Advertisement

கண்ணன் அத்வைத்திடம் கை குலுக்கியபடி, கங்க்ராட்ஸ் சார்” என்றான்.
அத்வைத், தேங்க்ஸ்” என்றதும்,
கண்ணன், உங்க மன தைரியத்தை பாராட்டியே ஆகணும் சார்” என்றான்.
செந்தமிழினி அவனை முறைக்க, அத்வைத் உதட்டோர மென்னகையுடன், தேங்க்ஸ் அகேன்” என்றான்.
இப்பொழுது அவள் அத்வைத்தை முறைத்தாள்.
துருவ், தப்பா சொல்றடா.. இந்த நல்லவனை கட்டிக்கிற இவளோட மன தைரியத்தை தான் பாராட்டனும்” என்றான்.
அத்வைத்தை பார்த்து வெற்றிச் சிரிப்பு சிரித்தவள், துருவிடம், அப்படி சொல்லுடா” என்று கூறியபடி கை தட்டிக் கொண்டாள்.
அத்வைத் கண்ணனைப் பார்த்து, இப்போ இவன் எதுவும் சொன்னானா! எனக்கு எதுவும் கேட்கலையே!” என்று கூற,
கண்ணன் சிறு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் அவனைப் பார்க்க,
நீ இப்படி பேசி கேட்டு, எவ்வளவு நாள் ஆச்சுடா!’ என்று மனதினுள் நினைத்தபடி,  சற்று நெகிழ்ச்சியுடன் தமையனைப் பார்த்த துருவ், அத்வைத்தின் பார்வை தன்னிடம் வரவும், சட்டென்று முகத்தை இயல்பிற்கு மாற்றினான்.
இது தான் அத்து’ என்று மனதினுள் நினைத்த செந்தமிழினி அத்வைத்தைப் பார்த்து, அடையாரில் XXXனு திறமையான இ.என்.டி ஸ்பெஷலிஸ்ட் இருக்கார், அத்தான்” என்றாள்.
அவனும் அலட்டிக் கொள்ளாமல், உன்னை கூட்டிட்டுப் போகனுமா? அப்பாயின்மென்ட் வாங்கிட்டியா? இல்லை, நான் வாங்கவா?” என்று கேட்டான்.
நீங்க எப்போ ஃப்ரீனு சொல்லுங்க உங்களுக்கு தானே காட்டனும்”
துருவ், மிடிலடா! நீங்க ரெண்டு பேரும் இப்படியே பேசிட்டு இருந்தீங்க! நான் தான் அவரை போய் பார்க்கணும்.” என்றான்.
அனைவரின் முகத்திலும் இளநகை பூத்தது.
செந்தமிழினி துருவை பார்த்து, யது கண்ணாக்காகத் தான் இந்த முடிவு.. நேத்து நைட் அவன் என்னை சந்துமானு கூப்பிட்டுப் பேசினதுக்கு அப்புறம், என்னால் வேற யோசிக்கவே முடியலை.” என்றாள்.
தமையனின் முகத்தைப் பார்த்த துருவ், அதில் இருந்து எதையும் அறிய முடியாமல், இவன் முகத்தில் எதையாவது வெளிபடுத்தினா தான் ஆச்சரியப் படனும்’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டு செந்தமிழினியைப் பார்த்து,
இதை இவ்வளவு அவசரமா, காலையிலேயே வீட்டுக்கு வந்து பேசணுமா என்ன?” என்று கேட்டான்.
அவள் சிறிதும் தடுமாறாமல், வீட்டில் நேத்து நைட் ஒரு அலையன்ஸ் பத்தி பேசினாங்க.. அதான் அவசரமா வந்தேன்.. இன்னும் சில விஷயங்கள் கிளியர் செய்யனும்னு இங்கே வந்தோம்..”
ஸோ என்னைக் கிளம்புனு இன்டேரக்ட்டா சொல்ற!”
ச.. ச.. டைரக்ட்டாவே சொல்றேன்.. இடத்தை காலி பண்ணு” என்றாள்.
எனக்கும் ஒரு காலம் வரும்” என்றவன், உனக்காக நீ சொன்னதை நம்பிட்டேன்” என்று கூறிவிட்டே கிளம்பினான். கிளம்பும் போது கண்ணனையும் அழைத்துக் கொண்டே சென்றான்.
மேஜை பணியாளர் வந்து உணவை வைக்கவும், செந்தமிழினி, இது எப்போ?’ என்பது போல் பார்க்க,
அத்வைத், சாப்டுட்டே பேசு” என்றான்.
தன் முன் இருந்த தனக்கு மிகவும் பிடித்த காளான் பிரியாணியைப் பார்த்தவள், அத்வைத்தை சட்டென்று நிமிர்ந்து பார்க்க, அவனோ அமைதியாக, சாப்பிடு” என்றபடி,
தனது அளவு சாப்பாட்டைச் சாப்பிட ஆரம்பித்தான்.
நான்கு வாய் சாப்பிட்ட பின் அவள், இந்த அளவிற்கு ஞாபகம் வச்சிருக்கிற நீங்க, ஏன் அத்தான் என்னை எஃப்.பி-ல ப்ளாக் செய்தீங்க?” என்று கேட்டாள்.
அரை  நொடி சாப்பிடுவதை நிறுத்திய அவனது கை பின் தொடர்ந்தது.
அவளைப் பார்த்தவன், இதை பத்தி பேசவா வந்த?” என்று கேட்டான்.
அவள், அப்போ, நிஜமாவே ப்ளாக் தான் செய்து இருக்கிறீங்க!” என்றாள்.
மனதினுள், அடப்பாவி போட்டு வாங்குனியா!’ என்று நினைத்தவன் அமைதியாக உணவை உண்டான்.
அவனது பதிலை எதிர் பார்க்காமல், நான் வேண்டாம்னு ப்ளாக் செய்தீங்க.. ஆனா, இப்போ நான் உங்க லைஃப் உள்ளேயே வந்துட்டேன்.” என்றவள் ‘இப்போ என்ன செய்யப் போறீங்க!’ என்பது போல் பார்த்தாள்.
அவளைப் பார்த்தவன் நிதானமான குரலில், லைஃப் உள்ளே வரலை.. என்னோட லைஃப்-ஆவே வந்திருக்க.” என்றான்.
ஒரு நொடி ஆச்சரியம் கொண்டவள், அடுத்த நொடி அவனது கையை கிள்ளி இருந்தாள்.
ஆ” என்று மெலிதாக அலறியவன், கையை தேய்த்தபடி அவளை முறைக்க,
கனவா நிஜமானு செக் செய்தேன், அத்து” என்றபடி கண்ணடித்தாள்.
அவன் செல்ல முறைப்புடன், அதுக்கு உன் கையைக் கிள்ளணும்” என்றான்.
வலிக்கும்ல” என்று மென்னகையுடன் தலை சரித்துக் கூற, அவனும் மென்னகையுடன், சாப்பிடு” என்றான்.
இன்னும் நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லல” என்றாள்.
முதல்ல முக்கியமான விஷயத்தைப் பேசு”
இது முக்கியமான விஷயம் இல்லைனு சொல்றீங்களா?”
நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு சொல்லி விட்டேன்”
ஓகே.. இதை அப்புறம் பேசிக்கலாம்.”
அதை நீ விடுறதா இல்லை!’ என்பது போல் அவன் பார்க்க,
அவள் மென்னகையுடன் தலையை மறுப்பாக அசைத்தபடி, வாய்ப்பே இல்லை” என்றாள்.
பிறகு, கமிங் டு தி மெயின் விஷயம்” என்றவள், இன்னைக்கு வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு திருமாங்கல்யம் வாங்கிட்டு போய், உங்க கழுத்தில் இருக்கிற செயினில், அதை கோர்த்துடுங்க.. நாளைக்கு முகூர்த்த நாளா தான் இருக்குது.. ஸோ, காலையில் ஆபீஸ் வரதுக்கு முன்னாடி வடபழனி கோவில் போறோம்.. திருமாங்கல்யம் கோர்த்த உங்க செயினை என் கழுத்தில் போட்டுட்டு, என் கழுத்தில் இருக்கிறதை உண்டியலில் போட்டுடுங்க.” என்று அசராமல் கூற,
அவன் அதிர்வுடன்,  எத்தனை  முறை கல்யாணம் செய்றது?” என்றான்.
சற்று யோசித்தவள், சரி அப்போ இப்படி செய்யலாம்.. திருமாங்கல்யத்துக்கு பதில் மஞ்சள் துண்டை செயின்ல நூல் வச்சு கட்டிடலாம்.” என்றாள்.
அவளை முறைத்தவன், நான் காசுக்காகவா சொல்றேன்! முதல்ல சொன்னது, இப்போ சொன்னது, எல்லாம் ஒன்னு தானே! மூனு முறையா கல்யாணம் செய்றது?” என்றான்.
இது என் கழுத்தில் இருக்கிறதே எனக்கு பிடிக்கலை..” என்றவள் அவனது முகம் இறுகவும்,
நீங்க போட்ட தாலியை வேணாம் சொல்லலை.. காலையில் உங்க கிட்ட பேசினதுக்கு அப்புறம் ரொம்பவே ஒரு மாதிரி இருக்குது, அத்தான்.. அதான் சொல்றேன்.” என்றாள்.
அவன் அமைதியாகவே இருந்தாலும், அவனது முகத்தில் இருந்த இறுக்கம் சற்று குறைந்ததை புரிந்து கொண்டவள், ப்ளீஸ் அத்தான்.. என் செல்ல அத்து தானே!” என்று கொஞ்சலுடன் கெஞ்சினாள்.
ப்ச்.. சின்ன பிள்ளை மாதிரி பிஹேவ் செய்யாத தமிழ்” என்று அவன் சற்று எரிச்சலுடன் கூற, அவள் அவனை முறைத்தாள்.
அவன், என்ன முறைப்பு! வெளி இடத்தில் இப்படியா கொஞ்சுவ!” என்றான் சிறிது கடினமான குரலில்,
அவள் கண்ணில் குறும்புடன் ரகசிய குரலில், அப்போ, உங்க ரூமுக்குள்ள கொஞ்சவா அத்து!” என்றாள்.
குறும்புத்தனம் நிறைந்த அந்த முகம் அவனது மனதை அசைத்தது. இரண்டு நொடி தன்னை மறந்து அவளைப் பார்த்தவன், பின் சுதாரித்து இருந்தான். தனது மனம் இவ்வளவு சீக்கிரம் அவளிடத்தில் சாயத் தொடங்கியதை பெரும் அதிர்ச்சியுடன் உணர்ந்தான்.
தனது மனதை மறைக்கவும், அடக்கவும், கடினத்தை முகத்தில் வரவழைத்துக் கொண்டு, எல்லா நேரத்திலும் உன்னோட விளையாட்டுத்தனம் ரசிக்காது..” என்றவன், யதுவையும் கெடுக்காத.” என்றான்.
அவனது இறுதி வார்த்தைகளில் தீவிர முகபாவத்துடன் அவனைப் பார்த்தாள்.
அவன் முறைப்புடன், விளையாட்டுத் தனத்திற்கு அளவு இருக்கிறது.. அதுவும் குழந்தை கிட்ட எதை சொல்லிக் கொடுக்கிறதுனும் இருக்குது..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
நான்  என்ன தப்பாச் சொல்லிக் கொடுத்து விட்டேன்?” என்று கேட்டாள்.
அவன் முறைப்புடனே, ஹ்ம்ம்.. நீ செய்ததைப் பார்த்து என் முகத்தில் தண்ணி ஊத்துறேன்னு லேப்டாப்பில் கொட்டி, அது கிராஷ் ஆகி.. என்னோட வேலை எல்லாம் வேஸ்ட் ஆச்சு.” என்றான். அன்றைய சிரமத்தால் ஏற்பட்ட கோபம், இன்றும் அவன் முகத்தில் தெரிந்தது.
அவன் அவளை கடுமையாக முறைக்க,  அவளோ, குழந்தைனா குறும்புத்தனம் செய்யணும்.. சேட்டை செஞ்சா தான் அது குழந்தை.. சும்மா அவனையும் உங்களை மாதிரி மாத்தாதீங்க” என்றாள்.
அவன் முறைப்புடனே, என் பையன், என்னை மாதிரி தான் இருப்பான்” என்றான்.
அவள் சிறிதும் யோசிக்காமல், என் பையன் என்னை மாதிரியும் தான் இருப்பான்.” என்றாள்.
அத்வைத் இருந்த மனநிலையில் என்ன பேசுகிறோம் என்று உணராமல், அவன் ஒன்னும் உன்னோட பையன் இல்லை.” என்றான் சற்று கடுமையான குரலில்.
அவனது கூற்றில் ஒரு நொடி வலியை முகத்தில் காட்டியவள், அடுத்த நொடியே நிமிர்வுடன் அழுத்தமான பார்வை பார்த்தாள்.
அவளது முகத்தில் மின்னி மறைந்த வலியைக் கண்டு தனது தவறை உணர்ந்து, சாரி.. நான்..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
சற்று கோபத்துடன், எனக்கு உங்க சாரி தேவையே இல்லை.. அதே நேரத்தில் இட்ஸ் ஓகேனும் சொல்ல மாட்டேன்.. யது கண்ணா என்னைச்  சந்துமானு சொன்ன நொடியில் இருந்து அவன் என்னோட பையன் தான்.. ஸோ, நீங்க என் கழுத்தில் தாலியைப் போடறதுக்கு முன்னாடியே அவன் என்னோட பையன் ஆகிட்டான்.. யது என்னோட பையன் தான்.. இதை யாராலும்.. ஏன்! நீங்களே நினைத்தாலும் மாற்ற முடியாது.” என்று அழுத்தமான திடமான குரலில் கூறியவள், எழுந்து சென்று துருவ் மற்றும் கண்ணன் இருந்த மேஜையில் அமர்ந்து கொண்டாள்.

Advertisement