Advertisement

அத்தியாயம்- 23

 

பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டுபுரண்டாடக் குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை வண்டோட இனி
இங்கிது கண்டுல கென்படு மென்படு மென்றிடை திண்டாட மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றனளே.

 

 

– திரிகூடராசப்பக் கவிராயர் (குற்றால குறவஞ்சி பாடல்)

 

 

“ஏன் குந்தவை கதவை தட்டுறது அந்த டெட்டி பியரா இருக்குமோ?? என்றான் ஆதி அதி முக்கிய சந்தேகமாக.

 

 

“என் தங்கச்சி உங்களுக்கு டெட்டி பியரா… என்று முறைத்தாள்.

 

 

“அன்னைக்கு நடந்ததை மறந்துட்டியா, டெட்டி பியர்ன்னா பூஜை வேளை கரடின்னு உன் தம்பி தான் சொன்னான், நானில்லை…

 

 

“அதை தான் நானும் சொல்றேன் அவளை பார்த்தா உங்களுக்கு அப்படியா தெரியுது, பேசிட்டு இருக்காம முதல்ல கதவை திறங்க…

 

 

அவன் கதவை திறக்கவும் முதலில் நின்றது வானதி தான், ஆதி பின்னால் திரும்பி குந்தவையை அர்த்தத்துடன் ஒரு பார்வை பார்த்தான். அவள் பதிலுக்கு அவனை முறைத்தாள்.

 

“மாமா கதவை தட்டினது மட்டும் தான் நானு, என்னை பூஜை வேளை கரடின்னு நினைக்காதீங்க… தட்ட சொன்னது எங்கண்ணன்… இனி நீங்க அவன்கிட்டே பேசிக்கோங்க, நான் அர்ஷி கூட போறேன்… என்றவள் “அர்ஷி இங்க நிக்காதே, இவங்க நம்மளை கலாட்டா பண்ணுவாங்க வா நாம போகலாம் என்று அவளையும் இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.

 

 

அதற்குள் அவன் பின்னால் வந்து நின்றிருந்த குந்தவையிடம் மெதுவான குரலில் “ஏன் குந்தவை இப்போ தட்ட சொன்னது உன் தம்பியாம், அவனை வேணா போலார் பியர்ன்னு சொல்லலாமா… எனவும் குந்தவை அவனை பார்த்த பார்வையில் வாயை மூடிக் கொண்டான்.

 

 

“என்ன வானவா அங்கேயே நின்னுட்ட, என்ன விஷயம் உள்ள வா??? என்றவன் அவர்கள் அறையில் இருந்து வரவேற்ப்பறைக்கு சென்றான்.

 

 

“அக்காகிட்ட பேசணும் மாமா என்றான் ஒருவித இறுக்கத்துடன்.

 

 

“உங்கக்கா இங்க தானே இருக்கா, பேசு… என்றான் ஆதி.

 

 

“நீங்களே அவகிட்ட கேட்டு சொல்லுங்க மாமா, நான் அவ கூட நேரடியா பேச விரும்பலை… என்று அவன் முகத்தை எங்கோ பார்த்துக் கொண்டு சொல்லவும் ஆதி அவனுக்கு ஏதோ தெரிந்து தான் வந்திருக்கிறான் என்று புரிந்து கொண்டான்.

 

 

அவனறியாமல் திரும்பி குந்தவையை ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்க்கவும் அவளும் புரிந்ததாக தலையாட்டினாள்.

 

 

“உங்களுக்குள்ள நான் என்ன பஞ்சாயத்து நீயாச்சு உன் அக்காவாச்சு… என்று எழுந்தான் ஆதி.

 

 

“மாமா ப்ளீஸ் அவ மேல நான் ரொம்ப கோபமா இருக்கேன்?? என்றவனின் முகம் சிவந்து தான் போயிருந்தது கோபத்தில்.

 

 

“அவர் என்ன நடுவுல நாட்டாமையா உனக்கு என்ன கேட்கணும்ன்னாலும் என்கிட்ட நேரடியா கேளு… என்று இருவருக்கும் இடையில் வந்து நின்றாள் அவள்.

 

 

“கேட்டா சொல்லிட்டு தான் மறுவேலை பார்ப்ப… என்றான் வானவன்.

 

“இங்க பாரு உனக்கு என்ன பிரச்சனை நேரா பேசு…

 

 

“உனக்கு என்ன பிரச்சனை நடந்திச்சி நீ ஏன் எங்ககிட்ட நேரா பேசலை, அது தான் என்னோட கேள்வி…

 

 

“என்னடா என்னை உளவு பார்த்தியா??

 

 

“உளவு எல்லாம் பார்க்கலை… சந்தோசமா மாறியிருந்த உன்னோட முகம் கொஞ்ச நாளா கவலையா இருக்கேன்னு நானே கவலைப்பட்டு இருந்தேன்…

 

 

“இதுல அன்னைக்கு மாமா வேற உன்னை திட்டவும் மனசே எனக்கு ஒரு மாதிரி ஆகிப்போச்சு… மறுநாளே நீ வீட்டுக்கு வந்து சித்தப்பா நம்பர் கேக்குற, நான் என்னனு நினைக்கறது…

 

 

“நான் கேட்டதுக்கு நீ பதிலும் சரியா சொல்லலை, அப்போ ஒண்ணும் இருக்காதோன்னு நினைச்சேன்… என்னமோ வந்துட்டு போன பிறகு என்னால நிம்மதியாவே இருக்க முடியலை…

 

 

“இன்னைக்கு காலையில தான் சித்தப்பாகிட்ட பேசினேன், அவர் தான் நடந்ததை எல்லாம் சொன்னாரு…

 

 

“அவர்க்கு வேலையே இல்லை போல கேட்டதும் சொல்லிடுவாரா??

 

 

“அவரை எதுக்கு சொல்ற, சொல்ல வேண்டிய நீ ஏன் சொல்லலை… மாமாக்கும் அவர் தான் சொல்லியிருக்கார்… இங்க நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்… உனக்கு ஒண்ணுன்னா நாங்க சும்மா இருந்திடுவோமா…

 

 

“என்ன இருந்தாலும் சித்தப்பா மூணாவது மனுஷன் அவர்க்கிட்ட சொல்ல தெரிஞ்ச உனக்கு எங்ககிட்ட சொல்றதுக்கு என்ன அப்படி என்ன நாங்க வேண்டாதவங்களா போய்ட்டோம் உனக்கு… என்று நெற்றியடியாக கேட்டான்.

 

 

குந்தவை திரும்பி ஆதியை பார்க்க ‘நீ பதில் சொல்லி தான் ஆகணும்… பேசு சமாதானப்படுத்து… என்பது போல் அவளை பார்த்தான்… ‘நான் இருக்கேன் நீ பேசு… என்று கண்களை மூடி திறந்தான்.

 

 

“இப்படி உட்காரு வானவா…

 

 

“நான் ஒண்ணும் உட்கார வரலை…

 

 

“உட்காருடா நான் உன் அக்கா தானே சொல்றேன்… என்று சொல்லவும் அவன் சோபாவில் அமர்ந்தான்.

 

 

யோசித்து களைத்து போன அவன் முகம் அவளுக்கு வருத்தத்தை கொடுத்தது, தனக்காக தானே… என்று தோன்ற கண்ணில் நீர் கோர்த்தது.

 

 

அதை பார்த்ததும் அவன் மனமிறங்கி விட “அக்கா இப்போ எதுக்கு அழற, எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ன்னு தானே சொன்னேன்… அதுல என்னக்கா தப்பிருக்கு…

 

 

அவன் பேசப்பேச அவள் தாளமாட்டாமல் மேலும் அழுதாள், ‘எனக்காக இவ்வளவு யோசிக்கும் நல்ல உள்ளங்கள் கிடைக்க என்ன தவம் செய்தேனோ… என்று எண்ணினாள்.

 

 

“அக்கா விடு நீ எதுவும் சொல்ல வேணாம்… எனக்கு புரியுது… என்று எழுந்தே விட்டான் அவன்.

 

 

“உட்காரு… சொல்றேன்ல உட்காரு வானு…

 

 

“இங்க பாரு, என்னை பாருடா… சரி நான் அழலை… என்று கண்ணைத் துடைத்தவள் “என்னை பாரு… என்றதும் திரும்பி அவளை பார்த்தான்.

 

 

“நான் தைரியமா இருக்கணும்அப்படிங்கறது தானே உன்னோட விருப்பம்… நான் செஞ்சது தப்புன்னு நினைக்கிறியா நீ… சட்டப்படி என்ன செய்யணும்ன்னு தோணிச்சோ அதை செஞ்சேன்…

 

 

“முதல்ல எங்க ஆபீஸ்லையே எல்லா லேடீஸ் ஒண்ணாக்கி அது மூலமா அவன் மேல புகார் கொடுக்க தான் நினைச்சோம்… அவங்க யாருமே ஒத்துவராத போனதால தான் நான் இப்படி ஒரு முடிவெடுத்தேன்…

 

 

“தப்பு தான் என் மேல அக்கறை இருக்க உங்க ரெண்டு பேர்கிட்டயும் நானா சொல்லாதது தப்பு தான்… ஆனா உண்மையா சொல்றேன், உங்ககிட்ட சொல்லவே கூடாதுன்னு எல்லாம் நான் நினைக்கலை…

 

 

“என்ன நடவடிக்கை அவன் பேர்ல எடுக்கப் போறாங்கன்னு பார்த்திட்டு சொல்ல தான் நினைச்சேன்… அவர்கிட்ட இப்போ தான் சொன்னேன்… நீ இப்போ வரலைன்னா உன்கிட்ட நாளைக்கு நானே வந்து சொல்லியிருப்பேன்…

 

 

“உனக்கு சித்தப்பா எந்தளவுக்கு சொன்னாருன்னு எனக்கு தெரியலைடா… ஆனா எல்லாத்துக்கும் மூல காரணம் நான் தான்டா… நீ எப்பவும் எனக்காகவே யோசிக்கறவன், உன் பேச்சை நான் நெறைய கேட்காம விட்டிருக்கேன்…

 

 

“அக்கா எனக்கு தெரியாதது இவனுக்கு என்ன தெரிய போகுதுன்னு எனக்கொரு எண்ணம்டா… அதான் அந்த ஈகோ தான் எல்லாத்துக்கும் காரணம், இவர்கிட்ட நான் பார்க்காத ஈகோவா சொல்லு…

 

 

“காலம் கடந்து தான் எனக்கு ஞானோதயம் வந்திருக்குடா… என்னை புரிஞ்சுக்கோ வானு… நான் மாறியிருக்கேன் உனக்கு தெரியுமா தெரியாதான்னு எனக்கு தெரியலை…

 

 

“நான் முன்மாதிரி கோபப்படுறது இல்லை, சட்டுன்னு முடிவெடுக்கறது இல்லை… யோசிச்சு நிதானமா தான் செய்யறேன்… உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டது தான்…

 

 

“அக்கா நீ மாறியிருக்கேன்னு எனக்கு தெரியும்க்கா… விடுக்கா நீ இவ்வளவு சொல்லணும்ன்னு தேவையில்லை எனக்கு… ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ன்னு தோணிச்சு…

 

 

“அதான் மனசுல வைக்காம வந்து கேட்டுட்டேன், நீ எடுத்த இந்த தைரியமான முடிவு உண்மையிலேயே எனக்கு ஆச்சரியம் தான்க்கா… சந்தோசமாவும் இருக்கு… அவனுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்க்கா…

 

 

“நான் வேற வந்து உங்க தூக்கத்தை கெடுத்துட்டேன்… மாமா வேற எனக்கு பூஜை வேளை கரடின்னு பேரு வைச்சுட்டு அய்யனாரு மாதிரி முறைச்சுட்டு நிக்கறாரு… நான் கிளம்புறேன்ப்பா… என்று எழுந்தான் அவன்.

 

 

“ஏன் வானவா நான் அய்யனார் மாதிரி முறைக்கிறேனா… ஏன் சொல்ல மாட்ட, அக்காவும் தம்பியும் பேசிட்டு இருக்கீங்களே, குறுக்க வரவேணாம்ன்னு பேசாம இருக்கவனை நீயேன் சொல்ல மாட்டா என்றான் ஆதி.

 

 

“ஆமா இந்த வானதி எங்க, ஹேய் வானதி வா கிளம்புவோம்… என்று வானவன் குரல் கொடுக்க வெளியே வந்தவள் “நான் இன்னைக்கு அர்ஷிகூட இருக்கேன்டா அண்ணா நீ கிளம்பு… என்று கூற “வானரமே ரொம்ப கொழுப்புடி உனக்கு… இரு இரு நாளைக்கு பேசிக்கறேன் உன்கிட்ட… என்றவன் விடைபெற்றான்.

 

 

அவன் கிளம்பவும் குந்தவை அவனை அழைத்தாள் “சொல்லுக்கா… என்றவனிடம் “அம்மா… அப்பாக்கு… என்று அவள் இழுக்க “தெரியாதுக்கா ஏன் இந்த வானரத்துக்கூட தெரியாது… போதுமா… என்றவன் கிளம்பிச் சென்று விட்டான்.

 

 

வாசல் கதவை அடைத்துவிட்டு அவர்கள் வர ஆதி அவளை அணைத்தவாறே அவர்கள் அறைக்குள் நுழைந்தான். “என்ன அக்காவும் தம்பியும் செம செண்டிமெண்ட் போல… என்று சிரித்தான் அவன்.

 

 

“எதுக்கு இப்போ சிரிக்கறீங்க… நீங்களும் அர்ஷியும் வெளியகாட்டிக்காம செண்டிமெண்ட் சீன் போட்டு தாக்குவீங்க… நாங்க அப்படியே லைவ் ஷோ காமிச்சுட்டோம்… அதுகென்ன இப்போ… என்றாள்.

 

 

“ஒண்ணும்மில்லை… என்றவனின் பார்வை மாறியிருந்ததை அவள் கவனிக்கவில்லை… “என்ன ஒண்ணும்மில்லை உங்களுக்கு எங்களை பார்த்து பொறாமை, கண்ணு வைக்கறீங்க…

 

 

“இங்க வைக்கிறேனா?? என்றவன் அவளை தன் புறம் இழுத்து அவள் இமையின் மீது முத்தம் வைத்தான். அதுவரை அவனிடம் வளவளத்துக் கொண்டிருந்தவள் பேச்சிழந்து நின்றாள்…

 

 

“என்… என்ன… பண்ணறீங்க

 

 

“இதுவரைக்கும் ஒண்ணுமே பண்ணலை இனிமே தான்… என்று அவள் காதில் கிசுகிசுத்தவன் இதழ் அவள் காதுமடலில் மென்மையாய் முத்தம் பதித்தது.

 

 

உடலெல்லாம் ஏதோ மாற்றம் நிகழ்வதை குந்தவையால் உணர முடிந்தது. “குந்தவை இனியும் காத்திட்டு இருக்கணுமா?? என்று மற்றொரு காதில் கிசுகிசுக்க அவள் தலை தன்னையறிமால் அவள் சம்மதம் சொல்லியது.

 

 

“தேங்க்ஸ்… என்றவன் அவள் முகமெங்கும் முத்திரை பதித்து அன்றைய நித்திரையை தொலைக்க அச்சாரம் இட்டான். கூச்சம் தாளாமல் திரும்பி நின்றவளின் கழுத்து வளைவில் முகம் பதித்து தன்னை நோக்கி திருப்பியவன் அவள் இதழை அவன் இதழ் கொண்டு மீட்டினான்.

அவள் இடையில் கை பதித்து இருகைகளாலும் அவளை தூக்கிக் கொண்டவன் மெத்தையில் மென்மையாய் அவளை கிடத்தி முன்னேறினான். இரு இதழ்களும் இரு உடல்களும் உறவாட தொடங்க இனியதொரு இல்லறம் நல்லறமாக அங்கு ஆரம்பித்தது…

 

____________________

 

 

குந்தவை அலுவலகம் கிளம்பி சென்றவள் முதலில் அழைத்து பேசியது வாணியை தான்… அவளிடம் ரவியை பற்றி அவள் சொல்லி முடிக்க அவள் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம் ஜொலித்தது.

 

 

“குந்தவை என்னைக்கும் இல்லாம இன்னைக்கு உங்க முகம் ரொம்ப தேஜஸா இருக்கு… ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல… என்று வாணி கூட கிண்டல் செய்தாள்.

 

 

“வாணி இன்னொரு விஷயம் சொல்ல மறந்திட்டேன்… அந்த கல்பனாக்கு ஒரு நல்ல பாடம் புகட்டணும் வா… என்று அவளை அழைத்துக் கொண்டு கல்பனா முன் சென்று நின்றாள்.

 

 

“என்ன நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கீங்க என்ன விஷயம்…

 

 

“அது வந்து கல்பனா… என்று குந்தவை ஆரம்பிக்க கல்பனாவின் முகம் மாறியது… “என்ன தேவி மரியாதை குறையுது…

 

 

“உனக்கெல்லாம் எவ்வளவு மரியாதை கொடுக்கணும்ன்னு எங்களுக்கு தெரியும்… அந்த ரவிக்கு மாமா வேலை பார்த்தவ தானே நீ… நீயெல்லாம் ஒரு பொம்பிள்ளையா…

 

 

“தேவி??!! என்று கேள்வியாகவும் அதிர்ச்சியாகவும் பார்த்தார் கல்பனா…

 

 

“சும்மா வாயை மூடு… நான் இருக்க கோபத்துல உன்னையெல்லாம் கழுத்தை நெரிச்சு கொன்னிருப்பேன்… உனக்கு கல்யாணம் ஆகி புருஷன் பிள்ளைங்கன்னு தானே இருக்க…

 

 

“அப்புறம் ஏன் இந்த வேலை பார்க்கற… உனக்கென்ன குறை, நல்ல கவர்மென்ட் வேலை… கை நிறைய சம்பளம் அப்புறம் ஏன் இந்த அல்ப புத்தி… இனி எங்களை பத்தி ஒருத்தர்கொருத்தர் நீ போட்டுக் கொடுத்தன்னு தெரிஞ்சுது நான் சும்மா இருக்க மாட்டேன்…

 

“அந்த ரவி உள்ள போன மாதிரி நீயும் போய்டுவ பார்த்துக்கோ… அதுமட்டுமில்லாம எல்லாருமே சேர்ந்து உன் மேல டிபார்ட்மென்ட்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருவோம்…

 

 

“அதுனால உன் வேலையே போறதுக்கு கூட வழி இருக்கு, இனி பார்த்து ஜாக்கிரதையா நடந்துக்கோ… என்று எச்சரித்தே அங்கிருந்து நகர்ந்தாள்.

 

 

குந்தவைக்கு இன்னமும் ஒரு விஷயம் உறுத்தலாக இருந்தது அவள் சித்தப்பா அன்று காலை அவளை அழைத்து பேசியிருந்தார்…

 

 

ரவி தன் செல்வாக்கை பயன்படுத்தி தண்டனையில் இருந்து தப்பித்து விடுவான் என்றும் கோர்ட்டில் அவன் அபராதம் செலுத்திவிட்டு மீண்டும் வேலையில் சேர்ந்து விடுவான் என்றும் வேலை செய்யும் இடத்தில் அவனுக்கு அதிகபட்ச தண்டனையாக ஐம்பதாயிரம் வரையிலும் அபராதம் விதிப்பார்கள்…

 

 

அவன் பதவி உயர்வும், சம்பள உயர்வும் தள்ளுபடி செய்வார்கள் மேலும் அவனை பெங்களூருக்கே பணிமாற்றம் செய்வார்கள் என்று அவருக்கு தெரிந்த உறுதியான தகவலை அவளிடம் பகிர்ந்திருந்தார்.

 

 

வாணியிடம் அந்த தகவலையும் அவள் கூறியிருந்தாள். அவள் யோசனை முழுதும் எதிலோ இருந்தது மாலை ஆதி வந்து அவளை அழைத்து செல்லும் போதும் யோசனையிலே இருந்தாள் அவள்.

 

 

வீட்டிற்கு வந்ததும் அவளை நேராக அவர்கள் அறைக்கு அழைத்து சென்ற ஆதி “என்னம்மா வேற ஏதும் பிரச்சனையா?? என்று அன்பாக கேட்கவும் அவன் மார்பின் மீது சாய்ந்துக் கொண்டாள்.

 

 

“நான் வேலையை விட்டுடலாம்ன்னு இருக்கேன்… என்றாள்…

 

 

“என்னாச்சு குந்தவை, நான் எதுவுமே சொல்லலையே…

 

 

“எனக்கு போகப் பிடிக்கலை… நான் இதை நேத்தே முடிவு பண்ணிட்டேன்… ஆனா நேத்து நடந்த விஷயத்துல இதை மறந்துட்டேன்… என்று சொல்லும் போது அவள் முகம் சிவந்து போனது.

 

 

“ஹேய் நேத்து என்ன நடந்துச்சு, எனக்கு ஒண்ணுமே ஞாபகமே இல்லை குந்தவை… ப்ளீஸ் ப்ளீஸ் நேத்து நடந்தது என்னன்னு இன்னைக்கு எனக்கு செஞ்சு காட்டறியா?? என்று வம்பிழுத்தான் அவன்.

அவள் “சும்மா போங்க… என்று சிணுங்க “சரி அதை விடு, ஏன் வேலைக்கு போக வேண்டாம்ன்னு நினைக்கிற… நான் அன்னைக்கு பேசினதை மனசுல வைச்சுட்டு இப்படி சொல்றியா??

 

 

“இல்லைங்க… நானா தான் சொல்றேன்… நீங்க சொன்னதும் யோசிச்சேன்… இப்போ முடிவே பண்ணிட்டேன்… ஏன் தப்புன்னு நினைக்கறீங்களா??

 

 

“இல்லை திடிர்ன்னு ஏன் இப்படி முடிவெடுத்த??

 

 

“உங்களோட ஆபீஸ்க்கு வரப் போறேன்… என் புருஷனோட வேலை செய்ய போறேன்… என் விக்ரம் கூடவே இருக்க போறேன்… என்று குஷியாக சொன்னவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

 

 

“ஹேய் வேணாம் மூடு ஏத்தாத, திடிர்னு இப்படி சொல்றியே?? என்ன காரணம், மாமா எதுவும் போன் பண்ணாரா…

 

 

அவள் ஆம் என்பதாய் தலையசைத்தாள், “என்ன சொன்னார்?? என்றான்.

 

 

“அவனுக்கு பெரிசா ஒண்ணும் தண்டனை எல்லாம் கிடைக்காதாம்…

 

 

“அது தான் எனக்கு முதல்லயே தெரியுமே… நீ பெரிசா என்ன எதிர்பார்த்தே… அவனை புடிச்சு ஒரு ஐஞ்சாறு வருஷம் ஜெயில்ல போட்டு, அவன் களி திம்பான்னு நினைச்சியா…

 

 

“தெரியலைங்க…. என் மனசு வேற யோசிக்குது… இவன் மட்டுமில்லைங்க, இவனை போல இன்னும் நெறைய பேரு இருக்காங்க… என்னை போல கட்டின புருஷன்கிட்ட கூட சொல்லத் தயங்கி புழுங்கி புழுங்கி மருகறாங்க…

 

 

“அதுக்கு?? என்றான் அவன் கேள்வியாய்.

 

 

“எதாச்சும் செய்யணும்…

 

 

“என்னடா என்னாச்சு உனக்கு… நீ என்ன செய்ய போறே?? என்றான் அவன்.

 

 

“இல்லைங்க எல்லா பெண்களும் சேர்ந்து தங்களுக்காக போராடணும்… இந்த தண்டனை எல்லாம் அவங்களுக்கு போதாது… நமக்கான உரிமையை நாம தான் கேட்கணும்…

“எதுவும் கேட்டா தான் கிடைக்குங்க… நாளைக்கே எல்லாம் நடந்திடும்னு நான் சொல்லலை… ஆனா அதுக்கு முதல் படியா ஒண்ணு செய்ய தோணிச்சு… என்றவள் அவனை மேலும் ஒண்டி அவன் முகம் பார்த்தாள்.

 

 

“சொல்லு குந்தவை நான் என்ன பண்ணனும்??

 

 

“நான் நம்ம ஆபீஸ்க்கு வர்றதுல…

 

 

“நீ தாராளமா வரலாம்… நீ வந்தா என் வேலையும் ஈசி தான்… நீ வேற என்ன பண்ண நினைக்கிற அதை சொல்லு முதல்ல…

 

 

“சனிக்கிழமைல வேலைக்கு போற பெண்கள் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து ஒரு மீட்டிங் மாதிரி போட்டு… இது போல பிரச்சனைகளை பத்தி பேசலாம்ன்னு…

 

 

“அதோட தீர்வுகளை அலசலாம்ன்னு, நிச்சயமா வெட்டி அரட்டை இல்லைங்க… இது ஒரு கவுன்சிலிங் மாதிரி தான்… வானுவும் மனோதத்துவம் படிக்கறான்… அவனும் வந்து சில விஷயங்களை எங்களுக்கு பகிர்ந்துக்கறேன்னு சொன்னான்…

 

 

“ஆபீஸ்ல இருந்து வர முன்னாடியே அவன்கிட்ட பேசிட்டேன்… அவன் சரின்னு சொல்லிட்டான்… ஒரு இரண்டு மணி நேரம் மட்டும் தான், நீங்க என்ன சொல்றீங்க… என் யோசனை தப்புன்னா சொல்லுங்க…

 

 

ஆதி கண்ணை மூடி யோசித்தான்… “நீ ஆபீஸ் வர்றது பிரச்சனையில்லை… இந்த கிளாஸ் எடுக்கறது எந்தளவுக்கு மாறும்ன்னு நீ நினைக்கிற…

 

 

“நான் உடனே நாளைக்கே இதை செய்ய போறதில்லை… முதல்ல எங்க ஆபீஸ்ல இருக்கவங்களை மட்டும் தான் இதுல இணைக்க போறேன்… அதுக்கு மேல வேற யாரும் வந்தா அப்போ பார்க்கலாம்…

 

 

“ஒரு காரியத்துல இறங்க முன்னாடி பல தடவை யோசி குந்தவை தப்பேயில்லை… இதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை…

 

 

“யோசிச்சிட்டேங்க… இந்த எண்ணம் இப்போ வந்தது இல்லை… ரவி மாதிரி ஒரு கல்பிரிட்டை பார்த்த பிறகுல இருந்து எனக்கு இது போல தான் தோணுது… என்னை புரிஞ்சு நீங்க இருந்த மாதிரி அவங்க வீட்டில இப்படி ஆளுங்க இருப்பாங்களான்னு தெரியலை…

“அட்லீஸ்ட் எங்ககிட்ட பகிர்ந்துக்கறது மூலமா ஒரு ஆறுதல், மனநிம்மதி கிடைக்கும்… ஒரு அந்த மாதிரி ஆளுங்ககிட்ட இருந்து தங்களை பாதுகாத்துக்கவாச்சும் அவங்க தெரிஞ்சுக்குவாங்க…

 

 

“நீ தெளிவா தான் இருக்கே… சரி உன்னிஷ்டம் போல பண்ணு… அதுக்கு என்னாலான உதவியை நான் செய்யறேன்…

 

 

“ரொம்ப சந்தோசமாயிருக்குங்க… என்றவள் மீண்டும் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட போக சற்று சுதாரித்தவன் திரும்பிவிட அவன் இதழின் மேல் அவள் இதழ் பதிந்துவிட அதை விடாமல் பிடித்துக் கொண்டான்.

 

 

அவன் கைகள் அவள் இடையை பிடிக்க கட்டிலில் சாய்ந்தவளின் மேலே அவனும் சரிந்தான்.

 

____________________

 

 

வானதி படிப்பை முடிக்கும் வரை பொறுமை காத்த ஜோதிஷ் அவன் வீட்டினரிடம் பேசி அவளை பெண் கேட்க வந்துவிட்டான்… அதுவரையிலும் குந்தவைக்கு அவர்கள் விஷயம் தெரியாது.

 

 

முதலில் திகைத்தாலும் ஜோதிஷை பற்றி அறிந்தவள் மறுப்பேதும் சொல்லவில்லை. ஆதி குந்தவையை தனியே அழைக்க “குந்தவை அவங்க விஷயம் எனக்கு முன்னாடியே தெரியும்…

 

 

“உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு நினைக்கலை… வானதி படிப்பு முடியறவரை பொறுப்போம்ன்னு அமைதியா இருந்தேன்… இந்த பய அவ எக்ஸாம் முடிஞ்ச மறுநாளே வந்து நிப்பான்னு நானே நினைக்கலை…

 

 

“சாரி செல்லம்… என்றான் அவன்.

 

 

“நீங்க ஒண்ணை என்கிட்ட இருந்து மறைச்சா அதுல காரணமிருக்கும்ன்னு எனக்கு தெரியுங்க… வாங்க போய் மத்த வேலை எல்லாம் பார்க்கலாம்… என்றவள் அவனை அழைத்து சென்றாள்…

 

 

வானதிக்கும் ஜோதிஷிற்கும் வெகு விமரிசையாக திருமணம் நடந்தது… ஆதியின் திருமணத்தின் போது ஜோதிஷ் அங்கு அடித்த கூத்து அவன் ஞாபகத்திற்கு வர ஆதி பதிலுக்கு அவன் திருமணத்தில் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான்.

 

“டேய் கல்யாணம் எனக்குடா… என்று பொறுமையிழந்தான் ஜோதிஷ்.

 

 

“அதுக்கு இப்போ என்னடா பண்ணலாம்… என் கல்யாணத்துல நீ மாப்பிள்ளை கணக்கா சுத்தி சுத்தி வந்து என் மச்சினியை கரெக்ட் பண்ணிட்ட…

 

 

“நான் இப்போ உன் கல்யாணத்துல என் பொண்டாட்டியை தானேடா சுத்தி சுத்தி வர்றேன்… இதுல உனக்கு எங்கடா வேர்க்குது… என்று பதிலுக்கு கொடுத்துவிட்டு குந்தவையை தேடிச் சென்றான் அவன்.

 

____________________

 

 

இரண்டு வருடத்திற்கு பிறகு…

 

 

“என்னங்க குட்டிம்மா எங்க?? என்று வானதி ஜோதிஷிடம் வந்து நின்றாள்.

 

 

“ஒரு குட்டிம்மாவே குட்டிம்மாவை கேட்கிறதே!!! அடடே!!! ஆச்சரிக்குறி… டேய் ஜோதிஷு உனக்கு கவிதை கூட சொல்ல வருதுடா… என்று அவனே அவனை பாராட்டிக் கொள்ள “என்னங்க நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் நீங்க ஜோக் அடிக்கிறீங்க…

 

 

“என்னடி வேணும் உனக்கு… பாப்பாவை அப்போவே மங்களத்துக்கிட்ட கொடுத்து அனுப்பிட்டேன்… அவங்க இந்நேரம் அவளை பாட்டு பாடி தூங்க வைச்சிருப்பாங்க…

 

 

“ப்ளீஸ் வானதி மாமா செம மூட்ல இருக்கேன்… வாயேன் திரும்ப ஒரு ட்ரையல் பார்த்திருவோம்… என்றான்.

 

 

“ஐயோ ஐயோ பேச்சை பாரு ட்ரையலாம் ட்ரையல்… கல்யாணம் முடிஞ்சு வருஷம் ரெண்டாச்சு… பிள்ளைக்கும் ஒரு வயசாச்சு இனிமே என்ன ட்ரையல்…

 

 

“ஹேய் வானதி… அப்போ உனக்கு ஓகேவா நாம டைரக்ட்டா மெயின் பிக்சர்க்கே போய்டலாமா… என்றவன் அவளை அப்படியே தூக்கி கொண்டான்.

 

 

ஜோதிஷ் வானதிக்கு ஒரு வயதில் ஹர்ஷத்வனி என்ற மகள் இருக்கிறாள். ஜோதிஷுக்கு எப்போதும் போல் இதிலும் அவசரம் என்பதால் வானதியே முதலில் உண்டாகினாள்… இதோ கையில் குழந்தையுடன்…

 

 

இவர்கள் செய்யும் அலும்பு தெரியாமல் அறைக்குள் நுழைந்த வானவன் “இங்க என்ன நடக்குது… என்றான்.

 

 

“டேய் மாப்பிள்ளை உனக்கு நேரம் காலமே கிடையாதாடா… என் பொண்டாட்டி வேலையை இப்போ நீ எடுத்துகிட்டியா…

 

 

“என்ன மாமா என்ன சொல்றீங்க??

 

 

“நீ தானே அவளை டெட்டி பியர்ன்னு சொன்னே… இப்போ நீ பார்த்தது மட்டும் என்ன வேலையாம்… என் பொண்டாட்டியை எப்படி கோர்த்துவிட்டு என் செல்லம் எவ்வளவு பீல் பண்ணுச்சு தெரியுமா அன்னைக்கு…

 

 

“நீங்க பீல் பண்ணுறது எல்லாம் வெளிய போய் வைச்சுக்கோங்க இது என்னோட ரூம்…

 

 

“மாப்பிள்ளை அது எங்களுக்கும் தெரியும் இங்க நீ என்ன பண்ணுற… நாங்க இன்னும் அலங்காரம் எல்லாம் முடிக்கவே இல்லையே…

 

 

“ஹேய் வானரம் உண்மையை சொல்லு நீங்க ரெண்டு பேரும் அலங்காரமா பண்ணிட்டு இருந்தீங்க… என்றதும் “டேய் அண்ணா எது கேட்கிறதா இருந்தாலும் உன் மாமாகிட்டயே கேளு அவரே உனக்கு பதில் சொல்லுவாரு… என்று வெளியில் ஓடிவிட்டாள் அவள்.

 

 

“இப்போ திருப்தியா மாப்பிள்ளை உனக்கு… சந்தோசமா அவ கூட கடலை போட்டுட்டு இருந்தேன்… எல்லாம் கூடி வர்ற நேரத்துல தாழி உடைஞ்ச கணக்கா நீ வந்து நிக்குற…

 

 

“மாம்ஸ் அலங்காரம் பண்ண சொன்னா நீங்க ஒத்திகை இல்ல பார்க்கறா போல இருக்கு…

 

 

“எங்க மாப்பிள்ளை அதான் நீ வந்துட்டியே… அதெல்லாம் இருக்கட்டும் மாப்பிள்ளை நீ என்கிட்ட மட்டும் ஒரு உண்மையை சொல்லேன்…

 

 

“என்ன உண்மை மாமா… என்றவனிடம் “நீ எங்க அர்ஷியை லவ் பண்ண தானே…

 

 

“இல்லை மாமா…

 

“டேய்… டேய் ஏன்டா பொய் சொல்ற??

 

 

“நிஜம் மாமா எனக்கு அப்படி ஒரு எண்ணம் இன்னைக்கு காலையில வரைக்கும் இல்லை…

 

 

“அதென்ன மாப்பிள்ளை காலைல வரை…

 

 

“அதுக்கு பிறகு தான் தாலி கட்டிட்டேனே மாம்ஸ்… இனி என் பொண்டாட்டியை நான் லவ் பண்ணாம இருப்பேனா…

 

 

“ஐயோ குழப்புறானே… டேய் மாப்பிள்ளை கடைசியா கேட்குறேன்… இருந்திச்சா இல்லையா… என்று எஸ்ஜே சூர்யா ரேஞ்சுக்கு மண்டை குழம்பி கேள்வி கேட்டான் அவன்.

 

 

“மாமா உங்க சந்தேகம் என்ன நானும் அர்ஷியும் முதல்ல இருந்து லவ் பண்ணுறோமா இல்லையான்னு தானே…

 

 

ஆமாம் என்பதாய் ஜோதிஷ் தலையசைக்கவும் “அப்படி ஒரு எண்ணம் எங்க ரெண்டு பேருக்குமே கிடையாது…

 

 

“அப்புறம் எப்படி கல்யாணம் பண்ணீங்க…

 

 

“மாமா அக்கா ரொம்ப ஆசைப்பட்டா நான் தான் அர்ஷியை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு, அப்பா அம்மாவும் அதே தான் விரும்புனாங்க… ஏன் உங்க பொண்டாட்டி வானரம் கூட அவளோட பிரண்ட்ன்னு சொன்னதும் டபுள் ஓகே சொன்னாளே…

 

 

“எல்லார் விருப்பமும் நாங்க சேரணுங்கறது தான்… அதான் இப்போ நடந்திச்சுல சந்தோசம் தானே… உங்களுக்கும் மாமாவுக்கும் கூட சந்தோசம் தானே??

 

 

“எனக்கு டபுள் ஓகே மாப்பிள்ளை… என்றவாறே உள்ளே வந்தான் ஆதி. வானவன் சட்டென்று எழுந்து நின்றான்.

 

 

‘அடப்பாவி இம்புட்டு நேரமும் இங்க நான் ஒருத்தன் இருந்தேன், கொஞ்சம் கூட மரியாதை இல்லாம மாமான்னு பார்க்காம காலை ஆட்டிட்டு உட்கார்ந்திருந்தான்…

 

‘இப்போ என்னடான்னா பொசுக்குன்னு எழுந்து நின்னு மரியாதை எல்லாம் கொடுக்கறான்… என்னடா நடக்குது இங்க என்னை கண்டா எல்லாருக்கும் எப்படி இருக்கு… நான் என்ன அவ்வளவு காமெடி பீஸாவா தெரியறேன்… என்று மனதிற்குள் பேசிக் கொண்டான் அவன்.

 

 

“உட்காரு வானவா… என்றான் ஆதி.

 

 

“இருக்கட்டும் மாமா… என்றவன் நின்றுக் கொண்டே பேச ஜோதிஷ் அவனை முறைப்பதை அவன் திரும்பாமலே கண்டு கொண்டான் அவன்.

 

 

“அர்ஷியை உனக்கு கட்டி வைக்கணும்ன்னு எண்ணம் எல்லாம் எனக்கு எப்பவும் இல்லை வானவா… நல்ல வரன் வந்தா அவளுக்கு முடிச்சிடணும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்…

 

 

“உங்க சித்தப்பா வந்து மறுபடியும் என்கிட்ட அர்ஷி விஷயமா பேசவும் உங்கக்கா என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிட்டா… என் தம்பியை பார்த்தா நல்ல பையனா தெரியலையா…

 

 

“அர்ஷியை என் தம்பிக்கு தான் கட்டணும்ன்னு ஒரே பிடிவாதம் அவளுக்கு… பார்க்க போனா எனக்கு ரொம்பவே சந்தோசம் தான் உன் போல ஒருத்தன் அவளுக்கு தேடினாலும் கிடைக்க மாட்டான்… என்று சிலாகித்து சொன்னான் ஆதி.

 

 

“டேய் ஜோ நீ என்னடா இங்க பண்ணுற??

 

 

“அது வந்து மாமா அவர் இங்க…

 

 

“மாப்பு போதும் நிப்பாட்டு, நாங்க பேசிக்கறோம்… நீ கண்டினியூ பண்ணு…

 

 

“மாம்ஸ் ஒண்ணுமே சொல்லாம போறீங்க?? என்று கிண்டலடித்தான் வானவன்.

 

 

“மாப்பிள்ளை அதான் உன் பெரிய மாமன் எல்லாம் பேசிட்டானே, எனக்கு எங்கயும் மிச்சம் வைச்சானா என்ன?? இருந்தாலும் உண்மையை சொல்றேன் மாப்பிள்ளை…

 

 

“நீ அர்ஷிக்கு பொருத்தமா இல்லை அவ உனக்கு பொருத்தமான்னு எனக்கு சொல்லத் தெரியலை… நீங்க ரெண்டு பேருமே ரொம்ப பொருத்தம்… ஆள் பொருத்தம் மட்டுமில்லை… உங்க மனசு பொருத்தமும் சேர்த்து தான் சொல்றேன்… என்றுவிட்டு அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

 

 

அர்ஷிதாவை வானதி அழைத்து வந்து அறைவாயிலில் விட்டு சென்றாள். “ஹேய் வானதி போகாதடி பயமாயிருக்கு எனக்கு… என்றவளிடம் “இதுக்கு தான் எங்களை போல லவ் பண்ணியிருக்கணும்ன்னு சொல்றது…

 

 

“பரவாயில்லை இனியும் ஒண்ணும் தாமதம் இல்லை… எங்க அக்கா மாமா மாதிரி புருஷன் பொண்டாட்டி ஆனப்பிறகு லவ் பண்ணுங்க என்றுவிட்டு அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

 

வாசலில் கேட்ட சத்தத்தில் வானவன் வெளியில் வந்தான். அர்ஷிதா நடுக்கமாக வியர்வை அரும்ப நின்றதை பார்த்தவன் மனதில் ஒய்யாராமாக அவள் வந்து அமர்ந்திருந்தாள் அக்கணம்.

 

 

“உள்ள வா அர்ஷு… என்றவன் அவள் கையில் இருந்த கோப்பையை வாங்கி மேஜை மீது வைத்துவிட்டு கதவை அடைத்து விட்டு வந்தான்… அர்ஷிதா இன்னமும் நின்றுக் கொண்டேயிருந்தாள்.

 

 

“அர்ஷு எவ்வளவு நேரம் ஆனாலும் எதுவுமே மாறப் போறதில்லை… நீயும் நானும் தான் இந்த அறையில, வா வந்து உட்காரு… உன்கிட்ட பேசணும்… என்றவன் அவள் கைப்பிடித்து அவளை உட்கார வைத்தான்.

 

 

“இங்க பாரு நான் தான் மாப்பிள்ளைன்னு சொன்னதும் நீ என்ன பீல் பண்ணன்னு எனக்கு தெரியாது… நானும் பெருசா எதுவும் பீல் பண்ணலை… உன் கழுத்துல தாலி கட்டும் போது இனி நீ தான் எனக்கு எப்பவும்ன்னு நினைச்சு தான் தாலியே கட்டினேன்…

 

 

“இன்னைக்கே நம்ம தாம்பத்தியம் தொடங்கணும்ன்னு எந்த அவசியமும் இல்லை… நீ அதையெல்லாம் நினைச்சு பயப்படவும் தேவையில்லை… இன்னைல இருந்து நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க ஆரம்பிப்போம்…

 

 

“புதுசா நாம புரிஞ்சுக்க என்ன இருக்குன்னு உனக்கு தோணலாம்… நீ ஒரு இடத்துல நான் ஒரு இடத்துலன்னு இருக்கும் போது என்னோட வெளித்தோற்றம் வெளியிடத்துல நான் எப்படி இருப்பேன்னு தான் நீ பார்த்திருப்ப… எல்லாருக்கும் நான் நல்லவனாவே கூட தெரிவேன்… கூடவே இருக்கும் போது தான் என்னோட பிளஸ் மைனஸ்ன்னு எல்லாமே உனக்கு தெரிய வரும்…

 

 

“அது போல தான் உன்கிட்டயும் சில குணங்கள் இருக்கும்… அதையெல்லாம் நாம புரிஞ்சு இன்னைக்கு இருந்து லவ் பண்ண ஆரம்பிப்போம்… சரியா… என்றதும் தான் அவள் மனதின் பாரம் குறைந்தது.

 

 

“தேங்க்ஸ்ங்க… உள்ள வரும் போது கொஞ்சம் பயமா தான் இருந்துச்சு… நீங்க பேசவும் தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு…

 

 

“அதுக்காக ரொம்ப நாள் எல்லாம் வெயிட் பண்ண முடியாதுன்னு உன்னை இவ்வளவு நெருக்கத்துல பார்க்கும் போது தோணுது அர்ஷு… என்றவனின் பார்வை ஏதோ செய்ய அவள் தலை கவிழ்ந்தாள்…

 

 

“நான் அவசரக்காரன் எல்லாம் இல்லை… அதுக்குன்னு ரொம்ப நிதானம் வேண்டாம்ன்னு சொன்னேன்… பயப்படாதே…

 

 

“எனக்கு தூக்கம் வருது…

 

 

“சரி படுத்துக்கோ… என்று கூறவும் அவள் தலையணையை எடுக்க “எங்க போறே? என்றான் அவன். “கீழே படுக்க… என்றாள் அவள்.

 

 

“அதெல்லாம் வேணாம், நீ கீழ படுக்க நான் கட்டில்ல சுகமா படுக்கவா… ரெண்டு பேருமே இனி இங்க தான்… அப்புறம் எப்படி அண்டர்ஸ்டான்டிங் வர்றது…

 

 

“நான் தான் சொன்னேன்ல எதுவும் நடக்காது, தைரியமா படு… என்று கூற அவள் கட்டிலில் படுத்தாள்.

 

 

“அர்ஷி என்னை பார்த்து படுக்கலாமே… என்று கூற அவள் திரும்பி படுத்தாள். வானவன் அருகில் வந்து அவள் கையை மென்மையாய் பிடித்துக் கொள்ள அவளுக்கு உள்ளே எதுவோ செய்தது. “தூங்கு… என்றவன் கண்ணை மூடி தூங்க ஆரம்பிக்க அவளும் நிம்மதியாய் உறங்க ஆரம்பித்தாள்

 

____________________

 

 

வானவனிடம் பேசிவிட்டு ஆதி அவர்கள் வீட்டிற்கு செல்ல குந்தவை கட்டிலில் கண்ணீருடன் படுத்திருந்தாள்… “என்ன குந்தவை என்னாச்சு… எதுக்கு கண்ணு கலங்குற… என்றான் ஆதி.

 

 

“விக்ரம் நாம மட்டும் இந்த வீட்டில தனியா இருக்கோம்… அர்ஷி இனி இங்க இல்லையே… ரொம்ப கஷ்டமா இருக்குங்க… என்றவள் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

 

 

“ஹேய் லூசா நீ அவ எங்கயும் போய்ட கூடாதுன்னு தானே உன் தம்பிக்கே கட்டி வைச்ச, அப்புறம் எதுக்கு அழறே… ஏதோ நான் இந்த டயலாக் சொன்னாலும் பரவாயில்லை நீ ஏன் சொல்றே??

 

 

“போங்க… நான் எவ்வளவு வருத்தமா சொல்றேன் இப்படி சொல்றீங்க… என்று மூக்கை உறிஞ்சினாள் அவள்.

 

 

“எனக்கும் கஷ்டமா தான் இருக்கு, ஆனா அவ எங்க போயிருக்கா சொல்லு… இதோ நாலு வீடு தள்ளி இருக்கா அவ்வளவு தானே… நீ எப்படி இங்க வந்தியோ அதே போல தானே இதுவும்…

 

 

“நாம இனி இரண்டு பேரு இல்லையே… உள்ளே தான் நம்ம குட்டி இருக்காங்களே அப்புறம் என்னடா…

 

 

குந்தவை சற்று சமாதானமாக “என்ன சொல்றாங்க என்னோட குட்டி குந்தவை… என்று அவன் கேட்க “உள்ளே இருக்கறது குட்டி குந்தவையில்லையாம் குட்டி விக்ரமாம்… என்றாள் அவள்.

 

 

“யாராயிருந்தா என்ன குந்தவை எனக்கு சந்தோசம் தான்… என்றவன் அவள் வயிற்றில் மென்மையாய் முத்தமிட்டான். குழந்தை சட்டென்று உள்ளே அசைந்து கொடுக்க ஆதி சிலிர்த்து போனான்.

 

 

முதல் முறை அவன் குழந்தையின் அசைவை உணர்கிறான் அல்லவா… “என்னங்க குட்டி அசையுறானா… அப்பா வந்திருக்கார்ன்னு தெரிஞ்சு போச்சு… இன்னைக்கு காலையில இருந்து தான் நல்லா அவன் மூவ் பண்ணுறது தெரியுது…இப்போ உங்களுக்கும் தெரிஞ்சு போச்சு… என்றாள்.

 

 

“குந்தவை நாம ரெண்டு பேரும் இப்படி இருப்போம்ன்னு நம்ம காலேஜ் டேஸ்ல நினைச்சிருப்போமா… என்றான் ஆதி.

 

 

அவன் மேல் சாய்ந்து அமர்ந்திருந்த குந்தவை “இல்லைங்க நினைக்கவே இல்லை… ஆனா அப்போவே தெரிஞ்சிருந்தா இவ்வளவு சந்தோசமா இருந்திருப்போமான்னு தெரியலை…

 

 

“நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு அழகா ஆரம்பிச்ச நம்ம தாம்பத்தியத்துக்கு சாட்சியா இதோ நம்ம குட்டி பாப்பா என் வயித்துல… என்று சொல்லிக் கொண்டே அவன் கையை எடுத்து அவள் வயிற்றின் மீது வைத்துக் கொண்டாள்…

 

 

“போதும் குந்தவை ரொம்ப நேரமாச்சுடா தூங்கு… என்றவனை பெருமிதமாய் நோக்கியவள் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட பதிலுக்கு அவனும் அவள் நெற்றியில் இதழ் ஒற்றினான் அவன் அவள் தலைகோத மெதுவாய் கண்ணை மூடியவள் நிம்மதியுடன் அவன் மேல் சாய்ந்து உறங்க ஆரம்பித்தாள்…

 

 

புரியாத உறவில் ஆரம்பித்த அவர்கள் வாழ்க்கை நல்ல புரிதலை கொண்டு புனிதமாய் மாறி இனிமையாய் சென்றுக் கொண்டிருக்கிறது….

 

 

காதலாய் தெளிந்த மேகங்கள்

கானலாய் ஓடி மறைந்ததென்ன…..

கண்ணிலே தெரிந்த காதல் அலை

கானலின் அலையாய் கரைந்ததென்ன….

காற்றில் நாணல் வளைந்தாலும்

காதல் என்றும் வளைவதில்லை

காற்றில் பறக்கின்ற காகிதமாய்

காதல் மாறிப் பறக்கவில்லை….

கண்ணை ஏமாற்றும் கானலோ….

காற்றில் ஒடியாத நாணலோ….

கருத்தில் கலந்திட்ட நிஜமோ காதல்

 

 

 

 

Advertisement