Advertisement

என்னவோ ஒரு தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது ஷர்மிளாவிற்கு, அப்பாவிடம் வீடு வேண்டும் என்று பேசிவிட்டாள் ஆனால் அது தெரிந்தால் ரவி என்ன சொல்லுவானோ என்ற தயக்கம்.
ஆனாலும் போடி என்று சொன்னானே, அதையும் விட உனக்கு முன்பே கியூவில் நின்றார்கள் இப்போது இன்னும் நிற்பார்கள் என்று சொன்னானே. மனது நினைக்கும் போதே வலித்தது.
உள்ளே சென்றவள் சமையலறை சென்று நான் எதுவும் ஹெல்ப் பண்ணட்டுமா போர் அடிக்குது என
ஒன்னும் வேணாம் அண்ணி நாம நாலு பேர் தானே இது ஒரு சமையலா என்று கௌசல்யா சொல்ல
சரி நீ சமை நான் பார்திட்டு இருக்கேன்
என்ன சமைக்கலாம் சொல்லுங்க என
நடு நடுவில் சந்தேகம் வேறு கேட்க
எதுக்கு அண்ணி இவ்வளவு கேள்வி , நீங்க சமைக்க போறீங்களா போங்க என்று சிரித்த கௌசி, நாங்க இல்லைன்னா அண்ணா சமைப்பான் உங்களுக்கு, நீங்க கேட்கற கேள்வியை பார்த்தாலே உங்களுக்கு கிட்செச்ன் இது பேர் மட்டும் தான் தெரியும் போல என்று இலகுவாய் பேசினாள் கௌசி
ஒன்னும் ப்ரோப்லேம் இல்லை மெதுவா நான் கத்துக்குவேன் என்றாள் உறுதியான குரலில் ஷர்மிளா
பாரு அண்ணா இந்த அண்ணியை என்று கௌசி ஷர்மிக்கு பின் புறம் பார்த்து பேச       
ஒரு சேரில் அமர்ந்திருந்தவள் திரும்பி பார்த்தாள்.
சுவரில் சாய்ந்து கை கட்டி அவளை தான் பார்த்து இருந்தான்.
என்னவாம் என்று பார்வையை ஷர்மி மீது வைத்து கேள்வியை கௌசி நோக்கி கேட்க
சமைக்க கத்துக்கறான்கலாம் என்று புன்னகைக்க
அதற்கு பதில் எதுவும் பேசவில்லை ரவி
இன்னும் எவ்வளவு நேரம் சமையல் அறையில இருக்குற உத்தேசம் என்றான்
மெதுவாக எழுந்தவள் வெளியில் வர
உடல் சோர்ந்து முகம் சோர்ந்து ஒரு மாதிரி வெளிறி தெரிந்தால் ஷர்மிளா
அதை பார்த்தவன் அவள் வெளியே சென்றதும் இவன் உள்ளே சென்று சாத்துக்குடி ஜூஸ் செய்தவன், ஹாலில் அமர்ந்திருந்த அவளிடம் குடி என்று வந்து நீட்டிக் கொண்டே,
கௌசி அப்பா க்கு உனக்கு க்கு போட்டிருக்கேன் எடுத்துக்கோ என்று குரல் கொடுக்க
ஷர்மி தானாய் கேட்டாள், உங்களுக்கு என
வேண்டாம் என்று தலையசைக்க, அவளினது பெரிய கிளாஸ் டம்பளர்
நீங்க கொஞ்சம் குடிச்சிட்டு குடுங்க என்று நீட்ட, ஏன் நீ குடிச்சிட்டு குடுத்தா நான் குடிக்க மாட்டேன்னு சொல்லியிருக்கேனா என்றான்
ரவி ஹாஸ்பிடலில் இருந்ததற்கும் இங்கே இருப்பதற்கும் வித்தியாசம் தெரிய
தான் வீட்டை பற்றி பேசியது அவனுக்கு தெரிந்திருக்கும் என்று கனவா கண்டாள்
இன்னும் கோபம் போகவில்லை போல , வேறு வழியில்லாமல் என்னை கூட்டிக் கொண்டு வந்து விட்டான் போல என்று தோன்ற அப்படி ஒரு சோர்வு தோன்றியது
இரண்டு மூன்று நாட்களாய் சரியான உறக்கம் இல்லாதவன், உறங்கி இருந்தான். ஆனால் ஹாஸ்பிடலில் பின்பு அன்று மதியம் என்று சற்று உறங்கி இருந்தவளுக்கு உறக்கம் வருவேனா என்று இருக்க
சேரில் அமர்ந்து கால்களை கட்டில் மேல் வைத்து நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டவள் உறங்கும் கணவனை தான் பார்த்து இருந்தாள்
ஏன் இவன் என்ன செய்ததாலும் முழு மனதாய் தான் திருமணம் செய்தேன், இவனோடு நன்றாக வாழ வேண்டும் என்று தானே நினைதேன். அப்புறம் ஏன் இப்படி யானது. இவனுக்கு ஏன் இவ்வளவு கோபம். இவனை விட்டு என்னால் இருக்க முடியாது இருப்பது போல இவனுக்கு ஏன் இருக்கவில்லை
நான் மிகவும் பலகீனமாகிவிட்டேனா, இவன் என்ன செய்தாலும் பொறுத்து போகிறேனா. போடா என்று சொல்லி என்னால் ஏன் போக முடியவில்லை என்று தோன்ற அழுகை தான் வந்தது. எதற்கென்று தெரியாத ஒரு அழுகை.
இப்படி அழுதுட்டு இருக்க கேட்டா ஒன்னுமில்லை சொல்ற என்ன பண்ணுது உடம்பு ஏதாவது பண்ணுதா என்றான் அதட்டலாக
இல்லை என
அப்போ மனசை குழப்பற ரைட் என்றவன், நேரத்தை பார்த்து பால் சாப்ட்டியா என
இல்லை வேண்டாம் சொல்லிட்டேன் என்றாள்
கண்ணை துடை அழக் கூடாது என்று அதட்டி வெளியே சென்றான். சில நிமிடங்களில் பாலோடு வந்தவன் குடி என்று கொடுக்க
நீங்க சாப்பிடலை
அப்போ பசிக்களை, இப்போ பசிக்குது நான் சாப்ட்டு வர்றேன் நீ இதை குடிச்சிட்டு தூங்கு என்றவன் வெளியே சென்று விட  
ரவி என்னவோ அவளை தவிர்ப்பது போல தோன்ற மீண்டும் அழுகை வந்தது, ரவி உண்டு உள்ளே வரும் போது பாத்ரூமில் அவள் வாமிட் செய்யும் சத்தம் தான் கேட்க,

Advertisement