Advertisement

அதுவரை கொஞ்சிக் கொண்டிருந்தவன், சட்டென்று அப்படிக் கூறியதும் அவள் முகம் வாடியது. கலங்கிய கண்களுடன் எழுந்து அமர்ந்தவளைக் கண்டு பதறிப் போனான் நகுலன்.
“என்னாச்சும்மா…. ஏன் கண் கலங்கறே….”
ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவள், “என் உடல்நிலை இன்னும் தாம்பத்திய வாழ்க்கைக்கு தயாராகலைன்னு நினைக்கறீங்களா நகுல்…. என்னை இப்பவும் ஒரு நோயாளியா தான் பாக்கறீங்களா…” என்றவளின் குரலில் இருந்த கலக்கம் அவனை வருந்தச் செய்தது.
“என்ன வளர்… ஏன்மா இப்படில்லாம் யோசிக்கறே… காலையில் இருந்து கல்யாண மண்டபத்துல நின்னு நின்னு சோர்ந்து போயிருப்பே… அதான் நீ ஓய்வெடுத்துக்கோன்னு சொன்னேன்…..”
“அப்படில்லாம் எனக்கு ஒண்ணும் ஓய்வு தேவை இல்லை….” என்றவளைக் குறும்புடன் நோக்கியவன்,
“அப்போ… உனக்கு ஓய்வு தேவை இல்லைன்னு சொல்லறே…. அப்படிதானே…. சரி கொஞ்ச நேரம் பாடம் படிக்கலாமா….” என்றான் குறும்பாக.
“என்னது….. பாடம் படிக்கறதா… உங்க வாத்தியார் புத்தி போகலை பார்த்தியா…..” என்று வியப்புடன் கேட்டவளை நோக்கி சிரித்தவன்,
“ம்ம்… ஆமாம்…. அதுக்குப் பேரு வாழ்க்கைப் பாடம்…. அதிலே நிறைய அத்தியாயம் இருக்கு…. நான் உனக்கு ஒவ்வொண்ணா சொல்லித் தர்றேன்….” என்று அவளை தன்னை நோக்கித் திருப்பி முத்தமிடத் தொடங்கியவனை,
“ச்சீய்…. இது தானா….” என்றவள், கூச்சத்துடன் அவன் மார்பில் தஞ்சம் கொண்டாள்.
“என்னது… ச்சீயா….” என்றவன், அவளோடு சேர்த்து விளக்கையும் அணைத்தான். அதற்குப் பின் அவளுக்கு அவன் பாடத்தை சொல்லிக் கொடுக்கத் துவங்க, அவளும் அவனுக்கு ஈடு கொடுத்து படிக்கத் தொடங்கினாள்.
“காத்திருக்கேன் கதவத் திறந்து உள்ளுக்கு வாடி…. காதலிக்கக் கற்றுக் கொடுப்பேன்… முன்னுக்கு வாடி….”
தான் பின்னில் வந்து நிற்பது தெரியாமல் பாடிக் கொண்டே கட்டிலில் பூவைத் தூவிக் கொண்டிருந்த வசீகரனைக் கண்டு சிரிப்பாய் வந்தது ஹாஸினிக்கு….
“ஓ… பேபி…. பேபி…. என் தேவ தேவி….
ஓ… பேபி… பேபி….. என் காதல் ஜோதி….
ஒரு பார்வை வீசி சென்றாள்…. உலகம் விடிந்ததிங்கே…..
வார்த்தை பேசவில்லை…. எல்லாம் புரிந்ததிங்கே….
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழைதான்….”
மும்முரமாய் பாடிக் கொண்டிருந்தவன், பின்னிலிருந்து கலகலவென்று கேட்ட சிரிப்பு சத்தத்தில் பாட்டை நிறுத்தித் திரும்பினான்.
“எதுக்கு பேபி… இத்தன சிரிப்பு….. எவ்ளோ அழகா… நமக்குன்னே பாடி வச்ச மாதிரி அர்த்தத்தோட இருக்கு இந்தப் பாட்டு….” என்றவனின் மேல் சிரித்துக் கொண்டே அங்கிருந்த பூவை வாரி அவள் ஏறிய, அவனும் திருப்பி எறிந்தான்.
அவளை எட்டிப் பிடித்தவன், “வாவ்… இந்த சேலைல அப்படியே தேவதை மாதிரி சூப்பரா இருக்கே பேபி….”
“ஓ… தேவதையை அய்யா நேர்ல பார்த்திருக்கீங்களோ….” என்று அவனைக் கிண்டலடிக்க கட்டிலில் அமர்ந்தவன்,
“ம்ம்… ஒரு ரவுடியைத் துரத்திகிட்டு பப்ளிக் ரோட்டுல போலீஸ் யூனிபார்ம்ல ஓடும்போது முதன் முறையா பார்த்திருக்கேன்….”
அவன் கூறியதைக் கேட்டு வியப்புடன் அருகில் அமர்ந்தவள்,
“என்ன சொல்லறீங்க வசீ….” என்றாள்.
“ம்ம்… எல்லாருக்கும் நீ ஜான்சி ராணி மாதிரி தோணினாலும் முதல் பார்வைலயே நீ எனக்கு என்னவோ இதயராணி மாதிரி தான் தோணினே…..”
“இளம் மாலை நேரத்தில் சிலு சிலுன்னு வீசுற குளிர் காத்தும், இதமா நனைச்சும் நனைக்காமலும் இருக்குற மழைச் சாரல் மாதிரி…. என் மனசுக்குள்ளே இளம் சாரலா உன் உருவம் பதிஞ்சிருச்சு…. எத்தனை நாள் அதையே நினைச்சுப் பார்த்து சிரிச்சுக்குவேன் தெரியுமா…. அதை நினைக்கும் போதெல்லாம் அப்படியே மனசுக்குள்ளே குளுகுளுன்னு இருக்கும்….. நீ ஒரு போலீஸ் யூனிபார்ம் போட்ட திருடிடி செல்லம்….” என்றான்.
“என்னது திருடியா…..” என்று புரியாமல் கேட்டவளை இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டவன்,
“ம்ம்…. பார்த்த முதல் சீன்லயே என்னோட மனசைத் திருடிட்டியே….. ஹூம்…. அன்னைக்கு விழுந்தவன் தான்….. இதுவரைக்கும் எழுந்திருக்க முடியலை….” என்று அலுத்துக் கொண்டான்.
“ஓ… அய்யா மட்டும் என்னவாம்…. வசீகரன்னு பேர் போலவே எல்லாரையும் நல்லா வசீகரிக்க வேண்டியது…. எனக்கே தெரியாம இந்த கண்ணுக்குள்ளே வந்து சிக்கி இருக்கேனே…. எத்தனை தடவை உன் கண்ணைப் பார்த்துப் பேச முடியாமத் தடுமாறி இருக்கேன் தெரியுமா…. அப்படியே இழுக்குறே டா….” என்றவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு செல்லமாய் அவன் மீசையை இழுக்க,
“ஏய்…. மெதுவாடி….. இது ஒட்டினதில்லை…. ஒரிஜினல்…..” என்றான்.
“உன்னோட ஹேர் ஸ்டைலும், மீசையும்….. வாவ்…. எனக்கு ரொம்பப் பிடிக்கும்…. நீ அழகன்டா அத்தான்…..” என்று சிரித்தாள்.
“ஹூம்…. இனி இதை எடுக்க வேண்டி வருமே….” என்றான்.
“எதுக்குடா எடுக்கணும்…..”
“நானும் நம்ம வால்பாறை பாலாஜியும் போட்ட உடன்படிக்கைல தானே நீ இன்னைக்கு என்னைக் கொஞ்சிட்டு இருக்கே…. அவருக்கு வேண்டுதல் இருக்கு….. நீ பொங்கல் வைக்கவும் வேணும்….” என்றான்.
“என்னடா…. விளையாடறியா…. நானாவது… பொங்கல் வைக்குறதாவது…..”
“என்ன பேபி… எனக்காக நீ இதைக் கூட செய்ய மாட்டியா….” என்றான் கெஞ்சலாய்.. 
“உனக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்…. இதைப் பண்ண மாட்டேனா…. கண்டிப்பா செய்துடலாம் டா……”
“ம்ம்… என் செல்லம்….. சரி பேபி…. டைம் ஆகுது… கணக்கு வேற கூடிகிட்டே போகுது….” என்றவனைப் புரியாமல் பார்த்தவள்,
“எந்த கணக்கைடா சொல்லறே…” என்றவள், அவனை டா போட்டதைத்தான் சொல்கிறான் என்பது புரிய புரியாதவள் போலப் புன்னகைத்தாள்.
“எனக்கு என்ன கணக்குன்னு புரியலையேடா அத்தான்……”
“நம்ம உடன்படிக்கையை மறந்துட்டியா பேபி…..” என்று அவள் காதில் கிசுகிசுத்தவனைத் தள்ளிவிட்டவள்,
“என்ன உடன்படிக்கை டா அத்தான்…… எதையும் ஒப்பனாவே சொல்ல மாட்டியா….. சுத்தி வளைச்சுட்டு…..” என்று முனங்கினாள்.
“அடிப்பாவி… உனக்கா புரியாது…. சரியான கல்லுளிமங்கி…. எல்லாம் நம்ம முத்த உடன்படிக்கை தான்….. நீயா  குடுக்கப் போறியா…. இல்ல நானே…. எடுத்துக்கவா…. எதுவா இருந்தாலும் நான் ரெடி தான்…” என்றவன் அவளை அருகில் இழுக்க,
“டேய்…. அத்தான்…. விடுடா…. நான் சொன்னா சொன்ன மாதிரி இருப்பேன்…. என்ன…. நான் கணக்குல கொஞ்சம் வீக்கு……. அதுனால கொஞ்சம் முன்னப் பின்னப் போனாலும் கண்டுக்காதே….” என்றவள் அவன் கன்னத்திலும் நெற்றியிலும் கணக்கில்லாமல் முத்தமிடத் தொடங்கினாள்.
அவளது அதிரடி நடவடிக்கையில் நிலைகுலைந்து போனவன் அவனும் களத்தில் குதித்து முன்னேறத் தொடங்கினான்.
உண்மையான அன்பும், காதலும் எத்தனை மறைத்து வைத்தாலும் வெளிப்படாமல் இருப்பதே இல்லை…. அவளது வாழ்க்கையில் ஒரு கதா பாத்திரமாய் நடிக்க வந்தவன், வாழ்வின் சுகத்தையும், சுவையையும் அவளுக்கு உணர்த்தி, அவள் வாழ்க்கையாய்ப் மாறிப் போயிருந்தான்.
அவனது இயக்கத்தில் அரங்கேறிய உண்மையான காதல், வைரவிழா காணட்டும் என வாழ்த்தி நாம் விடை பெறுவோம்…
பெரியவர்களின் மனம் போலவே சிறியவர்கள் மனம் இணைந்து, அன்பான தம்பதியராய் வலம் வரட்டும்…..  புரிதலோடு, காதலும் இணைந்திட்டால் சிறக்காத இல்லறமும் உண்டோ…..
இனி அவர்கள் வாழ்வில் எல்லாம் சுகமே…..
முன் அந்திச் சாரல் நீ….
முன் ஜென்மத் தேடல் நீ….
அதிகாலைத் தூறல் நீ….
அழகான பாடல் நீ….
என் விரல் தேடும் தீயும் நீ…
என் விழி தேடும் விடையும் நீ….
என் மடி சாயும் சேயும் நீ…..
என் முடிகோதும் தாயும் நீ….
என்னை எனக்கே உணர வைத்து
எனக்குள் உயிரை உறைய வைத்த
எனக்குள் இருக்கும் நானும் நீ….
அழகான சாரலாய் எனக்குள் வந்து
அன்பாலும் காதலாலும்
அழியாத நதியாய் மாறினாய் நீ….
உன் வாழ்க்கை அரங்கில்
ஒரு பாத்திரமாய் எனை அழைத்தாய்….
நடிக்க வந்தவனல்ல நான்…..
உன்னை இயக்குவேன் என் காதலால்….
இன்று உலகமே அழகாய்….
அரங்கமே வண்ண மயமாய்…..
இனி என்றும் உனைச் சுற்றிலும்
வாடாத அன்புப் பூக்கள் மட்டுமே….
என் கனவுகளின் நினைவுகளாய்….
என் கவிதைகளின் வார்த்தைகளாய்….
என் உதிரத்தில் உணர்வுகளாய்….
கலந்து விட்டாய் பெண்ணே….
**************** சுபம் ****************

Advertisement