Advertisement

ப்ச்.. வீடு இப்போ இருக்கிற நிலைமைக்கு..” என்று அவன் இழுத்து நிறுத்த,
அவள், ஏன்? அப்படி என்ன நிலைமை?” என்று சாதாரணமாகக் கேட்டாள்.
ஏன் உனக்குத் தெரியாதா?”
எனக்குத் தெரிந்து கப்பல் மூழ்குற நிலைமையில் இல்லை”
அத்வைத்தை இன்னொரு கல்யாணம் செய்யச் சொல்லி அம்மாவும் அப்பாவும் போராடிப் பார்த்துட்டாங்க.. நானும் முயற்சி செய்றேன்.. ஒன்னும் வேலைக்கு ஆகலை..”
கிழவி, சும்மா இருக்காதே!”
கிழவி நேகாவை கோர்த்து விடப் பார்க்குது!”
சுத்தம்!”
ஹ்ம்ம்.. அதான் சொல்றேன்.”
இதுக்கும் நீ கல்யாணம் வேணாம்னு நினைக்கிறதுக்கும்  என்ன சம்பந்தம்? நீ கல்யாணத்தை வெறுக்கிற அளவு…”
அவளது பேச்சை இடையிட்டவன், லூசு.. நான் கல்யாணத்தை ஒன்னும் வெறுக்கலை.. எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்குது.. அவ்ளோ தான்.” என்றான்.
அப்படி, என்ன சார் கண்டிஷன்ஸ்?”
பெருசா ஒன்றுமில்லை.. என்னோட மனைவி அம்மாக்கு சப்போர்ட்டா இருக்கணும்.. முக்கியமா யது குட்டியை நல்லா கவனிச்சுக்கணும்.. அத்வைத் வீட்டில் இல்லாத நேரம், அவ தான் யது குட்டியை பாசமா பார்த்து, அவன் கூட விளையாடி, சாப்பாடு ஊட்டினு..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
நல்ல ஆயாவா இருக்கணும்னு சொல்ற!” என்றாள்.
அவன் அவளை முறைக்க,
சும்மா சொன்னேன்டா.. நீ ரொம்ப பீல்லிங்கா சொல்லிட்டே போனியா.. அதான்..” என்றவள், ஸோ நீ உனக்கு ஒரு மனைவியை தேடலை.. யது குட்டிக்கு அம்மாவை தேடுற” என்றாள்.
ஹ்ம்ம்” என்றவன், அத்வைத் கல்யாணம் செய்ற மாதிரி தெரியலை.. எனக்கும் பொண்ணு செட் ஆகலை.. பேசாம நீயே கல்யாணம் செய்துக்கிறியா?” என்று கேட்டான்.
அவனை கூர்ந்து பார்த்தவள் அவன் கண்ணில் குறும்பு தெரியவும், மென்னகையுடன் ஆள் காட்டி விரலால் மிரட்டியபடி, கல்யாணம் எல்லாம் செய்ய முடியாது.. ஆனா..” என்றவளின் பேச்சு, சந்து” என்று கத்தியபடி ஓடி வந்த யாதவின் வரவினால் நின்றது.
அருகில் இருந்த மரத்தின் பின்னால் இருந்தபடி இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டு இருந்த அத்வைத்தின் முகம், செந்தணலாக மாறி இருந்தது.
அங்கே விழா நடந்த இடத்தில் தனிமையில் அமர்ந்து இருந்த போது, அவனது   முன்னாள் அலுவலக நண்பன் ஒருவன் வந்தான். மனதின் அமைதியை தேடிக் கொண்டிருந்தவன், நண்பனின் வற்புறுத்தலில் முதல் முறையாக மதுவை அருந்தினான். நண்பனின் உதவியுடன் வீடு வந்து சேர்ந்தவன், உள்ளே வருவதாகக் கூறிய நண்பனை தவிர்த்து, தான் மட்டும் உள்ளே வந்தான். போதையில் தட்டுத் தடுமாறி தடம் மாறி தோட்டத்திற்கு வந்தவன், நேராக நிற்க முடியாமல் பிடிமானத்திற்காக மரத்தில் சாய்ந்து நின்றான். அப்பொழுது துருவ் மற்றும் செந்தமிழினி பேசியது அவனது காதில் விழுந்து, அரைகுறையாக மூளையில் ஏறியது.
பழைய விஷயங்களை அலசியதின் பலனாக முதல் மனைவியின் நிராகரிப்பை நினைத்து மனம் வெதும்பி கோபமும் வெறுப்புமாக இருந்தவன், இவர்கள் பேசியதில் துருவ் செந்தமிழினியை தன்னை(அத்வைத்) திருமணம் செய்துக் கொள்ளக் கூறியதாகவும், அவள் மறுத்ததாகவும், யதுவைப் பார்த்துக் கொள்வது ஆயா வேலை என்று மட்டமாகப் பேசியதாகவும் தவறாகப் புரிந்துக் கொண்டான்.
மனதினுள், என்னையும் என் பையனையும் பார்த்தா உங்களுக்கெல்லாம் (மேனகா மற்றும் செந்தமிழினி) எப்படி தெரியுது? என்னைக் கல்யாணம் செய்ய மாட்டியா? அதையும் தான் பார்க்கிறேன்!’ என்று கோபமாகக் கூறியவன், தட்டுத் தடுமாறி தோளில் மாட்டி இருந்த பையில் இருந்து அந்தப் பொருளை எடுத்தான்.
பின் செந்தமிழினியை நோக்கி நடந்தான். அப்பொழுது துருவிற்கு அலுவலகத்தில் இருந்து அழைப்பு வரவும்,
அவன், முக்கியமான கால்.. பேசிட்டு வந்திருறேன்” என்று கூறி வீட்டினுள் சென்றான்.
செந்தமிழினி யாதவுடன் அமர்ந்து ஊஞ்சல் ஆடியபடி பேசிக் கொண்டிருக்க, அத்வைத், தமிழ்” என்று அழைத்தான்.
பின்னால் இருந்து வந்த குரலில் சட்டென்று எழுந்தவள் திரும்பிப் பார்க்க, சற்று தடுமாறியபடி அவள் அருகே வந்தவன், கையிலிருந்த பொன் தாலியை அவள் கழுத்தில் அணிவித்தபடி, அவள் மீதே சாய்ந்தான்.
அத்தான் என்னாச்சு?” என்று பதறியபடி அவனை தாங்கிப் பிடித்தவள், அவனிடம் இருந்து வந்த வாடையில் அதிர்ச்சியும் கோபமுமாக அவனைப் பார்த்தாள்.
பின் சட்டென்று யோசித்தவளாக, யது கண்ணா.. ரூமுக்கு போய் பெட் செட் பண்ணுங்க.. நான் டாடாவை கூட்டிட்டு வரேன்.” என்றாள்.
யாதவ், “டாடா உடம்பு சரி இல்லையா?” என்று கேட்க,
ஆம்’ என்று தலையை ஆட்டியவள் சரிந்த அத்வைத்தை இறுக்கமாகப் பற்றியபடி, தூங்கி எந்தரிச்சா சரி ஆகிடும்.. நீங்க போய் பெட் செட் செய்துட்டு வெயிட் பண்ணுங்க.. நான் டாடாவை கூட்டிட்டு வரேன்.” என்றாள்.
யாதவ் வேகமாக ஓட, அத்வைத்தை ஊஞ்சலில் அமரச் செய்தவள், என்ன அத்தான் இது? எத்தனை நாளா இந்த பழக்கம்? எந்த ஒரு பிரச்சனைக்கும் கவலைக்கும் தீர்வு இது கிடையாது.. யது கண்ணாக்கு ரோல் மாடலா இருக்க வேண்டிய நீங்களே, இப்படி செய்யலாமா?” என்று கோபமாகப் பொரிந்தாள்.
அவனோ, என்னைப் பார்த்தா எப்படி தெரியுது? நான் கேனையன் இல்லை.. ஜடம் இல்லை.. நான் ஆம்பளை..” என்றான் முனங்கலாக.
அத்தான்” என்று அழைத்தபடி அவனது வலது தோளை இடது கையால் பற்றியபடி, வலது கையால் அவனது இடது கன்னதில் தட்டினாள்.
லேசாக நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் கோணலான உதட்டோர மென்னகையுடன், என்னையவா கல்யாணம் செய்ய மாட்டேன்னு சொன்ன!” என்று சற்று இடைவெளி விட,
அவள் மனதினுள், ‘நாம எப்போ இப்படி சொன்னோம்? என்னாச்சு இவருக்கு? இல்லை வேற யாரையும் சொல்றாரா?’ என்று யோசித்தபடி, யாரை சொல்றீங்க அத்தான்? நான் தமிழ்.” என்றாள்.
அவன், தெரியும்.. உன்னை தான் சொல்றேன்.. இனி நான் தான் புருஷன்.. நீ தான் பொண்டாட்டி.. இனி யதுக்கு, நீ தான் ஆயா.” என்றான்.
அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க, அதிர்ச்சியில்  அவளது பிடிமானம் சற்று தளரவும், அவன் ஒரு பக்கமாகச் சரிந்தான். அணிச்சைச் செயலாக சற்று குனிந்து,  அவனை அவள் பற்ற, அவன் அணிவித்த தாலி தொங்கிய விதத்தில், அப்பொழுது தான் அது அவளது கண்ணில் பட்டது.
மின்சாரம் தாக்கிய உணர்வில் கையை எடுத்தபடி அவள் நிமிர்ந்து நிற்க, அவன் ஊஞ்சலில் சரிந்து விழுந்தான்.
அவன் திரும்ப திரும்ப, “நான் ஜடம் இல்லை.. ஆம்பளை.. நீ தான் பொண்டாட்டி.. யது ஆயா” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
அவனது முணுமுணுப்பு எதுவும் அவளது காதில் ஏறவே இல்லை. அதிர்ச்சியில் அவளது மூளை வேலை நிறுத்தம் செய்திருக்க, உறைந்த நிலையில் நின்று கொண்டிருந்தாள்.
அசைவற்று நின்றிருந்தவள், அவளது கைபேசி தொடர்ந்து மூன்று முறை அலறியதில் திடுக்கிட்டு நிகழ் உலகிற்குத் திரும்பினாள். அப்பொழுதும் அதிர்ச்சி முற்றிலுமாக விலகாமல் இயந்திரமாக கைபேசியைப் பார்த்தவளின் மூளை ‘எமறல்டு காலிங்’ என்றதைப் பார்த்ததும் தான், முழு வீச்சுடன் சுய உணர்விற்குத் திரும்பியது.
அந்த நொடியில் வாழ் நாளில் முதல் முறையாக பயம் கொண்டாள். இந்த விஷயம் தெரிந்தால் அன்னை என்ன செய்வாரோ! என்று நினைத்தவள் அந்த நிலையிலும் அத்வைத் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றும் கவலை கொண்டாள்.
தனது விருப்பத்தையோ சம்மதத்தையோ கேட்காமல் தன்னை இப்படி திருமணம் செய்துக் கொண்டதில் அத்வைத் மேல் கடும் கோபம் கொண்டாள் தான். ஆனால், அதே நேரத்தில் அவனை யாரும் தவறாக நினைத்து விடக் கூடாது என்றும் நினைத்தாள். போதை தெளிந்த பின், குற்ற உணர்ச்சி கொண்டு தனக்காக அதிகம் வருந்தப் போவது அவன் தான் என்ற எண்ணமும் அவளுக்கு இருந்தது.
ஏன் இப்படி செய்தார்? தாலி எப்படி? முதல்லேயே பிளான் செய்ய வாய்ப்பு இல்லை.. அப்புறம் எப்படி தாலி? நல்லா தானே இருந்தார்! எதுக்குக் குடித்தார்? குடிக்கிற அளவுக்கு என்ன நடந்தது? என்னை எதுக்கு இப்படி கல்யாணம் செய்தார்? போதை தெளிந்தால் இப்போ நடந்தது அவர் நினைவில் இருக்குமா?’ என்று அத்வைத் பற்றிய விடை அறியா கேள்விகள் ஒரு பக்கம் இருக்க,
இதை இரு வீட்டு பெரியவர்களும் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?’ என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க,
இவற்றை எல்லாம் விட அவளது மனம் பெரிதாகக் கலங்கியது, யது கண்ணா எப்படி எடுத்துக் கொள்வான்?’ என்றதில் தான்.
இவ்வாறு குழம்பித் தவித்தபடி எவ்வளவு நேரம் நின்றாளோ, யாதவ் வீட்டு வாயிலில் நின்று, சந்து” என்று அழைக்கவும்,
சுதாரித்தவளாக, இதோ வரேன் கண்ணா.. நீங்க ரூமில் இருங்க” என்றாள்.
ஓகே” என்று கூறி, குழந்தை அறைக்கு ஓடினான்.

Advertisement