Advertisement

அத்தியாயம் இருபத்தியிரண்டு:

ஆகாஷ் இருந்ததினால் செந்திலிடம் தன்னுடையை கோபத்தை அதிருப்தியை காட்ட விரும்பாதவளாக ராஜி அடக்கி வாசித்தாலும் முகம் கோபத்தை அப்பட்டமாக பிரதிபலித்தது.

“அக்காவாம் அக்கா! பேச்சை பாரு! பேச்சை இருடா நீ என்கிட்டே தனியா மாட்டாமையா போயிருவ!”, இது அவளின் பார்வை செந்திலுக்கு உணர்த்திய செய்தி….

“அக்கா!”, என்று சொல்லிவிட்டு செந்தில் ஏன் ராஜியை பார்க்க போகிறான்….. அவன் ஒரு க்ஷணமே அவளின் பார்வையை பார்த்தான் அதில் தெரிந்த செய்தி கோபம் அவனுக்கு சொல்லாமல் சொன்னது…….. “மவனே நீ இன்னைக்கு அவகிட்ட மாட்டின! செத்தடா நீ! எஸ்கேப்!”, என்று அவனுக்கு அவனே சொல்லிகொண்டவன்…… கவனமாக ஆகாஷுடன் போய் இணைந்து கொண்டான்.

அடுத்த ஹாஸ்பிடல் வரும்வரை ராஜியின் கோபம் நீடித்தது. அங்கே வந்த பிறகு சிந்தனைகள் எல்லாம் செந்திலின் கையின் மீது போய்விட கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டது.

அங்கேயும் டாக்டர் முன்பு சொன்ன டாக்டர் சொன்னதையே அப்பிராயப்பட எதற்கும் இருக்கட்டும் என்று வேறு டாக்டரிடம் அழைத்து போனான். எல்லாம் இதில் மிகவும் புகழ்பெற்ற அனுபவம் வாய்ந்த மருத்துவர்களே. அவரும் அதே அப்பிராயப்பட நாளை முன்பு பார்த்த டாக்டரையே பார்த்து, “சரி”, என்று சொல்லிவிடலாம் என்று முடிவு செய்தனர்.

பிறகு அவர்களை ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்து போக ஆகாஷ் விழைய…… “வேண்டாம்”, என்று மறுத்தாள் ராஜி…….

“நாங்க தங்கி இருக்கிற இடத்துலயே ஏதாவது வரவழைச்சு சாப்பிடுக்கிறோம்…. இப்போ நிஜமாவே ஐ அம் டெட் டையர்ட் “,

“ஐ தாட் ஆஃப் கிவிங் ட்ரீட் டு யுவர் மேரேஜ்”,

“ப்ளீஸ்! நாட் டுடே! சுயூர் வீ வில் கோ சம் அதர் டே!”,

இவர்கள் ஆங்கிலத்தில் கதைப்பதை பார்த்து செந்திலுக்கு சற்று உதறல். அவனின் முகம் ஒரு மாதிரியாக ஆக……. அதை கவனித்த ராஜி தானும் ஆகாஷும் பேசுவது செந்திலுக்கு பிடித்தமில்லையோ என்று நினைத்தாள். 

செந்திலின் பிரச்சனை அதுவல்ல………. ஆங்கிலம் தான் அவனுக்கு பிரச்சனை. ஆங்கிலம் என்பது அவன் தட்டு தடுமாறி அரைகுறையாக புரிந்து கொள்ளும் மொழி. சற்று அதிலேயே கவனமாக இருந்தால் பேசுவதை எப்படியும் அர்த்தம் செய்து விடுவான். ஆனால் பதிலுக்கு பேசுவது என்பது முடியாத காரியம்.

அதற்காக ஆங்கிலம் அவனுக்கு தெரியாது என்பதெல்லாம் கிடையாது. எழுதுவான் படிப்பான், ஆனால் சரளமாக பேச வராது.

இப்போது ஆகாஷும் ராஜியும் பேசவும்……. எங்கே தன்னிடம் பேசிவிடுவார்களோ என்று சற்று பதட்டம் வந்தது.

பரவாயில்லை……… அப்படி எதுவும் நடக்கவில்லை ராஜி சொன்னவுடன் சரியென்று சொன்ன ஆகாஷ், முடிந்தால் நாளை செல்லலாம் என்று சொல்லி அவர்களை ஹோட்டல் ரூமில் விட்டு சென்றான்.

ரூமிற்கு வந்தவுடனே பிலு பிலு வென்று செந்திலை பிடித்துக்கொண்டாள் ராஜி…… “அவ உனக்கு அக்காவா”, என்று……

“வேற என்ன சொல்லமுடியும்”, என்றான்.

“இப்படி! இப்படி! எங்கம்மாவும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணினதால தான் என்னால! என்னால! வீட்ல இருக்க முடியாம போனேன்”,

சட்டென்று சீரியஸ் ஆன செந்தில்………. “அப்போ என்னையும் விட்டு போயிடுவியா நீ”, என்று அவளைப் பார்த்து கூர்மையாக கேட்க……..

“எனக்கு இதுக்கு பதில் தெரியாது”, என்றாள் ரோஷமாக…..

கண்மண் தெரியாத கோபம் செந்திலுக்கு……… சட்டென்று அவளின் கூந்தலை பற்றியவன்……. அவளின் முகத்திற்கு அருகே தன் முகத்தை கொண்டு சென்று….. “உனக்கு இதுக்கு பதில் தெரியாம இருக்கலாம்! ஆனா எனக்கு பதில் தெரியும்! நீ போகமாட்ட! உன்னை நான் போகவும்விடமாட்டேன்!”, என்றவன் அவளின் துடிக்கும் இதழ்களை அருகில் பார்த்தவுடன் ஆவேசமாக அவளின் இதழ்களில் முற்றுகையிட்டான். 

முற்றுகை சற்று பலமாக இருக்கவும்….. அவனின் கரங்களிலேயே தொய்ந்து விழுந்தாள் ராஜி……..

தொய்ந்து விழுந்த அவளை  தனக்கு வாகாக கைகளில் ஏந்தியவன், “என்னை கொல்லுறடி நீ! இப்படி இன்னொரு தரம் பேசிப்பாரு!”, என்று கோபமாக கர்ஜித்தவன் மீண்டும் மீண்டும் அவளின் இதழ்களை கசக்கி எடுத்தான், அவனின் இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தவள்……. அவளையும் கசக்க அவன் முற்பட்ட போது…….. அவனை விலக்கி சட்டென்று எழுந்தாள்.

“என்ன பேசிட்டு இருக்கோம்! நீ என்ன பண்ணிட்டு இருக்க! லூசாடா நீ!”, என்று கத்தினாள். 

அவளின் கோபம் அவனின் கோபத்தை மட்டுபடுத்த, “இவ்வளவு நேரமா தெரியலையா! இப்போ தான் தெரிஞ்சதா! ஆமா என்ன பேசிட்டு இருந்தோம்”, என்றான் இப்போது ஒன்றும் அறியாதவன் போல புன்னகையுடன்…..

சட்டென்று மாறும் அவனின் மனநிலையை பார்த்தவள்……  என்ன பேசுவது என்று தெரியாமல் ஆத்திரத்தில், “ம்! என்ன பேசிட்டு இருந்தோமா……  வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலைன்னு பேசிட்டு இருந்தோம்”, என்றாள் ராஜி…

“ராஜி! நீ இதை சொல்லவும் ரொம்ப பசிக்குது, சாப்பிட்டிட்டு தெம்பா சண்டை போடலாமா?”,

ராஜிக்கும் நிறைய பசித்தது…….. அவளுக்கும் சண்டையை செந்திலுடன் இழுத்து பிடிக்க முடியவில்லை……… இருந்தாலும் சொன்னாள்……… “கட்டாயம் சண்டை போடுவேன்! அப்படியே விட்டுடுவேன்னு நினைக்காதீங்க”, என்று அவனை மிரட்டியவளாக……… “போன்ல ஆர்டர் பண்ணுங்க”, என்றாள்.

“அம்மாடி! அங்க தான் பிரச்சனை”, என்றான் செந்தில்.

என்னவென்று புரியாமல் ராஜி பார்க்க………. “அவனுங்க எதுக்கெடுத்தாலும் இங்கிலிஸ்லயே கேள்வி கேட்கறாங்க. எனக்கு பதில் சொல்ல முடியாது! நீ சொல்லு!”, என்றான்.

“இங்கிலீஷ் வராதா”, என்றாள் ராஜி.

“நாலு மாசம் கழிச்சு கண்டுபிடிச்சிருக்கா, ரொம்ப………. ஃபாஸ்ட்டு”, என்று நினைத்தவன், அதை வெளியில் சொல்லாமல்…… “ஹி ஹி என்று சிரித்தவன், “கொஞ்சம் கஷ்டம்”, என்றான்.

“அதான் நானும் ஆகாஷும் பேசும்போது பேயடிச்ச மாதிரி நின்னிங்களா”,

“கவனிச்சியா நீ!”,

“ம்!”, என்றவள்………. அவன் அதை பொருட்டு எதுவும் இன்பீரியர் ஆக ஃபீல் செய்ய கூடாதே என்று நினைத்து…….

“அது ஜஸ்ட் ஒரு மொழி அவ்வளவு தான்! பேச பேச வந்துடும்!”, என்று விளக்கம் கொடுத்தவள்………..

“அதுக்காக நீங்க எந்த காம்ப்லெக்ஸும் வளர்த்துக்காதீங்க”, என்றாள் சற்று கவலையோடு.

“காம்ப்ளெக்ஸா…… நானா……..”, என்று சத்தமாக வாய்விட்டு சிரித்த செந்தில்……….

“எனக்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் தவிர எந்த காம்ப்ளெக்ஸும் தெரியாது…… டோன்ட் வொர்ரி! பீ ஹாப்பி!”, என்றான்.

சொன்னவன் அதோடு நில்லாமல், “எதுக்கு ஆகாஷ்கிட்ட பேசும்போது ஒன்னோன்னுக்கும் என்னை பார்க்குற! நான் எதுவும் சொல்ல மாட்டேன், உனக்கு என்ன பதில் கொடுக்கனுமோ! கொடுக்கலாம்!”, என்றான்.

“இல்லை! நீங்க ஏதாவது தப்பா எடுத்துக்கிடீங்கன்னா……. முதல்ல அவங்களோட என் கல்யாண பேச்சு வேற வந்திருக்கு, அதான்!”, என்றாள்.

“ப்ச்! என்ன ராஜி? நான் சந்தேகப்படுவேன்னு நினைக்கிறியா”,

“இல்லை! நான் அப்படி சொல்லலை! ஆனா அந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தை நான் கொடுத்துடக்கூடாது இல்லையா”,

“ப்ச்! நீ இப்படி பேசுறது எனக்கு நிஜமாவே கஷ்டமா இருக்கு. உறவுகளை மரியாதையோட பார்க்குறவன் நான். உங்களுக்குள்ள ஒரு தோழமை இருந்தா கட்டாயம் அதை கொச்சைப் படுத்தவோ தப்பா நினைக்கவோ மாட்டேன்”.

“என்னடா அவன் எல்லா வகையிலும் உயரத்துல இருக்கானே…… நான் அவனுக்கு சமதையா இல்லையே………. அதனால ஏதாவது சந்தேகபடுவேனோன்னு நிச்சயம் நீ பயப்பட வேண்டாம். நான் முன்ன சொன்ன மாதிரி எனக்கு ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் தவிர எந்த காம்ப்ளேக்சும் தெரியாது………. எனக்குள்ள எந்த காம்ப்ளெக்ஸ்சும் வராது”, என்றான் திடமாக.

“சாரி!”, என்றாள்.

“எதுக்கு நான் சந்தேகப்படுவேன்னு நினைச்சியா”,

“இல்லை! இல்லை! இல்லவே இல்லைங்௧”, என்று மறுத்தவள்…….. “நீங்க ஏதாவது காம்ப்ளெக்ஸ் வளர்த்துகிட்டா என்ன பண்றதுன்னு நினைச்சேன்”, என்றாள்.

“பயமே வேண்டாம். உறவுகளை தப்பா பேசறதுல என்னைக்குமே எனக்கு உடன் பாடு கிடையாது….. அதுவும் ஆண் பெண் நட்பு நிச்சயம் தப்பான ஒண்ணு கிடையாது. அதோட வரை முறை தெரிஞ்சு நடக்கும் போது அது ரொம்ப ஆரோக்யமான ஒண்ணு…… “,

“இதுல இருக்கிற ஒரே பிரச்சனை, அந்த மாதிரி நல்ல ஆணோ நல்ல பெண்ணோ நட்பாய் அமையறது தான்! ஆகாஷ் அந்த வகையில நட்புக்குரியவன் தான், பெருமைக்கு சொல்லலை………. என்னோட மனுஷங்களை பத்திய கணிப்பு அதிகமா தப்பா போனது இல்லை, மீறி வந்தா பாத்துக்கலாம், நான் இருக்கேன் விடு”, என்றான்.  

ராஜிக்கு கொஞ்சம் பயம் இருந்தது உண்மை தான்……. ஆகாஷுடன் தான் சகஜமாக பேசுவதை அவன் தவறாக எடுத்துக்கொண்டால் என்ன செய்வது என்று. அதற்கு செந்திலின் இந்த பதில் அவளுக்கு அவன் மேல் உள்ள காதலை அதிகப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். 

 “ஒஹ் இவ்வளவு நல்லவனா நீ!”, என்று கிண்டலுக்கு மாறினாள்….. குரலில் தான் கிண்டல் இருந்தது முகத்தில் செந்திலை பற்றி நிறைய பெருமை இருந்தது.

“பேசிப்பேசியே மாமா டையர்ட் ஆகிட்டேன்……. முதல்ல கொஞ்சம் தண்ணியை கொடு! அப்புறம் எதையாவது சாப்பிட சொல்லு”, என்றான்.

இப்படி ஏதாவது பேசி பேசியே ராஜியை திசை திருப்பிய செந்தில்….. அனிதா அண்ணாமலை பற்றி ராஜிக்கு ஞாபகம் வராமலேயே பார்த்துக்கொண்டான்.

பிறகும் அவளை சிரிக்க வைக்க நிறைய பேசினான்.

அன்றைய இரவும் அவர்களுக்கு ஒரு திருப்தியான உறவை கொடுத்த இரவாகவே அமைந்தது…….. அதுவுமில்லாமல் இருவரும் நிறைய பேசினார்கள் என்பதை விட நிறைய நிறைய பேசினார்கள்…….

திருமணமான இந்த நான்கு மாதத்தில் பேசிய பேச்சுக்களை விட அதிகமாக ஒரே இரவில் பேசினார்கள்.

மறுநாள் காலை ஒன்பது மணிக்கு ஆகாஷ் போன் செய்த போது தான் செந்திலுக்கு விழிப்பே வந்தது. அப்போதும் ராஜி எழுந்துக்கொள்ளவில்லை.

செந்தில் போனை எடுத்து, “ஹலோ”, சொன்ன விதத்திலேயே அவன் இப்போது தான் கண் விழிக்கிறான் என்பதை புரிந்த கொண்ட ஆகாஷ்…….. “இப்போ தான் எழறீங்களா”, என்றான் ஒருமையில் சகஜமாக….

“ம்ம்! தப்பு! தப்பு!”, என்ற செந்தில்………. “நான் தான் எழுந்துக்கிட்டே  இருக்கேன்! ராஜி இன்னும் அசையக் கூட இல்லை”.

“பத்தரை மணிக்கு டாக்டர் கிட்ட அப்பாயின்மென்ட்……. பத்து மணிக்கு நான் அங்க இருப்பேன்! அதுக்குள்ள நீங்க ரெடியா இருக்கனும்”, என்றான் உரிமையாக……

ஆகாஷ் தன்னிடம் உரிமையாக ஒருமையில் பேசுவது செந்திலுக்குப் புரிந்தது. ராஜியுடன் நட்பு பாராட்ட விரும்பியே தன்னுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்கிறான் என்றும் புரிந்தது. 

“சரிங்க”, என்றான்.

“என்ன சரிங்க! சரின்னு சொன்னா போதும். முதல்ல இந்த ங்க எல்லாம் கட் பண்ணு செந்தில், கால் மீ ஆகாஷ்”, என்றான் நேற்று மாதிரியே….

“சரி ஆகாஷ்”, என்றவன்……. “அக்கா எப்படி இருக்காங்க!”, என்றான்.

அந்த கேள்வியில் ஆகாஷ் மிகவும் மகிழ்ந்து விட்டான்…… “கொஞ்சம் காலையில இருந்து பார்க்க டையர்டா தெரியறா! அதான் ராஜியோட அப்பாவை இங்க விட்டுட்டு தான் வர்றேன்! ஒண்ணும் ப்ரச்சனையில்லையே!”,

“ஒண்ணும் பிரச்சனையில்லை நீ எங்கக்கூட இருக்கில்ல போதும்”,   

“ராஜேஸ்வரி ஏதாவது சொன்னா?”,

“அவ என்ன சொன்னாலும் நான்  பார்த்துக்கறேன்! நீ தைரியமா அவரை விட்டுட்டு வா”, என்றான்.

அவன் பேசி முடித்து குளித்து வரும்வரையிலும் ராஜி எழவில்லை…

“ராஜி எழுந்திரு! டைம் ஆகுது!”, என்று ஒருவழியாக அவளை எழுப்பி, கிளப்பி, நிற்கும்போது ஆகாஷ் வந்திருந்தான்.

திரும்பவும் டாக்டரை சென்று பார்க்க………. அவர் அன்றிலிருந்து மூன்றாவது நாள் சர்ஜெரிக்கு நாள் கொடுத்தார்……. நேற்றே அவர் வலி நிவாரண மாத்திரைகளும் கொஞ்சம் பவராகவே கொடுத்திருந்தார். அதனால் வலி அவ்வளவாக செந்திலுக்கு தெரியவில்லை.  

“இங்கேயே இருப்பதா ஊருக்கு போய் வருவதா”, என்று அவர்கள் யோசிக்கும் போதே,

ஆகாஷ்………. “இங்கயே இருங்க! ஒரு ரெண்டு நாள் சென்னையை சுத்திப்பாருங்க”, என்று அவனும் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே……

ஆகாஷிற்கு போன் வந்தது………. அனிதாவிற்கு நிறைய வலி இருப்பதாக….

அனிதா கன்சல்ட் செய்யும் ஹாஸ்பிடலும் அதுதான் என்பதால் அவளை அழைத்து வர சொல்லிவிட்டு ஆகாஷ் அங்கேயே இருந்தான்.

“நாம போகலாமா”, என்றாள் ராஜி……..

“அவன் பாரு எவ்வளவு டென்சனா இருக்கான்!”, என்று ஆகாஷைக் காட்டியவன்……….  “அவனை எப்படி தனியா விட்டிட்டு வர்றது, நீ ரூம்க்கு போறதானா போ! நான் அவன்கூட இருக்கேன்”, என்றான்.  

ராஜிக்கு அங்கே போய் தனியாக இருக்கவும் மனமில்லை…….. இங்கே இருக்கவும் மனமில்லை……. செந்திலை பரிதாபமாக பார்க்க…..

“நான் உன்னை எதுக்கும் கூப்பிடலை! இங்கேயே எங்கயாவது உட்கார்ந்து இரு! நிலைமை கொஞ்சமா சரியானதுமே கிளம்பிடலாம்”, என்று அவளுக்கு வாக்கு கொடுக்க……..

“ம்! சரி!”, என்று போய் அமர்ந்துக் கொண்டாள்…….       

சிறிது நேரத்திலேயே அண்ணாமலை அனிதாவுடன் வந்தார். அவளால் நடக்கக் கூட முடியவில்லை. வீல் சேரில் அவசரமாக பிரசவ அறை நோக்கி கொண்டு செல்லப்பட்டாள்……..

ராஜி உட்கார்ந்திருந்த இடத்தை கிராஸ் செய்து தான் அனிதாவை கொண்டு சென்றனர். அவளுக்கு இருந்த வலியில் அனிதா கவனிக்கவில்லை. ஆனால் ராஜி அவளை நன்றாக கவனித்தாள்.

கவனித்ததும் கண்கள் பார்த்தது பார்த்த படி நின்றன….. அவள் பார்த்துது அனிதாவின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறு மற்றும் அவள் நெற்றி வகிட்டில் இருந்த குங்குமம்.

“ஒஹ்! திருமணம் ஆகிவிட்டது!”, அதிர்ச்சி என்பதைவிட எதிலோ தோற்றுப்போன உணர்வு…. பரபரவென்று போனை எடுத்தவள் அன்னைக்கு அழைத்தால்……. அவருக்கு தெரியுமா இல்லையா என்று இவளுக்கு தெரிய வேண்டி இருந்தது.

“அம்மா உங்களுக்கு தெரியுமா”, என்றாள் எடுத்தவுடனேயே………

“எது பாப்பா?”, என்றார் புரியாதவராக……..

திருமணமாகிவிட்டது என்று அவளுக்கு சொல்ல பயமாக இருந்தது…….. யாரும் கூட இல்லை…… உடம்புக்கு ஏதாவது இழுத்துக்கொண்டு விட்டால் என்ன செய்வது என்று இருந்தது.

“நீ ஏதாவது என்கிட்டே மறைச்சியாம்மா”, என்றாள்.

சென்னையில் இருந்து கொண்டு மறைத்தாயா என்று கேட்டவுடனே ரெண்டும் ரெண்டும் நாலு என்று தெரியாதவரா தேவிகா…….

“அப்பாவோட கல்யாணத்தை கேட்கிறியா”,

“அப்போ உனக்கு தெரியும்”, என்றாள் கோபமாக.

“தெரியும்”, என்றார் தேவிகா.

“ஏன்? என்கிட்டே சொல்லலை”,

“அதையையே பிடிச்சிட்டு நீ கோபமா இருப்ப……… அதனால உனக்கு தெரியும்போது தெரியட்டும்னு விட்டுட்டேன்”, என்றார் சோர்வாக.

“எப்படிம்மா தாங்கிக்கற”, என்றாள் ராஜி…….. முன்பும் அவளுக்கு கோபம் இருந்தது தான்…. அதன் பரிமாணம் வேறு தந்தை அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டாரே என்று மட்டும் தான் இருந்தது…….. இப்போது செந்திலுடனான திருமணத்திற்கு பிறகு அவளின் கோபத்தின் பரிமாணம் மாறியிருந்தது.

செந்தில் எல்லாம் இப்படி ஒரு காரியம் செய்தால் தன்னால் அதை தாங்கவோ ஜீரணிக்கவோ முடியாது என்று தோன்றியது. ஒரு மனைவியாக இருந்து கணவனின் துரோகத்தை பார்க்க முடிந்தது.

தேவிகா அமைதியாக இருக்க, “எப்படிம்மா விட்ட”, என்றாள்.

“வேற என்ன செய்ய முடியும் பாப்பா! உனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு! எதை வெச்சு நான் அவரை இழுத்துவைக்க முடியும். நான் அவரை அடக்க அடக்க அவர் என்னைவிட்டு நிரந்தரமா பிரிஞ்சு போற வாய்ப்புகள் அதிகம்…. அந்த மாதிரி நடக்கறதுல எனக்கு விருப்பம் இல்லை…….”,

“இந்த வயசுக்கு மேல என்னால தனியா நின்னு போராடி வாழ்க்கையோட ஜீவணத்தை பார்க்குற தெம்பும் இல்லை…… அவருக்கு எப்படி சரியோ செய்யட்டும்னு விட்டுடேன்….. அதுவுமில்லாம உங்கப்பா அவரோட குழந்தை தகப்பன் பேர் இல்லாத குழந்தையா இந்த உலகத்துல வர கண்டிப்பா விட மாட்டாரு……. அதுவுமில்லாம இது தடுக்கப்படுற ஒரு நிலைமையை எல்லாம் தாண்டிடுச்சு”, என்றார்.

“என்னவோம்மா நீ சொல்றது எனக்கு புரியறதும் இல்லை பிடிக்கறதும் இல்லை……”, என்றாள்.

“எப்போ நடந்துச்சு இது?”,

“உன் கல்யாண வரவேற்பு முடிஞ்சிச்சே அந்த வாரத்துலயே… என்ன ஒரே ஒரு சந்தோசம் என்கிட்டே மறைச்சு செய்யலை……… சொல்லிட்டு தான் போனார்…..”,  

“உனக்கு எப்படி தெரியும்”, என்றார் தேவிகா.

“அவளுக்கு பிரசவ வலி எடுத்திருக்கு! நாங்க இருந்த ஹாஸ்பிடலுக்கு தான் கூட்டிட்டு வந்திருக்காங்க”,

“ஒஹ்”, என்றார்…..

“நீ கூடவா இருக்க”, என்றார், அவருக்கு தெரியும் அவள் இருக்க மாட்டாள் என்று இருந்தும் கேட்டார்.

“நான் இல்லை! நான் கட்டிகிட்டனே ஒண்ணு! அது இருக்கு!”,

“இப்படியா மாப்பிள்ளையை மரியாதை இல்லாம பேசுவ”,

“ஆமா! நீ உன்புருஷனுக்கு மரியாதை கொடுத்து கொடுத்து என்ன சாதிச்சிட்டு நிக்கற! நான் இப்படி தான்! இப்படி தான் பேசுவேன்……”,

“என் வாழ்க்கையை வெச்சு உன் வாழ்க்கையை பேசற தப்பை செய்யாத பாப்பா”, என்றார்.

“இரு! நான் அப்புறம் கூப்பிடுறேன்! இங்க எல்லோரும் பரபரப்பா ஓடிட்டு இருக்காங்க பார்க்குறேன்……..”, என்றாள்.

“நார்மல் டெலிவரிக்கு சான்ஸ் இல்லைன்னு சிசேரியன் பண்ண ஆபரேஷன் தியேட்டர் கூட்டிட்டு போறாங்க”, என்று அப்போது அவளருகில் வந்த செந்தில் சொன்னான்.

ராஜி அப்போதும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

அவளிடம் தகவலை மட்டும் சொல்லிவிட்டு அவளின் பதில் எதையும் எதிர்பார்க்காதவனாக செந்தில் சென்று விட்டான். கிட்டத் தட்ட ஒரு மணிநேரமே கழிந்திருக்கும்….. செந்தில் சற்றுப் பரபரப்போடு வந்தான்.

“குழந்தை பிறந்திடுச்சு! பெண் குழந்தை! மூச்சுத் திணறல் இருக்குன்னு ஏதோ பொறந்த குழந்தைங்களுக்கு ஸ்பெஷல் வார்டு இருக்காமே! அங்க கொண்டு போய் இருக்காங்க”, என்று சொல்லி சென்று விட்டான்.

இப்போதுதான் அனிதாவின் திருமணம் பற்றியெல்லாம் தெரிந்திருந்ததால் ராஜியின் மனம் இளகவில்லை.

அதற்கு பிறகு ஒரு மணிநேரம் கழித்து செந்தில் மறுபடியும் வந்தான்……. “ஆபரேசன் முடிஞ்சு அப்படியே ஆகாஷ் அக்காவை ஐ சீ யூ கொண்டு போய்டாங்க! ஏதோ பீ பீ அதிகமா இருக்காம் குறைய மாட்டேங்குதாம்”, என்று அவளின் அருகில் அமர்ந்தான்.

“உங்கப்பா குழந்தைங்க வார்டு முன்னாடி நிக்கறார்! ஆகாஷ் ஐ சீ யூ வாசலில் இருக்கான்! நான் உன்கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தேன். நீ ரூம் போறதுன்னா போ! நான் இங்கயே இருக்கேன்”, என்றான் மறுபடியும்.

அவள் மெளனமாக அவனை பார்க்க……. “உனக்கு பிடிக்கலைன்னு தெரியுது! ஆனா எப்படி இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில விட்டுட்டு வர்றது. உங்கப்பாக்காக பார்க்கலைன்னாளும் ஆகாஷ்காகவாவது பார்க்கணுமே…. ரொம்ப அப்செட்டா இருக்கான்”.    

இந்த சூழலில் விட்டுப் போவது சுயநலம் போல ராஜிக்கு தோன்ற, “இல்லை! நான் இருக்கேன்! நீங்க போங்க!”, என்றனுப்பினாள்.

அவன் போனபிறகு, “என்னாச்சு பாப்பா”, என்று தேவிகா போன் செய்ய……..

“என்னை ஏன் கேட்கற? உன் புருஷனுக்கு போன் பண்ணி கேட்க வேண்டியது தானே…. நீதானே அவருக்கு கல்யாணம் பண்ண பெர்மிஷன் குடுத்த”, என்று மரியாதையில்லாமல் எரிந்து விழுந்தாள்.

“பேசினேன் பாப்பா! பெண் குழந்தை பிறந்திருக்காமே, அதுக்கு மூச்சு விட முடியலைன்னு வேற எங்கயோ வெச்சிருக்காங்கலாம்! அனிதா வேற ஐ சி யூ ல இருக்காமே!”, என்றார்.

“எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு என்னை எதுக்கு கேட்கற?”,

“அம்மா சொன்னா உனக்கு கோவம் வரும்தான்! கொஞ்சம் பார்த்துக்கோ பாப்பா! அந்த பொண்ணை நீ பாக்காத! அந்த பொறந்த குழந்தை என்ன பாவம் பண்ணிச்சு? அவங்கம்மா சரியாகற வரைக்கும் அதை கொஞ்சம் பாரு பாப்பா!”,

“அது என்ன பாவம் பண்ணிச்சா அவங்கம்மாக்கு பொறந்திருக்கு இல்லை அதுதான் அது பண்ணின பாவம்”,

“அப்படியெல்லாம் பேசக்கூடாது பாப்பா! அது நமக்கு தான் பாவம்”, என்று கண்டித்தார் தேவிகா.

“நீ போனை வை! என்னை குழப்பாத”, என்று வைத்துவிட்டாள்.

வெகுநேரமாகியும் செந்தில் வராததால் அவனை தேடி ராஜி வர……… அவன் ஐ சீ யூ வாசலில் ஆகாஷ் பக்கத்தில் அமர்ந்திருந்தான்……..  

அவர்களை பார்த்தவள்………. “வாழ்க்கை என்பது பல சமயங்களில் நாம் சொல்கிற பக்கம் போவதில்லை……… அது போகிற பக்கம் நம்மை இழுத்துக்கொண்டுப் போய் விடுகிறது”, என்று நினைத்தாள்.

 

Advertisement