Sunday, July 19, 2026

    கொஞ்சும் காதல் சாரல்

    கொஞ்சும் காதல் சாரல் -36(final) அத்தியாயம் -36 தன் சின்ன மகளின் திருமணத்திற்காக எளிமையாக என்றாலும் நிறைவான வகையில் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார் பசுபதி. சந்நிதியில் வைத்து மிதுன்யாவுக்கு திருமாங்கல்யம்  அணிவித்து விட்டான் ஜீவா.  மற்ற சடங்குகள் எல்லாம் கோயிலுக்கு வெளியில் சின்னதாக இருந்த மண்டபத்தில்தான்  நடைபெற்றன. மாசிலாமணி மற்றும் மிதுவின் தோழிகளை அழைத்துக் கொண்டு தன் மனைவியோடு காரில்...
    அந்தப் பையன் சிரித்து விட, வேறொரு நிர்வாகியும், “சரியா சொன்னப்பா சரியா சொன்னப்பா” என இரண்டு முறை அழுத்தி வேடிக்கையாக சொல்ல, அந்த பையன் இன்னும் வாய் விட்டு சிரித்தான். ஜீவாவை முறைத்த அன்பு “ஓவரா போறடா நீ” என்றான். “அவர்கிட்ட சரின்னு சொல்லுங்க, காதல் பட்ட நெஞ்சத்தை கலங்க விட்டா காதலுக்கு மரியாதையே இல்லைல? லவ்வர்...
    ஜீவாவை கட்டியணைத்த ஒருவன், “தேங்க்ஸ் ப்ரோ, மறக்க முடியாத மொமெண்ட், ஒன்ஸ் அகெயின்  தேங்க்ஸ்!” என்றான். பின் சலனமில்லாமல் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டனர். அன்புவிடம் அடி வாங்கியவன் அவனை பார்த்து விட்டு பயம் கொள்ள, எதுவும் திட்டாமல் “போ போ…” என சொல்லி அனுப்பி வைத்தான் அன்பு. இப்போது உள்ளூர் இளைஞர்கள் அன்புவை சூழ்ந்து கொண்டனர். “அசலூர் காரனெல்லாம்...
    கொஞ்சும் காதல் சாரல் -35 அத்தியாயம் -35 நிகழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்த ஆடவன் திடீரென கால் தடுக்கி விழுந்து விட்டான். அவனால் மேற்கொண்டு ஆட முடியவில்லை. எங்கே ஆடா விட்டால் மிச்ச பணம் கிடைக்காதோ என பயந்து வலியை பொறுத்துக் கொண்டு ஆடினான். பார்த்த ஜீவாவுக்கு பொறுக்க முடியவில்லை. பாடலை பாதியில் நிறுத்த சொன்னவன் அவனை ஓய்வெடுக்க சொன்னான். “ரெண்டு...
    “அப்படியா? போட் அனுப்புறேன், என்கிட்டயே வர்றியா?” “வந்தா என்ன தருவீங்களாம்?” “என்ன தரலாம்? ஹ்ம்ம்…” என யோசனை செய்தான். “வானத்துல நிலாவும் நட்சத்திரமும் இருக்கு, அதையெல்லாம் என்னால தர முடியாது. இரத்தமும் சதையுமா இங்க ஒருத்தன் உன் மேல பித்து பிடிச்சு பினாத்திக்கிட்டு இருக்கான்” என்றவன் ரகசிய குரலில்,  “அவனை அப்படியே எடுத்துக்க மிது, என்ன வேணா...
    அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு, “எஸ், நானும் அப்படித்தான் ஃபீல் பண்றேன். பொழச்சு போ, ஸ்ட்ராங்காவே இரு” என கண்கள் சிமிட்டி சொல்லி விட்டு கிளம்பினான். ஹாலில் பாட்டிக்கு பதில் லாவண்யாதான் இருந்தாள். உறக்கத்தில் விழித்துக் கொண்டவள் ஹால் வரவும் ஜீவாவின் வரவை சொல்லியிருக்கிறார் பாட்டி.  கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த பாட்டியிடம், ஜீவா கிளம்பியதும் கதவெல்லாம் நான் ...
    கொஞ்சும் காதல் சாரல் -34 அத்தியாயம் -34 திருமணத்துக்கு வேண்டியதை எல்லாம் வாங்கி விட்டு ஊருக்கு வந்த ஜீவா, பெரியப்பாவின் டி வி எஸ் எடுத்துக் கொண்டு  மிதுவை பார்க்க கிளம்பினான். தான் போவதை  பெரியம்மாவிடம் மட்டும் கூறி பெரியப்பாவுக்கு தெரியாமல் சமாளித்துக் கொள்ள சொல்லியிருந்தான். மதியத்திற்கு மேலே ஆலைக்கு சென்ற பசுபதி இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை. மில்லில்...
    “எங்கப்பாக்கு சொன்னதுதான் அத்தான், சில முடிவுகள் நம்ம எடுக்க முடியாது, அதை விட்ருவோமே. உங்க பேத்தி காது குத்து எந்த கோயில்ல நடக்க போகுது?” என பேச்சை மாற்றி விட்டார் பசுபதி. இப்படியாக பசுபதி நன்றாகவே சமாளித்தார். திருமணத்தன்று குடும்பத்துடன் வந்து விடுகிறேன் என சொல்லி இளங்கோ புறப்பட்டார். ஜீவாவை தன்னுடன் வரும் படி அழைத்தார் சங்கரன். “நீங்க...
    கொஞ்சும் காதல் சாரல் -33 அத்தியாயம் -33 தன்னிடம் சிறு குழந்தையாக அழும் மகளை கண்டு முதலில் பதறித்தான் விட்டார் பசுபதி. பின் அவள் காரணம் சொல்லவும்தான், “அட போம்மா, என்னவோன்னு நினைச்சு பயந்தில்ல போயிட்டேன். சாயந்தரம் போன் பண்ண சொன்னானா? பண்ணாத, அவன் கூப்பிட்டாலும் பேசாத, என்ன தைரியம் அவனுக்கு, என் பொண்ண நல்லா வச்சுப்பேன்னு கதை...
    நெற்றியை தடவிக் கொண்டே ஜீவா நிற்க, அவனை முறைத்த அன்பு, “மிதுவோட வாழத்தான் ஓகே சொன்னேன், மத்தபடி என்கிட்ட ஒட்டணும்னு எப்பவும் நினைக்காத” என கறாராக சொல்லி விட்டே ஆடையை கொடுத்தான். “நான் எது பண்ணினாலும் உங்களை இன்சல்ட் செய்யத்தான்னு நீங்களும் நினைக்காதீங்க” என ஜீவா சொல்ல, அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு...
     “பேசி சுளுக்கு வந்திடுச்சா எனக்கு? நீங்க எம்மேல உருண்டதாலதான் ஜீவா…  உங்க வெயிட் தாங்கித்தான் சுளுக்கு வந்திடுச்சு, என்னை குறை சொல்ல வேணாம்!” என கணவனிடம் கோவப்பட்டாள் மிது. “அநியாயமா பேசுற நீ, அப்படி பார்த்தா நைட்டே  உனக்கு சுளுக்கு பிடிச்சிருக்கணும்” என வேகத்தில் சொல்லி விட்டவன் பின்னால் திரும்பி பார்க்க முடியாமல் மிதுவை பாவமாக...
    “எதுக்கு இப்போ ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற மிது?” என ஜீவா கேட்டதை பொருள் செய்யாமல், “நாம கிளம்பலாம் ஜீவா, எனக்கு இங்க இருக்க வேணாம். அழைச்சிட்டு போங்க என்னை” என சொல்லி அழுதாள். “சும்மா இரேன் டி!” என அதட்டினார் மங்கம்மா. “கடைசில என்னை வில்லியாக்க பார்க்கிறியா நீ!” என தங்கையிடம் சீறிய லாவண்யா, அறையின் வாயிலுக்கருகில் நின்றிருந்த...
    கொஞ்சும் காதல் சாரல் -32 அத்தியாயம் -32 தாத்தாவை கண்டு விட்டு ஜீவாவிடமிருந்து விலகி எழப் போனாள் மிது. முதுகில் விண் என்ற வலியை உணர்ந்தவள் துடித்துப் போனாள். மீண்டும் அவன் மீதே படுத்தாள். வீட்டுக்குள் நுழைந்த அன்பும் லாவண்யாவும் இந்தக் காட்சியை கண்டு விட்டு ஒருவர் முகத்தை ஒருவர் திகைப்பாக பார்த்துக் கொண்டனர். தாத்தா தன் மனைவியை பார்த்து...
    “ஹேய் மேக்ஸிமம் என்ன ஆகிட போகுது, தாத்தா திட்டுவார், அவ்ளோதானே?  இதுக்கு மேலயும் கல்யாணம் பண்ணி வைக்காம இருக்க கூடாதுன்னு ஓகே சொன்னாலும் சொல்லிடுவார், கூல் மிது. காலைல இன்னும் நீ மருந்து போட்டுக்கலதானே?” எனக் கேட்டுக் கொண்டே களிம்பை கையில் எடுத்தான்.  “டென்ஷனா இருக்கேன் ஜீவா, அதெல்லாம் நானே பார்த்துகிறேன், நீங்க அமைதியா இருங்க”...
    கொஞ்சும் காதல் சாரல் -31 அத்தியாயம் -31 சீக்கிரமாகவே எழுந்து கொள்ள வேண்டும் என நினைத்துக்கொண்டே உறங்கியதால் தாமதமாக உறங்கியிருந்தாலும் சரியாக நான்கே முக்காலுக்கெல்லாம் எழுந்து விட்டாள் மிது.  ஆழ்ந்து உறங்கும் ஜீவாவை ரசித்துப் பார்த்தவள் அவனது கன்னத்தில் முத்தமிட்டு விட்டே குளிக்க சென்றாள். அவனை தொந்தரவு செய்யாமல் தயாராகி கீழே வந்தாள்.  வழக்கமாகவே பெரியவர்கள் அந்த வீட்டில் விடியலுக்கு...
    “வேணும்னா அழுதேன், தானா வருது” “ஆமாம், என்னை தனியா விட்டு  பிரிஞ்சு வந்து என்னை அழ வைக்கிற உரிமைலாம் உனக்கு மட்டும்தான் இருக்கு. வேற யாரும் ஏதும் என்னை பண்ணக்கூடாது, சொல்லக்கூடாது” “ஆமாம் அப்படித்தான்!” “ஹ்ம்ம்… அப்படித்தான் அப்படித்தான், முதல்ல அலர்ஜி ஆன இடத்துல ஆயிண்ட்மெண்ட் போட்டுக்க” என்றான். அவனுக்கு முதுகு கான்பித்துக் கொண்டு அமர்ந்தவள் களிம்பு போட ஆரம்பித்தாள். ...
    அவன் விடை பெற்றுக் கொண்டு மழை கோட்டை அணிய ஆரம்பித்தான்.  அவன் உடம்புக்கு சிறியதாக இருந்த அது டர்ரென கிழியவும், “ஸாரி கிழிஞ்சு போச்சு!” என சொல்லி விழித்தான். பசுபதி மனைவியை முறைக்க, “நான் என்னங்க பண்றது, வேற எடுத்திட்டு வர்றேன்” என சொல்லி உள்ளே ஓடினார். கிழிந்த கோட்டை மிதுவிடம் கொடுத்தவன், “நீ ட்ரெஸ் மாத்திட்டு...
    கொஞ்சும் காதல் சாரல் -30 அத்தியாயம் -30 யாரும் மோட்டார் அறைக்கு வருவதற்குள் மயக்கம் தெளிந்து கண் விழித்துக் கொண்டான் ஜீவா. மிது தேம்பிக் கொண்டிருக்க தனக்கு ஒன்றுமில்லை நன்றாக இருக்கிறேன் என சொல்லி அவளை ஆறுதல் படுத்தினான். வந்து கொண்டிருந்த கூட்டத்தை பாதி வழியிலேயே எதிர் கொண்ட அன்பு, மிது பத்திரமாக இருப்பதாகவும் அவளுக்கு உடம்பு முடியாததால்...
    சுற்றிலும் உள்ள எல்லா கிராமங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள். வேறு ஊரை சேர்ந்த ஒருவன் வெளியூர் நண்பர்களோடு வந்திருந்தான். மது போதையில் வேறு இருந்தனர். அவர்களின் சலம்பல் அதிகமாக இருக்கவே முதலில் வெறும் எச்சரிக்கையோடு விட்டான் அன்பு. ஆனால் அவர்கள் அடங்குவதாக இல்லை. ஒரு கட்டத்தில் மேடையில் ஆடியவர்களோடு சேர்ந்து ஆடினார்கள், பின் மேடையை விட்டு...
    மனைவியின் கூற்றில் நெற்றி சுருக்கி யோசித்தானே தவிர வேறு பெரிதாக வினையாற்றவில்லை அன்பு. தன் கணவனுக்கு பிடிக்காத சங்கரன் வீட்டு விருந்தினன் ஜீவாதான் என்பதை கணித்து விட்ட லாவண்யாவுக்கு நடப்பதெல்லாம் விந்தையாக தெரிந்தது. மிது ஏதோ சொல்லவும்தான் இவர்கள் பக்கம் பார்த்தான் ஜீவா. பின் அவள் கொடுத்த பணத்தை மறுக்காமல் வாங்கிக் கொண்டான். மிது இவர்களிடம் வரவும் விஜயா...
    error: Content is protected !!