Friday, March 29, 2024

    Salasalakkum Maniyosai

    மணியோசை – 26              நன்றாக உறங்கி எழுந்த கார்த்திக் சோம்பலாய் உடலை வளைத்து நெளித்தான். வெயில் வீட்டிற்குள் வந்து சுள்ளென அடித்துகொண்டிருக்க அத்தனை நாள் அலுப்பும் ஒரே நாளில் தீர்ந்துவிட்டதை போல புத்துணர்ச்சியாக இருந்தது கார்த்திக்கிற்கு. மெதுவாய் எழுந்து காலைகடன்களை முடித்துக்கொண்டு வந்தவன் தனது மொபைலை எடுத்து கண்மணிக்கு அழைக்க நினைத்தான். நேரத்தை பார்க்க அது...
    மணியோசை – 25                நாட்டரசனும் பேச்சியும் பேரனிடம் பிஸியாக சங்கரி வந்தவர்களுக்கு சாப்பிட தயார் செய்ய உள்ளே சென்றுவிட்டார். கண்மணியும் பேசிக்கொண்டிருக்க யாரையும் தொந்தரவு செய்யாது அமைதியாக அமர்ந்துகொண்டான் கார்த்திக். அவர்களுக்கு கார்த்திக், கண்மணி வரும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதால் திடீரென அவர்களை பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிவிட்டனர். கார்த்திக்கின் வீட்டிற்கு வருவதை கண்மணி சொன்னபோது கூட தங்கள்...
    “உங்களை எல்லாம் நான் அங்க விட்டதே இல்லை தெரியுமா? கீழே கிடக்கற எதையாவது வாய்ல எடுத்து வச்சுட்டானா என்ன பன்றது?  அவனுக்கு அங்க இடம் வசதிப்படுமோ என்னமோ?...” மகாதேவிக்கு எரிச்சலாக வந்தது தன் பேச்சிற்கு இங்கே எந்த மதிப்பும் இல்லை என்று. “அம்மா கொஞ்சம் பேசாம இருங்கன்னு சொல்றேன்ல. திரும்ப திரும்ப பேசிட்டேருக்கீங்க?...” என பொறுமையிழந்து...
    மணியோசை – 24                “கார்த்திக் என்னப்பா லக்கேஜை அதுக்குள்ளே பேக் பன்ற?...” மணிகண்டன் வந்து கேட்கும் பொழுது வீட்டில் மகாதேவியை தவிர வேறு எவருமில்லை. கண்மணியுடன் சந்திரா பெரியப்பாவின் வீட்டிற்கு சென்றிருக்க கார்த்திக் தான் அவர்களின் உடமைகளை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தான். “இன்னைக்கு நைட் கிளம்பறோம் அப்பா. பங்க்ஷன் முடியவும் கிளம்பிடுவோம். அதான் பேக் பன்றேன்...”  “இன்னும் ஒரு நாள் இருந்துட்டு...
    மணியோசை – 23          “கிங்கினிமங்கினி உன்னை யாருடி சொத்தை பத்தி அம்மாட்ட பேச சொன்னது? பிபி ஏறி நிக்கறாங்க பாரு...” கார்த்திக் மனைவியை கடிந்து பேச, “ஆமா நா கேட்டதும் ஒங்கம்மா கீளுன்னு கேட்டுட்டு முத்திர பதிச்சுருவாக. போவும்...” அலட்சியமாய் கண்மணி சொல்ல, “இதுக்குத்தான் வரவேண்டாம்னு சொன்னேன். கேட்டியா? இந்த பேச்சு தேவையா நமக்கு?...” என மகனின் முகத்தை...
    மணியோசை  - 22               யாரும் இல்லாமல் அரவமற்றுகிடந்த வீட்டில் குழந்தையின் அழுகுரல் கேட்க அதுவரை இருந்த அமைதி கலைய வேகமாய் எழுந்து சென்று மகனை தூக்கிகொண்டாள் கண்மணி. “அம்மா இங்கனதேன் இருந்தேன்ய்யா. அழுவாத...” என மகனை தோளில் போட்டு சமாதானம் செய்தவள் அவனின் அழுகை குறையவும், “பசிக்கிதா அருளு?...” என கேட்டுக்கொண்டே வெளியில் வந்தாள். கார்த்திக்கை பார்க்க...
    மணியோசை  – 21        “கண்மணி என்ன சொல்ற?...” சந்திரா பதறிக்கொண்டு வர கார்த்திக்கின் பார்வை மகாதேவியிடம் சென்றது. அவரோ நடப்பதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை போல அமர்ந்திருந்தார். முகத்தில் அத்தனை திண்ணக்கம். “யார் என்னை என்ன செய்துவிட முடியும்? உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள்” என முகத்தில் காண்பித்தார். அதை கண்மணியும் கவனிக்கத்தான் செய்தாள். “அம்மா, நீக...
    மணியோசை – 20                 மகாதேவிக்கு வந்திருக்கும் காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாய் குறையவும் பேச்சியும் சங்கரியை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் ஊர் சென்றுவிட்டார். மகாதேவி ஜாடைமாடையாக அவர்கள் இருப்பை சுட்டிக்காட்டி குத்தி பேச அத்தனை ரோஷக்காரரான பேச்சிக்கு பொறுக்கவும் முடியவில்லை. வெடுக்கென பதிலும் பேச முடியவில்லை. அப்படியே விட்டுவிட்டு கிளம்பினால் எங்கே மகள் சிரமப்படுவாளோ என எண்ணியே மகாதேவியின் பேச்சுக்களை சகித்துக்கொண்டு...
    மணியோசை – 19                 பாபநாசம் சென்று வந்த பிறகு ஊருக்கு சென்ற மகாதேவி பின் யாரிடமும் பேசவில்லை. கார்த்திக்கிடம் சுத்தமாகவே இல்லை. அவனாக போன் செய்தாலும் எடுத்து பேசுவதும் இல்லை. சந்திராவிடம் தன்னை மதிக்காதவர்களிடம் பேச முடியாது என வீராப்பு காட்டினார். அதை தெரிந்த கார்த்திக் அதற்கும் மேல் முறுக்கிகொண்டான். “எதையும் புரிஞ்சுக்காம இவங்களா முடிவு செஞ்சு இதுதான்...
    மணியோசை – 18                 கண்மணிக்கு தான் படுத்ததும் கண் மூடியதும் தான் தெரியும். நொடியில் உறங்கியும் போனாள் ஆழ்ந்த உறக்கத்திற்கு. அரைமணிநேரம் மட்டுமே கடந்திருக்கும். மகாதேவியின் காதருகே எதுவோ ஓடுவதை போல சப்தம் கேட்க எரிச்சலாகி, “ஏய் சந்திரா, எந்திச்சு அந்த மோட்டாரை ஆஃப் பண்ணுடி...” என சந்திராவை உறக்கத்தினூடே எழுப்பினார். “ஏய் எந்திடி. சந்திரா...” என...
    மணியோசை – 17         “இந்தா மணி மொத உன் மாமியார போய் பாரு. அந்தம்மா வந்ததுல இருந்து ஒரு வா தண்ணி குடிக்கல. போ போயி அவுகள சாப்புட வர சொல்லுத்தா...” பேச்சி அனுப்பவும் அத்தனை எரிச்சலுடன் வந்தால் கண்மணி. “இந்தம்மாவுக்கு ஊட்டித்தேன் விடனும்” என முணகிக்கொண்டு, “சாப்புட வாங்கத்தே. மதியமாவ போவுது பாருங்க...”  என்றவளை திரும்பி...
    மணியோசை – 16                    “நான் கேள்விப்பட்டது உண்மையா கார்த்திக்?...” மகாதேவியின் குரலில் அப்படி ஒரு இறுக்கம். “என்னன்னே சொல்லாம உண்மையா இல்லையான்னு நான் எப்படி சொல்றதும்மா?. என்ன கேள்விப்பட்டீங்க?...” கார்த்திக்கிற்கு இப்பொழுது விஷயம் விளங்கிவிட்டது. எதுவாகினும் அது அவரின் வாயாலையே வரட்டும் என அமர்ந்திருந்தான். “விளையாடாதே கார்த்திக். அம்மாவுக்கு உன் போக்கு சுத்தமா பிடிக்கலை. உன்...
    மணியோசை – 15             “ஏய் கிங்கிணிமங்கினி உன்னை எப்ப கிளம்ப சொன்னா இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க? நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பறப்பவே சொல்லிருந்தேன்ல இவனை கிளப்பிட்டு நீயும் கிளம்பி ரெடியா இருன்னு...” என்று கார்த்திக் வெடுவெடுக்க, “ஏன் பேசமாட்டீரு? உம்ம புள்ள படுத்தற பாட்டுல எனக்குத்தான் தாவு தீந்துபோவுது. போம்மைய்யா. அம்புட்டு வெசனம்னா நீரே...
    மணியோசை – 14                 மணிகண்டன் வெளிநாட்டில் இருந்தபடியே அவருக்கு வேண்டிய ஆட்களின் மூலமாக கார்த்திக்கிற்கு வேலை மாற்றுதலை ஏற்பாடு செய்ய இது கார்த்திக்கிற்கே தெரியாது. ஆனால் கண்மணி ஆடிவிட்டாள். “மூட்டபூச்சிக்கு பயந்து வீட்ட கொழுத்துவாகளா? நல்ல கதையா இருக்கே?...” என கண்மணி இவனிடம் வெடிக்க கார்த்திக் நிலை தான் பரிதாபம். “நான் இதுக்கு காரணமில்லடி. எனக்கும்...
    மணியோசை – 13       மேலும் இரண்டு மாதங்கள் கடக்க மகாதேவி இப்போதெல்லாம் கண்மணியிடம் வைத்துகொள்வதே இல்லை. கண்மணியும் அவரிடம் பேசாமல் இருப்பதும் இல்லை. ஆனால் கேட்டதற்கு பதில் சொல்லிவிடுவார். அந்தளவிற்கு இருந்தாலே போதும் என கண்மணியும், வீட்டினரும் நினைத்தனர். ஆனால் மகாதேவியின் மனதில் நீருபூத்த நெருப்பாய் கண்மணி மீதான கோபம் கனன்றுகொண்டே தான் இருந்தது. ஒருநாளாவது...
    மணியோசை – 12           விடியற்காலை வழக்கமான நேரத்தில் கண்மணி கண்விழிக்க அவளை அணைத்தவாறு படுத்திருந்தான் கார்த்திக். அவள் அசைந்த சலனத்தில் அவனின் உறக்கமும் கலைய அவளை எழ முடியாதபடி மீண்டும் அணைக்க, “இந்த வேல தான வேண்டாம்ன்றது. விடுங்க என்ன...” என்று அவனை விட்டு திமிறி எழுந்தவளின் கையை பிடித்தவன், “ஏய் கிண்கிணிமங்கினி, இங்க மாடும் இல்ல....
    மணியோசை – 11            கண்மணியின் பார்வையை கண்ட மகாதேவியுனுள் ஏதோ பதட்டம் வந்தது.  இவளிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என நினைத்த மகாதேவி முகத்தை சிரித்தபடி வைத்துக்கொண்டு மற்றவர்களை கவனிக்க ஆரம்பித்தார். சங்கரிக்கும் பேச்சிக்கும் மகாதேவியின் கவனிப்பு கொஞ்சம் ஆறுதலாய் இருக்க கட்டிக்கொடுத்துவிட்ட பின் இனி எதையும் நினைக்க கூடாது என நினைத்தனர். மதிய விருந்து தடபுடலாய் ஏற்பாடாகி...
    மணியோசை – 10        திணற திணற ஒருவனை கதரவைக்க முடியுமானால் அது சாப்பாடு போட்டுத்தான் என்பதை போல அவன் நிமிர்ந்து பார்க்கும் பாத்திரங்களில் இருந்து எல்லாம் எடுத்து வைத்தனர். “அடப்பாவிங்களா? ஒரு மாசத்துக்கு சாப்பிடவேண்டியத்தை ஒரே நேரத்துல என் வயித்துக்குள்ள தள்ளுறேங்களே? நீங்கலாம் நல்லா வருவீங்கடா?” என புலம்பிக்கொண்டே எங்கே எதையாவது பார்த்து அதை மீண்டும்...
    மணியோசை – 9           பயங்கர குறட்டை சத்தம் நிசப்தமான அந்த இரவு வேளையில் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. சுத்தமாய் உறக்கம் பறந்துபோனது அவனுக்கு. “நீ கண்மணி இல்லடி கிண்கிணி மங்கினி, உங்க ஊரு ஆலய மணி. இப்படியா குறட்டை விடுவ? இனி வாழ்க்கை முழுசும் எனக்கு தூக்கம் போச்சு...” என வாய்விட்டு புலம்பிக்கொண்டே அவளை...
    மணியோசை – 8      பூ வைத்து திருமணத்தை உறுதி செய்யும் படலம் நிறைவாய் நடந்து முடிந்தது. காபியை தரும் பொழுது கண்மணியை பார்த்ததோடு சரி. அதன் பின் அவளை பார்க்க முயன்று முடியாமல் போக தனியாக அழைத்து பேசிவிடலாமா என்று நினைத்தான். நினைக்கத்தான் செய்தான். ஆனால் அதை அவதானித்ததை போல கண்மணி இருந்த அறை வாசலில்...
    error: Content is protected !!