Advertisement

உறக்கத்தில் இருந்து விழிப்பு வந்து விட பக்கம் படுத்திருந்த ரவீந்திரனை பார்த்தாள், நல்ல உறக்கத்தில் இருந்தான். நிறை மாத கர்ப்பிணி இப்போது அவள். சற்று வலிப்பது போல இருக்க, மெதுவாக சத்தம் செய்யாமல் எழுந்த ஷர்மிளா பாத்ரூம் சென்று அங்கிருந்த சுவிச்சை போடா அந்த சத்தத்தில் விழித்துக் கொண்டான். 
அடுத்த நொடி எழுந்து அமர்ந்தவன் என்ன ஷர்மி என
என்ன என்ன ஷர்மி ஒற்றை விரலை காட்டி போறேன் என
நேரம் பார்த்தான் இரவு ஒரு மணி
இந்த டைம் நீ எழ மாட்டியே என
அட என்ன நீங்க இன்னைக்கு ஏதோ ஒரு அர்ஜ் முழிப்பு வந்துடுச்சு என்றவள் உள்ளே போக
எழுந்து அமர்ந்து கொண்டான், எப்பொழுதையும் விட சிறிது நேரம் கழித்தே வர,
பாத்ரூம் வாசலில் நின்றிருந்தான் ஏன் இவ்வளவு நேரம் என்ன பண்ணுது என்ற கேள்வியுடன்
போனவாரம் கூட இப்படி தானே போனோம் அப்புறம் இது டெலிவரி பெயின் இல்லைன்னு அனுப்பிட்டாங்களே, இன்னும் பதினஞ்சு நாள் இருக்கு சொன்னாங்களே என்றாள்
பரவாயில்லை ஒரு வாரம் தானே இருக்கு திரும்ப போலாம் அதனால் என்ன ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றவன், உடனே உடை மாற்றினான். அந்த சில நிமிடங்கலுக்குலாக்வே வலி உணர ஆரம்பிக்க
இப்போ ஹாஸ்பிடல் போயிடலாம் என்றவன் அவளை அழைத்துக் கொண்டு அந்த நேரத்திலும் பூஜை அரை சென்று வணங்கி அவளுக்கு திருநீறு பூசி அழைத்துக் கொண்டான்
அங்கிருந்த ஒரு அறையில் தான் வீட்டை பார்த்துக் கொள்ளும் ரமேஷும் சசிகலாவும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவன் எழுப்பவில்லை. காரை எடுத்து முன்னிருந்த செக்யுரிடியிடம் மட்டும் காலையில அவங்க எழுந்து கேட்டா ஹாஸ்பிடல் போயிருக்கோம்னு சொல்லிடுங்க என்று விட்டான்.
அதற்குள் நன்றாகவே வலி வந்திருக்க சீக்கிரம் ஹாஸ்பிடல் போகலாம் என்று ஷர்மி சொல்ல
போயிடலாம் என்று சொன்னவனின் கைகளில் கார் பறந்தது. சில நிமிடங்களில் ஹாஸ்பிடல் வந்து விட வலியில் சீட்டில் இருந்து இறங்க கூட முடியவில்லை. வேகமாய் வில் சேர் வரவழைத்து, அதில் அவளை அமரவைத்து அனுப்பி, இவன் வேகமாய் காரை பார்க் செய்து உள்ளே போக, அதற்குள் அவளை பிரசவ வார்டின் உள் கொண்டு சென்றிருந்தனர்.
அவளும் சந்தோஷின் வீட்டில் நன்கு பொருந்திபோயிருந்தாள். விசாலியோடு வித்தியாசம் பாராட்டவில்லை. நேற்று இரவு கூட சந்தோஷும் கௌசியும் வந்து ஷர்மியை பார்த்து தான் சென்றிருந்தனர்.   
இதற்கு நான் இருக்கவாண்ணா என்று கௌசி வேறு கேட்டிருந்தாள். சந்தோஷிற்கு சற்று சளி இருமல் இருக்க பார்க்கவே அசந்து தெரிய,
அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நான் பார்த்துக்குவேன் நீ சந்தோஷை பாரு என்று சொல்லி அனுப்பியிருந்தான்.
வெளியில் ஒரு சிஸ்டர் வர, லேபர் பெயின் தான் டாக்டர் க்கு சொல்லிட்டோம் வந்துட்டு இருக்காங்க, டியூட்டி டாக்டர் உள்ள இருக்காங்க என, லேடீஸ் யாரும் இல்லையா என
இல்லைங்க என்றவன் எதுக்கு என
அவங்க நகை எல்லாம் கழட்டிக்கங்க உள்ள வந்து, அவங்களுக்கு லேபர் டிரஸ் மாத்திட்டோம் அவங்க ட்ரெஸ் வாங்கிக்காங்க என
அவளின் அருகில் சென்றவன், பயப் படக் கூடாது தைரியமா இருக்கணும் என்று சொல்ல
அது எனக்கு சொல்றீங்களா இல்லை உங்களுக்கு சொல்றீங்களா என்றாள் சோபையுடன்
பக்கம் நின்றிருந்த சிஸ்டர் சிரித்து விட்டார்.
பின் சர் நகை கழட்டிக்கங்க என
அவளின் வளையல் மோதிரம் தோடு என்று அவனே கழட்டினான், தாலி சரடு மட்டுமே இருந்தது.
இதுவும் கூட சிலர் கழட்டிக்குவாங்க என்று சிஸ்டர் சொல்ல
இல்லை இருக்கட்டும் என்று விட்டான்.
அதற்குள் வலி வர டாக்டரும் வந்து விட, பின் இவன் வெளியே வந்த பத்து நிமிடத்தில் குழந்தை பிறந்துட்ச்சுங்க டைம் நோட் பண்ணிக்காங்க என்று சிஸ்டர் சொல்லி செல்ல
சாரி மறந்துட்டேன் டைம் சொல்ற அவசரத்துல, பெண் குழந்தை அம்மாவும் பொண்ணும் நல்லா இருக்காங்க என்று சொல்ல
அதன் பிறகே ஊருக்கு வாசனுக்கு அழைத்தவன் தகவல் சொல்லி வீட்டினரிடம் சொல்ல சொல்லியவன், பின் அம்மா பக்கத்துல இருக்காங்களா என, உறங்கும் சீதாவை எழுப்பி கையில் கொடுக்க, அவருக்கு யார் என்ன என்றே தெரியவில்லை, வாங்கி காதில் வைக்கவும், மா உங்களுக்கு பேத்தி பிறந்திருக்கா என்று சொல்லி வைத்து விட்டான்.       
பின் இங்கே கேசவனுக்கு அழைத்து சொல்லிவிட்டு, பின் கௌசிக்கு அழைத்து சொன்னான்
மனம் முழுவதும் ஒரு நிறைவு!
இன்னும் லேடீஸ் யாரும் வரலையா என்று மீண்டும் சிஸ்டர் வந்து கேட்க
எதுக்குங்க என
குழந்தையை கொடுக்கணும் டாக்டர் மேம் இப்போ எடுத்துட்டு வருவாங்க என
நான் வாங்கிக்குவேன் என்றான்.

Advertisement