Monday, April 29, 2024

    Salasalakkum Maniyosai

    மணியோசை  -3               அடி வாங்கியவனின் தோள்பட்டை கழன்று விடும் போல வலித்தது. திரும்பி அவளிடம் சண்டை போடும் தெம்பில்லாமல் இரவுறக்கமும் இல்லாமல் சோர்வுடன் மெதுவாய் காரை ஓட்டிக்கொண்டு  சென்றுவிட்டான். வீட்டில் என்னவானது என கேட்ட தாயிடமும், தன் அக்காவிடமும் கூட இடித்துக்கொண்டேன் என்று சொல்லி சமாளித்தான். ‘எப்படி சொல்வானாம் ஒரு சிறு பெண்ணின் கையால் அடிவாங்கினேன் என்று?’...
    மணியோசை – 8      பூ வைத்து திருமணத்தை உறுதி செய்யும் படலம் நிறைவாய் நடந்து முடிந்தது. காபியை தரும் பொழுது கண்மணியை பார்த்ததோடு சரி. அதன் பின் அவளை பார்க்க முயன்று முடியாமல் போக தனியாக அழைத்து பேசிவிடலாமா என்று நினைத்தான். நினைக்கத்தான் செய்தான். ஆனால் அதை அவதானித்ததை போல கண்மணி இருந்த அறை வாசலில்...
    மணியோசை – 6     வீட்டில் சாமி கும்பிடுவதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்துவிட்டார் பேச்சி. முதல் நாளில் இருந்தே தன் கணவர் முத்தரசன் படத்தின் முன்பு கண்ணீருடன் அமர்ந்திருந்தார். மாரிமுத்து குடும்பமும் வந்துவிட அனைவரின் இதயத்திலும் துக்கம் நிறைந்து கிடந்தது. சங்கரி மாரிமுத்துவின் உடன் பிறப்பு. பேச்சி சங்கரிக்கு சின்னம்மா மகள் என்பதால் இரு பெண்களையும் ஒரே...
    மணியோசை – 5             இப்படி கண்மணி திடீரென வந்து நிற்பாள் என்று தெரியாத கார்த்திக் மனதில் ஒருகணம் சந்தோஷ சாரல். அதன் பின்பு தான் அனைத்தும் ஞாபகம் வர, ‘சண்ட சண்டடா கார்த்தி. அவள பாக்காத’ என சொல்லிக்கொண்டாலும் பார்வை என்னவோ அவளின் மீது நொடிக்கொருதரம் படிந்து மீண்டது. குருவம்மாவிடம் பேசினாலும் பார்வை அவளை வட்டமிட அதிலேயே...
    மணியோசை – 7           “சுத்த உளறலா இருக்கு? என்ன ஆச்சு உனக்கு. பிரச்சனை பண்ணிட்டு இருக்க? உன் மூஞ்சியே சரியில்ல. என்னை பொண்ணு பாக்க வந்தா உனக்கென்ன வந்துச்சு? இந்த ஊருக்கு வந்த சோலிய பாத்துட்டு கெளம்பிட்டே இரு...” என கோவமாய் சொல்ல, “ஏன் என் முகத்துக்கு என்னவாம்? இல்ல இப்ப என்னதான் சொல்ல வர?...” “யோவ்...
    மணியோசை – 14                 மணிகண்டன் வெளிநாட்டில் இருந்தபடியே அவருக்கு வேண்டிய ஆட்களின் மூலமாக கார்த்திக்கிற்கு வேலை மாற்றுதலை ஏற்பாடு செய்ய இது கார்த்திக்கிற்கே தெரியாது. ஆனால் கண்மணி ஆடிவிட்டாள். “மூட்டபூச்சிக்கு பயந்து வீட்ட கொழுத்துவாகளா? நல்ல கதையா இருக்கே?...” என கண்மணி இவனிடம் வெடிக்க கார்த்திக் நிலை தான் பரிதாபம். “நான் இதுக்கு காரணமில்லடி. எனக்கும்...
    மணியோசை – 10        திணற திணற ஒருவனை கதரவைக்க முடியுமானால் அது சாப்பாடு போட்டுத்தான் என்பதை போல அவன் நிமிர்ந்து பார்க்கும் பாத்திரங்களில் இருந்து எல்லாம் எடுத்து வைத்தனர். “அடப்பாவிங்களா? ஒரு மாசத்துக்கு சாப்பிடவேண்டியத்தை ஒரே நேரத்துல என் வயித்துக்குள்ள தள்ளுறேங்களே? நீங்கலாம் நல்லா வருவீங்கடா?” என புலம்பிக்கொண்டே எங்கே எதையாவது பார்த்து அதை மீண்டும்...
    மணியோசை – 13       மேலும் இரண்டு மாதங்கள் கடக்க மகாதேவி இப்போதெல்லாம் கண்மணியிடம் வைத்துகொள்வதே இல்லை. கண்மணியும் அவரிடம் பேசாமல் இருப்பதும் இல்லை. ஆனால் கேட்டதற்கு பதில் சொல்லிவிடுவார். அந்தளவிற்கு இருந்தாலே போதும் என கண்மணியும், வீட்டினரும் நினைத்தனர். ஆனால் மகாதேவியின் மனதில் நீருபூத்த நெருப்பாய் கண்மணி மீதான கோபம் கனன்றுகொண்டே தான் இருந்தது. ஒருநாளாவது...
    மணியோசை – 12           விடியற்காலை வழக்கமான நேரத்தில் கண்மணி கண்விழிக்க அவளை அணைத்தவாறு படுத்திருந்தான் கார்த்திக். அவள் அசைந்த சலனத்தில் அவனின் உறக்கமும் கலைய அவளை எழ முடியாதபடி மீண்டும் அணைக்க, “இந்த வேல தான வேண்டாம்ன்றது. விடுங்க என்ன...” என்று அவனை விட்டு திமிறி எழுந்தவளின் கையை பிடித்தவன், “ஏய் கிண்கிணிமங்கினி, இங்க மாடும் இல்ல....
    மணியோசை – 11            கண்மணியின் பார்வையை கண்ட மகாதேவியுனுள் ஏதோ பதட்டம் வந்தது.  இவளிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என நினைத்த மகாதேவி முகத்தை சிரித்தபடி வைத்துக்கொண்டு மற்றவர்களை கவனிக்க ஆரம்பித்தார். சங்கரிக்கும் பேச்சிக்கும் மகாதேவியின் கவனிப்பு கொஞ்சம் ஆறுதலாய் இருக்க கட்டிக்கொடுத்துவிட்ட பின் இனி எதையும் நினைக்க கூடாது என நினைத்தனர். மதிய விருந்து தடபுடலாய் ஏற்பாடாகி...
    மணியோசை – 4          நாட்டரசனுக்கு சாப்பிட கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்தவள் கொஞ்சம் பயத்துடன் தான் உள்ளே நுழைந்தாள். கிருஷ்ணன் வந்திருப்பான் என்று பார்த்தால் இல்லை. சங்கரியிடம் அண்ணன் எங்கே என கேட்டால் அதற்கு கிடைக்கும் பதிலே தனியாக இருக்கும். “என்னைக்கும் இல்லாத திருநாளா எதுக்கு அண்ணன தேடறவ? என்னத்த பண்ணி வச்சுட்டு வந்திருக்க? உன்ன வச்சு...
    மணியோசை – 16                    “நான் கேள்விப்பட்டது உண்மையா கார்த்திக்?...” மகாதேவியின் குரலில் அப்படி ஒரு இறுக்கம். “என்னன்னே சொல்லாம உண்மையா இல்லையான்னு நான் எப்படி சொல்றதும்மா?. என்ன கேள்விப்பட்டீங்க?...” கார்த்திக்கிற்கு இப்பொழுது விஷயம் விளங்கிவிட்டது. எதுவாகினும் அது அவரின் வாயாலையே வரட்டும் என அமர்ந்திருந்தான். “விளையாடாதே கார்த்திக். அம்மாவுக்கு உன் போக்கு சுத்தமா பிடிக்கலை. உன்...
    மணியோசை  -28                 பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கார்த்திக்கின் விழிகளுள் உறக்கம் வந்து அமர்ந்துகொள்ள கண்ணை சோம்பலாய் மூடி மூடி திறக்க அதை பார்த்த நாட்டரசன் கண்மணியிடம் காட்ட, “மாப்பிள போயி ஒறங்குக...” என சொல்ல கண்மணியை பார்த்தான் கார்த்திக். அவளும் செல்லுமாறு தலையசைக்கவும், “இல்லை, பரவாயில்லை. நீங்க சொல்லுங்க...” என கேட்க அதன் பின்னால் பெண் வீட்டினர் பற்றி...
    மணியோசை – 15             “ஏய் கிங்கிணிமங்கினி உன்னை எப்ப கிளம்ப சொன்னா இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க? நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பறப்பவே சொல்லிருந்தேன்ல இவனை கிளப்பிட்டு நீயும் கிளம்பி ரெடியா இருன்னு...” என்று கார்த்திக் வெடுவெடுக்க, “ஏன் பேசமாட்டீரு? உம்ம புள்ள படுத்தற பாட்டுல எனக்குத்தான் தாவு தீந்துபோவுது. போம்மைய்யா. அம்புட்டு வெசனம்னா நீரே...
    மணியோசை – 17         “இந்தா மணி மொத உன் மாமியார போய் பாரு. அந்தம்மா வந்ததுல இருந்து ஒரு வா தண்ணி குடிக்கல. போ போயி அவுகள சாப்புட வர சொல்லுத்தா...” பேச்சி அனுப்பவும் அத்தனை எரிச்சலுடன் வந்தால் கண்மணி. “இந்தம்மாவுக்கு ஊட்டித்தேன் விடனும்” என முணகிக்கொண்டு, “சாப்புட வாங்கத்தே. மதியமாவ போவுது பாருங்க...”  என்றவளை திரும்பி...
    மணியோசை – 27 (2) சங்கரி மாட்டுதொழுவத்தை சுத்தம் செய்துகொண்டிருக்க அதை காண்பித்துகொண்டே அருளை குளிப்பாட்டினார் பேச்சி. அவனும் குதூகலத்துடன் குளித்து முடிக்க கண்மணி குழந்தைக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வந்தாள். “குளிச்சிட்டா தலைய தொவட்ட ஒத்தாளு வந்து சொல்லனுமோ?...” என அதற்கும் திட்ட, “அட என்னத்திக்கி பொடுபொடுன்னு இருக்கறவ? கம்மின்னே கெடக்கமாட்ட. அவ அங்க இருக்கப்ப மவ...
    மணியோசை  – 21        “கண்மணி என்ன சொல்ற?...” சந்திரா பதறிக்கொண்டு வர கார்த்திக்கின் பார்வை மகாதேவியிடம் சென்றது. அவரோ நடப்பதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை போல அமர்ந்திருந்தார். முகத்தில் அத்தனை திண்ணக்கம். “யார் என்னை என்ன செய்துவிட முடியும்? உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள்” என முகத்தில் காண்பித்தார். அதை கண்மணியும் கவனிக்கத்தான் செய்தாள். “அம்மா, நீக...
    மணியோசை  - 22               யாரும் இல்லாமல் அரவமற்றுகிடந்த வீட்டில் குழந்தையின் அழுகுரல் கேட்க அதுவரை இருந்த அமைதி கலைய வேகமாய் எழுந்து சென்று மகனை தூக்கிகொண்டாள் கண்மணி. “அம்மா இங்கனதேன் இருந்தேன்ய்யா. அழுவாத...” என மகனை தோளில் போட்டு சமாதானம் செய்தவள் அவனின் அழுகை குறையவும், “பசிக்கிதா அருளு?...” என கேட்டுக்கொண்டே வெளியில் வந்தாள். கார்த்திக்கை பார்க்க...
    மணியோசை – 25                நாட்டரசனும் பேச்சியும் பேரனிடம் பிஸியாக சங்கரி வந்தவர்களுக்கு சாப்பிட தயார் செய்ய உள்ளே சென்றுவிட்டார். கண்மணியும் பேசிக்கொண்டிருக்க யாரையும் தொந்தரவு செய்யாது அமைதியாக அமர்ந்துகொண்டான் கார்த்திக். அவர்களுக்கு கார்த்திக், கண்மணி வரும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதால் திடீரென அவர்களை பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டனர். கார்த்திக்கின் வீட்டிற்கு வருவதை கண்மணி சொன்னபோது கூட தங்கள்...
    மணியோசை – 23          “கிங்கினிமங்கினி உன்னை யாருடி சொத்தை பத்தி அம்மாட்ட பேச சொன்னது? பிபி ஏறி நிக்கறாங்க பாரு...” கார்த்திக் மனைவியை கடிந்து பேச, “ஆமா நா கேட்டதும் ஒங்கம்மா கீளுன்னு கேட்டுட்டு முத்திர பதிச்சுருவாக. போவும்...” அலட்சியமாய் கண்மணி சொல்ல, “இதுக்குத்தான் வரவேண்டாம்னு சொன்னேன். கேட்டியா? இந்த பேச்சு தேவையா நமக்கு?...” என மகனின் முகத்தை...
    error: Content is protected !!