Monday, May 6, 2024

    Vizhi Veppach Salanam

    சலனம் – 13  “நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்.  வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும். பண்பு வேண்டும் பணிவும் வேண்டும்...  அன்பு வேண்டும் அறிவும் வேண்டும்...’’  அமுதன் வீட்டு மொட்டை மாடியில் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் நிறைய செடி கொடிகள்.. அதன் மேலே ரியாஸ் அவச அவசரமாய்...
    எப்படியும் யூட்ரஸ் மாசம் ஒரு முறை, ஒரு நாலஞ்சி நாள் அழும். அப்ப எல்லாம் அந்த பொண்ணுங்களுக்கும் கஷ்டமா இருக்கும். அதனால நீ எந்தப் பொண்ணு ஸ்கர்ட்ல ப்ளட் ஸ்டெயின் பார்த்தா பர்சனால அவங்ககிட்ட சொல்லி வாஷ் பண்ணிக்க சொல்லணுமே தவிர அந்த ஈவன்ட் வச்சி பொண்ணுங்களை கேலி கிண்டல் எல்லாம் பண்ணக் கூடாது...
    சலனம் – 12   குளியலறையில் நெடு நேரம் அழுதிருக்கிறாள் என்பதை விழிகள் பறை சாற்ற, அமுதன் அவளை எப்படி தேற்றுவது எனப் புரியாமல் அமர்ந்திருந்தான்.  “இசை... காபி சொல்லி இருக்கேன். சூடா குடிச்சா.. யூ மே பீல் பெட்டர்.’’ என்றான். அவனுக்குமே அவளோடு வார்த்தையாடுவது அத்தனை எளிதாய் இல்லை.  அவன் வார்த்தைகள் செவியடைந்தது எனும் விதமாய் தலையை மட்டும்...
    சலனம் – 11  சொகுசு வசதிகள் அத்தனையும் தன்னகத்தே கொண்ட அந்த சிற்றுந்து மெல்ல மெல்ல மலைகளின் இளவரசனின் உடல் மீது ஊர்ந்து ஊர்ந்து ஏறிக் கொண்டிருந்தது.  மேலே வாகனம் ஏற, ஏற, கீழே இருக்கும் கட்டிடங்களும், வாகனங்களும் சாலைகளும், நவ ராத்திரி கொலுவில் அடுக்கி வைத்திருக்கும் பொம்மைகள் போல தோற்றமளிப்பதை ஊன்றி பார்த்துக் கொண்டிருந்தாள் யாழிசை.  அவளோடு...
    சலனம் – 10  “ஹாய் யாழிசை..!’’ தன் முன்பு கேட்ட குரலில் இசை நிமிர்ந்து பார்த்தாள். அங்கே புன்னகை மன்னனாய் ரியாஸ் நின்றுக் கொண்டிருந்தான். யாரோ என்ற குழப்பத்தில் சுருங்கிய முன் நெற்றி விரிய, முகம் மலர புன்னகைத்தாள்.  “ஹாய் பாஸ்..! என்ன அதிசயமா ஸ்க்ரூ டிபார்ட்மென்ட் தேடி டெஸ்ட்டர் வந்து இருக்கு..?’’ என்று ஆச்சர்ய பாவனையில்...
    சலனம் – 9  இசை அந்த இற்றுப் போன பழைய நாட் குறிப்பேட்டை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மின் அஞ்சல் வழியே அலுவகத்திற்கு விடுப்பு சொல்லியிருந்தாள். ஊரிலிருந்து வந்த கவி, அலுவலகம் கிளம்பும் வரை சாதாரணமாய் இருப்பதை போல காட்டிக் கொள்ள அரும்பாடு பட்டுப் போனாள். ஆனால் அவள் உள்ளமோ நடந்ததை எண்ணி சதா ரணமாய்...
    கடந்த பத்து நாட்களாய் சுற்றி சுற்றி சுழன்றடித்திருந்த மழை சாரல், தூறல் என்று கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்திருந்தது. எப்படியும் வெள்ளம் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வடிந்து விடும்.  ஆனால் அது ஏற்படுத்தி செல்லும் பொருளாதார பாதிப்புகளை கடக்க, ஓரிரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்று மனதிற்குள் அமுதன் நினைத்துக் கொண்டான்.  இவர்கள் பொருளை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு...
    சலனம் – 8  “ஏ டயரு இன்னும் கொஞ்சம் வேகமா சுத்துடா எரும. இப்ப தான் ரெண்டு டம்ளர் ஜூஸ் குடிச்ச இல்ல. சுத்து.. சுத்து சுத்து....’’ இசை அந்த குட்டிப் படகில் நடு நாயகமாய் அமர்ந்திருக்க, செல்வம் அந்த படகை சுழற்றி விட்டுக் கொண்டிருந்தான்.  இசை வாயின் மேல் கரம் குவித்து. “ஊ..’’ என்று ஒலி...
    சலனம் – 7  நாளின் எப்பொழுது அது என கணிக்க முடியாததொரு வர்ணத்தில் வானம் இருந்தது.  யாரோ தன்னை அழைக்கும் ஓசை செவியெட்ட யாழிசை மெதுவாய் தன் விழிகளைப் பிரித்தாள். புதிய இடம். நள்ளிரவிற்கு மேலே தான் உருண்டு, புரண்டு ஒரு வழியாய் உறங்கி இருந்தாள்.  அவள் எழுந்து அமர, அவளுக்கு எதிரே அமுதன் கையில் காபி...
    என்னதான் இருவரும் மழைக் கவச உடைகள் அணிந்து இருந்தாலும், பயணத்தில் இருவரும் முழுதாய் நனைந்து இருந்தார்கள். வீட்டிற்குள் நுழைந்ததும், தன்னுடைய அறைக்குள் சென்று உலர்ந்த உடையுடன் வெளியேறியவன்,  “இசை.. இது என்னோட புது நைட் ட்ரஸ். டீசன்ட்டா தான் இருக்கும். ஹாலை ஓட்டி இருக்க பாத்ரூம் நான் யூஸ் பண்றதே இல்ல. உள்ள ஒரு மெழுகுவர்த்தி...
     சலனம் – 5  “வண்டி இங்கயே போட்டுட்டு கேப் புக் பண்ணி ரூமுக்கு போ இசை. நாம வரும் போதே ரோட்ல நிறைய தண்ணி. மழை வேற நிக்காம பெஞ்சிட்டே இருக்கு.’’ முன் பதிவு செய்யப் பெற்றிருந்த தன் பெட்டியின் ஜன்னலோரம் அமர்ந்தபடி, கவி இசைக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தாள்.  தோழிகள் இருவரும் இரயில் நிலையத்தை வந்தடைந்து கிட்டத்தட்ட...
    சலனம் – 6  அந்த மழை இரவு, அத்தோடு முடியப் போவதில்லை என்பதை பாவம் யாழிசை அறியவில்லை. பதிலுக்கு பதில் அவனுக்கு கொடுத்துவிட்ட திருப்தியில், அவள் வெளியே வர, அங்கே அவள் கண்ட காட்சியில் உள்ளுக்குள் குளிர் பிறந்தது.  ஆகாய கங்கையை மடை மாற்றி விட்டதை போல அங்கே நீர் சுழித்தோடிக் கொண்டிருந்தது. வரும் போது முழங்கால்களுக்கு...
    சலனம் – 4     அறையின் சாளரங்கள் வழி, மழைத்துளிகள் அத்துமீறி அறைக்குள் பிரவேசிக்க, வேகமாய் எழுந்து வந்து சாளரங்களை அடைத்தாள் இசை. ஆனாலும் சாளரக் கதவுகள் கண்ணாடியினால் செய்யப் பெற்றிருந்ததால் வெளியே அடித்த மழையின் உக்கிரத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டின.  மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தன் உடைகளை அடுக்கிக் கொண்டிருந்த கவிதா, குரலில் கவலையை தேக்கி, “பேசாம...
    சலனம் - 3  அமுதன் தன் இடுப்பில் ஒட்டிக்கோ கட்டிக்கோ வகை ராம்ராஜ் வேஷ்டியை கொஞ்சம் கடினப்பட்டே, தன் உடலோடு இறுக்கி வைத்தான்.  “எந்த வீணாப் போனவன்டா.. இந்த எத்தினிக் டேலாம் கண்டு பிடிச்சது. வண்டி ஓட்டும் போது கழண்டு காத்துல அடிச்சிட்டு போகாம இருந்தா சரி. எதுக்கும் பாதுகாப்புக்கு ஒரு ஷார்ட்சை உள்ள மாட்டி வைப்போம்.’’...
    சலனம் – 2  அமுதனும், யாழிசையும் நேருக்கு நேர் மோதி, சரியாய் மூன்று வாரங்கள் கடந்திருந்தது. அன்று அமுதனிடம் குரல் உயர்த்திப் பேசிய நொடியில், அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போயினர்.  அமுதன் தன் கையில் இருந்த பீங்கான் தேநீர் கோப்பையை அப்படியே தரையில் வீச, அந்த வெண்பளிங்கு தரை, புகழ் பெற்ற ஓவியன் வரைந்த...
    விழி வெப்பச் சலனம். சலனம் – 1  வானம் வெளுத்தும் காயாமல், கருத்தும் கொட்டாமல், சாம்பலும், வெளிர் நீலமும் கலந்த கலவையில் மந்தகாசப் புன்னகை புரிந்து கொண்டிருந்தது.  திங்கட்கிழமை விடியலில் பணிக்கு கிளம்புவதில் எப்போதும் சுணக்கம் தான்  தமிழமுதனுக்கு. அதுவும் வாரவிடு முறையின் இரண்டு நாட்களையும் கொண்டாடிக் கழித்த பின், மீண்டும் அந்த குளிர் பதன கண்ணாடி கூண்டிற்குள்...
    error: Content is protected !!