கொஞ்சும் காதல் சாரல்
கொஞ்சும் காதல் சாரல் -19
அத்தியாயம் -19
காணொளி அழைப்பில் தங்கையின் கோலத்தை கண்டு விட்டு முதலில் அதிர்ந்த லாவண்யா பின் அவளாகவே, “எங்க உன் ஃபிரெண்ட் யார் வீட்டுக்கு வந்திருக்கியா?” எனக் கேட்டாள்.
அதையே பற்றிக் கொண்ட மிது, ஆம் என சொல்லி தீபாவின் வீடுதான் என மேற்கொண்டும் பொய் சொன்னாள். வாசுகி சென்னைக்கு வந்திருக்கிறாள், மூவரும்...
எத்தனை பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் சமரசம் பேசி தீர்த்து வைத்திருக்கிறான் அன்பு, அவனாலேயே கையாள முடியாத ஆள் என்றால் அவனது அம்மாச்சிதான். வெட்டி விடும் உறவென்றால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், கடைசி காலம் வரை வைத்திருந்து பார்க்க கடமை பட்டவன் ஆகிற்றே.
“அவளை இனிமே எதுவும் சொல்லாத அம்மாச்சி, அவ திருப்பி பேசினா உன்னால...
கொஞ்சும் காதல் சாரல் -18
அத்தியாயம் -18
அன்பு சென்னையிலிருந்து ஊர் வந்து சேர்ந்த போது நடு இரவாகியிருந்தது. சத்தம் செய்யாமல் தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்தவன் லாவண்யாவின் அருகில் படுத்து அவளது கழுத்து வளைவில் முத்தமிட்டான். அந்த ஸ்பரிசத்தில் விழித்துக் கொண்டவள் அவனை கண்டு விட்டு அப்படியே அவன் மேல் படுத்துக் கொண்டாள்.
அவளை அணைத்துக்...
ஆனால் அந்த வேலையால் தனக்கும் மிதுவுக்கும் பிரச்சனைகள் வருமோ என நினைத்து பயந்தவன் மணியிடம் ஆலோசனை செய்தான்.
“பங்கஜ் ஸார்கிட்டதானே போற, உனக்கு எல்லா விதத்திலேயும் சப்போர்ட் பண்ணுவார். வேலை செய்ற இடத்துல நடக்கிற எதையும் வீட்ல டிஸ்கஸ் பண்ணாம இரு, எந்த பிராப்லமும் வராது” என தைரியம் சொன்னான் மணி.
ஜீவா, பங்கஜை தொடர்பு கொண்ட...
கொஞ்சும் காதல் சாரல் -17
அத்தியாயம் -17
நடு இரவில் தன்னருகில் ஜீவா இல்லாததை உணர்ந்து விழித்துக் கொண்டாள் மிதுன்யா. அறையின் பால்கனியில் நின்று கொண்டிருந்தான்.
இவள் செல்லவும், “உனக்கும் தூக்கம் வரலையா?” எனக் கேட்டான்.
“ எனக்கு நல்லா தூக்கம் வருது, நீங்க என்ன பண்றீங்க?” எனக் கேட்டாள்.
“முழிச்சிட்டேன், அப்புறம் தூக்கம் வரலை மிது. புரண்டுகிட்டே இருந்தா உன்...
அவளை முறைத்தவன், “உன் கூட நிம்மதியா வாழணும்னு நினைக்கிறேன், சண்டை போட்டு மண்டைய உடைச்சுக்க முடியாது” என்றான்.
அவனது நெற்றிக் காயத்தை தடவிப் பார்த்தவள், “அதான் ஏற்கனவே உடைஞ்சு போச்சே” என்றாள்.
“பீ சீரியஸ் மிது, நாலு வருஷம் முன்னாடி ஷாலினி கூட நான் டான்ஸ் ஆடினேன்னு நமக்குள்ள நடந்த சண்டை எனக்கு நல்லா நினைவிருக்கு, நீயும்...
கொஞ்சும் காதல் சாரல் -16
அத்தியாயம் -16
ஜீவநந்தன், மிதுன்யா இருவரின் பெயர்களையும் சொல்லி அழைத்தார் அந்த பதிவாளர் அலுவலகத்தின் ஊழியர்.
சிகை திருத்தி, முக சவரம் செய்து, எடுப்பான பேண்ட் சட்டையில் பொலிவாக இருந்த ஜீவாவும் மெல்லிய சரிகை கொண்ட பட்டு உடுத்தி வெகு எளிமையான அலங்காரத்தில் இருந்த மிதுன்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவன் கை...
கன்னங்களில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டே அவனை கோவமாக பார்த்திருந்தாள்.
“மிது வா, நாம போலாம்” என அவளின் கையை பிடித்தான் மணி.
மணியின் பிடியை உதறிய மிது, “உங்க ஃப்ரெண்ட்க்கு என்னை பார்த்தா எப்படி தெரியுது? மத்தவங்கள பத்தி யோசிச்சு இவரை விட்டு கொடுத்த தியாகி மிது இல்லை நான், ரொம்ப சுயநலம் ஆகிட்டேன்,...
கொஞ்சும் காதல் சாரல் -15
அத்தியாயம் -15
மாலை நான்காகியும் எழவில்லை மிதுன்யா. பங்கஜின் ஆள் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து, அவனை கொண்டு சாப்பாடு வாங்கி வைத்திருந்தான் ஜீவா. அவளுக்கும் நல்ல பசி.
உடல் நலமில்லாதவனுக்கு துணையாக இருந்து கொண்டு இப்படி உறங்கினோமே என வெட்கிப் போனவளாக, “ஸாரி, நைட் நிறைய வேலை, லேட்டாதான் தூங்கினேன். அதான்…” என...
கொஞ்சும் காதல் சாரல் -14
அத்தியாயம் -14
தன் கண்ணெதிரில் நிற்பவள் நிஜமாகவே மிதுன்யாதானா என குழம்பிப் போனவனாக பார்த்திருந்தான் ஜீவா.
ஈரப் படலமான விழிகளும் துடிக்கும் இதழ்களுமாக அவனை நெருங்கி வந்த மிது, “நான் ஒருத்தி இருக்கேங்கிறதை மறந்தே போயிட்டீங்களா ஜீவா?” எனக் கேட்டாள்.
உன்னை மறக்க முடியாமல்தான் இப்படி ஆகியிருக்கிறேன் என மனதில் நினைத்துக் கொண்டவனுக்கு வாய்...
மற்றவர்களை பற்றி அவனுக்கு கவலையில்லை, ஆனால் மகனாக தான் தன் கடமையை சரியாக செய்யவில்லை என நினைத்தவனுக்கு அம்மாவின் இழப்பை தாண்டிய மன பாரம் ஏறிக் கொண்டது.
மகள் மறைந்த துக்கத்தில் இருந்த கோபிகாவின் தாயாரும் விரைவிலேயே இறைவனடி சேர்ந்து விட்டார். தன்னுடன் வந்திருக்கும் படி இளங்கோ கேட்டுக் கொண்டும் அவருடன் செல்ல மறுத்து விட்டான்...
கொஞ்சும் காதல் சாரல் -13
அத்தியாயம் -13
மிதுன்யா படிப்பை முடித்து சென்னையிலேயே வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் எட்டு மாதங்களாகின்றன. பிஜி ஒன்றில் தங்கியிருக்கிறாள். திருமணத்திற்கு பார்க்கலாமா என வீட்டில் கேட்க ஆரம்பித்திருந்தனர்.
இரண்டு வருடங்கள் போகட்டும் என சொல்லி சமாளித்திருந்தாள். வருடங்கள் கடந்த பின்னும் ஜீவாவுடன் பழகிய அந்த சில கால நினைவுகள் அவளுள் இன்னும்...
பசுபதி, வினோதினி இருவருக்கும் கூட மகளின் ஜாதகத்தில் தோஷம் என சொல்லியே நல்ல இடமாக ஏதும் அமையவில்லையே என்ற கவலை இருந்தது. மகளுக்கு பொருத்தமான நல்ல பையன், அதுவும் தூரமாகவும் இல்லாமல் அருகிலிருக்கும் ஊரை சேர்ந்த அன்புவை மகள் மணந்து கொண்டதில் அவர்களும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
இப்படியாக ஆளாளுக்கு ஒவ்வொரு மனநிலை.
மணப்பெண்ணின் வீட்டில்தான் இரவு சடங்கு...
கொஞ்சும் காதல் சாரல் -12
அத்தியாயம் -12
அன்பு, லாவண்யா திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. மிதுன்யாவின் தோழிகளும் வந்திருந்தனர்.
மங்கம்மா பாட்டி ஜீவாவை நினைவு வைத்து, அவன் வரவில்லையா என வாசுகியிடம் கேட்டார். அவள் மறுப்பாக தலையாட்ட, “நல்ல பையன், நல்லா ஆடினான், எல்லார் கண்ணும் அவன் மேலதான், அதான் கை உடைஞ்சு ஆட முடியாம போயிடுச்சு...
“லாவண்யாவோட மாமனுக்கு சொல்லணும், முறையா தட்டு மாத்திக்கிட்டு அப்புறம் அந்த புடவையை கட்டிக்கட்டும்” என்றார் தாத்தா.
வினோதியின் அண்ணனுக்கு அழைத்து விவரம் சொல்லி உடனடியாக வீட்டுக்கு வரும் படி அழைத்தார் பசுபதி.
வேலை செய்யும் பெண்களிடம் மதிய விருந்துக்கு என்ன செய்ய வேண்டும் என்ற பட்டியலை மாமியாருடன் ஆலோசித்து சொல்லி விட்டே மகளின் அறைக்கு சென்றார் வினோதினி.
லாவண்யாவின்...
கொஞ்சும் காதல் சாரல் -11
அத்தியாயம் -11
அன்புக்கும் லாவண்யாவுக்கும் நிச்சயதார்த்தம் அன்று என சொன்னால் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள்.
தன் பேத்தியை பெண் தர சம்மதிக்க மறுத்துக் கொண்டேதான் இருந்தார் செல்வநாயகம். மகனின் ஆசை தெரிந்து பல வருடங்களாக பிறந்த வீட்டுக்கு வந்திராத அருந்ததி மகனுக்காக வந்தார். தனியாக வராமல் தன் கணவரின் தம்பி பிரகாசத்தின் குடும்பத்தினரையும்...
மீண்டும் ஒரு நாள் பாலச்சந்திரனின் அப்பா வந்தார், கணவரின் பிரிவால் அருந்ததியின் உடல்நிலை நலிவடைவதாகவும் அன்பு உறக்கத்திலும் அப்பா என அழுவதாகவும் சொன்னார். இப்போது வரவில்லை என்றால் அவர்களை உயிரோடே பார்க்க முடியாது என பயமுறுத்தினார்.
பக்கத்து வீட்டில் இருந்த கோபிகாவுக்கும் இது கேட்கத்தான் செய்தது. பதிலே தராமல் அழுத்தமாக இருந்த சந்திரனின் மீது வெறுப்பும்...
கொஞ்சும் காதல் சாரல் -10
அத்தியாயம் -10
கடந்த ஒரு வார காலமாகவே நீடிக்கும் ஜீவாவின் அமைதி கோபிகாவை குழப்பமுறச் செய்தது. நடன நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத காரணமோ என கூட அவரால் நினைக்க முடியவில்லை.
ஏனெனில் முன்னரே இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவில்தான் ஜீவா இருந்திருக்கிறான் என்ற தகவல் சில நாட்களுக்கு முன் பங்கஜ் மூலமாக...
நிகழ்ச்சியின் முடிவில் தொகுப்பாளர் பேசியதை காண்பித்தார்கள். இது நிகழ்ச்சியின் போது பேசியது அல்ல, சமீபத்தில் பேசி இணைக்கப் பட்ட காணொளி.
‘கடந்த வாரமே எடுத்து முடிக்கப் பட்ட நிகழ்ச்சியின் போது ஜீவாவுக்கு விபத்து நிகழ்ந்தது, குணமாகி வருவார் என காத்திருந்தோம், ஆனால் வலது கையில் எலும்பு முறிவு, எனவே இனி ஜீவநந்தன் இந்த நடன நிகழ்ச்சியில்...
கொஞ்சும் காதல் சாரல் -9
அத்தியாயம் -9
மிதுன்யா சென்னைக்கு வந்த பிறகும் கூட ஜீவாவின் அழைப்பை ஏற்றுக் கொள்ளாமல் அவனை தவிக்க விட்டுக் கொண்டிருந்தாள். அவள் அறிந்து கொண்ட உண்மை அவளது நிம்மதியை முற்றிலுமாக அவளிடமிருந்து பறித்திருந்தது.
கல்லூரி, விடுதி என இரண்டு இடங்களை தவிர வெளியே செல்வதே இல்லை. ஆகையால் இவளை நேரில் சந்திக்கலாம் என்ற...