Advertisement

“தப்பிச்சு போக ட்ரை பண்ணிருந்தா நிச்சயம் அவங்களை என்கவுண்டர் பண்ணிருப்பேன்!” என்றான் சற்றும் தயங்காமல்

சன்னமாய் சிரித்து கொண்டவர் “அத தானே வக்கீல் சார் பண்ணிருக்காரு நீ பண்ணா என்கவுண்டர் அவரு பண்ணா கொலையா?” என கேட்டதும் எதுவும் பேச தோன்றவில்லை அவனுக்கு வாயைடைத்து போனான் விஷ்ணு

இடையில் துவராகா வேறு அனுமதி கேட்டு வெளியே சென்று விட அவன் சென்ற வேகமே அவனின் கோபத்தை அறுதியிட்டு கூறியது “இதுவேறா..!” என்று சலிப்புடன் எண்ணிக்கொண்டவன் கமிஷ்னரின் எண்ணம் என்னவென்று ஓரளவு யூக்கிது கொண்டு

“முடிவா நீங்க என்ன சொல்றிங்க சார் மேலிடத்துல இருந்து இந்த கேஸ்க்காக தான் உங்கள டிரான்ஸ்பர் பண்ணதே அதிலேயே சில குழப்பங்கள் வந்துருக்கு சோ என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க சார்?”, இறுதியாய் முடிவை அவரே கூறட்டும் என்று அமைதியை தத்தெடுத்து கொண்டான்

“நானா டிரான்ஸ்பர் கேட்டேன் என்ன இங்க வரவச்சதே நீ தானே! இதுக்கு முன்னாடி இருந்த கமிஷ்னருக்கு எதிரான ஆதாரத்தை மேலிடத்துல கொடுத்து அவர வேற ஊருக்கு மாத்த வச்சு! நான் தான் வேணும்னு ரெக்கமெண்ட்ல பண்ணிருக்க!”

“சார் நீங்க இங்க வந்ததுனால தான் இந்த கேஸ்ச இவ்ளோ சீக்கிரமா முடிக்க முடிஞ்சது இல்லனா இப்பவும் என்னால குற்றவாளி யாரு எதுக்காக இப்டி பண்ணாங்கன்னு கண்டுபிடிச்சுருக்கவே முடியாது” என்றவன் “பழைய விஷயம் எதுக்கு சார்! இப்போ என்ன பண்ணலாம்னு மட்டும் சொல்லுங்க சொல்ற இடத்துல நீங்க இருக்கீங்க கேக்குற இடத்துல நா இருக்கேன்”என்று பிடித்தம் இல்லாமல் பேச

“என்ன விஷ்ணு இப்டி வெட்டிவிடுற மாதிரி பேசுனா எப்டி?”

“பின்ன எப்டி சார் பேச சொல்றிங்க? நீங்க என்ன நினைக்கிறீங்க அத சொல்லுங்க கேஸ் முடிஞ்சது, குற்றவாளி யாரு கொலையாளி யாருன்னு உங்களுக்கு தெரியும் சோ முடிவை நீங்க தான் சொல்லணும் அரஸ்ட் பண்ண வேணாம்னு சொல்லிட்டீங்க மீடியாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்ன ஆகும்னு உங்களுக்கு நா சொல்லி தெரிய வேண்டியது இல்ல” என்று அப்போதும் காரமாகவே பேசினான் விஷ்ணு

“நாம நாலுபேரை தவிர வேற யாருக்கும் தெரியாது? நேச்சர் டெத்ன்னு எல்லாரும் நினைக்கிறாங்க! அது அப்டியே இருக்கட்டும் தேவையில்லாத குழப்பத்தை உண்டு பண்ண வேணாம், கேஸை எப்டி மாத்த முடியுமோ அப்டி மாத்தி மீடியாவுக்கு இன்பார்ம் பண்றது உன்னோட வேலை” என்று உத்தரவாய் ஆணையை பிறப்பிக்க

“நானா…!, சாரி சார் என்னால மாத்தியெல்லாம் ரிப்போர்ட் பண்ண முடியாது!” என்று விஷ்ணு மறுத்து பேச

“இப்டி பிடிவாதம் பிடிக்காத விஷ்ணு வக்கீல் சார் மேல உனக்கு இருக்குற கோபம் நியாயமானது தான்! ஆனா.. அதைவிட அசாம்பாவிதமா எதுவும் நடந்துற கூடாதுன்னு தான் கேஸை மாத்த சொல்றேன், எதுடா சாக்குன்னு ஆட்சிய பிடிக்க உத்தமன் மாதிரியான ஆளுங்க அலைஞ்சுட்டு இருப்பாங்க அவங்க வாய்க்கு அவல் கொடுக்கணும்னு ஆசைபடுறியா?” என்று ஆணித்தரமாக அழுத்தமாய் கேட்டு நிறுத்த

அமைதியாகவே இருந்தான் எதிர்த்து பேச தோன்றவில்லை ‘இவர் கூறுவதும் சரிதான் இந்த விஷயத்தை வைத்து உத்தமனை போன்ற பலர் மக்களின் மனதில் வீண் சந்தேகத்தை விளைவித்து காவல் துறைக்கு எதிராக மக்களின் பார்வையை திசை திருப்ப கூடும், அதுமட்டுமல்ல உத்தமனும் சம்பந்தபட்டுள்ளார் என்றால் நிலைமை வேறு விதமாக மாற கூடும்! இறந்தவர்களே உயிர்தெழுந்து வந்து குற்றத்தை ஒப்பு கொண்டாலும் யாரும் நம்ப போவதில்லை’ என்று எண்ணும் போதே அயர்வாக இருந்தது அவனுக்கு

“சார் இப்டி எல்லா பக்கமும் கேட் போட்டா எப்டி சார்? மாத்தி எழுத சொல்லிட்டீங்க அதை எப்டி எழுதுறதுன்னு நீங்களே சொல்லிருங்களேன்” என்று அலுத்து கொள்ள

நெற்றியை அழுத்தமாக நீவிவிட்டபடி சற்று யோசனை செய்தவர் ” ஓகே விஷ்ணு நீங்க இந்த கேஸ்ல இருந்து ரிலீவ் ஆகிக்கோங்க நா மேலிடத்துல ரிப்போர்ட் பண்ணிக்கிறேன் அண்ட் மீடியாவுக்கு நானே இன்பார்ம் பண்ணிடுறேன் பிரஸ்மீட்டுக்கு மட்டும் அரேஜ் பண்ணிரு” என்றவர் “ஆகைன் சாரி லீவ்ல இருந்த உன்ன கேஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணனும்னு கூப்ட்டு டென்ஷன் பண்ணதுக்கு” என்று சிறு புன்னகையுடன் மன்னிப்பு வேண்ட

“இட்ஸ் ஓகே சார்” என்று எழுந்து கொண்டவன் அருகில் இருந்தவனை பார்த்து “அதான் எல்லாம் சால்வ் ஆகிருச்சே வக்கீல் சார் பின்ன எதுக்கு முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்கீங்க?, எப்பவும் போல உங்க வேலைய பாருங்க சரியான தண்டனை தான் அவங்களுக்கு கொடுத்துருக்கீங்க,

நியாயம் கிடைக்காதுன்னு நீங்களே தண்டிச்சுட்டீங்க! ஆனா… இன்னொரு முறை இதே மாதிரி சட்டத்தை கையில எடுத்தா தண்டனை கன்பார்ம் யாருக்காவும் பாக்க மாட்டேன்” என்றவனின் பார்வை கமிஷ்னரின் மீது படிந்து மீள சன்னமாய் சிரித்து கொண்டவர் எதுவும் பேசவில்லை

“உங்களோட சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்” என்று சிநேகமாய் புன்னகை சிந்தியவன் கமிஷ்னருக்கு சால்யூட் அடித்து மரியாதை செலுத்தி விட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வர

பைக்கில் சாய்ந்து இலக்கற்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் துவராகா “சமாளி விஷ்ணு” என்று உள்மனம் இடித்துரைக்க, அவன் கோபத்தை எதிர்பார்த்தே சமாளிக்கும் திடத்தோடு அருகில் வந்தவன் துவராகா என்று அழைக்கும் முன்பே “வண்டியில ஏறு” என்றான் பகையாளியிடம் பேசுவது போல முகத்தை திருப்பி கொண்டு

“டேய் இங்க பாருடா..” என்று அவன் முகத்தை தன் பக்கம் திருப்பி “சொல்ல கூடாதுன்னு இல்ல கமிஷ்னர்கிட்ட சொன்ன அதே ரீசன் தான் உன்கிட்டயும் சொல்றேன் எல்லாம் கலெக்ட் பண்ண பிறகு சொல்லிக்கலாம்ணு விட்டுட்டேன்” என்று தணிவான குரலில் கூற

“அந்த விஷயம் எனக்கு தேவையில்லடா நீ என்கிட்ட சொல்ல வேணாம் ஏன்னா கேஸ்ஸ நீ தான் இன்வெஸ்டிகேஷன் பண்ண நா வெறும் கையாளு மட்டும் தான்! ஆனா.. அமிர்தா அத்தைய கொலை பண்ணிருக்காங்கன்னு அன்னைக்கே உனக்கு தெரிஞ்சுருக்கல பின்ன எதுக்காக என்கிட்ட சொல்லாம மறைச்ச?” என்று குற்றம் சாடியவனை தயங்கி பார்த்தான் விஷ்ணு

“இல்லடா நீ ரொம்ப எமோஷ்னல் டைப், அவங்க அட்டாக் வந்து இறந்துட்டாங்கன்னு எல்லாரும் நம்புனிங்க அந்த நம்பிக்கைய உடைக்க விரும்பலை துவராகா!, விஷயத்தை சொல்லிருந்தா எப்டியும் சஞ்சளாகிட்ட ஏதோ ஒரு வேகத்துல மனசு தாங்காம சொல்லிருப்ப! சீக்ரெட் விஷயம் வெளிய தெரிஞ்சு கொலையாளி உசாராயிருவான்னு தான் சொல்லலை” என்றவன்

“அவங்க உடம்பு மயானத்துக்கு எடுத்துட்டு போனோமே அப்ப தான் பாத்தேன் கையில தனியா அடையாளம் தெரியிற அளவுக்கு சின்னதா ஓட்டை இருந்தது அப்பவும் ஒரு சின்ன சந்தேகம் தான்! அதை தெளிவுபடுத்திக்க ஆன்டியோடா ரூமை செக் பண்ணதுல பிரோவுக்கு பக்கத்துல இன்ஜக்சன் சிரன்ஞ் இருந்தது ஐ திங்க அவன் தப்பிச்சு ஓடும் போது தவறி விழுந்துருக்கலாம்” என்றவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து வெள்ளை காகிதத்தை எடுத்து துவாரகாவிடம் நீட்டி

“ம் இதை படிச்சு பாரு ஆன்ட்டி கடைசியா எழுதின லெட்டர்” என்று கொடுத்ததை வாங்கி பிரித்து படிக்க தொடங்கினான் துவாரகா

“விஷ்ணு, எனக்கு எப்டி சொல்றதுன்னு தெரியலை இப்போ கூட உன்கிட்ட உண்மைய சொல்லனும்னு தோணுது ஆனா உனக்கு இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கு சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல இப்டி ஒரு விஷயத்தை சொல்லி உன்ன குழப்ப விரும்பலைப்பா  வெளிப்படையா என்னால எதையும் சொல்ல முடியாது, ஆனா.. எனக்கு தெரிஞ்ச விஷயத்தை யார்கிட்டயாவது  சொல்லணும்னு தோணுது,

சில நாளாவே சஞ்சளாவா யாரோ பாலோ பண்றாங்கப்பா ஆனா… யாருன்னு தான் தெரியலை! அதான் உங்ககூட அவள அனுப்பி வச்சுருக்கேன், அவளுக்கு எதுவும் தெரியாது எல்லாமே என்ன எதிர்பார்த்தே வளந்துட்டா மனசு என்னமோ ஒரு மாதிரி கலக்கமாவே இருக்குது அதான் எழுதிறலாம்னு எழுதுறேன்,

ஒருவேளை நீங்க திரும்பி வரும் போது நா இல்லைன்னா அவள நீங்க தான் பத்திரமா பாத்துக்கணும் தனியா விட்டுறாதீங்க என்னோட பொண்ண!, தனக்கு இது வேணும் வேணான்னு வாய் திறந்து கேட்க மாட்டா! நா இல்லாம ரொம்ப கஷ்டபடுவா, இனிமே தான் வாழ்க்கை அவளுக்கு நிறைய பாடத்தை கத்து கொடுக்க போகுதுன்னு நினைக்கிறேன் நீங்க இங்க வரும் போது நா இருந்தா விவரமா பேசலாம் இப்போதைக்கு சொல்ல நினைச்சத சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்!” என்று அமிர்தாவின் கோணல் மாணலானா கையெழுத்தில் எழுதி முடிக்கபட்ட காகிதத்தை வெறித்தவன் விழிகளில் ஈரம் கோர்த்து நின்றது

“இவ்ளோ பெரிய விஷயம் இருந்துருக்க நம்மகிட்ட முன்னாடியே சொல்லிருக்கலாமே விஷ்ணு ஏன் அத்தை இப்டி பண்ணாங்க?” என்று ஆற்றாமையுடன் கேட்டவனிடத்தில் சிறு கோவல் வெடிக்க

அவனை அணைத்து ஆறுதல் படுத்தியவன்”அதான் தெளிவா சொல்லிருக்காங்களே இருந்தா விவரமா நேர்ல பேசலாம்னு! அப்ப அவங்க என்ன மனநிலையில இருந்தாங்களோ? எழுத நினைச்சிருக்காங்க எழுதி வச்சுட்டாங்க அவன் கடத்த நினைச்ச பொண்ணு சஞ்சளா தான்னு ஆன்டிக்கு எப்டியோ தெரிஞ்சிருக்கு நமக்கு தெரிய கூடாதுன்னு ஆன்ட்டிய மர்டர் பண்ணிருக்கான்,

வக்கீல் சார் கூட சொன்னாரே ஒரு பொண்ணை கடத்த போறதையும் மாட்டுனா அவர் தான் வாதடனும்னு கன்டிஷன் போட்டான்னு அது சஞ்சளா தான் போல?, விஷயம் வெளிய தெரியவும் தான் அவன் ருத்ரனுக்கு ரூல்ஸ் போட்டுருக்கான் அதுமட்டுமில்ல சுரேந்தரை எனக்கு முன்னாடியே தெரியும்டா?” என்று கூறி நிறுத்த

அதிர்ச்சியுடன் பார்த்தவன் “எப்டி தெரியும்?”

“மதுரையில பாத்துருக்கேன்  ஒரு ஆக்சிடன்ட் கேஸ்ல அரஸ்ட் பண்ணதே நான் தான்! அதான், என்ன தெரிஞ்ச மாதிரி காட்டிக்காம என்ன பத்தின எல்லா விபரத்தையும் தெரிஞ்சுகிட்டு பேசிருக்கான்” என்றவன்

“சரிடா இனிமே இதை பத்தி பேசவேணாம் யார்கிட்டயும் சொல்லிறாத முக்கியமா சஞ்சளாகிட்ட இதை பத்தி வாயே திறக்க கூடாது, இறந்து போனவங்க இனி வர போறதில்லை கொலை பண்ணவன் உயிரோடயும் இல்ல என்ன நடந்ததுன்ற உண்மை அமிர்தா ஆன்ட்டி கூடவே மறைஞ்சு போயிருச்சு போனது போனதாவே இருக்கட்டும்,

இப்போ தான் சஞ்சளா கொஞ்சம் கொஞ்சமா மனசளவுல தேறி வந்துருக்கா! இப்டி ஒரு விஷயம் நடந்துருக்குன்னு சொல்லி மறுபடியும் அவளை பழைய நிலைமைக்கு தள்ளிறாதடா!” என்று கெஞ்சலாய் வேண்டுகோள் வைக்க

“இல்லடா! இதை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் அவ எனக்கு ரொம்ப முக்கியம் சஞ்சு மறுபடியும் உடைஞ்சு போறத பாக்குற தெம்பு எனக்கு சுத்தமா இல்ல ஒரு தடவை பாத்ததே இந்த ஜென்மத்துக்கு போதும்” என்று கரகரப்பான குரலில் பேசிய துவாராகவை ஆசுவாசபடுத்த வேண்டி அருகில் இருந்த டீ கடைக்கு அழைத்து சென்றான் விஷ்ணு

Advertisement