Advertisement

அவள் கன்னத்தில் அழுத்திப் பிடித்தவன், “ஆனா நீ…… நீயும் பணத்துக்காக தானே என்னக் கட்டியிருக்கே…. எல்லாத்தையும் விட்டுட்டு உனக்காக மாறணும்…. உன்னோட வாழணும்னு நினைச்ச என்னை நீயும் ஏமாத்திட்டல்ல……” என்றவனின் கண்களின் சிவப்பு அவளை அச்சுறுத்தியது.
“அத்தான்….. தயவுசெய்து நான் சொல்லறதக் கேளுங்க….. என் அக்காவுக்காக மட்டும் உங்கள கண்ணாலம் பண்ண நான் நினைக்கலை….. எனக்காகவும் தான்…. என்னை நம்புங்க அத்தான்….” என்றவளின் கண்கள் கன்னத்தில் அவனது பிடியின் அழுத்தம் தாங்காமல் கண்ணீரை சுரந்தது.
“நம்ப மாட்டேன்….. நீ என் மீனுக்குட்டி இல்ல……” என்றவன் அவளது கன்னத்தை அழுத்திப் பிடித்துவிட்டு விடுவித்தான்.
“அத்தான்….. நான் எப்பவும் உங்க மீனுக்குட்டி தான்….. உங்களை மட்டுந்தேன் எம்மனசுல சுமக்குதேன்…. நீங்க இதை நம்பனும்னா நான் என்ன செய்யணும்…. சொல்லுங்க….. செய்யுதேன்…..,.” என்றவளின் கண்ணில் நிற்காமல் கண்ணீர் பெருகியது.
“ஓ…. நான் என்ன சொன்னாலும் செய்வியா……. சொல்லு…. செய்வியா….” என்றான் ஆத்திரத்துடன் மதியழகன்.
“செ… செய்யறேன்….. அத்தான்….. என்ன செய்தா, நான் உங்க மீனுக்குட்டி தான்னு நீங்க நம்புவிங்க….. சொல்லுங்க…. செய்யுதேன்…..” என்றாள் அவள்.
அவளைப் பிடித்து நேருக்கு நேராய் நிறுத்தியவன், “எனக்கு நீ இப்ப வேணும்….. உன்னை தருவியா….. இந்தக் குடிகாரனுக்குள்ள உன்னோட மதி இருக்கான்னு நினைச்சு உன்ன எனக்குத் தர உன்னால முடியுமா…..” என்றான் அவளது முகத்தை நோக்கி.
அவன் சொன்னதன் அர்த்தம் விளங்காமல் ஒரு நிமிடம் முழித்தவள் பிறகு புரிய, “நான் எப்பவுமே உங்க மீனுக்குட்டிதான்….. என்னை நீங்க எப்ப வேணும்னாலும் எடுத்துக்கலாம்….. இப்ப வேணும்னாலும்……” என்றாள் குனிந்து கொண்டே.
“ஓ….. அப்படியா…… பாக்கலாம்…..” என்றவன் அவளது கையைப் பிடித்திருந்த தன் பிடியை அமர்த்த அவளுக்கு வலித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் நின்றாள் அவள்.
அவளை இழுத்து பலமாய் அணைத்தவன் அவளது முகமெங்கும் முத்தமிட, அவனிடமிருந்து வந்த மது வாடை வயிற்றைப் புரட்டினாலும் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு அவள் அப்படியே நிற்க,
“என்னடி….. கல்லு மாதிரி நிக்கறே…… என்னை உன் புருஷனா நெனைக்க முடியலதானே…..” என்றான் அவளைத் தள்ளிவிட்டு.
கட்டிலில் விழுந்தவள் எழுந்து அவன் அருகில் வந்தாள். மது மணக்கும் அவன் இதழில் மாது அவள் இதழ் பதிக்க, அதில் மது பருகும் வேலையை அவன் செய்யத் துடங்கினான். மதுவின் போதையில் அவனது அணைப்பு இறுக, எலும்புகள் நொறுங்கி விடுவதுபோன்ற வலியை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் மறைத்தாள் அவள்.
அவளைத் தள்ளிக் கொண்டு கட்டிலில் விழுந்தவன், அவள் கனவுகளுக்கு எதிராக பலமாய் அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கினான்.
பூவைப் போல இருந்தவளை புயலாய் மாறி கசக்கத் தொடங்கினான். எத்தனை மென்மையாய் அவன் இருந்தாலும், அவனுக்குள் இருந்த கோபமோ, அவள் மீதிருந்த காதலோ, நம்பிக்கையின்மையோ, மதுவின் மயக்கத்தில் சுயம் மறந்து அவளில் ஆக்ரோஷமாய்த் தேடிக் கொண்டிருந்தான். அவனது தேடலின் வேகம் தாளாமல் அவள் வேரற்ற மரம் போல உணர்வின்றிக் கிடந்தாள்.  
தேடித் தேடிக் களைத்து ஓய்ந்தவன், அவளை விட்டு தடுமாறிக் கொண்டே எழுந்தான். புயலடித்து ஓய்ந்தது போலத் தோன்றியது அவளுக்கு. உடல் வலியை மீறி அவள் மனவலியை அவனுக்கு உணர்த்திட வேண்டிப் பெருகிய கண்ணீரில் அவளது காதலை அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள் அவள்.
எழுந்து நின்று அவளை நோக்கியவன், மீண்டும் அவள் அருகில் கிடந்து அவளை அணைத்துக் கொண்டே முத்தத்தில் தொடங்கினான். அழகாய் அவள் கனவில் அரங்கேறிய காதல் அரங்கேற்றம், அலங்கோலமாய் நிஜத்தில் அரங்கேறிக் கொண்டிருந்தது.
————————————————————————————————————————————————————
காலையில் தாமதமாக எழுந்த லச்சுமி குளித்து வெளியே வரவும், எப்போதும் தனக்கு முன்னால் எழுந்திருக்கும் மருமகளை அடுக்களையில் காணாமல் தேடினார். அவளது அறைக்கதவு மூடியிருப்பதைக் கண்டவர் இதழில் புன்னகை மலர்ந்தது.
“பாவம்…. நேத்துக் கோவிலுக்குப் போயிட்டு வந்து ரொம்ப அசதியா இருக்கும் போலிருக்கு….. அதான்… புள்ள சலிப்பா தூங்குது….. நேத்துக் கோவில்ல எத்தன பேரு கண்ணு பட்டுச்சோ…. வந்ததும் சுத்திப் போட்டிருக்கலாம்….. அதையும் நான் மறந்துட்டேன்…..” என்று தனக்குள் பேசிக் கொண்டே பூஜையறைக்குள் நுழைந்தவர், சாமிக்கு தீபம் ஏற்றிப் பிரார்த்தித்து விட்டு வாசலுக்கு வந்தார்.
அலமு வாசல் தெளித்துக் கோலம் போட்டு விட்டு தோட்டத்தில் எதோ செய்து கொண்டிருக்க இவரைக் கண்டதும் ஓடி வந்தாள்.
“என்னலே…. நேரத்துலயே வந்துட்ட போல…..”
“ஆமாங்கம்மா…… சரி…. எல்லாம் சலிப்பா தூங்குவியளோன்னுதேன் கூப்பிடல……”
“ம்ம்….. சரி…. நீ போயி பாத்திரமெல்லாம் கழுகிட்டு, அந்தக் கொப்பரை எல்லாம் கொண்டு போயி வாசல்ல போடுலே….. அதை இன்னைக்கு எண்ணை ஆட்டக் குடுக்கோணும்……”
“சரிம்மா…..” என்றவள் நகரவும் காப்பியைக் கலந்தவர், கணவருக்குக் கொண்டு போய் கொடுத்தார்.
“என்னட்டி….. எப்பவும் கயலு தான காப்பி குடுக்கும்…. இன்னைக்கு நீ குடுக்குறவ…..” என்றார் வாங்கிக் கொண்டே.
“புள்ள அலுப்புல நல்லா தூங்குது போலிருக்கு….. இன்னும் எழுந்துக்கல…..”
“ம்ம்… என்ன இருந்தாலும் மருமவளோட கைமணம் உன் காப்பிக்கு வரல….” என்று குறை கூறிக் கொண்டே குடித்த கணவனை முறைத்தவர்,
“ம்ம்…. ஏன் சொல்ல மாட்டிய…. இம்புட்டு நாளா நாம்போட்ட காப்பி, மருமக வந்ததும் நல்லா இல்லாமப் போயிருச்சுதாக்கும்…..” என்று சிரித்துக் கொண்டே கேட்டவர், காலி கிளாசை வாங்கிக் கொண்டார்.
“ஏட்டி….. அன்னைக்கு நான் சொன்னன்ல…. அந்த டவுனு ஆளுங்க சோளம் போட்ட எடத்தக் கேக்குறாகன்னு….. அவுக இன்னைக்கும் எனக்குப் போன் பண்ணினாக…… நாம என்ன வில கேக்குறமோ அந்த விலை குடுத்து வாங்கிக்கவும் தயாரா இருக்காக…… அதேன்…. குடுக்கலாமான்னு ஒரு யோசனையா இருக்கு…… நீனு என்னலே சொல்லுதே…..” என்றார் லச்சுமியிடம்.
“நான் என்னத்த சொல்லப் போவுதேன்….. நல்ல வெலைக்கு கேக்குறாகன்னு சொல்லுறிய….. மதி கிட்டப் பேசிப் பாக்கேன்… அவன் என்ன சொல்லுதான்னு பாப்பம்….. பொறவு ஒரு முடிவுக்கு வரலாம்…..”
“ம்ம்… எனக்கு இன்னைக்கு டவுன்ல கொஞ்சம் வேல இருக்கு…. நான் அத முடிச்சிட்டு அந்த ஆளுங்கள நேருல போயிப் பாத்துப் பேசிட்டு வருதேன்….. பொறவு மதி கிட்ட சொல்லிக்கலாம்…..”
“ம்ம்…. அதும் சரிதேன்….. என்ன எதுன்னு நேர்ல பார்த்து விசாரிச்சிட்டு வாங்க…. அப்புறம் குடுக்கறதா வேண்டாமான்னு பாக்கலாம்……” என்றார் லச்சுமி.
“சரிட்டி….. நான் தோப்புக்குப் போயிட்டு அப்படியே டவுனுக்குப் போயிட்டு வருதேன்….” என்றவர் கிளம்பினார்.
“என்னங்க…. சாப்பிட்டுப் போகலாம்ல….. எதுக்கு இத்தன நேரமா கெளம்புறிய…..”
“இல்லட்டி…. நேத்து கெடா விருந்து சாப்பிட்டது வயிறு ஒரு மாதிரி இருக்கு…. அதேன்…. காலைல ஏதும் வேண்டாம்….. சரிலே…. நான் வாரேன்….” என்றவர் கிளம்பினார்.
“ம்ம்…. சரி…. பாத்துப் போயிட்டு வாங்க….” என்று அவரை வாசலுக்கு சென்று அனுப்பிவிட்டு அவர் வைத்துச் சென்ற காப்பி கிளாசை எடுத்து வந்து அடுக்களையில் வைத்தவர், வாசலில் இருந்த அலமேலுவை அழைத்தார்.
“ஏலே…. அலமு… இங்க…. வா…. இந்தா…. ஒரு வாயி காப்பியக் குடிச்சிட்டுப் போ….”
அங்கு வந்த அலமு, லச்சுமி கொடுத்த காப்பியை வாங்கிக் கொண்டு முன்னில் இருந்த படியில் அமர்ந்தாள்.
“எங்கம்மா…. வந்ததுல இருந்து சின்னம்மாவக் காங்கல…. உடம்புக்கு எதுனா சுகமில்லையா…..” என்றாள் வீட்டுக்குள் பார்வையை ஒட்டிக் கொண்டே.
“இல்ல புள்ள…. நேத்து கெடா வெட்டுக்குப் போயிட்டு வந்தம்ல…. அதான் சலிப்புல தூங்குது போல…. தூங்கிட்டுப் போவட்டும்…. சரி… அழுக்குத் துணி நிறையக் கெடக்கு…. நீ போயி அதெல்லாம் நனைச்சுப் போடுலே….. நான் டிப்பன் வேலையைப் பாக்குதேன்….” என்றவர் எழுந்து செல்ல, அலமு தோட்டத்தில் இருந்த கிணற்று மேட்டுக்கு துணி துவைக்க சென்றாள்.
“என்ன இது….. இந்தப் புள்ள இம்புட்டு நேரம் உறங்காதே…. உடம்பு கீது சுகமில்லையோ….. இந்த மதியையும் வெளிய காங்கல……” என்று நினைத்துக் கொண்டவர், “எதுக்கும் போயிப் பாத்திட்டு வந்திருவம்….” என்று அவளது அறையை நோக்கி நகர்ந்தார். சாத்தியிருந்த கதவின் மீது கை வைக்க, அது தாளிடாமல் இருந்ததால் திறந்து கொண்டது.
ஆழியில் நீந்தும் மீனாய்
துடிக்கிறேன் நான்…….
அலைகடலாய் அடித்துச்செல்லும்
உன் நினைவுக் கடலில்……
கரம் பிடித்து வந்தவனே
எனை கரை சேர்க்க மாட்டாயா…..
உன் ஒற்றைப் பார்வை போதும்
உலகத்தை நான் அளந்திடவே….
என்னை விட்டு நீயும் நீங்க
என்னுயிரும் என்னை நீங்க
தரையில் விழுந்த மீனாக
துள்ளித்தான் துடிக்கிறேனே….
பொட்டு வைத்த மன்னவனே- என்
நெஞ்சில் நட்டு வச்ச நாத்தாக – உன்
நெனைப்புதான் நெறஞ்சிருக்கு……
நல்ல பூவாக மலர்ந்திருக்கு…..
பூவுக்கு மணமாக வாசம் சேர்க்க வருவாயா…..
பூவை நான் காத்திருக்கேன்……
எனை அள்ளி சூடிக் கொள்வாயா…..

Advertisement