Friday, May 3, 2024

    Mun Anthi Chaaral Nee

    அத்தியாயம் – 8 காவல் நிலையத்தில் ஒரு கேஸ் சம்மந்தமான பேப்பர்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த வசீகரன் அலைபேசியில் ஒளிர்ந்த அன்னையின் எண்ணைக் கண்டதும் திடுக்கிட்டான். “அம்மா எதற்கு இப்போது அழைக்கிறார்கள்.....” என்ற குழப்பத்துடனே அதை ஆன் செய்து காதுக்குக் கொடுத்தான். “அம்மா.... சொல்லுங்கம்மா.... என்ன இந்நேரத்துல கூப்பிட்டிருக்கீங்க....” அவனது குரலில் சிறு பதட்டம் இருந்தது. “வசீ.... இங்கே...
    அத்தியாயம் – 7 டாக்டரைக் கண்டுவிட்டு சோர்ந்த முகத்துடன் திரும்பி வந்தனர் வசீகரனும் நகுலனும். அவர்களிடம் வந்த ஹாஸினி, “டாக்டர் என்ன சொல்லறாங்க.... வசீகரன்....” என்றாள். அவளை ஏறிட்டவனின் விழிகள் கண்ணீரில் மிதக்க ஹாஸினியின் மனது துடித்தது. “என்னப்பா.... டாக்டர் என்ன சொன்னாங்க....” என்றார் ஏகாம்பரம் நகுலனிடம். ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவன் நிமிர்ந்தான். “சார்... வளரோட தலையில் ஒரு கட்டி இருக்காம்.......
    தெரிந்த நண்பர்களிடம் பணத்துக்காக அலைந்து விட்டு சோர்வுடன் வீட்டுக்கு வந்தான் வசீகரன். அவனது முகமே போன காரியம் நடக்கவில்லை என்பதைக் கூறியது. ஹாலில் அமர்ந்தவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த சபர்மதியின் முகம் அழுததில் வீங்கியிருந்தது. அவருக்கு மனதுக்குள் பயமாகத்தான் இருந்தது. அத்தனை பணத்தை மகனால் புரட்ட முடியுமா என்று. சோர்வுடன் கட்டிலில் படுத்திருக்கும் மகளைக்...
    “என்னது.... ஆக்சிடண்டா....” ..... “எப்போ... எப்படி.....” ....... “அப்படியா.... ஓ.... இதோ நான் கிளம்பி வரேன்.... வசீகரன் கிளம்பிட்டாரா.....” என்றவளின் குரலில் நிறைந்திருந்த பதட்டம் அங்கே இருந்த ராஜேஸ்வரிக்கு புதியதாகத் தோன்றியது. அலைபேசியை வைத்து விட்டு அவசரமாய் தொப்பியை எடுத்துக் கொண்டு கிளம்பியவளிடம் வந்தவர் கேட்டார். “என்னம்மா... யாருக்கு ஆக்சிடண்ட்.... என்னாச்சு.....” என்றார். “அது.... வசீயோட தங்கைக்கு ஆக்சிடண்ட் ஆயிருச்சாம்.... நான் கிளம்பறேன்......
    அத்தியாயம் – 6 நகுலன் சொன்னது போல இரண்டு வருடமும் வளர்மதி அவனிடம் அதைப் பற்றிப் பேசவில்லை.... அவளைத் தொடரும் கண்களை மாற்ற முடியாமல் அவன் தான் தவித்துக் கொண்டிருந்தான்... இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமலே மற்றவரை ரசித்துக் கொண்டிருந்தனர். இதோ இரண்டு வருடத்தில் படிப்பை முடித்துவிட்டு அவனிடம் அதே மாறாத காதலோடு காண வேண்டும் என்று கூறி...
    அத்தியாயம் – 5 கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தான் வசீகரன். அவனுடன் வேலை செய்யும் சக காவலர் சேகரின் திருமணம் இன்று. காலையில் நேரமே கல்யாணத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால் முன்தினம் மாலையே தங்கை வளர்மதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு கோவை வந்திருந்தான் வசீகரன். அழகாய் இளம் நீல நிற...
    “அம்மா.... நான் வேலையே செய்யறதில்லைன்னு புலம்புவீங்க... இப்போ செய்யலாம்னு வந்தா கிண்டலடிக்குறீங்களா....” என்று அன்னையை முறைத்தாள் வளர்மதி. “ம்ம்... நல்லவங்களுக்கு காலமில்லைன்னு சொல்லுறது உண்மைதான் போலிருக்கு.... உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சு வந்தேன் பாருங்க.... என்னைச் சொல்லணும்....” என்று அவளும் சலித்துக் கொண்டாள். அதைக் கண்டு சிரித்த சபர்மதி, “ம்ம்... சரி... நீ பாத்திரம் தேய்ச்சிடு... நான்...
    “மதி... அண்ணன் வந்திடுவான்... நீ போயி படும்மா... காலைல நேரத்துல எழுந்திருக்கணும்... நாளைக்கு கடைசி பரீட்சை தானே... முடிஞ்சு வந்து உன் அண்ணனோட அரட்டை அடிக்கலாம்... இப்படி உக்கார்ந்துட்டு இருந்தா காலைல படிக்க முடியுமா....” என்று மகளை செல்லமாய் கடிந்து கொண்டார் சபர்மதி. “அண்ணன் வந்திடறேன்னு சொல்லுச்சு... இன்னும் காணோமே அம்மா....” போனுக்கு கூப்பிட்டாலும் நாட்...
    அத்தியாயம் – 4 வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டு ஏகாம்பரத்தின் மேசையில் ஏதோ பைலைப் பார்த்துக் கொண்டிருந்த வசீகரன் நிமிர்ந்தான். இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்று தான் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான். ஹாஸினி வருவதைக் கண்டதும் அவன் முகம் தானாகவே மலர்ந்தது. காயமாயிருந்த கையுடனே அவளுக்கு ஒரு சல்யூட்டை வைத்தான். முகத்தில் கடுகைப் போட்டால் பொரிந்துவிடுமோ...
    “சொல்லுங்க அண்ணி... என்ன விஷயம்.....” என்றார் தன் தங்க பிரேமிட்ட மூக்குக் கண்ணாடியை மூக்கில் மேலேற்றி விட்டுக் கொண்டே. “என்ன ராஜிம்மா... உன்னையும் என் மருமகளையும் பார்க்க வரதுக்கு எங்களுக்கு ஏதாவது விஷயம் வேணுமா என்ன... சும்மா உங்களைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்... சரி உனக்குப் பிடிக்குமேன்னு நம்ம தோட்டத்து ரஸ்தாளிக் குலை ஒண்ணைக் கொண்டு...
    அத்தியாயம் – 3 வசீகரன் அலைபேசியில் யாருடனோ பேசி சிரித்துக் கொண்டிருக்க அதைப் பார்த்துப் கொண்டே வந்தார் ஏகாம்பரம். அவர்கள் இருவர் மட்டுமே ஸ்டேஷனில் இருக்க மற்றவர்கள் வேறு வேலையாக வெளியே சென்றிருந்தனர். ஹாஸினி ஏதோ கேஸ் விஷயமாய் டிரைவர் சேகருடன் ஜீப்பில் வெளியே சென்றிருந்தாள். வசீகரன் வேலையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகி இருந்தது. ஏகாம்பரம்...
    அத்தியாயம் – 2 பஸ் நிறுத்தத்திற்கு சற்றுத் தள்ளி பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினாள் ஹாஸினி. முடியை கட்டாமல் விரித்து விட்டிருந்தாள். கண்ணுக்கு கூலர் அணிந்திருந்தாள். வண்டியை அங்கிருந்த பெட்டிக்கடையின் முன்பு ஓரமாய் நிறுத்தி அவரிடம் ஜாடை காட்டிவிட்டு சற்றுத் தள்ளி இருந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள். காலை நேரமாதலால் ஒவ்வொருவரும் பலவித அவசரத்தில் இருக்க பணிக்கு செல்பவர்களும்...
    “ம்ம்ம்... ரொம்ப துணிச்சலான பொண்ணு தான்... சரி வா... உன்னோட டீடெயில் எல்லாம் குடு....” என்றவர் அவனையும் அழைத்துக் கொண்டு தன் மேசைக்கு சென்றார். உள்ளே சென்ற ஹாஸினியின் மனமோ ஏதோ ஒரு படபடப்பாய் உணர்ந்தது. “யார் இவன்... அவனைப் பார்த்ததும் மறுபடியும் பார்க்கணும் போலத் தோணுது... அவனோட கண்கள்... ஹப்பா.... பேரைப் போலவே என்னவொரு வசீகரம்...”...
    “என்ன, இன்னைக்கு வீட்டுல இருக்கே... காலேஜுக்குப் போகலையா...” என்று விசாரித்தவனை நோக்கி, “அய்யோ... அண்ணா... எனக்கு நேத்திருந்தே ஸ்டடி லீவ் ஸ்டார்ட் ஆயிருச்சு... நீ என்ன தான் கவனிக்கறியோ...” என்று அலுத்துக் கொண்டாள். “ஓ... ஸ்டடி லீவ்னா உக்கார்ந்து படிக்க வேண்டியது தானே... எதுக்கு என்கிட்டே வம்பளந்து கிட்டு இருக்கே...” என்றவன் இட்லியை சட்னியில் தோய்த்து வாய்க்குக்...
    அத்தியாயம் – 1 ஏவிஎம் ஸ்டுடியோ... பிரம்மாண்டமான கட்டிடத்தின் தலையில் பெரிய உலக உருண்டை சுற்றிக் கொண்டிருந்தது. அங்கே ஒவ்வொரு தளத்திலும் ஏதேதோ ஷூட்டிங் நடந்து கொண்டிருக்க அந்த இடமே பரபரப்பாய் இருந்தது. கண்ணைப் பறிக்கும் விளக்கு வெளிச்சங்களும் அரிதாரம் பூசிய சினிமா தாரங்களும் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருக்க திரையுலகம் சம்பந்தப்பட்ட பல முகங்களும் போலியாய் ஒரு...
    error: Content is protected !!