Advertisement

பத்து வயது விஷ்வாத்திகாவும் ஒன்பது வயது ஆதித்யனும் அம்மாவின் வரவிற்காக ஹாலில் காத்திருக்க, மதிய உணவு நேரம் கடந்து இருக்க, “டேய், சாப்பிடுங்க கண்ணுங்களா பாட்டிங்களுக்கு பசிக்குது” என்றார் சீதா.
ஆம்! அன்று ஒரு விடுமுறை தினம், ஃபாக்டரி சென்ற ஷர்மிளா இன்னும் வரவில்லை. ஒரு ஒப்பந்தத்தின் காரணம் கொண்டு ரவீந்திரன் வெளிநாடு சென்றிருக்க, அதனால் ஷர்மிளா ஃபாக்டரி சென்றிருந்தாள். ரவிக்கு பதினைந்து நாள் பயணம்.
“நீங்க சாப்பிடுங்க” என்றான் பெரிய மனிதனாய் ஆதித்யன். ஆதி கும்பேஸ்வரரை கொண்டு மகனுக்கு ஆதித்யன் என்று ரவி பெயர் சூட்டியிருந்தான்.
“நீங்க சாப்பிட்டா தான் சாப்பிடுவோம்” என்று இரண்டு பாட்டிகளும் அமர்ந்திருக்க, பிள்ளைகளும் அசையவில்லை.
சில நிமிடங்களில் ஷர்மி வந்து விட, “இவங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடலை” என்று சீதா புகார் வாசிக்க, “இவங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடலை” என்று விஸ்வாத்திகா அம்மாவிடம் சொன்னாள்.
 
 
 
ஆம்! விடுமுறை தினம் தங்களோடு தான் இருக்க வேண்டும் என்று பிள்ளைகள் சொல்ல, ரவி இல்லாததால் சென்றதும் வந்து விடுகிறேன் என்று சொல்லி சென்றவள் லேட்டாய் வர, இந்த அக்கப் போர்!
இதற்கு மாமனார்கள் இரண்டு பேரும் பார்த்துக் கொள்கிறார்கள், ஆனாலும் ரவி இல்லாத போது இவளின் இருப்பு அங்கே வேண்டும்.  
“அம்மாக்கு பசிக்குது” என்றாள் உடனே ஷர்மி, இல்லையென்றால் இந்த பஞ்சாயத்து ஓயவே ஓயாது என்று தெரிந்தவளாக.
“வாங்க, வாங்க எல்லோரும் சாப்பிடுவோம்” என்றான் ஆதித்யன் உடனே.
“அதுதானே இவ வீட்டுக்காரனை விட இவ பையன் பத்து மடங்கு இருக்கான் இவளை தாங்கறதுல” என்று தன் ஓரக்கத்தியிடம் சீதா நொடிக்க,
அது ஷர்மியின் காதில் விழுந்தாலும் அப்படியே கடந்து சென்றாள். ஆம்! கூட்டுக் குடும்பம் எனும் போது இந்த சலசலப்புகள் சில சகஜம். ஷர்மி அதனை எந்த முக சுணக்கமும் இல்லாமல் கடந்து விடுவாள்.
 
 
 
உண்டு முடித்ததும் மா நம்ம போறோம் தானே என்றான் ஆதி ஷர்மியிடம்
அப்பாவே வந்துடுவார் டா கண்ணா என
நோ நாம போகலாம் என்றான் மீண்டும்
சரி போகலாம் என்று விட்டால் உடனே
எங்கேயும் பெரிதாக பிள்ளைகளோடு அவர்கள் சேர்ந்து செல்லவதில்லை அதனால் இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் கேட்டால் ஒப்புக் கொண்டு விடுவாள்.
நான் வரவா பேபி என்று சந்தோஷ் கேட்க, நோ டா அண்ணா நான் மேனேஜ் பண்ணிக்குவேன் என்று மறுத்து விட்டாள். 
ஆறு மணிக்கு அவனின் பிளைட் அவனை அழைக்க [போகலாம் என்று தான் ஆதி கேட்டான்
இதோ ஆறு மணி பிளைட் ஆறரைக்கு வரும் என்று சொல்லியிருக்க
ஷர்மி விச்வாதிகா ஆதித்யன் என்று மூவரும் அமர்ந்திர்ந்தனர்.
பிளைட் லேண்ட் ஆகி ரவி வெளியே வரவும், மக்கள் இருவரும் அவனிடம் விரைந்தனர்.
மக்கள் மட்டும் தான் விரைந்தனர் ஷர்மி அவளின் இடத்தில அப்படியே அமர்ந்திருந்தாள் மூவரையும் பார்த்தபடி.
 
 
பின்பு இருவரிடமும் பேசியபடி இவளை கண்களால் தேடி கண்டு இவளை நோக்கி பார்வையை செலுத்த எப்போதும் போல சொக்கி தான் போனாள்.
வயசாக வயசாக இன்னும் தான் ஹேண்ட்சம் ஆரான் இவன் என்று பொறாமையோடு கணவனை பார்வை தழுவியது. பின்னே அவள் அப்படியே தானே இருந்தாள் என்று சொல்வதை விட, சற்று உடல் பிடித்திருந்தது. முப்பத்தி நான்கு வயது, அந்த வயதிற்குரிய பொலிவு தான் ஆனால் நாற்பது வயதில் அவன் என்னவோ மிக இளமையாக இருந்தான்.
முகம் சுருக்கி கணவனை பார்த்திருக்க, என்ன என்று பார்வையால் வினவியபடி அருகில் வந்தவன், ஏதோ பசங்க ரகளை பண்ணினாங்கன்னு பெரிய மனசு பண்ணி என்னை பார்க்க வந்துட்ட போல என்று நொடிக்க
ஒஹ் உங்களை பார்த்ததும் ஓடி வந்து கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கணுமோ என
இங்க பண்ணலைன்னா போகுது ரூம்லயாவது பண்ணுடி என்றான் சன்ன சிரிப்போடு
அய்யடா என்றவள் போங்க போய் லகேஜ் எடுத்துட்டு வாங்க என
சில பல நிமிடங்கள் கடந்து எடுத்து வந்தான், அதுவரையும் மக்கள் அம்மாவிடம் வளவளத்துக் கொண்டிருந்தனர்.
ஷாப்பிங் என்ற ஒன்று அவன் செய்வது அரிது. ஷர்மி இதையெல்லாம் பெரிதாய் எதிர்பார்ப்பது இல்லை, ஆனாலும் ஆதங்கமாய் சில சமயம் வார்த்தைகள் வந்து விடும்
எங்க போகணும் போகலாம் வா என்ன வாங்கணும் நெக்ஸ்ட் பிளைட் பிடிச்சு திரும்ப அப்ராட் போறதுன்னாலும் ஓகே என்று அவன் சொல்ல
ம்ம் உன் மூஞ்சி கூட்டிட்டு போற ஆளை பாரு என்று கடிய
விஸ்வாவும் ஆதியும் தன்னை கவனிப்பதை உணர்ந்தவள் அமைதியாகிவிட
ஏன் ஷர்மி சோ ஹாட் என்று கிசுகிசுத்தான்
ம்ம் நீ ரொம்ப ஹாட் டா இருக்க அதனால என்று அவனை போல கிசுகிசுக்க
ரவி முகத்தில் ஒரு ரகசிய புன்னகை. பின் மக்களிடம் கவனம் திருப்ப
ஆளுக்கு இரு பெட்டியாக தள்ளி பார்க்கிங் வந்து ஏற்றி வீடு வர, வீடு ஜெகஜோதியாக இருந்தது.
                 
      
               
       
           
                

Advertisement