“ஆமாம், என்னை தனியா விட்டு பிரிஞ்சு வந்து என்னை அழ வைக்கிற உரிமைலாம் உனக்கு மட்டும்தான் இருக்கு. வேற யாரும் ஏதும் என்னை பண்ணக்கூடாது, சொல்லக்கூடாது”
“ஆமாம் அப்படித்தான்!”
“ஹ்ம்ம்… அப்படித்தான் அப்படித்தான், முதல்ல அலர்ஜி ஆன இடத்துல ஆயிண்ட்மெண்ட் போட்டுக்க” என்றான்.
அவனுக்கு முதுகு கான்பித்துக் கொண்டு அமர்ந்தவள் களிம்பு போட ஆரம்பித்தாள். அதிக எரிச்சலை உணர்ந்தவள் தாள முடியாமல் அழுதாள்.
“குழந்தை மாதிரி எல்லாத்துக்கும் அழற நீ, இன்னிக்கு ஓவரா போயிடுச்சு அழுகை. வெளில பெய்யுற மழையோட எல்லாம் போட்டி போட்டு ஜெயிக்க முடியாது, உன் தோல்வியை அக்செப்ட் பண்ணிட்டு அழுகையை ஸ்டாப் பண்ணுவியாம்” என பேசிக் கொண்டே அவளுக்கு முன் வந்து நின்றான்.
“எரிச்சல் எனக்குதானே, அப்ப எனக்கு அழுகை வரும்தான், புரியாம பேசக்கூடாது!” என அழுது கொண்டே சொன்னாள்.
அவனே அவளுக்கு களிம்பு பூசி விடப் போனான்.
அவள் அவனை தடுக்க, “வாட்?” எனக் கேட்டான்.
“நானே போட்டுக்குவேன்” சின்ன குரலில் சொன்னாள்.
“நீ போட்டாதான் எரியுதுங்கிறியே?”
“நீங்க போட்டா மட்டும் குளு குளுன்னு இருக்குமா?”
“ட்ரஸ்ட் மீ, வலி தெரியாம போட்டு விடுறேன்” என்றவன் அவளருகில் அமர்ந்து ஆறுதலாக அவளை தன் தோளோடு அணைத்து பின் விட்டான்.
அவனது கண்களையே பார்த்திருந்தவளின் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டவன், “கண்ண மூடி ஒரு கையால என் கையை இறுக்கமா பிடிச்சுக்கோ” என்றான்.
அவளும் அவ்வாறே செய்து அவனது தோள் வளைவில் முகம் புதைத்துக் கொண்டாள்.
“நாம ஃபர்ஸ்ட் மீட் பண்ணினது நினைவிருக்கா மிது?” எனக் கேட்டான்.
அவள் ம் என்க, “நான் உன்னை எதேச்சையாலாம் பார்க்கல. நல்லா என்ஜாய் பண்ணி ஆடிட்டு இருந்தேன், ஏதோ என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தது, என்னை யாரோ பார்க்கிறத என்னால ஃபீல் பண்ண முடிஞ்சது. யார்டா அதுன்னு தேடினப்போதான் நீ என் கண்ல பட்ட, அவ்ளோ கூட்டத்துல உன் கண்ணும் நீயும் தனியா தெரிஞ்சீங்க” என்றான்.
சில வருடங்களுக்கு முன் நடந்தவற்றை ஆழ்ந்து அனுபவித்து அவன் சொல்ல சொல்ல, இப்போதுதான் நடப்பது போல கற்பனையில் கண்டாள் மிது.
“பிளாக் ஸ்கர்ட், வைட் டாப்னு ட்ரெஸ், காத்துக்கு அடங்காத ஹேர், ஒரே பார்வைல பளிச்னு பதியுற முகம்னு என்னையும் உன்னை பார்க்க வச்ச. என்னை பார்க்க கூடாதுன்னு உன்னை கண்ட்ரோல்ல வச்சுக்க ரொம்ப ட்ரை பண்ணிட்டு இருந்த, ஆனா உன்னால முடியல, என்னைத்தான் பார்த்திட்டே இருந்த” என கிண்டலும் பெருமையுமாக சொன்னான்.
கண்களை திறந்தவள், “படவா என்னை தப்பா பார்த்தியா அப்போ?” எனக் கேட்டாள்.
“உன்னை எப்படி வேணா பார்க்கிற உரிமை உள்ள ஒரே ஆள் நான்தான்னு அப்போ எனக்கு தெரியாது, ஸோ…” என்றவன் உதடுகளை பிதுக்கினான்.
“பொய், மோசம் நீங்க, உண்மைய சொல்லுங்க” என்றாள்.
“நிஜமாடி மிதுக் குட்டி, அரை செகண்ட் கூட இருக்காது, என்னாச்சு இந்த பொண்ணுக்குன்னு வெறும் டென்ஷன் மட்டும்தான். உடனே என் ஷர்ட்டை உனக்கு தாரை வார்த்திட்டேன். அப்பவும் இன்னிக்கு மாதிரிதான் உன்கிட்ட நான் தப்பா நடந்துகிட்டேன்னு சொன்னாங்க”
“ஆமாம், என்கிட்ட எப்படியும் நடக்கிறதுக்காகவே பொறந்தவர்னு அப்போ யாருக்கும் தெரியாதே” என்றவளின் முகத்தை முகத்தால் உரசியவன், “ம்ம்ம்… எனக்கு கூட அவ சரியான சண்டைக்காரி, கோபக்காரின்னு தெரியாது. ஆனா எனக்கொன்னுன்னா பச்ச புள்ள மாதிரி அழுவா. பாசக்காரி!” என்றான்.
அவள் அவனை ஆசையாக பார்க்க, “மருந்து எப்பவோ போட்டு விட்டுட்டேன், வலிச்சுதா?” எனக் கேட்டான்.
தன்னை குனிந்து பார்த்துக் கொண்டவள் களிம்பு பூசப் பட்டிருப்பதை பார்த்து விட்டு, வலிக்கவில்லை என தலையாட்டினாள்.
“மார்னிங் கூட நானே போட்டு விடுறேன்” என்றான்.
“ஹ்ம்ம்… அப்போ நாளைக்கு நைட்?” என அவள் கேட்க அவளது கன்னத்தை வருடியவன், “எல்லா நைட்டும் நான் வரவா?” எனக் கேட்டான்.
அவனது கையை தட்டி விட்டு செல்லமாக முறைத்தாள். பின் “நாம ஹஸ்பண்ட் அண்ட் வைஃப், ஒன்னா சேர்ந்து இருக்க முடியலை, உங்க வேலையெல்லாம் விட்டுட்டு இங்க இருக்க வேண்டியதா போச்சு. ரொம்ப கஷ்டமா இருக்கா?” என கலங்கிய குரலில் கேட்டாள்.
“இப்ப ரெண்டு பேரும் சேர்ந்துதான் இருக்கோம், அழுது ஸ்பாயில் பண்ணக்கூடாது” என கண்டிப்போடு சொன்னவன் கைகள் கழுவி வந்தான்.
“பசிக்குதா பால் எடுத்திட்டு வரவா?” எனக் கேட்டாள். அவன் மறுப்பாக தலையாட்டினான்.
“வேற என்ன வேணும்?” என அவள் கேட்க, “கூட நீ இருக்கியே இது போதும்” என சொல்லி படுக்கையில் நேராக படுத்துக் கொண்டான்.
“நான்தான் கிடைச்சிட்டேனே…” என்றவள் படுக்கைக்கு குறுக்காக படுத்து அவன் மார்பில் தலை வைத்து அவன் முகம் பார்த்தாள்.
அவளது தலை முடியை கையில் எடுத்து சுருட்டி சுருட்டி விளையாடிக் கொண்டே, “சண்டித்தனம் பண்ணி இந்த பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு தேங்க்ஸ்!” என்றான்.
“அழகா இருக்கீங்க ஜீவா!” என அவனை பார்வையால் விழுங்கிக் கொண்டே சொன்னாள்.
ஆம் என ஒப்புக் கொண்டவள், “உங்களுக்கு வேற எதுவும் வேணுமா?” என காதலும் காமமும் வழியக் கேட்டாள்.
அவளது தலையில் கை கொடுத்து அவளுக்கு வலிக்காமல் முடிக்கற்றையை இறுகப் பிடித்து இறுகப் பிடித்து விட்டான். அதில் மயங்கியவள் அவனது மார்பில் தன் முகத்தால் உரசி உரசி விளையாடினாள்.
“ஸ்டாப் மிது, ஆம் அவுட் ஆஃப் கண்ட்ரோல்”
“யார் உங்களுக்கு தடை போடுறதாம்?” எனக் கேட்டாள்.
அவளது தலையை பற்றி தன் முகத்தருகே இழுத்துக் கொண்டான். முத்தங்களால் கொஞ்சிக் கொள்ள ஆரம்பித்தனர்.
“நான் ரொம்ப சண்டை போடுறேனா?” முத்தங்களின் இடையில் கேட்டாள்.
“சமாதானம் செய்ற வழியையும் சொல்லி கொடுத்திருக்க” என்றவன் மீண்டும் முத்த மொழியில் அவளை கொஞ்சினான்.
“இனி ஏதாவது காரணம் சொல்லி எவ கூடயாவது ஒட்டி உரசின குர வளைய கடிச்சு துப்பிடுவேன்” என்றவள் அவனது தொண்டையை லேசாக கடித்து பின் விட்டாள்.
“அப்படிலாம் நடக்காதுன்னு பொய் பிராமிஸ் கொடுக்க மாட்டேன், அதுக்கு பதிலா என் குர வளைய மட்டுமில்ல முழுசா என்னையவே நீ கடிச்சு முழுங்க உனக்கு பெர்மிசன் தர்றேன்” என்றான்.
“இதெல்லாம் என்கிட்ட வேலைக்கு ஆகாது…” என அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவளை தன்னிடம் மயங்க வைக்கும் செயலில் வெற்றி பெற்று விட்டான்.
கலகத்தில் துவங்கி கலக்கத்தை தந்த அந்த இரவு இப்போது அவர்களுக்கு மறக்க முடியாத இனிய இரவாகிப் போனது.