Saturday, April 20, 2024

    Mun Anthi Chaaral Nee

    அத்தியாயம் – 18 இன்னும் சூரியனின் வெளிச்சக் கதிர்கள் பூமியை வந்தடையாமல் இருந்த இருள் சூழ்ந்த அதிகாலை நேரத்தில் இருட்டைக் கிழித்துக் கொண்டு உள்ளே நுழைந்த அந்த போலீஸ் ஜீப் பார்கிங்கில் இயக்கத்தை நிறுத்தி, மவுனமாகி நிற்க, அதிலிருந்து கம்பீரமாய் இறங்கினார் இன்ஸ்பெக்டர் ராஜசேகர். அவரை எதிர்பார்த்து ரிசப்சனில் காத்திருந்த வசீகரன் அவரைக் கண்டதும் விறைப்பாகி அவசரமாய்...
    “ஆமாம் மச்சான்... இந்த நாள் நம்ம எல்லாருக்கும் மறக்க முடியாத நாளா மாறிடுச்சு... இதை கொண்டாடியே ஆகணும்...” என்றான் நகுலன். “ம்ம்... கொண்டாடறது எல்லாம் இருக்கட்டும்... அண்ணாக்கு நீங்க என்ன கிப்ட் குடுக்கப் போறீங்க... அதை முதல்ல சொல்லுங்க....” என்றாள் ஆர்வத்துடன். “ஹஹா... என்னம்மா இது... நான் என்ன சின்னக் குழந்தையா... பர்த்டேக்கு கிப்ட் எல்லாம் கொடுக்கறதுக்கு....”...
    அத்தியாயம் – 17 “என்ன பசங்களா... எல்லாம் அதிர்ச்சியா பார்த்துட்டு இருக்கீங்க... இத்தனை நாளா இல்லாத சொந்தம் திடீர்னு எப்படி வந்துச்சுன்னு புரியாம யோசிக்கறீங்களா...” என்றார் மரகதம் பாட்டி. “ம்ம்... ஆமாம் பாட்டி... எங்க அம்மா இதுவரைக்கும் அவுங்க குடும்பத்தைப் பத்தி சொன்னதே இல்லை... அப்பாவைக் காதலிச்சு கல்யாணம் பண்ணினதால குடும்பத்தை விட்டு விலகி இருக்காங்கன்னு தெரியும்.......
    அதிகாலையில் கண் விழித்த ஹாஸினி, அறைக்குள் கண்ணை ஓட்ட வசீகரனைக் காணவில்லை. மெல்ல எழுந்தவள், “என்ன இது... வசீ இன்னும் வரவில்லையா....” என்று யோசித்துவிட்டு, தான் அணைத்துப் படுத்திருந்த அவனது சட்டையை படுக்கையின் அடியில் பத்திரப் படுத்தினாள். தன் அலைபேசியை எடுத்து அவனது எண்ணிற்கு அழைக்க அவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். “ஹாய் பேபி.......
    அத்தியாயம் – 16 அடுத்து வந்த நாட்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அதன் பாட்டில் செல்ல ஹாஸினியின் வீட்டில் அனைவரும் அவரவர் வேலையில் பிசியாக இருந்தனர். வசீகரன் அவனது அலுவலில் பிசியாக இருக்க, ஹாஸினி அவளது கற்பனைகளிலும் கனவுகளிலும் மிதந்து கொண்டிருந்தாள். அவளை கவனிக்கும் சூழ்நிலையில் வசீகரன் இல்லை... காலையில் ஸ்டேஷனுக்கு சென்றால் உறங்குவதற்கே வீட்டுக்கு வந்தான். ராஜேஸ்வரியோ...
    “உங்களுக்குத் தேவையான பணத்தை தர நான் தயார்.... எனக்கு ஒரு வாடகைப் புருஷனா நீங்க வரணும்.... என்னைத் தவிர எல்லார் முன்னாடியும் எனக்குப் புருஷன்கிற போர்வையில் இருக்கணும்.... ஒரு வேளை.... நீங்க அதை மீற முயற்சி பண்ணினாளோ... இந்த நாடகம் போதும்னு எனக்குத் தோணினாலோ.... தாலியை கழற்றி வாங்கிட்டு நீங்க என் வாழ்க்கையை விட்டு...
    அத்தியாயம் – 15 புத்தம் புதிய காக்கி சீருடையில் நட்சத்திரங்கள் தோளில் அலங்கரிக்க நெஞ்சத்தில் குத்தப்பட்ட நேம் பேட்ஜுடன் கண்ணை மறைத்த கறுப்புக் கண்ணாடியில் கம்பீரமாய் கீழே இறங்கி வந்தான் வசீகரன். அவனுக்காய் கீழே காத்திருந்த ஹாஸினியின் முகம் அவன்மீது ஆர்வமாய்ப் படிந்து பிரகாசமானது. சாதாரணமாய் முகத்தை வைத்துக் கொண்டாலும் அவளது கண்கள் அவனைப் பார்ப்பதில் காட்டிய...
    அத்தியாயம் – 14 “வசீகரன்... வந்துட்டியா.... என்ன ஆச்சுப்பா... டெஸ்ட் எல்லாம் முடிஞ்சுதா....” அப்போது தான் உள்ளே நுழைந்த வசீகரனைக் கண்டு  அருகில் வந்த ஏகாம்பரத்தை புன்னகையுடன் நோக்கினான் அவன். “என்னப்பா... ஒண்ணும் சொல்லாம சிரிக்குறே... நம்ம சுப்பு தானே செலக்ஷன் குரூப்ல இருந்தாரு.... ஏதும் பிரச்சனை இல்லையே” ஆர்வமாய் கேட்டவரின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச்...
    “வசீ.... எழுந்திருங்க.... வசீ....” அவள் கத்த அந்த மிருகம் சிரித்தது. “எவண்டி அவன் வசீ.... புசின்னு... எவனும்... இனி வர மாட்டான்.... டேய்... இவனுங்களை எல்லாம் எடுத்து ஓரமா போடுங்கடா... நான் பாப்பா கூட கொஞ்சம் விளையாடிட்டு வரேன்.... ரொம்ப நாளா பொண்ணு வாடையே இல்லாம காட்டுக்குள்ள சுத்திட்டு இருந்து உடம்பெல்லாம் நமநமங்குது...” என்றவன், “சரி.... வாடி...
    “ம்ம்ம்.... நம்ம நினைச்ச அளவுக்கு இவ ஒண்ணும் மோசமில்லை... அவள் மனசும் அன்புக்கும் அக்கறைக்கும் ஏங்கிட்டு தான் இருக்கும் போலிருக்கு.... ம்ம்... இதை வச்சே உன்னைப் பிடிக்கறேன்.....” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் மென்மையாய் சிரித்துக் கொண்டு மாடியேறினான். “ஏன் பேபி.... லேட்.... போன வேலை நல்லபடியா முடிஞ்சுதா....” என்றவனை அவள் முறைக்க, அதைக் கண்டு...
    அத்தியாயம் – 13 “சங்கர்.... நாம உடனே சேலம் புறப்படணும்.... வண்டியை செக் பண்ணி வையுங்க....” என்று பரபரப்பாக கூறிக் கொண்டே தன் அறைக்கு நடந்தாள் ஹாஸினி. இன்றுதான் தம்பதிகள் இருவரும் பணிக்கு வந்திருந்தனர். கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று விட்டு ஸ்டேஷனுக்கு வந்தவள் அவசரமாய் சேலம் கிளம்பிக் கொண்டிருந்தாள். “ஏகாம்பரம் சார்...” மிடுக்காய் அழைத்தது அவளது குரல். “சொல்லுங்க...
    அன்புடன் விசாரித்த அண்ணனைக் கண்டு அவளது கண்கள் கலங்கியது. “அண்ணா.... வந்துட்டியா.....” என்றவள், “அண்ணி.... நல்லாருக்கீங்களா....” என்று ஹாஸினியை விசாரித்தாள். அவளது உடல்நிலையைத் தான் விசாரிக்கும் முன்பு தன்னை விசாரித்த அவள் மீது ஒரு மதிப்பு தோன்றியது ஹாஸினிக்கு. இப்போது சற்று முகம் தெளிந்திருந்தாள். மொட்டை மண்டையில் கறுப்பாய் துளிர் விடத் தொடங்கிய முடிகளை ஒரு துப்பட்டாவால்...
    அத்தியாயம் – 12 “மம்மி... நாங்க கிளம்பறோம்.....” கட்ஷூ சப்திக்க மாடிப்படியில் துள்ளிக் குதித்து இறங்கி வந்தாள் ஹாஸினி. விடியற்காலையில் வால்பாறையில் இருந்து கிளம்பி மதியம் அவர்களின்  வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர். மதிய உணவை முடித்துக் கொண்டு சற்று ஓய்வெடுத்தவர்கள் வளர்மதியைக் காண்பதற்காய் வசீகரனின் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். “கிளம்பிட்டியா ஹாஸினி....” என்றவர், அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு...
    அத்தியாயம் – 11 காலை உணவை முடித்துவிட்டு வசீகரனும் ஹாசினியும் அவர்கள் அறையில் இருக்க ராஜேஸ்வரியின் அறைக்கு ஒரு தயக்கத்துடன் வந்தார் தனபாக்கியம் “வாங்கண்ணி..... உக்காருங்க.....” என்ற ராஜேஸ்வரி அவர் அமர்ந்ததும் பேசத் தொடங்கினார். “அண்ணி.... ஹாஸினிக்கு செய்ய வேண்டிய பெரிய கடமையை முடிச்சதும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு.... அவளா இஷ்டப்பட்டு ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்தாலும் அவளோட...
    அதைக் கண்டதும் வசீகரனின் மனது சந்தோஷத்தில் துள்ளியது. “பணத்தைக் காட்டி என்னை நடிக்க வைக்க நினைச்சேல்ல..... மவளே.... ஏண்டா இப்படி ஒரு விஷயத்தைப் பண்ணோம்னு நீ நல்லா தவிக்கணும்டீ.....” என்று மனதுக்குள் கருவிக் கொண்டவன், ஒரு பெஞ்சில் அமர்ந்தான். அவனுக்கு சற்று தள்ளி ஹாஸினியும் அமர்ந்தாள். “என்ன பேபி... இவ்வளவு தள்ளிப் போய் உக்கார்ந்திருக்கீங்க..... அந்த பாஸ்கர் வேற...
    வானம் தொடும் பனி மூடிய மலைகளும் புகையாய் சூழ்ந்த மேக மூட்டமும் அந்த இடத்தை மிகவும் அழகாக்க அதன் நடுவே ஆர்ப்பரித்து விழுந்து கொண்டிருந்தது நீர்வீழ்ச்சி. வால்பாறையில் சில நாட்களாய் பெய்து வந்த மழையால் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்திருந்தது. அருவியாய்க் கீழிறங்கி அழகான நீரோடையாய் பச்சைத் தாவணி அணிந்த தேயிலைக் குன்றுகளுக்கு நடுவே சலசலத்து...
    அத்தியாயம் – 10 மூன்று நாட்களுக்குப் பிறகு. ஆழியாறில் இருந்து வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த ஆடி கார் மலையேறிக் கொண்டிருந்தது. வெள்ளியை உருக்கி ஊத்தினாற்போல சின்னதாய் ஒரு அருவி மலையிலிருந்து விழுந்து கொண்டிருக்க அதைக் கண்டு உற்சாகமான ஹாஸினி தன் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டாள். சிறிது நேரத்திலேயே கொண்டை ஊசி வளைவுகளில் காரை நிதானமாய்...
    அதற்குள் சபர்மதி எல்லாருக்கும் காப்பி கொடுக்க குடித்துவிட்டுக் கிளம்பினர். கற்பகம் அவர்களது ஊரில் உள்ள குலதெய்வம் கோவிலில் ஏதோ பூஜைக்கு ஏற்பாடு செய்திருப்பதால் ஆப்பரேஷன் முடிந்து வருகிறேன்... என்று விட்டார். பெண்கள் மூவரும் பின்னில் அமர்ந்து கொள்ள வசீகரனும் நகுலனும் முன்னில் அமர்ந்து கொண்டனர். வழியில் ஹாஸினி ஹாஸ்பிடலில் யாருக்கோ அலைபேசியில் அழைத்து ஏதேதோ விவரங்களைக்...
    அத்தியாயம் – 9 “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ....” மருதமலை சுவாமி சந்நிதானத்தில் கணபதியின் முன்பு மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த அய்யர் பொண்ணை அழைத்து வரும்படி கூறியதும் சற்று மறைவாக அமர்ந்திருந்த ஹாஸினியை அழைத்துக் கொண்டு வந்தனர். மயிலின் கழுத்தில் உள்ள நிறங்கள் எல்லாம் கலந்தது போல ஒரு நீலமும் பச்சையும் கலந்த அழகான பட்டுப் புடவையில் எளிமையான அலங்காரத்தில்...
    “ஹாஸினி வீட்லயே வசீகரன் தங்கை ஆப்பரேஷனுக்கு வேண்டிய ஏற்பாட்டைப் பண்ணிடறேன்னு சொல்லிட்டாங்க போலிருக்கு.... சீக்கிரமே கல்யாணம்..... அது முடிஞ்சதும் ஆப்பரேஷன்னு முடிவு பண்ணி இருக்காங்க....” என்றவர் சாப்பிடத் தொடங்கினார். “என்னங்க சொல்லறீங்க.... அந்தப் பொண்ணா... அது சரியான திமிர் புடிச்ச பொண்ணாச்சே.... ஆம்பளைங்களை மதிக்கக் கூடத் தெரியாத அந்தப் பொண்ணையா அந்தத் தம்பிக்கு முடிவு பண்ணி...
    error: Content is protected !!