொன்னதும் அவள் மூக்கின் நுனி சிவந்து அவளின் கோபத்தின் அளவைகாட்டியது.

 

எதிரெதிரில் நின்று பேசிக்கொண்டிருந்தாலும் இருவருக்கிடையில் இடைவெளி இருந்தது அதுவரை. இப்போதுஅவளருகே நெருங்கி வந்து அவன் இடைவெளி குறைக்கவும் கோபம் மறந்து விழியகல அவனையே பார்த்தாள்.

 

சற்று முன் அவனுக்காய் பரிந்த மனதின் இளக்கமே காரணமானது போலும். அவள் விழிகளுக்குள் முழ்கியவன் போல் அவன் பார்வை இப்புறம் அப்புறம் நகராமல் நோக்கியது அவளை.

 

அவள் கண்ணிமைக்கவும் மறந்து பார்க்க எதிர்பாரா கணத்தில் அவளை இழுத்து அணைத்திருந்தான்.