Advertisement

ஷர்மிளா உள்ளே வந்ததும் முகத்தை வேறு புறம் திருப்பியவன், பின் என்ன நினைத்தானோ எழுந்தவன் அவளின் அருகில் வந்து உனக்கு ஒன்னும் தொந்தரவு இல்லையே நான் பாக்டரி வரைக்கும் போயிட்டு வரட்டுமா என்றான்
பதில் சொல்லவில்லை ஆனால் சரி என்பது போல ஷர்மி தலையசைக்க,
ரூமின் வெளியே வந்தான், ஆளுக்கு ஒரு பக்கம் போய்விட கேசவனும் சந்தோஷும் அங்கே அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
இப்படி பேச்சுக்கள் சண்டை சச்சரவுகள் எதுவும் அவர்களுக்கு பழக்கமே இல்லை. என்னடா இது என்று சலிப்பாய் இருந்தது கேசவனுக்கு.
இவர்களை பார்த்தவன் திரும்பி சென்று ஷர்மியிடம் மாமாவும் சந்தோஷும் மட்டும் ஹால்ல தனியா உட்கார்ந்து இருக்காங்க என்று சொல்ல

 

 

 

ஷர்மி அமைதியாய் கேசவனின் அருகில் அமர்ந்தவள், சாரி ப்பா எனக்கு யாரையும் பேசணும்னு இல்லை, ஆனா என்னவோ எல்லோரும் என்னை நிறைய பேச வைக்கறாங்க எனக்கு இந்த மாதிரி பிடிக்கவேயில்லை என்று சொல்ல
அவர்களுக்கும் அதே மன நிலை தானே. நான் விசாலி கிட்ட சொல்றேன் என்று அவர் சொல்ல
அவங்க மட்டுமில்லை இங்க ரவி யோட அம்மா கூட அப்படி தான் அதுலயும் கோபம் வந்துட்டா ரவி இன்னும் பேசறார் என்றவள், மெதுவாக பா எனக்கு ஒரு வீடு வேணும் என்றாள்
வீடா எதுக்கு என்றார் கேசவன் அதிர்ச்சியாக
ஜஸ்ட் எனக்குன்னு ஒரு வீடு வேணும், இது ரவி யோட வீடு, அது உங்க வீடு, எனக்கு வீடு வேண்டும் என்றாள் பிடிவாதமான குரலில்

 

 

 

அவன் எடுத்ததை உணர்ந்த சந்தோஷ், ஸ்பீக்கரில் போட்டு என்ன பேபி பேசற நீ, நீ பேசறது மாமாக்கு தெரியுமா என்றான் சத்தமாக.
என்ன சந்தோஷ் என்று பேச வந்த ரவி அப்படியே அமைதியாகி விட்டான்.
எங்கப்பா கிட்ட நான் கேட்கறது அவருக்கு எதுக்கு தெரியணும் என்றாள்
பேபி நீ கேட்கறது எல்லாம் தெரியனும்னு அவசியமில்லை ஆனா இது சின்ன விஷயமில்லை இது ரவி வீடு அது உங்க வீடு எனக்கு வீடு வேணும்னு நீ கேட்கறது என்று விஷயத்தை போட்டுடைக்க
ரவியின் கைகளில் சில நொடி கார் தடுமாறி பின் சீரானது
நான் விளையாட்டுக்கு கேட்கலை நிஜம்மா தான் கேட்கறேன் என் பேர்ல கொஞ்சம் இடம் எல்லாம் இருக்குன்னு எனக்கு தெரியும். அது எனக்கு வேண்டாம். என் கிட்ட இருக்குற நகை கூட எடுத்துக்கோங்க எனக்கு வீடு வேண்டும் என்றாள் மீண்டும்

 

 

சே சே எனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ சண்டை போடறானோ போடலையோ அவரை விட்டெல்லாம் போக மாட்டேன். என்னால அவரை விட்டெல்லாம் இப்போதைக்கு இருக்க முடியாது. எதிர்காலம் எனக்கு என்ன வெச்சிருக்குன்னு எனக்கு தெரியலை
அன்னைக்கு சண்டை போட்டு நான் தான் வீட்டை விட்டு வெளில வந்தேன் அதுக்கு கோபப் பட்டு போடி ன்னு சொல்லிட்டாங்க இனி இங்க வராத ன்னு சொல்லிட்டாங்க ரெண்டு நாள் இருக்கலாம் ஒரு வாரம் இருக்கலாம் அதுக்கு மேல உங்க வீட்ட்ல நான் எப்படி இருப்பேன்       
உங்களுக்கு தெரியாதது இல்லை எனக்கு கோபம் வந்தா என்ன பேசுவேன் என்ன பண்ணுவேன்னு தெரியாது. ஏதாவது கோபத்துல பேசி ரவிக்கு கோபம் வந்து என்னை வீட்டை விட்டு போ ன்னு சொல்லிட்டா எனக்கு போக வீடு வேண்டும் என்று சொல்ல
கேசவனுக்கு என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை. அப்படியே கல்லாய் சமைந்து விட்டார்.
ஒரு ஓரத்தில் காரை நிறுத்தி விட்டான் ரவி.

 

 

இல்லடா அண்ணா ரொம்ப யோசிச்சேன், இப்போவே பார், அவங்க வருத்தப் படனும்னு பேசலை ஆனா எனக்கும் அவங்களுக்கும் சரி வரவே வராது நான் என்ன பண்ணட்டும் அப்போ அப்பா க்கு கஷ்டம் என்று விசாலியை சொன்னவள்
நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆகலாம், நானே பொண்ணு பார்த்து வெச்சா கூட அவங்க என்னை எப்படி நடத்துவாங்கன்னு தெரியாது இல்லையா
எனக்கும் நிறைய கோபம் வரும் ரவி க்கும் வரும் ரவிக்கு பிடிச்ச மாதிரி பேசி சண்டை போடாம அதெல்லாம் எந்த அளவு எனக்கு சாத்தியம் தெரியலை அதுல அவங்கம்மா வால எனக்கும் ரவிக்கும் பார்க்கும் போதெல்லாம் பிரச்சனையாகி என்னை விட்டுட்டு போயிடறாங்க அப்போ எனக்கு வீடு வேணும் இல்லைன்னா எங்கே போவேன் எங்கே போவேன்னு அதுவே ரொம்ப கவலை குடுக்குது என்று சொல்ல
அலைபேசியை கட் செய்து விடுவோமா என்று நினைத்த சந்தோஷ் பின் ரவி முழுதாக கேட்கட்டும் என்று அப்படியே விட்டான்.
எனக்கு எதுவுமே தெரியலை பயமா இருக்கு, அம்மா இருந்தா சமைக்க எல்லாம் கத்து குடுத்தது இருப்பாங்களோ, இப்போ யாராவது சமைக்கறது தான் சாப்பிடறேன். ரவி இருக்காங்க பார்துக்குவாங்கன்னு தான் இருந்தேன் இப்போ போ சொல்லிட்டா எனக்கு சமைக்க தெரியாது எதுவும் தெரியாது
அப்போ என் பேபி யை நான் எப்படி பார்த்துக்குவேன் எனக்கு பயமா இருக்கு என்று சொல்ல
சொல்லும் போது கண்களில் கண்ணீர் அவளையும் மீறி சிறு கேவல்,

Advertisement