Nenjamellaam Kaathal
அத்தியாயம் – 5
“அய்யய்யோ.... சம்மந்தி வூட்டுல அப்படியா சொல்லிட்டாக.... இப்போ என்னங்க பண்ணுவோம்......” கையைப் பிசைந்தார் ராசாத்தி.
“எனக்கும் ஒண்ணும் புரியல .... கல்யாணத்துக்கு முதநாளு கண்ணாலம் நின்னு போச்சுன்னு சொன்னா நம்ம பொண்ணை யாரு கட்டுவாங்க......” என்று கலக்கத்துடன் கூறினார் சுந்தரேசன்.
“மாப்பிள்ள.... கலங்காதீய.... ஏதாவது பண்ணுவோம்....” என்றார் மாணிக்கம்.
“அண்ணே..... சம்மந்திம்மா என்னதேன் சொன்னாக..... கொஞ்சம்...
அத்தியாயம் – 16
“வாடி... என் சீமசிறுக்கி.... இப்பத்தான் பொறந்த வூட்டுக்கு வாரதுக்கு உமக்கு வழி தெரிஞ்சுதோ.....” முன்னில் திண்ணையில் அமர்ந்து வெற்றிலையை மடித்துக் கொண்டிருந்த பேச்சிப் பாட்டி, பைக்கில் இருந்து இறங்கி உள்ளே வந்த கயலைக் கண்டதும் வரவேற்றார்.
பின்னிலேயே வந்த மதியழகனைக் கண்டு மூக்கின் மீது விரல் வைத்தவர், “அடி ஆத்தி..... இது யாரு........
அத்தியாயம் – 1
“ஆத்தா... மகமாயி..... எல்லாரும் நல்லாருக்கோணும் தாயி.....” பூஜையறையில் விளக்கேத்தி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் ராசாத்தி.
“ஏலே.... ராசாத்தி..... கோவிலுக்கு போகோணும்னு சொல்லிப்புட்டு இன்னும் இங்கயே நிக்குதிய...... எங்க அந்தப் புள்ள கயல காணோம்......” என்றார் அவரது மாமியார் பேச்சியம்மா.
“அவ கோவிலுக்குக் கொண்டு போக பூ பறிக்குதேன்னு சொல்லிட்டுப் போனா அத்த..... எங்கேன்னு பாக்கேன்.....” என்றவர்...
அத்தியாயம் – 20
அடுத்த நாள் காலையில் குளியலை முடித்து காலை உணவுக்காய் ரெஸ்டாரண்டை நோக்கி நடந்தனர் மதியழகனும் கயல்விழியும். மனசுக்குள் ஏதோ சஞ்சலத்துடன் ஊருக்கு கிளம்பப் பிடிவாதம் பிடித்தவளை மதியழகன் எப்படியோ சமாதானப் படுத்தி இருந்தான்.
பனியில் பூத்த புத்தம் புது மலராய் அருகில் நடந்து வருபவளை அடிக்கண்ணால் ரசித்துக் கொண்டே நடந்தான் மதியழகன்....
அத்தியாயம் – 15
அடுத்த நாள் காலையில் அடுக்களையில் காப்பி கலந்து கொண்டிருந்த லச்சுமி, குளித்து புத்தம் புது மலராக அடுக்களைக்கு வந்த மருமகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.
“அடி ஆத்தி.... நேத்து எழுந்திருக்க மாட்டாம முறிச்சுப் போட்ட மரங்கணக்காப் படுத்துக் கெடந்தவ..... இன்னைக்கு, இப்பப் பறிச்ச ரோசாவாட்டம் தெம்பா வந்து நிக்கற.... இது என்னட்டி..... மரிமாயமா இருக்கு......”...
அத்தியாயம் – 17
வெகு நாட்களாய் உபயோகிக்கப் படாமல் கிடந்த தனது லேப்டாப்பை தூசு தட்டி எடுத்து கட்டிலில் அமர்ந்து உபயோகித்துக் கொண்டிருந்த மதியழகன், அதில் மும்முரமாய் எதையோ இணையத்தில் தேடிக் கொண்டிருந்தான். பால் கிளாசுடன் அறைக்குள் நுழைந்த கயல்விழி, அதை அவனிடம் நீட்டினாள்.
“அத்தான்..... இந்தாங்க பால்.....”
“ம்ம்... அங்க வை... மீனுக்குட்டி......”
“சூடாறிடும் அத்தான்..... குடிச்சிட்டு அதப்...
“ம்ம்.... சரி... நான் வாரேன்.....”
“ஏன் கயலு...... உன் அக்காக்கு கண்ணாலம் நிச்சயம் ஆயிடுச்சு.... அடுத்து உன் ரூட்டு கிளியரு தானே...... இந்த அத்தானுக்கு ஏதாவது சான்ஸ் இருக்கா......”
“ஹூக்கும்... நெனப்பு தான் பொழப்பக் கெடுக்குமாம்..... சும்மா எதையும் மனசுல நினைச்சுக்காம சோலியப் பாருங்க..... என்ன, ஆள விடுங்க.... நான் கிளம்புதேன்....”
“ம்ம்... எப்பவும் இப்படி சிக்காமலே பதில்...
“எப்படி இருக்கு மீனுக்குட்டி.......
“ஒரு படத்துல மக்கள் திலகமும் சரோஜா தேவி அம்மாவும் உக்கார்ந்துகிட்டு, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்னு பாடிகிட்டு போவாகளே..... அதுபோல நாமும் போற போலத் தோணுது......” என்றவள் கலகலவென்று சிரித்தாள்.
“அடிக் கழுத.... இப்பவும் உனக்கு சினிமா தான் தோணுதா......” என்றவன் அவளது தோளில் கையை வைத்து அருகில் இழுத்துக் கொண்டான்.
“அச்சோ.... விடுங்க...
அத்தியாயம் – 11
ஹோவெனப் பெரும் இரைச்சலுடன் பெய்து கொண்டிருந்தது மழை. ஊர் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே இறங்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். முந்தின நாள் மாலையில் தொடங்கி அடுத்த நாள் மாலை ஆகியும் நிற்காமல் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.
மதியழகனும் வெளியே எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தான்.
முத்துப்பாண்டி அவரது அறையில் கணக்கு வழக்கைப்...
அவளது அழுகைக் குரலைக் கேட்டு பக்கத்து ஆத்து மாமா ஓடிவர, பின்னாலேயே பத்து மாமியும் வேண்டா வெறுப்புடன் வந்தார்.
“என்ன சிந்து..... என்னாச்சு.....” என்று மாமா முன்னில் கேட்க,
“ஏன்னா.... நீங்க செத்த இந்தப் பக்கம் வாங்கோ...... பொம்மனாட்டி கிட்ட உங்களுக்கு என்ன பேச்சு.... நான் அவகிட்டப் பேசிக்கறேன்....” என்றார் பத்மா.
பத்மாவின் இந்தப் புதிய முகம் சிந்துவிற்கு...
“இல்ல அத்த..... அத்தான் இப்படிக் குடிச்சிட்டு சீரழிஞ்சு போறதுக்கும் அதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா..... எதுவா இருந்தாலும் சொல்லுங்க.... அப்பதானே அவரை நாம மாத்தி மாமாவோட பேச வைக்க முடியும்.....” என்றாள் அவள்.
“ம்ம்... நான் செய்யாத முயற்சியா..... ரெண்டு வருஷம் ஆச்சு.... இப்பவும் மதிக்கு அவுக மேல உள்ள கோபம் கொறையாம தான கெடக்கு.....”
“என்னதேன்...
அத்தியாயம் – 9
அவசர அவசரமாய் அலுவலகத்திற்குள் நுழைந்தாள் சிந்துஜா. குங்கும நிற சல்வாரில் கருப்பு நிற துப்பட்டாவுடன் தளர்வாய் விரித்து விட்ட கூந்தல் காற்றில் பறக்க அதை ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டே புகைப்படத்தைக் காட்டிலும் தேவதையாய் முன்னில் நின்று ஜொலித்தவளை எரித்து விடுவது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள் சௌமியா.
“குட் மார்னிங்.....” என்று சிநேகமாய்...
அத்தியாயம் – 13
“மீனுக்குட்டி.......”
கட்டிலில் அமர்ந்து துணி மடக்கிக் கொண்டிருந்தவள் பின்னில் அமர்ந்து காதின் அருகில் கிசுகிசுத்த கணவனின் குரலில் உடல் ரோமங்கள் சிலிர்த்து நிற்க கூச்சத்துடன் நெளிந்தாள்.
“ம்ம்ம்.....” என்றவளின் குரல் வாய்க்குள்ளேயே அடங்கிவிட்டது.
அவளது பின் கழுத்தில் அவனது உதடுகள் ஊர்வலம் போக படபடப்பும் கூச்சமும் போட்டி போடத் தாங்க முடியாமல் முகம் சிவந்தவள், சட்டென்று...
அத்தியாயம் – 8
“அத்தான்..... இந்நேரத்துல எங்க கெளம்பிட்டிய.....” இரவு உணவு முடிந்து பாலை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்த கயல்விழி, ராத்திரி பத்து மணிக்கு பேண்ட் ஷர்ட்டுடன் புறப்பட்டு நின்றிருந்த மதியழகனிடம் கேட்டாள்.
பதில் பேசாமல் சட்டையின் பட்டனைப் போட்டுக் கொண்டிருந்தவனை மீண்டும் கேட்டாள்.
“என்ன அத்தான்.... பதில் பேச மாட்டியளா.... எங்க போறீகன்னு எங்கிட்ட சொல்லக்...
“இந்த சின்னவ, கருவாச்சி இருக்காளே....... அவ அப்படியே அவ அம்ம குடும்பத்த போல..... எதுக்கெடுத்தாலும் என்னா பேச்சு பேசுதா...... நாளைக்கு கண்ணாலம் கட்டிப் போற எடத்துல அவள எப்படி சமாளிக்கப் போறாகளோ..... நல்ல சண்டிவீரன் கணக்கா ஒருத்தன் வந்துதேன் அவள அடக்கணும் பார்த்திகிடுங்க......” என்று சொல்லிக் கொண்டே போனவர் அவர்களின் வித்தியாசமான பார்வையை உணர்ந்து,
“இந்தக்...
அத்தியாயம் – 10
இரண்டு நாட்கள் கழிந்திருந்தது.
சிந்துஜாவிற்கு ஆக்சிடண்ட் ஆனது பற்றியும் அவள் இரண்டு நாட்கள் விடுமுறை என்றும் மதியழகன் அலுவலகத்தில் தெரியப்படுத்தி இருந்தான். மூன்று நாட்களாய் கஸ்டமர் மீட்டிங்கிற்கு சென்று கொண்டிருந்ததால் அவனுக்கு அலுவலகத்தில் இருக்கவே நேரம் இல்லை.
அன்றும் அவன் ஒரு புதிய கஸ்டமரைக் காண்பதற்காய் வெளியே சென்றிருக்க அவனைக் காண அங்கு வந்தார்...
அத்தியாயம் – 14
கதவைத் தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்த லச்சுமி அதிர்ந்து போனார். கிழிந்து போன துணியாக, கசக்கிப் போட்ட காகிதமாக, வாடிப் போன மலராக அனத்திக் கொண்டு கிடந்த மருமகளைக் கண்டவருக்கு தூக்கி வாரிப் போட்டது. வேகமாய் அவளது நெற்றியில் கை வைத்துப் பார்த்தவர், உடல் அனலாய்த் தகித்ததில் கையை இழுத்துக் கொண்டார்.
“அச்சோ..... புள்ளைக்கு...
இருவரும் சிரித்துக் கொண்டே கீழே இறங்கி வருவதைக் கண்டு பெற்றோரின் மனம் நிறைந்தது.
அவளிடம் பேசிவிட்டு அடுத்த நாளே டவுனில் நகை ஆர்டர் கொடுக்க செல்ல முடிவு செய்தனர்.
அப்படியே யார் யாருக்கெல்லாம் ஜவுளி எடுக்க வேண்டும் என்ற லிஸ்டும் தயாரானது. கல்யாண வேலைகள் ஜரூராய் நடக்கத் தொடங்க, கல்யாணக் கனவுகளில் மிதக்கத் தொடங்கினாள் மலர்விழி.
தந்தை கல்யாண...
மனம் நிறைந்தவளின் மனம் மயக்கும் வார்த்தையைக் கேட்டு மதி மயங்கி நின்றவன், “மீனுக்குட்டி..... உனக்குள்ள துடிக்குற என் இதயத் துடிப்பை நான் கேட்டுப் பார்க்கட்டுமா....” என்றான் காதலுடன். அவனது உருக்கும் பார்வையில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தவள், “ம்ம்....” என்றாள்.
அவளது நெஞ்சில் தன் செவியை வைத்துக் கேட்டவன் அவளது இதயத் துடிப்பில் அவனது பெயர் ஒலிக்கக்...
அத்தியாயம் – 4
வீட்டுக்கு முன்னால் ஆட்கள் பந்தல் போட்டுக் கொண்டிருக்க வாசலில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த ராசாத்தி, அண்ணனும் அண்ணியும் வருவதைக் கண்டு முகம் மலர்ந்தார். “அண்ணே..... வாங்கண்ணே.... வாங்க....... மதனி......” முகமெல்லாம் புன்னகைக்க வரவேற்றார்.
“ராசாத்தி..... எப்படி இருக்கவ..... மருமகளுக எங்க.....” விசாரித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தனர் மணிமாறனின் தந்தை மாணிக்கமும் அன்னை...