மீண்டும் கேட்கும் குழலோசை
காஃபி கலந்து மகனின் அறைக்கு கொண்டு சென்றவர் புதல்வனின் வாட்டம் நிறைந்த முகத்தை சில நொடி ஆராய்ந்துவிட்டு " ஏன் துவாரகா நீ போக வேணான்னு சொன்னா அவ போகவா போறா?, போகட்டும்னு ஏண்டா சொன்ன? உனக்கும் அவமேல விருப்பம் இருக்கு நேரம் நெருங்கி வர்றப்போ அதை தக்க வச்சுக்கிறதை விட்டுட்டு இப்டி பிரிஞ்சு...
தளிர்களில் தங்கிய நீர் திவலைகலான பனிதுளிகள் ஆதவனின் இதம் பட்டு கரைய தொடங்கிய இதமான காலை வேலை. நீண்ட விடுமுறைக்கு பின் பள்ளி செல்ல அவசரமாக காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாள் வைதேகி. காலை ஆறுமணி என கடிகாரத்தின் வழியே செவிகளை எட்டிய செய்தியில் உறக்கம் கலைந்தவன் முகம் கழுவி விட்டு நேராக சமையல்...
"அவசரம் காட்ட மாட்டேன்னு சொல்லாத வைசும்மா பிடிச்ச திருடனையே தப்பிக்க விடுற ஆள் நீ. இதுல அவசரம் காட்ட மாட்டேன்னு சொன்னா என்னோட வேலை அம்போ தான்" என்று சீரியசாய் உரைத்து பாவமாய் அவள் முகம் பார்த்தான் விஜயன்
கண்கள் இடுங்க முறைத்து பார்த்தவள் "போங்க விஜி ஒரு முறை தப்பிக்க விட்டதுக்கு இப்டி ஓராயிரம்...
"மனசை மறைகிறது.. முதல கஷ்டமா தான் இருந்துச்சு!, ப்ச் போக போக பழக்கப்படுத்திக்கிட்டேன். வைஷ்ணவி விரும்புறது அத்தை மாமாவுக்கு பிடிக்கலை வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி வச்சு அப்றம் ஏதேதோ நடந்துருச்சு இப்போ யூஸ்ல இருக்கா வெல் செட்டில். அத்தையும் மாமாவும் அவ கூட தான் இருக்காங்க" என்றான் ஒருவித நிம்மதி படர்ந்த முகத்துடன்
"அன்னைக்கு...
பட்டாசு என்றதும் நினைவில் எட்டும் சிவகாசியில் மாதம் இரண்டிற்கும் குறையாமல் வெடி விபத்துகள் நடக்கும். அதுவும் வெயில் காலத்தில் கணக்கீடுகள் என்பதே இல்லை.
ஒன்றன் பின் ஒன்றாக வந்த சத்தில் திடுக்கிட்டு இருவரும் அவ்விடம் செல்ல, புழுதி புயலில் சிக்கிய இடம் போல களோபரமாக காட்சி அளித்தது சற்று முன் வரை விறுவிறுப்புடன் செயல்பட்டு கொண்டிருந்த...
அவ்வப்போது சஞ்சளாவின் பார்வை துவாரகேஷை தீண்டி சென்றது அவன் பார்வை உணவை தவிர வேறு எங்கும் பாயவில்லை என்றதும் வேண்டா வெறுப்பாக வாயில் அடைத்த உணவை கல்லை விழுங்குவது போல கடினபட்டு விழுங்க தொடங்கினாள்.
சாரதாவிற்கு மருந்து கொடுத்து போர்வையை போர்த்தி படுக்க வைத்து விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்த வைஷாலி "அப்பா உங்களுக்கு சாப்பாடு...
விஜயன் சென்ற சற்று நேரத்தில் இல்லம் வந்த துவாரகா ஆளுக்கொரு பக்கமாய் திரும்பி அமர்ந்திருப்பதை கண்டு 'என்னாச்சு இவங்களுக்கு' என்றபடியே மூவரின் முக பாவனையும் ஆராய்ந்து கொண்டே விஷ்ணுவின் அருகில் வந்து அமர்ந்தவன் "என்னாச்சுடா ஏ மூணு பேரும் இப்டி உக்காந்துட்டு இருக்கீங்க" என்று கேட்க
அதுவரை உர்ரென முகத்தை வைத்து கொண்டு மனதோடு பொறுமி...
இரண்டு நாட்கள் ஆகிற்று விஜயன் வைஷாலியுடன் பேசி உடல் சோர்ந்து போய் இருந்த காரணத்தினால் அவளுக்கு அழைப்பு விடுத்து பேசவில்லை அவளும் அவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை
மாத்திரையின் செயலிலும் உடன் இருந்தவர்களின் அக்கறையான கவனிப்பிலும் உடல் நிலை சற்று தேறி இருந்தது ஆனால் மனம் தான் அவனுக்கு தெளியவில்லை தேறவுமில்லை.
அவள் அழுது கொண்டே சென்றது உறக்கத்திலும்...
"என்ன மாப்பிள்ளை நீங்க ஏ பொண்ணு அறிமுகமில்லாத யார்கிட்டயும் போன் போட்டு பேச மாட்டா நீங்க என்னடான்னா... நம்பரை கொடுத்து போன் பண்ண சொல்லிருக்கிங்க?" என்று மகவை பற்றி மெச்சுதலாய் கூறியவர்
"ரொம்ப தங்கமான பொண்ணு மாப்பிள்ளை! கட்டுனா உங்கள தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கிறா அதான் பேசி முடிச்சிறலாம்னு வந்துட்டேன்", தெரியவா போகிறது...
தற்செயலாக அவனை சந்தித்த சபரி வலுக்கட்டாயமாக இல்லம் அழைத்து வந்தான் என்பதை கூறிமுடித்தவனுக்கு "நா பண்ணது ரொம்ப பெரிய தப்புடா அவசரப்பட்டுட்டேன்னு தோணுது" என்று நிமிர்ந்து இருவரையும் பார்க்க முடியாது தலை குனிந்து கொள்ள
அதுவரையில் கோபத்தை காட்டாது பொறுமையாய் கேட்டு கொண்டிருந்த இருவரும் ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்து கொண்டனர், "கோபமாக பேசினால் கூண்டுக்குள்...
ஒரு நொடி துவாரகாவும் விஷ்ணுவும் திகைப்புடன் அவனை பார்க்க "உனக்கு என்ன பைத்தியமா எதுக்கு இப்டி கேக்குற?" என்று விஷ்ணு கோபமாக பேச
"இல்ல... என்னால யாருக்குமே நிம்மதி சந்தோஷம் எதுமே இருந்ததில்ல! என்ன நேசிக்கிறவங்களுக்கு கூட நா பதிலுக்கு அன்பை கொடுத்தது இல்ல? அப்டி இருக்குறப்போ நீங்க என்மேல காட்டுற அன்புக்கு நா தகுதியானாவனா?"...
நிலவின் அணைப்பில் துயில் கொண்ட ஆதவன் அதனிடமிருந்து விடுபட முடியாமல் விடுபட்டு சுகமான இதமான வெளிச்சத்தை பூமகளின் மீது பரப்ப தொடங்கியிருந்தான், கண்களை கூசாத அதே நேரம் உறக்கத்தை கலைக்க கூடிய வகையில் வெளிச்சம் அறையை நிரப்ப விடியலின் நேரம் உணர்ந்து இமைகளை பிரிக்க முடியாமல் கடினப்பட்டு விழிகளை திறந்த வைதேகி கடிகாரத்தை பார்த்தாள்...
தேநீரை பருகிய சற்று நேரம் அமைதியில் கழிய காலி டம்ளரை டேபிளில் வைத்து விட்டு நிமிர்ந்த துவாரகாவிடம்
"சரிடா வைதேகிக்கு கால் பண்ணி எல்லாரும் சாப்டாங்களா வேற ஏதாவது வாங்கிட்டு வரவான்னு கேளு" என்று அவனின் இறுகி இருந்த மனநிலையை இயல்பாக்க வேண்டி பேச
முறைத்து பார்த்த துவாரகேஷ் "அத நீயே கேக்கலாமே...?" என்று ஏகத்துக்கும் இழுத்து...
"தப்பிச்சு போக ட்ரை பண்ணிருந்தா நிச்சயம் அவங்களை என்கவுண்டர் பண்ணிருப்பேன்!" என்றான் சற்றும் தயங்காமல்
சன்னமாய் சிரித்து கொண்டவர் "அத தானே வக்கீல் சார் பண்ணிருக்காரு நீ பண்ணா என்கவுண்டர் அவரு பண்ணா கொலையா?" என கேட்டதும் எதுவும் பேச தோன்றவில்லை அவனுக்கு வாயைடைத்து போனான் விஷ்ணு
இடையில் துவராகா வேறு அனுமதி கேட்டு வெளியே சென்று...
"எப்டி சொல்ற விஷ்ணு அவங்களுக்கு எதிரின்னு யாராவது இருந்துருக்கலாம் இல்லையா? வெறும் அனுமானத்தை வச்சு எதையும் முடிவு பண்ண கூடாது கேஸ் பைல் பண்ணா என்ன ஆகும் தெரியும்ல பல விதமா திசை திரும்பும், சாந்த மூர்த்தி சொசைட்டில முக்கியமான ஆள் மக்கள் மத்தியில் நல்ல பேரை மட்டுமில்ல நம்பிக்கைய சம்பாதிச்சு வச்சுருக்காறு அப்படிப்பட்ட...
விஷ்ணு துவாரகா இருவரும் கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே ஆர்டர் கொடுத்திருந்த காலை உணவு வந்துவிட உணவை முடித்து கொண்டு விஜயனை தவிர்த்து ஆண்கள் மூவரும் சற்று நேரம் கீழே சுற்றி பார்த்துவிட்டு வரலாம் என கிளம்பிவிட்டனர், சஞ்சளா வைதேகி இருவரும் மிஞ்சிய உணவுகளை எடுத்து வைத்து பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருக்க "ஏம்மா...
அவனை அறியாமலே அவளின் சிறு சிறு செய்கைகளை சேகரிக்க தொடங்கியது அவன் மனம் பொறுமையாய் பாலின் சூட்டை ஊதி ஊதி தணித்து ஒவ்வொரு மிடறாக குடித்து முடித்தவள் அருகில் இருந்தவனை பார்க்க அவளை தான் பார்த்து கொண்டிருந்தான் விஜயன் "என்ன" என்று புருவம் உயர்த்தி கண்ஜாடையில் கேட்க
ஒன்றும் இல்லை என்று கண்மூடி மறுப்பாய் தலையாட்டியவன்...
இருவரின் உரையாடலை கேட்டு கொண்டிருந்தவனுக்கு கண்கள் கலங்கியது "எத்தனைக்கு எத்தனை எதிர்மறையான குணமுள்ளவர் என்று எண்ணினேனோ அவையெல்லாம் பொய் என நிரூபித்து உன்னதமானவர் என காட்டிவிட்டாரே இதற்கு ஈடான சந்தோஷம் வேறு உண்டா என்ன? இன்றைய நாளின் இனிய துவக்கம் இது தான் போலும்" என்று எண்ணியவன் இதழில் புன்னகை உறைய "இருவரும் வரட்டும்...
அதிகாலை ஐந்து மணிக்கே அனைவரும் கிளம்பி புது வீட்டிற்கு செல்ல தயாராய் இருக்க சில வேலைகள் இருப்பதாக கூறி விஷ்ணு வைதேகி இருவரும் முன்னால் சென்று விட்டனர், ஐயரை அழைத்து வர வேண்டி துவராகேஷ் சென்றுவிட மற்றவர்களை அழைத்து வரும் பொறுப்பு விஜயனிடம் ஒப்படைக்கப்பட்டது இரண்டு கார்களில் குடும்பத்தினரை அனுப்பி விட்டு இரு சக்கர வாகனத்தில்...
சமையல் அறையில் இருந்து வந்த வைதேகியை கண்டதும் "அக்கா நீங்களும் வந்திருகீங்களா!" என்று ஆச்சரியத்தோடு கேட்டுவிட்டு "பின்ன ஏ என்ன பாக்க வரல" என்று சுணங்கியவள் வைசாலியை முறைத்து பார்க்க
"என்ன எதுக்குமா முறைச்சு பாக்குற உன்னோட அக்கா தான் சொல்ல கூடாதுன்னு சொன்னா அவள கேக்குறத விட்டுட்டு என்ன முறைச்சா என்ன அர்த்தம்" என்றதும்
"என்ன...