Advertisement

உண்மையில் ரவியிடம் பேச அவளுக்கு எந்த தயக்கமும் வரவில்லை. முன்பிருந்தே சண்டையிட்டு சண்டையிட்டு ஒரு லகுதன்மை இருந்தது. அந்த கிண்டல் நக்கல் பேச்சுக்கள் கூட அப்படித்தான் வந்ததோ! ஆனால் அது ரவியை ஏகத்திற்கும் சீண்டி விட்டது அவளுக்கு புரியவில்லை.
உண்மையில் வேறு யாரையுமே அப்படி ஷர்மிளா பேசியதே இல்லை!
அவனை எப்படியும் பேசும் உரிமை அவளுக்கு எப்படி வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை!
அது ரவியினது தவறும் கூட, அவள் எப்போதும் சிறிது நக்கல் பேசும் போதே , இப்படி பேசாதே என்று அடக்கி இருந்தாள், சண்டையிட்டு இருந்தாள், அவள் பேசியிருக்க மாட்டாளோ என்னவோ, ஆனால் அப்போதும் மௌனமாய் கடந்து விடுவான். அதுவே அவளை அதிகம் அதிகம் பேச வைத்து விட்டது.         
எல்லாம் சொல்லும் போதே ஷர்மிளாவின் கண்களில் நீர் நின்று விட, எல்லாம் அவனால், ஆனால் அதை சொல்ல முடியாதே..
பேச்சை மாற்றினான், “சரி விடு, திரும்ப ஒரு தடவை எல்லாம் அரேஞ் பண்ணிட்டு, நீ அன்னைக்கு சொல்லாம கொள்ளாம போய்டு டிட் பாஃர் டாட்” என,
“ம்ம்ம், உன் மூஞ்சி, இவ்வளவு புத்திசாலித்தனம் எல்லாம் வேண்டாம். நான் தாங்க மாட்டேன்” என்று கண்களில் நீரோடு கடுப்பாக சொல்ல.
“ஆமாம், என்னவோ மரியாதை அது இது சொல்லிட்டு, திரும்ப என்னை வா போ பேசற, இப்படி மரியாதையில்லாம பேசற”
“அது எல்லாம் இந்த ரூம்க்கு வெளிய தான். ஃபுல் டைம் என்னால அப்படி பேச முடியாது. முதல் நாள் அப்படின்றதால குறைவா பேசறேன், நாளைக்கு இன்னும் கெட்ட வார்த்தைல கூடத் திட்டுவேன், நான் உன்னை கல்யாணம் பண்ணவே கூடாது நினைச்சேன், நீ பண்ண வெச்சிட்ட”  
“ஆரம்பிச்சிட்டாடா” கண்களில் நீரோடு பேசுவதால் அமைதியாக இருந்தான். இல்லையென்றால் சொல்லியிருப்பான் “உன்னுடைய இந்த வார்த்தைகள் தான் உன்னை கல்யாணம் செய்ய தூண்டியது” என்று..
ஆனாலும் சில நேரங்களில் பொய் அழகானது என்று தோன்ற, “எனக்கு உன்னை பிடிச்சிருந்தது” என்று சொல்ல,
“மூஞ்சி, பொய் சொல்லாத” என்று சப்தமிட,
“இது என்ன வார்த்தை மூஞ்சி” என்று முகம் சுளித்தவன், “ஏன்? ஏன் பொய் சொல்றேன்?”
“நீ எதுக்கு என்னை கல்யாணம் பண்ண நினைச்சியோ எனக்கு தெரியாது. கண்டிப்பா இஷ்டப்பட்டு கேட்கலை, எங்கயோ என்னால ஃபீல் பண்ண முடிஞ்சது. அப்படி ஒரு லவ் எல்லாம் உன் கண்ல நான் பார்க்கலை”
“ஓஹ், அதெல்லாம் கண்ல தெரியுமா என்ன?”
“தெரியலை, ஆனா உன் கண்ல தெரியலை, அதனால என் பக்கத்துல வந்த பிச்சிடுவேன், போடா” என்று சொல்லி படுத்துக் கொள்ள, அவனும் திரும்ப வழக்காடாமல் படுத்துக் கொண்டான்.
“கண்ல என்னால தெரிய வைக்க முடியலைன்னா என்ன ஆகும்?” என்றான் சிறிது நேரம் விட்டு.
“தெரியலை” என்றவளின் குரல் கம்மி இருந்தது..
“ஹேய் நம்பு, நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்”
“அப்போ ஏன் என்னை அன்னைக்கு விட்டுட்டு போன”
“அம்மாடி, கல்யாணம் பண்ண பண்ணின திருகு தாளத்தை எல்லாம் விட்டுடுவா போல, இந்த ஃபார்ஸ்ட் நைட்ல போனதை விட மாட்டா போலவே” என்று நினைத்தவன் அவளின் கோபத்தை கிளறாமல் அமைதியாய் கண் மூடிக் கொண்டான்.
அவள் திரும்பி திரும்பி படுக்கவும், “என்ன தூக்கம் வரலையா?”, என்றவனிடம்
“ஏ சீ பத்தலை” என,
“அம்மா இதுவே எனக்கு குளிருது”
“எனக்கு பத்தலை”
“சரி, அதிகம் பண்றேன். ஆனா குளிருணா உன்னோட போர்வைக்குள்ள வந்துடுவேன் ஓகே வா”
“டேய், ரொம்ப பேசின அடிச்சிடுவேன்”
“அடிக்காத வேணும்னா கடிச்சிக்கோ, அதுவும் என்னோட உதடை மட்டும்” என்று சொல்ல,
“அம்மாடி” என்று எழுந்தே அமர்ந்து விட்டாள். “நீ இப்படி எல்லாம் பேசுவியா”
“வேற என்ன நினைச்ச?”
“சரியான சிடுமூஞ்சி, சிரிக்க கூடத் தெரியாதுன்னு”
“சரி என்ன கடிக்கிறியா” என்றான் ஒரு வசீகரப் புன்னகையோடு.
“ஃபர்ஸ்ட் நைட்ல ஓடிப்போனவன் எல்லாம் அதை பேசக் கூடாது”
இந்த முறை விளையாட்டாய் எடுக்காமல் சீரியசாய் பதில் சொன்னான், “வேற என்ன பண்ணுவேன்? உங்கப்பா நகையெல்லாம் பரப்பி வெச்ச உடனே, இதுக்கு தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட லுக் விட்ட, நீயாவது லுக் விட்ட எங்கம்மா என்கிட்டே வாய் விட்டு கேட்டாங்க மனுஷனுக்கு எப்படி இருக்கும்?”
“பணம் எனக்கு ஒரு விஷயமே கிடையாது, சம்பாதிக்க துப்பில்லாதவன் தான் பொண்டாட்டி என்ன கொண்டு வருவான்னு பார்த்துட்டு இருப்பான். எனக்கு அந்த அவசியமேயில்லை. இந்த வயசுல எவ்வளவு சம்பாரிச்சு இருக்கேன் தெரியுமா? ஆனா அதுக்கான ஒரு அங்கீகாரம் இல்லை. அதை விட்டு நீ இதுக்கு தான் பண்ணுனியான்னு சொன்னா. அந்த கோபம் தான் போயிட்டேன்”
“இந்த பத்து நாளா உங்கப்பாவோட எல்லாம் சரி பண்ணிட்டேன், அவரோட ஷேர் நம்மளோட ஃபாக்டரிதும் அவர்கிட்ட கொடுத்துட்டேன். அவர் உனக்கு தான் எனக்கு வேண்டாம் சொன்னார். நான் சொல்லிட்டேன் நீங்க என்னவோ பண்ணிக்கங்கன்னு”
“இதை நீ முன்னமே சொல்லிட்ட” என்று அவள் பேசினில் இடையிட, 
“நீ ஃபர்ஸ்ட் நைட் பேசினா, நான் இதை தானே பேச முடியும்
“சரி பேசு” என்பது போன்ற பாவனையை காண்பித்தாள். அது அப்படி ஒரு அழகு கூடவே ஒரு மயக்கம் கம்பீரம் இரண்டும் கொடுக்க, அப்போதும் அந்த அழகியின் எந்த பாவனையும் அவனை ஈர்க்கவில்லை
“நான்… எனது… மனது…” என்ற விளக்கம் கொடுத்து கொண்டிருந்தான்.
“எல்லாம் சரி பண்ணிட்டு வரணும் நினைச்சேன், அதுதான் இவ்வளவு நாள். உன்னை கொண்டு வந்து விட சொன்னேன், நீ தான் வரலை”
“எப்படி வருவேன்? நீ சொல்லாம கொள்ளாம போனா, நான் உன்னை தேடி வருவேனா, நெவர் போடா” என்றாள்.
அவள் சம்மணமிட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, இவன் படுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான்.
“சும்மா அதையே சொல்லிட்டு இருக்க, என்னை ரொம்ப எதிர்பார்த்தியோ” என்றான் சரசமாக.   
“நிச்சயமா” என்று உடனே ஒப்புக் கொடுத்தாள், எந்த பிகுவோ லஜ்ஜையோ அன்றி.  
ரவீந்திரன் இதனை எதிர்பார்க்கவில்லை, ஷர்மிளாவை ஆச்சர்யமாய் பார்த்தான். 
“நான் என் மனசை தயார் படுத்திகிட்டு தான் வந்தேன், நீ என்னை நெருங்குவ, நெருங்கினா பேசாம இருக்கணும். அடுத்த ஸ்டெப்க்கு போனா விட்டுடணும்னு, ஏன்னா நீ ரொம்ப கலாட்டா பண்ணி கல்யாணம் பண்ணிகிட்ட?”
“ஆனா சத்தியமா நான் அலங்காரம் பண்ணிக்கிட்டு நின்னா, நீ திரும்பி கூடப் பார்க்காம போவேன்னு எதிர்பார்க்கலை. அப்போ எனக்கு ரொம்ப கவலையாகிடுச்சு நீ என்னை பழிவாங்க கல்யாணம் பண்ணினையோன்னு. என்னென்னவோ நினைச்சேன்”
ரவி இப்போது அவன் இடையிட்டான் பேச்சினில் “இத்தனை வருஷம் என்னோட இருந்திருக்க, என்னை பார்த்திருக்க, ஒரு சின்ன பார்வை கூட தப்பா உன்னை பார்த்ததில்லை. அப்போவும் எப்படி என்னை பத்தி நீ நல்லவிதமா நினைக்கவேயில்லை, அதுதான் என் கோபம். திரும்பவும் அதே மாதிரி பேசாதே”
“சரி பேசலை, ஆனா இதையெல்லாம் விட இது நீ என்னை இன்சல்ட் பண்ணின் மாதிரி, இது உனக்கு புரியலையா” என்று சொல்ல..
“நான் இப்படி யோசிக்கவேயில்லை, நிஜம்மா சாரி” என்றான் உள்ளார்ந்து.   
“போடா” என்று சொல்லி அவள் படுத்துக் கொள்ள, சில நிமிடம் விட்டவன்,
“ஷர்மி நீ அன்னைக்கு பண்ணின முடிவு அப்படியே இருக்கா” என்றான்.
“என்ன முடிவு?” என்றவளிடம்,
“அதுதான் நான் பக்கத்துல நெருங்கினா விட்டுடணும்னு”.
சில நொடி மௌனம் பின் “தெரியலை” என்றாள்.
“எப்படி தெரிஞ்சிக்க?”
“அதுவும் தெரியலை”
“இப்போவே பக்கத்துல வந்தா நீ என்னை தப்பா எடுத்தா”
“இப்போ மட்டும் நீ ரொம்ப நல்ல மாதிரின்னு நினைப்போ”
“சரி எப்படியோ கெட்டவன்னு முடிவு பண்ணிட்ட, உன் கிட்ட நல்ல பேர் எடுத்து என்ன பண்ண போறேன்” என்றவன் அவளை நெருங்கி படுக்க ..
“நீ என்னவோ பேசிக் கொள், என்னவோ செய்து கொள்” என்ற முக பாவனையுடன் அவனை பார்த்தாள்.
அந்த பாவனைக்கு அவனுக்கு நெருங்க இஷ்டமில்லை, “தூங்கு” என்று சொல்லி திரும்பப் படுத்துக் கொண்டான்.
“ஏன்? என்னாச்சு?” என்று அவள் பேச,
“தூங்கு ஷர்மி” என்றான் சற்று கடுமையான குரலில்,
“நான் எதுவும் வேணாம்னு சொல்லலையே”
“நீ எதுவும் வேணும்னு சொல்லலையே. உனக்கு என்னை விட்டு விலக முடியாதுன்னு தோன்றப்போ ஏன் இந்த கல்யாணம்னு கேட்கறேன்னு சொன்ன? ஆனா நீ என்னை பத்தி தெரிஞ்ச பிறகு தான் நம்ம கல்யாணத்துக்கு முழு அர்த்தமே நான் கொடுப்பேன்” என்று சொல்லியவன் கண்களை மூட,
“என்னவோ பண்ணு போ” என்று முனகியவளாக கண்களை மூடினாள்.
“நம்ம கல்யாணத்தை நான் எப்படி வேணா நடத்திகிட்டு இருக்கலாம். ஆனா வாழ்க்கை பிடிச்சு ஆரம்பிக்குதோ இல்லையோ பிடிக்காம ஆரம்பிக்க கூடாது” என்றான் உறுதியான குரலில். வெகுநேரம் இருவருக்குமே உறக்கமில்லை.   

Advertisement