Saturday, June 1, 2024

    P31 NEM

    Naan Enathu Manathu 15

    P27 Naan Enathu Manathu

    Naan Enathu Manathu 22

    Naan Enathu Manathu

    P34 Naan Enathu Manathu

    பத்து வயது விஷ்வாத்திகாவும் ஒன்பது வயது ஆதித்யனும் அம்மாவின் வரவிற்காக ஹாலில் காத்திருக்க, மதிய உணவு நேரம் கடந்து இருக்க, “டேய், சாப்பிடுங்க கண்ணுங்களா பாட்டிங்களுக்கு பசிக்குது” என்றார் சீதா. ஆம்! அன்று ஒரு விடுமுறை தினம், ஃபாக்டரி சென்ற ஷர்மிளா இன்னும் வரவில்லை. ஒரு ஒப்பந்தத்தின் காரணம் கொண்டு ரவீந்திரன் வெளிநாடு சென்றிருக்க, அதனால்...

    Naan Enathu Manathu 14

    அத்தியாயம் பதினான்கு : ஆயிற்று திருமணமாகி ஒரு மாதம் ஆகிற்று, இவள் ரவியுடன் வசிக்க ஆரம்பித்து இருபது நாட்கள் ஆகிற்று. “இவன் என்ன மனிதனா? மெஷினா? ஒய்வு வேண்டாமா? என்ன இப்படி ராட்சசனாய் வேலை செய்கிறான்” என்று தான் தோன்றியது. ஆம்! ஃபாக்டரியிலும் வேலை செய்தான், வீட்டிலும் வேலை செய்தான், “வேலைக்கு ஆள் வைக்கலாம்” என்ற போது, “இது...

    Naan Enathu Manathu 27 2

    கௌசிக்கு அந்த கல்யாணமே வேண்டாம் சிங்களாவே இருந்துடுவேன் என்ற வார்த்தைகளில் ஒரு ஆசுவாசம், ஆனாலும் அம்மாவை குறை கூறுகிறான் என்பது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. என்னை தானே திருமணம் செய்ய போகிறான் அம்மாவை ஏன் இழுக்க வேண்டும் என்று மனது முரண்டியது. ஒரு வகையில் சந்தோஷ் உணர்ந்ததும் இது தானே! திருமணம் செய்த பிறகு அவளின்...

    NEM 30 2

    “உன் பேபியை நான் இன்னும் பார்க்கலை. பட் கேட்டேன், நல்லா இருக்கா சொன்னாங்க. இப்போ ரூம்க்கு மாத்திடுவாங்கலாம்” என்றான். “பேக் எடுத்துட்டு வாங்க?” என்று சந்தோஷிடம் சொல்ல, அவன் செல்லவும்.   “என்ன பேக்?” என்றான் ரவி. “ம்ம், ஏதாவது எடுத்துட்டு வந்தீங்களா அண்ணா?” என்றாள் கௌசி ரவியை பார்த்து. “என்ன எடுத்துட்டு வரணும்?” என்றான் புரியாதவனாய். “என்ன எடுத்துட்டு வரணுமா,...

    Naan Enathu Manathu 9 1

    அத்தியாயம் ஒன்பது : இந்த ஸ்தம்பிப்பும் அதிர்ச்சியும் ஆறு மாதமாய் தொடர்ந்தன. என்ன செய்வார்கள், அவனின் தொடர் தொல்லைகளில் இருந்து மீள முடியவில்லை.   தீ விபத்து மாதிரி பின் எதுவும் செய்யவில்லை, வேறொன்றுமில்லை, மிரட்ட என்றாலும் உழைப்புகள் வீணாவதில் அவனுக்கு விருப்பமில்லை ஆனால் சரக்கு கொடுத்த இடத்தில் வசூலாகவில்லை, இதை என்னவென்று சொல்ல முடியும். உதவிக்கு அவனிடம்...

    Naan Enathu Manathu 23 2

    அதை ஓரம் தள்ளிய ஷர்மி, “என்ன விஷயம்? ஏன் இவ்வளவு காலையில் வந்திருக்க? நைட் தூங்கின மாதிரியும் தெரியலை?” என்று கேள்விகளால் துளைக்க...   “ஒன்னுமில்லை” என்றவன், “எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க” என்றான் பளிச்சென்று. “என்னடா இப்படி கேட்கிறான்?” என்று ரவி யோசனையாய் பார்க்க, “பண்ணலாம், பண்ணலாம், ஆனா ஏன் திடீர்ன்னு அவசரமா இது பேசற?”  என்று...

    Naan Enathu Manathu 18 1

    அத்தியாயம் பதினெட்டு : கண்கள் எரிந்தன, சிறிது நேரம் எனக்கு ஓய்வு கொடேன் என்று கெஞ்சியது. இடத்தை விட்டு எழுந்தவன் சென்று முகத்தை கழுவிக் கொண்டு வந்து மீண்டும் அலுவலை பார்க்க அமர்ந்து விட்டான். ஒரு நாள் கடந்து விட்டது. இன்னும் வீடு செல்லவில்லை. இங்கேயே ஃபாக்டரியிலேயே இருந்து கொண்டான். எல்லாம் தப்பாய் செய்து விட்டதாய் ஒரு எண்ணம்....
    விசாலியின் அம்மா விட்டேனா என்று “சரி, நீங்களே இப்போ நான் கொண்டு வந்ததை பாருங்க, என்ன அப்புறம் குழந்தை பிறந்த பிறகு கூட கல்யாணம் வெச்சிக்கலாம்” என்று பேசினார். “அப்படி அவசரமா பார்க்க வேண்டிய அவசியம் என்ன? இப்போ வேண்டாம்! அப்படியே இருந்தாலும் நாங்க எங்க ஊர்பக்கம் தான் பார்க்கலாம்னு இருக்கோம்” என்று மீண்டும் ஸ்திரமாய்...

    Naan Enathu Manathu 27 1

    அத்தியாயம் இருபத்தி ஏழு : கௌசி மனது கலவரமாய் உணர்ந்தது போல, எல்லாம் கலவரமாய் தான் நடந்தது. நடந்த விஷயங்களில் ரவியின் கோபம் அளவுக்கு மீற, கோபத்தில் சந்தோஷின் மேல் கை ஓங்கிவிட, உணர்ந்த ஷர்மி இடையில் வர, அவனின் கன்னத்திற்கு சென்ற கை இவளின் தலையில் அடித்தது. வீடே ஸ்தம்பிக்க, ரவி எல்லோரையும் விட ஸ்தம்பித்து விட்டான். விஷயம்...

    Naan Enathu Manathu 26 1

    அத்தியாயம் இருபத்தி ஆறு : எல்லாம் எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆம்! இதோ ஒரே வாரம், நேற்று மாலை கௌசல்யா சந்தோஷின் நிச்சயதார்த்தம் முடிந்து இருக்க, இன்று இப்போது ஷர்மிளாவின் வளைகாப்பு நடந்து கொண்டிருந்தது. சீதா இரண்டு நாட்கள் முடியவே முடியாது, மற்ற மூன்று பெண் மக்களுக்கு எப்படி மாப்பிள்ளை பார்த்தோமோ அப்படி தான் பார்க்க...

    P21 Naan Enathu Manathu

    ஷர்மிளா உள்ளே வந்ததும் முகத்தை வேறு புறம் திருப்பியவன், பின் என்ன நினைத்தானோ எழுந்தவன் அவளின் அருகில் வந்து உனக்கு ஒன்னும் தொந்தரவு இல்லையே நான் பாக்டரி வரைக்கும் போயிட்டு வரட்டுமா என்றான் பதில் சொல்லவில்லை ஆனால் சரி என்பது போல ஷர்மி தலையசைக்க, ரூமின் வெளியே வந்தான், ஆளுக்கு ஒரு பக்கம் போய்விட கேசவனும் சந்தோஷும்...

    Naan Enathu Manathu 12

    அத்தியாயம் பன்னிரண்டு : காலையில் எழுந்து அவன் கீழே வந்த போது குளித்து முடித்து புடவை கட்டி சமையலறையில் இருந்தாள். என்ன? எதுவும் செய்யவில்லை, வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தாள். அவன் வந்து அமைதியாய் அமர, தாத்தா அவனிடம் “எப்போடா வந்த” என, “நைட் வந்தேன் தாத்தா” என்றான். இவனின் குரல் கேட்கவும் இவனுக்கு காஃபி கலந்து ஷர்மிளாவிடம் அவனின்...

    Naan Enathu Manathu 3 2

    “ஹேய், ஷர்மி கேட்டுட்டார் போல” என்று சந்தோஷின் தோழி சன்னக் குரலில் சொல்ல, “கேட்டா கேட்டுட்டு போறான்” என்றாள் அதற்கும் அலட்சியமாய்.. அதனையும் ரவி கேட்டுக் கொண்டு தான் இருந்தான், சாவியை எடுத்துக் கொண்டு அவளின் புறம் சற்றும் திரும்பாமல் அவன் மீண்டும் வாயிலை நோக்கி நடந்து விட்டான். அவன் சென்ற பிறகு அவனின் முதுகை வெறித்தவள் “ரொம்ப...
    “ம்ம், இப்போ கூட ஒன்னுமில்லை, என் குழந்தையை பெத்து என் கையில குடுத்துட்டு, நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு ஒன்னுமில்லை” என்றான். அவளின் கண்களில் கரகரவென்று நீர் இறங்கியது. “ம்ம், முன்னமே உன்னை கல்யாணம் பண்ணிக்க க்யுல நின்னாங்க. இப்போ இன்னும் நிற்பாங்க” என்று சொல்ல, ஷர்மிளாவால் தாளவே முடியவில்லை, அவளின் இயலாமையை நினைத்து. ஆனாலும்...

    P30 Naan Enathu Manathu

    உறக்கத்தில் இருந்து விழிப்பு வந்து விட பக்கம் படுத்திருந்த ரவீந்திரனை பார்த்தாள், நல்ல உறக்கத்தில் இருந்தான். நிறை மாத கர்ப்பிணி இப்போது அவள். சற்று வலிப்பது போல இருக்க, மெதுவாக சத்தம் செய்யாமல் எழுந்த ஷர்மிளா பாத்ரூம் சென்று அங்கிருந்த சுவிச்சை போடா அந்த சத்தத்தில் விழித்துக் கொண்டான்.  அடுத்த நொடி எழுந்து அமர்ந்தவன் என்ன...

    P22 Naan Enathu Manathu

    என்னவோ ஒரு தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது ஷர்மிளாவிற்கு, அப்பாவிடம் வீடு வேண்டும் என்று பேசிவிட்டாள் ஆனால் அது தெரிந்தால் ரவி என்ன சொல்லுவானோ என்ற தயக்கம். ஆனாலும் போடி என்று சொன்னானே, அதையும் விட உனக்கு முன்பே கியூவில் நின்றார்கள் இப்போது இன்னும் நிற்பார்கள் என்று சொன்னானே. மனது நினைக்கும் போதே வலித்தது. உள்ளே சென்றவள்...

    Naan Enathu Manathu 34 1

    அத்தியாயம் முப்பத்தி நான்கு : பத்து வயது விஷ்வாத்திகாவும் ஒன்பது வயது ஆதித்யனும் அம்மாவின் வரவிற்காக ஹாலில் காத்திருக்க, மதிய உணவு நேரம் கடந்து இருக்க “டேய், சாப்பிடுங்க கண்ணுங்களா பாட்டிங்களுக்குப் பசிக்குது...” என்றார் சீதா. ஆம்! அன்று ஒரு விடுமுறை தினம். ஃபாக்டரி சென்ற ஷர்மிளா இன்னும் வரவில்லை. ஒரு ஒப்பந்தத்தின் காரணம் கொண்டு ரவீந்திரன்...

    Naan Enathu Manathu 29 1

    அத்தியாயம் இருபத்தி ஒன்பது : “நீ இப்படி எல்லாம் பண்ணினா பெண்டாட்டி தாசன் சொல்வாங்க” என்று ஷர்மி சிரித்தாள். “யாராவது சொல்றது இருக்கட்டும், நீ சொல்றியா? நீ ஃபீல் பண்றியா நான் என்னவும் செய்வேன் உனக்காகன்னு?” என்று அவன் கேட்க, சில நொடிகள் யோசித்தவள் “அது தெரியலையே” என்றாள் உண்மையாய். “போடி” என்று முறைத்தவன் “இதையும் முடிஞ்சா கண்டுபிடி” என்று...

    Naan Enathu Manathu 18 2

    அவள் பேச பேசவே காரின் சாவியை எடுத்துக் கொண்டு, “வா” என்பது போல சைகை காண்பித்து ரவி விரைய, “பேபி, நாங்க வர்றோம். நீ ரெடியா இரு. இப்போ ஹாஸ்பிடல் போகலாம்” என்று சந்தோஷ் பேச, அவர்கள் வீடு செல்ல நாற்பது நிமிடம் ஆகியது. ஆம்! ஃபாக்டரி வீட்டில் இருந்து சற்று தொலைவு தான்.    “மாமா...
    என்ன இருந்தாலும் அம்மா இல்லாத பிள்ளைகள், வீட்டின் பொறுப்பு என்னது என்று அப்படி கவனமாய் இருவரையும் பார்த்துக் கொள்வான். அவர்களின் வழக்கங்கள் எல்லாம் அத்துபடி. என்ன தான் அவர்கள் உறவாய் நினைக்காவிட்டாலும் ரவியும் காண்பித்து கொள்ளாவிட்டாலும் உறவுகளோடு வளர்ந்தவனுக்கு, உறவுகளுக்காய் உழைப்பவனுக்கு அவர்கள் அத்தை பிள்ளைகள் தானே. வெளியில் காண்பித்து கொள்ளாவிட்டாலும் அந்த அக்கறை அதீதமாய்...
    error: Content is protected !!