Advertisement

மூன்றாவது முறையாக ‘யாருடா இந்த சந்து?’ என்று அத்வைத் கூறிக் கொண்டான். ஆனால் இந்த முறை ஆச்சரியத்துடன். யாரும் சட்டென்று நெருங்கிவிட முடியாத தனது மகனின் மனதை முதல் சந்திப்பிலேயே கவர்ந்த அந்தப் பெண் யார் என்று ஆச்சரியத்துடன் நினைத்தான்.
இருந்தாலும் அதை மகனிடம் காட்டிக் கொள்ளாமல், பேட் பீப்பிள் தான் இப்படி செய்வாங்க” என்றான் கறார் குரலில்.
சிறிது யோசித்த யாதவ், சந்து பண்ணது தப்பா சேட்டையா?” என்று கேட்டான்.
அது.. சேட்டை ஆனா தப்பு தான்.”
சேட்டைனா, சந்து பேட் கேர்ள் இல்லை.. நாட்டி கேர்ள்.” என்று தந்தைக்கு பாடம் எடுத்தான்.
அத்வைத் அமைதியாக இருக்க, யாதவ் சற்று அழுத்தமான குரலில், சரியா?” என்று கேட்டான்.
சரி”
இனி சந்து பேட் கேர்ள் சொல்லாத”
ஹ்ம்ம்”
நான் எவ்ளோ தடவ உன்னக் கூப்பிட்டேன்! நீ டூ மினிட்ஸ், டூ மினிட்ஸ் சொல்லிட்டு பார்க்கவே இல்லை.. அதான் அப்படி பண்ணேன்.. லேப்டாப் தெரியாம பட்டுச்சு.. சாரி..” என்று குழந்தை தனது செயலுக்கு விளக்கம் கொடுத்தான்.
மகனை அணைத்துக் கொண்ட அத்வைத், நானும் சாரி கண்ணா.. வேலை பிஸில டாடா உன்னை பார்க்கலை”
இட்ஸ் ஓகே டாடா”
சமத்து கண்ணா” என்றபடி மகனின் கன்னத்தில் முத்தமிட்டவன், எதுக்கு கூப்பிட்டீங்க?” என்று கேட்டான்.
சந்து..” என்று குழந்தை ஆரம்பிக்க, அத்வைத் மனதினுள் ‘இன்னும் முடியலையா! இந்த சந்து புராணம் சிந்துபாத் கதை மாதிரி நீண்டுட்டே போகுதே!’ என்று அலுத்துக் கொண்டான்.
யாதவ், சந்து இங்கிலீஷ் சொல்லி தந்தா” என்றான்.
அப்படியா! என்ன கத்துக்கிட்டீங்க?”
குழந்தை உற்சாகத்துடன், மை நேம் இஸ் யாதவ்.. ஐ லவ் மை டாடா” என்றான்.
வாவ்.. சூப்பர்  கண்ணா” என்ற படி, ஆனந்தத்துடன் மகனின் கன்னங்களில் முத்தம் இட்டவன், நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?” என்று கேட்டான்.
தெரியும்  என்பது போல் தலையை ஆட்டிய   யாதவ், என்னோட நேம் யாதவ்.. எனக்கு டாடாவை ரொம்பப் பிடிக்கும்” என்றபடி புன்னகையுடன் அத்வைதத்தின் கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டான்.
சில ஆண்டுகள் கழித்து முதல் முறையாக மனதில் இருந்து சிரித்த அத்வைத் மகனை அணைத்தபடி, மீ டூ லவ் யூ கண்ணா” என்றான்.
யாதவ் சிரிப்புடன் உற்சாகக் குரலில், டாடா, ஐ லவ் சந்து” என்று கூற, சட்டென்று மகனின் மனம் செல்லும் பாதையை அத்வைத் புரிந்துக் கொண்டான். புரிந்து கொண்டதோடு இனி அதை வளர விடாது முளையிலேயே கிள்ளிவிடும் முடிவிற்கு வந்தான்.
அத்வைத், சந்துவை உங்களுக்கு ரொம்ப பிடிச்சு இருக்குதா?” என்று கேட்டான்.
ஹ்ம்ம்” என்று வேகமாக தலையை ஆட்டிய யாதவ், இரு கரங்களையும் விரித்து, ரொம்ப” என்றான்.
ஆனா சந்து ரொம்ப நாட்டி கேர்ள் போல.. டாடாக்கு நாட்டி பீப்பிள் பிடிக்காதே!” என்றான்.
யது மாதிரி சந்து சொன்னா கேட்டுக்குவா.. டாடாக்கு சந்து பிடிக்கும்.” என்றான்.
மகனிடம் சொல்வதை விட இனி மகன் அந்த சந்துவை சந்திக்காமல் இருப்பதற்கான வேலையைத் தான் செய்ய வேண்டும் என்று நினைத்த அத்வைத், ஓகே.. இப்போ டின்னர் சாப்பிட போகலாமா?” என்று பேச்சை மாற்றி மகனை அழைத்துச் சென்றான்.
அதன் பிறகு,  இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்கு வந்தனர்.
அது வரை துருவ் வீடு திரும்பி இருக்கவில்லை. அவன் விவரமாக அன்னையை கைபேசியில் அழைத்து, தமையன் உண்டு முடித்து படுக்கச் சென்று விட்டானா என்று கேட்ட பிறகே வீடு திரும்பினான். என்ன செய்து, என்ன பலன்?  காலையில் எழும் முன்பே அத்வைத்தின் விசாரணையில் மாட்டிக் கொண்டான்.
இரவு உணவை முடித்து அறைக்குச் சென்றதும் யாதவ் தான் புதிதாக கற்றதை மீண்டும் ஒருமுறை தந்தையிடம் கூறிய பிறகே படுத்தான்.
அதுவும் பாண்டா பொம்மையை கட்டிக் கொண்டு படுத்தவன், நாளைக்கு பாண்டா வாங்கித் தரணும்.” என்று தந்தையிடம் கேட்டு உறுதி செய்துக் கொண்ட பிறகே கண்களை மூடினான்.
மகன் உறங்கிய பிறகு அலுவலக வேலையை முடிப்பதற்காக மடிக்கணினியை எடுத்த அத்வைத், கோபத்துடன்,  துருவை மனதினுள் திட்ட ஆரம்பித்தான். ஏனெனில் அவனது மடிக்கணினி வேலை நிறுத்தம் செய்திருந்தது.
காலையில் எழுந்ததும் தன்னை சுத்தம் செய்துக் கொண்ட பிறகு, அத்வைத் செய்த முதல் காரியம் தம்பியின் அறைக் கதவை தட்டியது தான்.
தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்து கதவை திறந்த துருவ், எதுக்குமா இவ்ளோ காலையில் எழுப்புற?” என்று கேட்டான்.
அன்னையிடம் இருந்து பதில் வரவில்லையே என்று நிமிர்ந்து பார்த்தவன், தீயாக முறைத்துக் கொண்டு நின்ற அத்வைத்தை பார்த்து,
ஆத்தாடி ஆம்பள சந்திரமுகி டோய்!’ என்று மனதினுள் அலறியபடி தூக்கத்தில் இருந்து வெளி வந்தான்.
துருவ் ஒன்றும் அறியாதவன் போல் இயல்பான குரலில், என்னடா?” என்று கேட்டான்.
யாரு அது சந்து?”
என்னோட ஃப்ரெண்ட்”
புது ஃப்ரெண்ட்டா?”
இப்போ எதுக்கு இந்த விசாரணை?”
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா”
துருவ் முறைப்புடன், அதெல்லாம் பழைய ஃப்ரெண்ட் தான்” என்றான்.
நீ வீட்டில் இந்தப் பெயரைச் சொல்லி நான் கேட்டதே இல்லையே!”
ஓ! நான் பேசுறதை எல்லாம் நீ கவனிக்கிறியா! இது எனக்கு தெரியாதே!” என்று வருத்தம் கலந்த சிறு நக்கலுடன் கூறினான்.
அதைப் புரிந்து கொண்ட அத்வைத் அமைதியான திடமான குரலில் பதில் கூறினான்.
வீட்டில் நான் கொஞ்சம் ஒதுங்கி இருக்கலாம்..” என்றவனின் பேச்சை இடையிட்ட துருவ்,
கொஞ்சம் இல்லை, ரொம்ப” என்றான்.
துருவ் நடுவில் பேசாதது போல் பாவித்து அத்வைத், ஆனா, என்ன நடக்குதுனு நான் கவனிக்காம இல்லை.” என்று தொடர்ந்து பேசி முடித்தான்.
வீட்டில் மட்டும் தான் ஒதுங்கி இருக்கிறியா? எதுக்கு இப்படி? தகுதி இல்லாதவளை நினைத்து..” என்றவனின் பேச்சை இப்பொழுது இடையிட்ட அத்வைத் சற்று குரலை உயர்த்தி, துருவ்” என்று அழைத்தான்.
துருவ் சற்று கடுப்புடன், என்ன?” என்றான்.
தேவை இல்லாததை பற்றிப் பேசாதே”
நீயே தேவை இல்லாததுனு சொல்ற.. அப்புறம் எதுக்கு இந்த தவக் கோலம்?”
ப்ச்.. பேச்சை மாத்தாத.. யாரு அந்த சந்து?”
நான் பேச்சை மாத்துறேனா?”
ஆமா”
துருவ் அத்வைத்தை முறைக்க, அவனோ அழுத்தமான பார்வையுடன் நின்றுக் கொண்டு இருந்தான்.
பின் துருவ் முறைப்புடனே, அதான் சொன்னேனே என்னோட ஃப்ரெண்ட்” என்றான் சற்று எரிச்சலான குரலில்.
அது தெரியுது.. வீட்டுக்குக் கூட்டிட்டு வர அளவுக்கு நெருக்கமா?”
துருவ் புருவ முடிச்சுடன், இப்போஉனக்கு என்ன தெரியனும்? நேரிடையாக் கேளு” என்றான்.
கேட்கவா வேண்டாமா!’ என்று ஒரு நொடி யோசித்த அத்வைத், அந்தப் பொண்ணை நீ லவ் பண்றியா?” என்று கேட்டான்.
மகனை நினைத்து தான் இந்தக் கேள்வியை கேட்டான். ஒருவேளை அந்தப் பெண்ணை துருவ் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறான் என்றால் மகன் அந்தப் பெண்ணுடன் பழகுவதை முற்றிலுமாக தவிர்க்காமல் குறைத்துக் கொண்டால் மட்டும் போதுமே என்ற எண்ணம் அவனுக்கு.
முறைப்புடன், ஃப்ரெண்ட்னு தானே சொன்னேன்! லவ்வர்னா லவ்வர்னே சொல்லுவேன்..” என்ற துருவ், “இதை மட்டும் அவ கேட்டு இருந்தா, உன்னை ஒருவழி செய்து இருப்பா” என்றான்.
ஓ’ என்று மனதினுள் சொல்லிக் கொண்ட அத்வைத், எதுக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்த?” என்று கேட்டான்.
அவ ஜாலி டைப்.. எப்போதுமே அவ இருக்கும் இடம் சந்தோஷமா உயிர்ப்புடன் இருக்கும்.. அதான் யதுக்காக கூட்டிட்டு வந்தேன்.”
அதைக் கேட்டதும் அத்வைத் மனதினுள் ‘அவளும் அப்படி தானே!’ என்ற நினைப்புடன் சிறுவயது செந்தமிழினியின் முகம் தோன்றியது. சட்டென்று ‘இப்போ எதுக்கு தமிழ் ஞாபகம் வருது!’ என்று மனதினுள் கூறிக் கொண்டு தலையை உலுக்கிக் கொண்டான்.
சற்று ஆழமாகச் சிந்தித்து இருந்தால் அலுவலகத்தில் நினைவுகளை தூசி தட்டச் சொன்ன பெண் செந்தமிழினி என்று கண்டு பிடித்திருப்பான். ஆனால் தற்போது அவனது சிந்தனை மகனை சுற்றியே இருப்பதால், தவற விட்டுவிட்டான்.
செந்தமிழினியின் நினைவுகளை விரட்டிய அத்வைத், இனி கூட்டிட்டு வராத.” என்றான் கறார் குரலில்.
என் ஃப்ரெண்டை நான் வீட்டுக்கு கூட்டிட்டு வரதில், உனக்கு என்ன பிரச்சனை?”
உன்னோட ஃப்ரெண்ட்டால என்னோட பையன் கெட்டுப் போறானே! அதான் பிரச்சனை.”
என்ன!”
என்ன என்ன?” என்று கேட்ட அத்வைத் முன்தினம் நடந்தவற்றைக் கூறி ‘இப்போ சொல்லு’ என்பது போல் கைகளை கட்டிக் கொண்டு முறைத்துக் கொண்டு நின்றான்.
மனதினுள் செந்தமிழினியை பாசமாகத் திட்டிய துருவ் தமையனை பார்த்து நிதானமான குரலில், என்னோட ஃப்ரெண்ட் சேட்டையை மட்டும் தான் கத்துக் கொடுத்தாளா?” என்று கேட்டான்.
இப்பொழுது அத்வைத் அறியாதவன் போல், என்ன?” என்றான்.
துருவ், உனக்கே தெரியும்.. இருந்தாலும் சொல்றேன்.. என்னோட ஃப்ரெண்ட், நம்ம யது குட்டிக்கு குழந்தைக்கே உரியதான துருதுருப்புடன் இருக்க கத்துக் கொடுத்து இருக்கா.. விளையாட்டுடன் படிக்க கத்துக் கொடுத்து இருக்கா.. இதை விட, கிட்ட திட்ட இந்த மூனு வருஷமா நம்ம எல்லோராலையும் செய்ய முடியாததை, ஒரே நாளில் ஒரு மணி நேரத்தில் செய்து இருக்கா.. என்ன பார்க்கிற! எதை நீ கெடுக்கிறானு வந்து சொல்றியோ! அதை அவ செஞ்சப்ப நம்ம யது குட்டியை நீ பார்த்து இருக்கணும்! யது குட்டி முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.. முதல் முறையா அப்படி ஒரு சிரிப்பைப் பார்த்தேன்.. யது குட்டிக்கு மனதார சிரிக்க கத்து கொடுத்திருக்கா என்னோட ஃப்ரெண்ட்..” என்று மூச்சு விடாமல் பேசினான்.
கூடவே தாய் பாசத்தையும் கத்து கொடுத்து இருக்கிறாளே!’ என்று மனதினுள் நினைத்த அத்வைத், உணர்ச்சிகளை துடைத்த முகத்துடன் அமைதியான குரலில், ஆனா உன் ஃப்ரெண்டோட சகவாசம் என்னோட மகனுக்கு வேண்டாம்” என்றான்.
அவனை முறைத்த துருவ், யது உன்னோட மகன் மட்டும் தானா? அவனிடம் எனக்கு உரிமை இல்லையா?” என்றான்.
இந்த உரிமை எல்லாம் உனக்குக் கல்யாணம் ஆகிற வரை தான்.. அதனால் எப்போதுமே அவனுக்கு இந்த அப்பா மட்டும் போதும்.”
நான் மாற மாட்டேன்டா”
உன்னை நான் தப்பு சொல்லவே இல்லை.. உனக்கு வரவ அப்படி இருக்க மாட்டா.. உன் வாழ்க்கையை பார்க்க நீ மாறித் தான் ஆகணும்..”
ஏன்டா இப்படி இருக்கிற?” என்று கோபமும் எரிச்சலும் கடுப்புமாக துருவ் கேட்டான்.
நான் சொல்றது உன்னை காயப்படுத்தலாம்.. ஆனா இது தான் நிதர்சனம்.. அதுக்கு இப்பவே யது பழகிக்கிறது தான் நல்லது.. அப்போ தான் தேவை இல்லாம அந்த பிஞ்சு மனசு ஏமாறாது, காயப்படாது.. அதான் சொல்றேன்.. உன்னோட ஃப்ரெண்டை தள்ளியே இருக்கச் சொல்லு”
நீ யது குட்டிக்கு எல்லாமுமா தான் இருக்க.. ஆனா நிச்சயம் அவனுக்கு அம்மா தேவை.. புரிஞ்..” என்றவனின் பேச்சை இடையிட்ட அத்வைத் விரக்தி கலந்த கோபத்துடன்,
யதுக்கு அம்மா தேவை இல்லைனுநான் முடிவு செய்து ரொம்ப நாள் ஆச்சு” என்றான்.
நீ எதை மனதில் வைத்து இப்படி சொல்றனு எனக்குத் தெரியும்.. அவ தாயே இல்லை.. பேய்.. பேய் கூட இல்லை.. அதை விடக் கேவலமானவள்..” என்று பேசிக் கொண்டிருந்தவனின் பேச்சை மீண்டும் இடையிட்ட அத்வைத் எரிச்சல் கலந்த கோபத்துடன்,
போனவளைப் பற்றிப் பேசாத” என்றான்.
துருவும் எரிச்சலுடன், ஒருத்தி தப்பானவளா இருந்தா, எல்லோரும் அப்படியே இருக்க மாட்டாங்க.. நான் யதுக்காக மட்டும் பேசலை.. உனக்காகவும் தான்..”
இந்தப் பேச்சுக்கே இடமில்லை.. இனி உன்னோட ஃப்ரெண்டை வீட்டுக்கு கூட்டிட்டு வராத.. அதைச் சொல்லத் தான் வந்தேன்.” என்று சற்று குரலுயர்த்திப் பேசியவன், துருவின் பதிலை எதிர்பார்க்காமல் தனது அறைக்குச் சென்றுவிட்டான்.

Advertisement