Advertisement

நடந்த விஷயங்களில் ரவியின் கோபம் அளவுக்கு மீற, கோபத்தில் சந்தோஷின் மேல் கை ஓங்கிவிட, உணர்ந்த ஷர்மி இடையில் வர, அவனின் கன்னத்திற்கு சென்ற கை இவளின் தலையில் அடித்தது.
வீடே ஸ்தம்பிக்க, ரவி எல்லோரையும் விட ஸ்தம்பித்து விட்டான்
விஷயம் இது தான், விஷேஷம் முடிந்து வீட்டில் வீட்டினர் மட்டும் இருக்க, அதாவது பாட்டி தாத்தா அவரின் மக்கள் அவரின் மக்கள் பேரப் பிள்ளைகள் மாப்பிள்ளைகள் இப்படி, உடன் விசாலியும் கேசவனும் சந்தோஷும் மட்டும்
விசாலி வீட்டினர் கூட கிளம்பியிருந்தனர். கேசவனின் சில சொற்ப உறவுகள் மட்டும் ரவி அழைத்து வந்திருக்க அவர்களும் கிளம்பியிருந்தனர்.

 

 

 

 

 

இப்போது அவனின் அப்பாவை பார்த்தவன் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் பா என்றான்
அத்தனை பேரும் அதிர, டேய் சும்மா விளையாடாத தொலைச்சிடுவேன் என்று சேரை தள்ளி விட்டு ரவி எழுந்த வேகத்திற்கு ஷர்மி சென்று சந்தோஷின் கையை பிடித்துக் கொண்டவள்
இருங்க இருங்க கேட்போம் என்று ரவியை சமாதானம் செய்து, அண்ணா ஏன் இப்படி பேசற நீ பேசறது தப்பு, நீ கேட்டதால மட்டும் தான் கல்யாணம் பேசினோம் என
எஸ் கௌசி என் லைப் ல வந்தா லைப் நல்லா இருக்கும்னு நினைச்சு தான் கேட்டேன் ஆனா இப்போ அப்படி இருக்கும்னு தோணலை அதனால வேண்டாம் என
ஏற்கனவே திருமணம் வேண்டாம் என்பதில் உச்சபட்ச பதட்டத்தில் இருந்தவன், இப்போது கௌசியை வைத்து பேசவும் கௌசியை தப்பு சொல்கிறான் என நினைத்து
சந்தோஷ் என்று கத்தி அவனை அடிக்க கை வீச, அவனின் கன்னத்திற்கு பட வேண்டிய அடி நொடியில் ஷர்மி இடையில் வர அவளின் பக்கவாட்டு தலையில் பட

 

 

 

 

 

 

 

 

என்னடி பண்ற அறிவில்லையா உனக்கு என்று கத்தி, அவளை பற்றி தன் புறம் இழுக்கவும், அடியே தலை சுற்ற அவன் இழுத்ததும் தலை சுற்ற நிலை தடுமாறினாள்.
வேகமாக அவளை அணைத்து பிடித்து நிறுத்தியவன் அவளை சோபாவில் அமர வைத்து யாராவது ஐஸ் கொண்டு வாங்க என்று கத்தினான்
அமைதியாக சோபாவில் சாய்ந்து கொண்டாள், எதிலேயோ பலமாய் இடித்துக் கொண்டால் வலிக்குமே அப்படி ஒரு வலி.
பக்கத்தில் யாரும் செல்லவில்லை, ரவியின் கோபத்தில் பதட்டதில் தள்ளி நின்றனர்.
சந்தோஷும் ஷர்மியிடம் அவர் என்னை அடிச்சா நான் வாங்கிக்கறேன் உன்னை யாரு நடுவுல வர சொன்னா, கீழ விழுந்திருந்தா என்று பேச

 

 

 

 

 

 

 

 

ஏம்ப்பா இப்படி சொல்ற என்று ரவியின் தாத்தா கேட்க
கௌசி இன்னும் அதிர்விலேயே நின்றிருந்தாள். இவன் தான் திருமணதிற்கு கேட்டான் என்பதே அவளுக்கு புதிய செய்தி, அப்படி கேட்டவன், இப்போது வேண்டாம் என்று சொல்கிறான் என்பதுவும் ஒரு செய்தி
சந்தோஷ் அமைதியாக இருக்க
கேசவன் பேசினார் இப்போது, சந்தோஷ் இது விளையாட்டில்லை அப்படி எல்லாம் கல்யாணத்தை நிறுத்த முடியாது என்றார் உறுதியான குரலில்
சந்தோஷ் பேச ஆரம்பிக்கும் முன்னமே
அப்படி என்ன வேண்டாம்னு சொல்றவனுக்கு என் பொண்ணை குடுக்கணும்னு, ஒன்னும் குடுக்க வேண்டாம் இவங்க பணம் காசு இருந்தா இவங்க வரைக்கும் என் பொண்ணு சொக்க தங்கம் உங்க குடும்பத்துல குடுக்கணும்னு அவசியமேயில்லை நான் வேண்டாம்னு சொன்னேன் என் பேச்சை யாரு கேட்டா என்று சீதா படபடவென்று பேசினார்.

 

 

 

 

சந்தோஷின் பார்வை ரவிக்கு புரியவில்லை ஆனால் ஷர்மி க்கு நன்கு புரிய அண்ணா டேய் என்றவள் உனக்கு அறிவே கிடையாது, இவங்களுக்காக கல்யாணம் வேண்டாம்னு சொல்றியா என்று சீதாவை குற்றம் சாட்ட..
ஆம் என்பது போல அசையாமல் நின்றான்
வீடே இப்போது சீதாவை பார்க்க
அவ்வளவு தான் அவர் பொங்கி விட்டார் இதென்ன புது கதை என்று கிளம்ப…

 

 

 

 

 

 

 

சந்தோஷ் தெளிவா பேசு, கௌசி யை நீ வேண்டாம்னு சொல்ற, அதை சொல்லு என்று ரவி வார்த்தைகளை கடித்து துப்ப…
நான் அவங்களை வேண்டாம்னு சொல்லலை கல்யாணம் தான் வேண்டாம்னு சொல்றேன் என்றான்
சந்தோஷ் என்று கேசவன் ஒரு அதட்டல் இட
நான் சொல்றது ரொம்ப சில்லியா தெரியலாம் பட் ஐ மீன் it
கௌசி என் லைப் ல வந்தா என் லைப் நல்லா இருக்கும்னு நினைச்சேன் அது தான் மாமா கிட்ட பொண்ணு கேட்டேன் ஆனா எனக்கு அவங்கம்மாவை பிடிக்கலை எப்பவும் ஏதாவது பேசறாங்க சண்டை செஞ்சு விடறாங்க
எனக்கு தெரியும் இது ஒரு காரணம் இல்லைன்னு ஆனா எனக்கு இது பெரிய காரணம். அம்மான்றவங்க ரொம்ப ஸ்பெஷல் இல்லையா.. நாளைக்கு கல்யாணம் பண்ணின பிறகு நீ உங்கம்மாவோட பேசக் கூடாது அவங்க இங்க வரக் கூடாதுன்னு சொன்னா அது சரி கிடையாதே

Advertisement