Friday, June 14, 2024

    Naan Enathu Manathu

    அத்தியாயம் பதிமூன்று : சந்தோஷும் வீட்டிற்கு வந்து விட, ஷர்மியும் சந்தோஷும் சலசலவென்று பேச, ரவி அதற்குள் இட்லி வைத்து தேங்காய் சட்னி செய்தான். இருவருமே அதை உண்பார்கள் என்று தெரியும். அவர்களின் உணவு முறை இவனுக்கு அத்துப்படி. அவனின் கண்காணிப்பில் தானே இருவரும். ஆனால் அப்போதெல்லாம் ஒரு முறை கூட ஷர்மிளாவை திருமணம் செய்ய...

    Naan Enathu Manathu 26 2

    “நீ எப்படி நினைக்காத, நினைச்சா வந்துடும் நினைக்காத” என்றவன், அவனை அழைத்த தங்கை மகளை அழைத்தவன் “குட்டீஸ் எல்லாம் கூட்டிட்டு வா” என்றான். “எதுக்குடா?” என்று பாட்டி கேட்க, “பாட்டி, இவ இவ்வளவு சாப்பிட மாட்டா” என்றவன், “அந்த ஸ்வீட் எல்லாம் கொஞ்சம் மட்டும் வெச்சிகிட்டு பாக்கி எல்லாம் உன் கையாள குழந்தைங்களுக்கு கொடு” என்றான். ரவி சொன்னது...

    NEM 31 1

    அத்தியாயம் முப்பத்தி ஒன்று : ஆள் அரவமற்ற சாலையில் காரை நிறுத்து ரவியும் ஷர்மியும் ரோட்டை வெறித்து இருந்தனர். இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. “சாரி” என்றான் ரவி “ப்ச், போங்க நீங்க” என்றவளின் குரலில் அப்படி ஒரு சலிப்பு. “இப்படி நடக்கும்னு எனக்கு தெரியாதே” என்றான் குற்றவுணர்ச்சியோடு. “என்ன தெரியாது… வேண்டாம்னு சொன்னேன் தானே” “என்ன வேண்டாம்னு சொன்ன?” என்று அவனின்...
    “ம்ம், இப்போ கூட ஒன்னுமில்லை, என் குழந்தையை பெத்து என் கையில குடுத்துட்டு, நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ. எனக்கு ஒன்னுமில்லை” என்றான். அவளின் கண்களில் கரகரவென்று நீர் இறங்கியது. “ம்ம், முன்னமே உன்னை கல்யாணம் பண்ணிக்க க்யுல நின்னாங்க. இப்போ இன்னும் நிற்பாங்க” என்று சொல்ல, ஷர்மிளாவால் தாளவே முடியவில்லை, அவளின் இயலாமையை நினைத்து. ஆனாலும்...

    NEM 31 2

    தொழிலில் இருந்து எடுத்து வீட்டில் போட்டு விட்டோம், சரியா தவறா  என்ற ஒரு சுணக்கம், தொழிலும் சற்று தடுமாறியது. இப்படி சில பதட்டங்களில் ஓய்வில்லாமல் உழைத்தாலும், அவன் இளைப்பாறும் இடம் ஷர்மிளாவகிப் போனாள். இரவு மட்டுமே சேர்ந்திருக்கும் நிமிடங்களில் மனது மனைவியை மிகவும் நாடியது. அதனின் தடுமாற்றம் தான் இந்த குழந்தை மிக விரைவில். ஆனால் இந்த...

    Naan Enathu Manathu 23 1

    அத்தியாயம் இருபத்தி மூன்று : ஐந்து இரவுகள் அவனில்லாத உறக்கம், என்னவோ மாதம் போல வருடம் போல் எண்ணம் ஷர்மிளாவிற்கு. இதற்கு நேற்று ஹாஸ்பிடலில் ஒரே ரூமில் தான் படுத்திருந்தான் ஆனால் பக்கம் இல்லையே. அப்படி அவனின் அருகாமைக்கு பழகி இருந்தாள்.   இப்போது ரவியின் அணைப்பில் இருந்தாலும் அப்படி ஆழ்ந்த உறக்கம் இல்லை. மீண்டும் சண்டை...

    Naan Enathu Manathu 25

    அத்தியாயம் இருபத்தி ஐந்து : ரவி வீடு வந்தவன், ஷர்மிளாவிடம் இந்த விஷயங்களை எல்லாம் சொல்லலாம் என்று தேட, மீண்டும் ஹாஸ்பிடலில் இருந்தது போல ஒரு ஒதுக்கம், அவனின் பார்வையை சந்திக்க மறுத்தாள். “ஷ், இப்போ என்ன?” என்று மனதிற்குள் சலித்து கொண்டவன், என்ன என்று யோசனை செய்ய காலையில் அவன் பேசியது கொண்டு தான் எனப்...
    அத்தியாயம் பத்தொன்பது : ஒரு முழு நாள் ஆனது ஷர்மியின் உடல் நிலை இயல்பிற்கு திரும்ப, ஊரில் யார்க்கும் ரவி சொல்லவில்லை. ஆனால் விசாலி சீதாவிடம், ஷர்மிக்கு உடல் நிலை சரியில்லை ஐ சீ யு வில் அட்மிட் செய்திருக்கிறான் ரவி என்று சொல்லியிருக்க, அவர் கௌசியிடம் சொல்ல, இப்படியாக கும்பகோணத்தில் வீட்டில் இருப்பவர் அத்தனை...

    Naan Enathu Manathu 21 1

    அத்தியாயம் இருபத்தி ஒன்று : ஷர்மிளா உள்ளே வந்ததும் முகத்தை வேறு புறம் திருப்பியவன், பின் என்ன நினைத்தானோ எழுந்து அவளின் அருகில் வந்து, “உனக்கு ஒன்னும் தொந்தரவு இல்லையே, நான் ஃபாக்டரி வரைக்கும் போயிட்டு வரட்டுமா?” என்றான். பதில் சொல்லவில்லை ஆனால் சரி என்பது போல ஷர்மி தலையசைக்க, ரூமின் வெளியே வந்தான், ஆளுக்கு ஒரு...

    Naan Enathu Manathu 29 1

    அத்தியாயம் இருபத்தி ஒன்பது : “நீ இப்படி எல்லாம் பண்ணினா பெண்டாட்டி தாசன் சொல்வாங்க” என்று ஷர்மி சிரித்தாள். “யாராவது சொல்றது இருக்கட்டும், நீ சொல்றியா? நீ ஃபீல் பண்றியா நான் என்னவும் செய்வேன் உனக்காகன்னு?” என்று அவன் கேட்க, சில நொடிகள் யோசித்தவள் “அது தெரியலையே” என்றாள் உண்மையாய். “போடி” என்று முறைத்தவன் “இதையும் முடிஞ்சா கண்டுபிடி” என்று...
    விசாலியின் அம்மா விட்டேனா என்று “சரி, நீங்களே இப்போ நான் கொண்டு வந்ததை பாருங்க, என்ன அப்புறம் குழந்தை பிறந்த பிறகு கூட கல்யாணம் வெச்சிக்கலாம்” என்று பேசினார். “அப்படி அவசரமா பார்க்க வேண்டிய அவசியம் என்ன? இப்போ வேண்டாம்! அப்படியே இருந்தாலும் நாங்க எங்க ஊர்பக்கம் தான் பார்க்கலாம்னு இருக்கோம்” என்று மீண்டும் ஸ்திரமாய்...

    NEM 33 1

    அத்தியாயம் முப்பத்தி மூன்று : ஷர்மிளாவின் மற்றொரு பரிமாணத்தை பார்த்தான் ரவீந்திரன்.  மிக மிக அழுத்தமான குரலில் கேள்விகள் வந்தன அவனை நோக்கி, கோபமில்லை, ஆவேசமில்லை, அழுகையில்லை, வருத்தமில்லை, எதுவுமில்லை. உன்னுடைய பதில் எனக்கு வேண்டும் என்ற செய்கை மட்டுமே. ஆனால் எத்தனை பரிமாணத்தை காண்பித்தாலும் ரவீந்தரனின் பரிமாணம் ஒன்றே, அவன் மாறப் போவதில்லை என்று அவளுக்கு புரியவில்லை.    வீட்டிற்கு...

    Naan Enathu Manathu 22

    அத்தியாயம் இருபத்தி இரண்டு : என்னவோ ஒரு தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது ஷர்மிளாவிற்கு, அப்பாவிடம் வீடு வேண்டும் என்று பேசிவிட்டாள். அது தெரிந்தால் ரவி என்ன சொல்லுவானோ என்ற தயக்கம். ஆனாலும் “போடி” என்று சொன்னானே, அதையும் விட “உனக்கு முன்பே கியூவில் நின்றார்கள் இப்போது இன்னும் நிற்பார்கள்” என்று சொன்னானே. மனது நினைக்கும் போதே...

    Naan Enathu Manathu 28 1

    அத்தியாயம் இருபத்தி எட்டு : அவர்களின் ரூமின் உள் வந்ததுமே, “ஐ அம் சாரி ரொம்ப வலிக்குதா?” என்று அவளின் தலையில் அடிபட்ட இடத்தை தான் பார்த்தான். “வலிக்குது, ஆனா தாங்க முடியற அளவு தான்”  “தேங்க்ஸ்” என்றான் சம்மந்தமேயில்லாமல். “எதுக்கு, வலிக்குது ஆனா தாங்க முடியுதுன்னு சொன்னதுக்கா?” என்று அவள் புன்னகையோடு கேட்க.. அவன் முகத்தில் புன்னகை என்ன, சிறு...
    அத்தியாயம் இருபது : வீடு வந்து விட்டனர். வீட்டை நிர்வகிக்கும், சமைக்கும் கணவன் மனைவிக்கு விடுப்பு கொடுத்து விட்டதால் கௌசல்யா எல்லா பொறுப்பையும் வீடு வந்தவுடனே தனதாக்கி கொண்டாள். ஷர்மிளா இப்போது கர்ப்பமாக இருக்கிறாள், மருத்துவமனை வாசத்திற்கு பின் வந்திருக்கிறாள் என்பது வேறு. உண்மையில் இதெல்லாம் ஷர்மிக்கு வராது. அவளுக்கு யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. கற்றுக் கொள்ளும்...

    Naan Enathu Manathu 23 2

    அதை ஓரம் தள்ளிய ஷர்மி, “என்ன விஷயம்? ஏன் இவ்வளவு காலையில் வந்திருக்க? நைட் தூங்கின மாதிரியும் தெரியலை?” என்று கேள்விகளால் துளைக்க...   “ஒன்னுமில்லை” என்றவன், “எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க” என்றான் பளிச்சென்று. “என்னடா இப்படி கேட்கிறான்?” என்று ரவி யோசனையாய் பார்க்க, “பண்ணலாம், பண்ணலாம், ஆனா ஏன் திடீர்ன்னு அவசரமா இது பேசற?”  என்று...

    Naan Enathu Manathu 6

    அத்தியாயம் ஆறு : கேசவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, அவரின் ஒன்று விட்ட அண்ணன் மூலமாக “கல்யாணம் பேசி முடிச்சா இங்கயே எங்களுக்கு இன்னொரு தொழில் இருக்கு, அதை மாப்பிள்ளைக்கு கொடுக்கறோம்” என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்.. இப்போது ரவீந்திரன் பேசுவதை பார்த்தால் முடியாது போலவே. அவன் சொன்னது முற்றிலும் உண்மை முன்பிருந்த அவனின் வரிய நிலை தவிர, இப்போது...

    Naan Enathu Manathu 26 1

    அத்தியாயம் இருபத்தி ஆறு : எல்லாம் எல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. ஆம்! இதோ ஒரே வாரம், நேற்று மாலை கௌசல்யா சந்தோஷின் நிச்சயதார்த்தம் முடிந்து இருக்க, இன்று இப்போது ஷர்மிளாவின் வளைகாப்பு நடந்து கொண்டிருந்தது. சீதா இரண்டு நாட்கள் முடியவே முடியாது, மற்ற மூன்று பெண் மக்களுக்கு எப்படி மாப்பிள்ளை பார்த்தோமோ அப்படி தான் பார்க்க...

    NEM 32

    அத்தியாயம் முப்பத்தி இரண்டு: ஆகிற்று, குழந்தையை உறுதி செய்து ஒரு வாரம் ஆகிற்று. வீட்டினர் யாருக்கும் இன்னும் சொல்லவில்லை. ஏன் சந்தோஷிற்கு கூட தெரியாது. மனதிற்குள் ஷர்மிக்கு அதுவே ஒரு உதைப்பு. வீட்டினர் எல்லோரும் அவளிடம் அன்பாய் பேசி பழகுகின்றனர். அவர்களிடம் மறைப்பது தப்பு போல ஒரு எண்ணம்.   சந்தோஷ் ஷர்மியை பார்க்க வந்தவன், “ஏன் பேபி...

    Naan Enathu Manathu 5 2

    “இதென்னடா இப்படி இரு கேள்வி கேட்கறார் இந்த மனுஷன், என் வீட்ல யார் யார் இருக்கான்னு கூட இவருக்கு ஞாபகம் இருக்குமா?” என்ற யோசனை தான் ரவிக்கு. மூன்று தங்கைகளின் திருமணதிற்கும் அழைத்திருந்தான், ஆனால் கடைசி தங்கை திருமணதிற்கு மட்டும் கேசவன் வந்திருந்தார். அவரும் ஷர்மியையோ சந்தோஷ்சையோ அழைத்து வரவில்லை..     முதல் தங்கைக்கு திருமணம் செய்த...
    error: Content is protected !!