Advertisement

தளிர்களில் தங்கிய நீர் திவலைகலான பனிதுளிகள் ஆதவனின் இதம் பட்டு கரைய தொடங்கிய இதமான காலை வேலை. நீண்ட விடுமுறைக்கு பின் பள்ளி செல்ல அவசரமாக காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தாள் வைதேகி. காலை ஆறுமணி என கடிகாரத்தின் வழியே செவிகளை எட்டிய செய்தியில் உறக்கம் கலைந்தவன் முகம் கழுவி விட்டு நேராக சமையல் அறைக்குள் நுழைந்து, திண்டில் இருந்த பாத்திரங்களை ஒதுக்கிவிட்டு ஏறி அமர்ந்து கொண்ட விஷ்ணு “தேவிம்மா மாமாவுக்கு ஒரு காஃபி” என்று காலை ஆட்டியபடி கேட்க

அங்கொருவன் இல்லாதது போலவே சட்டை செய்யாமல் செயலில் கவனமாய் இருந்தாள் அவனின் தேவி “ப்ச் இன்னும் கோபம் போகலையா அதான் எல்லாம் சரியாகிருச்சே பின்ன என்ன” என்று அலுத்து கொண்டவன் “சாரி நா அப்டி பேசிறுக்க கூடாது தான் இனி அந்த மாதிரி பேச மாட்டேன் இங்க பாரு” என்று அடுப்பில் எதையோ கிண்டி கொண்டிருந்தவளை தன்புறம் திருப்ப அவளது பார்வை அவனை தவிர மற்ற இடங்கள் அனைத்திலும் தடம் பதித்தது.

எத்தனை நேரம் பார்வையால் என்னை புறக்கணிப்பாய் என்று அவனும், வம்படியாய் அவளை தன்புறம் திருப்பியவாறே சிரிப்பை அடக்கியபடி பார்த்து கொண்டிருக்க

இழுத்து பிடித்து வைத்திருந்த கோபமெல்லாம் மெல்ல கரைய தொடங்கியது அவனின் ஊசியாய் துளைக்கும் ஆழமான பார்வையில். நிமிர்ந்து அவன் முகம் கண்டவளுக்கு புன்னகை அரும்ப

“நீங்க இருக்கீங்களே..” என்று சலுகையாய் சலித்து கொண்டவள் “காஃபி தானே வேணும் ஹால்ல போய் உக்காருங்க நா கொண்டு வறேன்”

“முடியாது இங்க தான் இருப்பேன்” என்று சட்டமாய் அமர்ந்து சலுகையாய் தோளில் கைபோட்டு கொள்ள

“ம்ஹும் இப்டி பிடிச்சு வச்சுக்கிட்டா எப்டி காஃபி போடுறதாம்” என்று புருவம் உயர்த்தி கேட்க

“அது உன்னோட சாமர்த்தியம்” என்று தோளை குலுக்கியவனின் கையை வேகமாக தட்டிவிட்டவள்

“ப்ச் முதல இங்க இருந்து போங்க விணு எனக்கு நிறைய வேலை இருக்கு. இன்னைக்கு ஸ்கூலுக்கு போகணும் நிறைய லீவ் எடுத்துட்டேன், முடிக்க வேண்டிய சிலபல்ஸ் எக்கச்சக்கம் இருக்கு எப்டி தான் பிரிப்பர் பண்ணி முடிக்க போறேனோ தெரியல, இதுல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான டவுட்டுன்னு நோட்டையும் புத்தகத்தையும் தூக்கிட்டு வருவாங்க” என்று மலைப்புடன் கூறியவளின் கைகள் அடுப்பில் பாலை காய வைத்தது

“ப்ச் உனக்கு தான் மேக்ஸ் பிடிச்ச சப்ஜெக்ட் ஆச்சே தேவிம்மா உன்னால முடியாதது எதுவும் இல்ல” என்றவன் “நா ஏதாவது ஹெல்ப் பண்ணவா? சீக்கிரம் வேலை முடியும் ரெண்டுபேரும் சேர்ந்தே வேலைய முடிக்கலாம்!” என்று புன்னகை அரும்ப கூற

“பரவாயில்ல மாமா நானே பாத்துகிறேன், உங்களுக்கு நேரம் ஆகலையா?”

“இன்னும் நேரம் இருக்கு தேவிம்மா” என்றவன் அவள் மறுப்பை பொருட்படுத்தாது காய்கறியை நறுக்க தொடங்கினான் விஷ்ணு

சொன்னால் கேட்க போவதில்லை என்று அடுத்த வேலையை கவனித்தபடி “விணு உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்”

“என்ன தேவிம்மா சொல்லு?”, கவனத்தை செய்யும் வேலையில் நிலை நிறுத்தியபடி கேட்டான்

“சஞ்சளா எதுக்கு இப்டி ஒரு முடிவெடித்தான்னு தெரியலை ஆனா ஏதோ ஒரு கோபத்துல தப்பான புரிதல்ல எடுத்த முடிவுன்னு எனக்கு தோணுது மாமா” என்று தன் யூகத்தை கூற

“எப்டி சொல்ற தேவிம்மா?”

“நேத்து நைட்டு அவ முகத்தை பாத்திங்களா அதுல உண்மையே இல்ல, துவராகா அண்ணா அவள கூட்டிட்டு போக வந்தப்போ அவரோட முகமும் சரியில்ல கோபமா இருந்த மாதிரி தெரிஞ்சது”

“அதையெல்லாம் கவனிக்காமலா இருப்பேன் ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க, ஆனா ரெண்டுபேரும் சொல்லிக்கலை. அது தான் அவங்க பண்ற தப்பு யாராவது ஒருத்தர், மனசுல இருக்கிறதை சொல்லிட்டா ப்ராப்ளம் சால்வ் ஆனா துவாரகாகிட்ட சஞ்சு என்ன சொல்லிருக்கான்னு தெரியலையே?”,கவலையுடன் விஷ்ணு கூற

“அவங்க சொல்லாட்டி என்ன நாம சொல்லிறலாம் ரெண்டுபேர் மனசுலயும் என்ன இருக்குன்னு” என்று தீவிரமாக கூற

“வேணாம் தேவிம்மா எதுல வேணாலும் நாம மூக்கை நுழைக்கலாம் ஆனா இந்த மாதிரி விஷயத்துல அவங்க தான் நிதானமா யோசிச்சு உள்ளதை சொல்லணும் இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல பாத்துக்கலாம் விடு, அவங்க எதுவும் பண்ணலைன்னா நாம சொல்ல வேண்டியதை சொல்லுவோம் என்ன முடிவு எடுக்கணுமோ எடுகட்டும்!” என்று விஷ்ணு அசட்டடையாய் கூறிட

அவன் கூற்று சரியென்றே வைதேகிக்கு தோன்றியது.

“சரி தேவிம்மா நீ போய் குளிச்சிட்டு வா பிரேக்பஸ்ட் நா ரெடி பண்ணிடுறேன்” என்று விஷ்ணு கூற

“இருக்கட்டும் மாமா.. ” என்று வார்த்தைகளை இழுத்தாள் வைதேகி

“ப்ச் டைம் ஆச்சு நீ போ நா பாத்துகிறேன்” என்று வலுக்கட்டாயமாக வைதேகியை சமையல் அறையில் இருந்து விரட்டியவன் கடகடவென உணவை தயார் செய்ய தொடங்கினான்

விசாலாட்சி துவாரகேஷ் இருவரும் எழும் முன்பே எழுந்து வந்து ஹாலில் அமர்ந்து கொண்டாள் சஞ்சளா ராதூக்கம் தவிர்த்தவளுக்கு சிந்தனைகள் கட்டவிழ்த்த குதிரைகளாய் தறிகெட்டு ஓடியது. உறங்காத இரவுக்கு அலாரம் வேறு வைத்து கொண்டாள், இரவின் அடர்த்தியை அது தரும் தனிமையை அன்று தான் உணர்ந்தாள் அவள்

இரவென்றால் இருள் கலைந்து வரும் வெளிச்சம் என்று எண்ணியிருந்தவளுக்கு அது கொடுக்கும் நிசப்தம் அத்தனை கொடுமையாய் பயமாய் இருந்தது. மனம் எப்போது விடியும் விடியும் என்று காற்றில் அலைமோதும் தீபத்தின் சுடராய் பரிதவித்து கொண்டிருக்க, அவளது தவிப்பை போக்கும் விதமாய் கிழக்கே பகலவன் உதிக்க தொடங்கும் வைகறை நேரம் காக்கைகள் கரைந்து விடியலின் நேரத்தை உணர்த்தின.

உறக்கம் கலைந்து எழுந்து வந்த விசாலாட்சி ஹாலில் தலைக்கு அனுசரணையாய் கைகளை முட்டு கொடுத்து பார்வையை டேபிளின் மீது பதிய வைத்தபடி அமர்ந்திருந்தவளை கண்டு பதறி போனவர் வேகமாக அருகில் வந்து” சஞ்சும்மா என்னாச்சு இங்க வந்து உக்காந்துட்டு இருக்க அதுவும் இவ்ளோ சீக்கிரத்துல எந்திரிச்சிறுக்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே?” என்றார் பதற்றத்தை முகத்தில் காண்பித்தபடி

நிமிர்ந்து அவர் முகம் பார்த்து “இல்ல அத்தை  துக்கம் வரல அதான்..” என்றவள் மருகி அவர் முகத்தை பார்த்து கொண்டே “நீங்க உக்காருங்க நா உங்களுக்கு காஃபி போட்டு கொண்டுவறேன்” என்று எழுந்து செல்ல

இன்றைய விடியல் கிழக்கிலா மேற்கிலா என்று அதிசயித்து பார்த்து கொண்டிருந்தார் விசாலாட்சி இத்தனை நாள் இல்லாத உற்சாகம். உற்சாகம் என்பதைவிட ஏதோ ஒரு திடம் அவள் நடையில் தென்பட்டது, சமையல் அறையில் அவள் குளம்பி தயாரிக்கும் முறையை திகட்டாத பார்வையுடன் பார்த்து கொண்டிருந்தவருக்கு ‘இவளுக்கு இன்னைக்கு எண்ணாச்சு’ என்ற சந்தேகமும் எழுந்தது அவரிடத்தில்

இருவருக்கும் காஃபி கலந்து கொண்டு வந்தவள் விசாலாட்சியிடம் ஒன்றை கொடுத்துவிட்டு அவளுக்குறியதை எடுத்து கொண்டு எதிரில் அமர்ந்து கொண்டாள் சஞ்சளா, காஃபியின் மணம் மட்டுமல்ல திடம் சுவை அபாரமாய் இருக்க “ரொம்ப நல்லா இருக்கு ம்மா” என்று காஃபியை பருகிய சுவையுடன் நாவில் இருந்து பாராட்டை உதிர்க்க

“தங்க்ஸ் அத்தை” என்றவள் பார்த்து கொண்டிருந்த சுபவேளை வந்துவிட்டது என்று மெதுவாக பேச்சை தொடங்கினாள் “அத்தை.. உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்” என்று தணிவாக தயக்கத்துடன் இயம்ப

கூர்மையான அதேநேரம் மனதை ஊடுருவி செல்லும் பார்வையில் சஞ்சளாவின் முகத்தை ஆராய்ந்தவர் “சொல்லும்மா என்ன சொல்லணும்?”

“நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க அத்தை உங்க மேல எனக்கு நிறையவே மரியாதை இருக்கு, அந்த எண்ணத்துல தான் நா இப்போ ஒரு விஷயம் சொல்ல போறேன் கோபப்படாம கேட்கணும்” பீடிகை பலமாய் போட்டவள்

‘ நா கோயம்புத்தூர் போலான்னு இருக்கேன் ரெண்டு நாள்ல கிளம்பனும்” என்று ஆறி தணிந்து ஆடைகட்டி காட்சியளித்த காஃபியை பார்வையால் துழாவியபடி கூறியவள் கீழ் கண்ணால் விசாலாட்சியின் பாவங்களை பார்க்க, நினைத்து பார்த்ததற்கு மேலேயே அதிர்ச்சியின் ரேகைகளும் திகைப்பின் நீளங்களும் எல்லை மீறி இருந்தது

மிடறு மிடறாக குடித்து கொண்டிருந்தவருக்கு நாவில் தித்திப்பு மறைந்து இருந்த இடம் தெரியமால் கரைந்து போக, வேகமாக கப்பை கீழே வைத்துவிட்டு விழிகள் அகல அவளை பார்த்தவர் “ஏம்மா இங்க இருக்க உனக்கு பிடிக்கலையா? நாங்க ஏதாவது உன்ன கஷ்டப்படுத்திருந்தா மன்னிச்சிறு சஞ்சும்மா வீட்டை விட்டு போறேன்னு மட்டும் சொல்லாதடா, என்னோட அண்ணே பொண்ணு நீ உன்ன நா பாத்துக்க மாட்டேனா எதுக்கு திடீர்னு கோயம்புத்தூர் போற துவராகா ஏதாவது சொன்னானா சொல்லு?” என்று வருத்தம் இழையோட ஆரம்பித்தவர் கடைசி வரியில் கோபமாக கேட்க

“அய்யோ இல்ல அத்தை அவரு எதுவும் சொல்லலை. இது.. நானா எடுத்த முடிவு, அவருக்கே தெரியாது நா இந்த மாதிரி ஒரு முடிவெடுத்துருக்கேன்னு என்ன  உங்க பொண்ணு மாதிரி ரொம்ப அக்கறை எடுத்து பாத்துகிட்டிங்க உங்க இடத்துல வேற யாராவது இருந்திருந்தாங்கன்னா இந்த அளவுக்கு என்மேல பாசமா இருந்திருப்பாங்களான்னு எனக்கு தெரியாது அத்தை,

இடமாற்றம் இருந்தா மனசுக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்னு தோணுச்சு அதான்…! எத்தனை நாளைக்கு தான் சும்மாவே அடுத்தவங்களுக்கு பாரமா இருக்குறது” என்று குற்றவுணர்வுடன் கூற

அவளது பேச்சில் கோபத்தில் வெகுண்டார் விசாலாட்சி

“அடுத்தவங்கன்னு சொல்லாத சஞ்சு. நீ ஒன்னும் யாரோ இல்ல உன்ன பாரமா நினைக்க என்னோட அண்ணே பொண்ணு  நீ அதை ஞாபக்கத்துல வச்சுட்டு பேசு” என்று கீறிச்சிட

“நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க நா அந்த அர்த்தத்துல சொல்லை அத்தை படிச்சு முடிச்சுட்டேன் கவனத்தை வேற மாதிரியான விஷயத்துல திசை திருப்புனா மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் அதனால தான் வேலைக்கு போறேன்னு சொல்றேன் இங்க இருந்தா அம்மாவோட நினைப்பு என்ன எதுவுமே செய்ய விடாது அத்தை” என்று கவலையுடன் பேசியவளின் மனம்

‘அம்மாவோட நினைப்பு மட்டும் தானா?’ என்று கேட்க

பதில் இல்லை அவளிடம் அவனை மட்டுமல்ல அனைவரையும் விட்டு விலகுவது என்ற முடிவே பெரும் வலியை கொடுத்தது நீண்ட சிந்தனைக்கு பின் எடுத்த தெளிவான தீர்மானம் அல்லவா?

“அத்தை இந்த வேலையில நா ஜாயின் பண்ணா என்னோட மனசுக்கு ஒரு திருப்தி கிடைக்கும் இழந்தவங்களை நினைச்சு இருக்குற வாழ்க்கைய வீணாக்க விரும்பலை அதான் இங்க வேணாம்னு கோயம்புத்தூர்ல வேலைக்கு அப்ளே பண்ணிருக்கேன், விஷ்ணு அண்ணா ஓகே சொல்லிட்டாரு நீங்க எந்த எதிர்ப்பும் காட்ட மாட்டீங்கன்னு நினைக்கிறேன் சரின்னு சொல்லுங்க அத்தை ” என்று ஒவ்வொரு வார்த்தைகளிலும் தன் எண்ணத்தை காட்டியவள் இறைஞ்சும் குரலில் அனுமதி கேட்க

விசாலாட்சியின் எண்ணங்கள் அனைத்தும் அந்தல் சிந்தலாய் போனது ‘நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் போல’ என்று நிராசையுடன் எண்ணி கொண்டவர் வருத்தம் தேய்ந்த குரலில் “நா என்னம்மா சொல்றது”, பெருமூச்செடுத்து தொடர்ந்தார்

“நா வேற ஒன்னு நினைச்சு வச்சுருந்தேன் அது கானல் நீரா போகணும்னு இருக்கு போல” என்று ஏக்கத்தை முழுதாய் வெளிப்படுத்தும் முன்பே

“அம்மா..” என்ற அவசரம் நிரம்பிய கண்டிக்கும் குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர்

வேகமாக இருவரின் அருகில் வந்த துவாரகேஷ் சஞ்சளாவை பார்வையால் தவிர்த்து விட்டு விசாலாட்சியிடம் பேச தொடங்கினான் “அவ போகட்டும் ம்மா யாரோட விருப்பத்துக்கும் குறுக்க நிக்க வேணாம் அவங்களே சுயமா யோசிச்சு எடுத்த முடிவு தானே! நமக்கு பாரமா இருக்க கூடாதுன்னு நினைச்சு ஒரு நல்ல முடிவை எடுத்துருக்காங்க விடுங்க, யாரையும் வற்புறுத்தி இங்க தங்க வைக்க முடியாது அவங்க விருப்பம் எங்க போகணுமோ போகட்டும் என்ன பண்ணணுமோ பண்ணட்டும்” என்று கோபம் வருத்தம் ஏளனம் என எதிலும் வரையறுக்க முடியாத குரலில் கூறியவனின் பன்மைகள் கூட இறக்கி வைக்க முடியாத அளவிற்கு பாரமாய் இருந்தது சஞ்சளாவிற்கு

“என்னைக்கு கிளம்பணும்னு சொல்லும்மா நானே உன்ன பஸ் ஏத்தி விடுறேன்”, அவள் முகம் பாராமல் கடமையே என உரைத்தவன்

“அம்மா எனக்கொரு காஃபி வேணும் என்னோட ரூமுக்கு கொண்டு வந்துருங்க” என்று கட்டளையாய் கூறிவிட்டு வந்த சுவடு தெரியாதபடி அறைக்குள் சென்றுவிட

தடை சொல்வான் என எண்ணியவளுக்கு அவனின் அனுமதி கண்ணீரை வர வழைத்தது யாரோ ஒருத்தியை போல பேசிவிட்டு செல்வது இன்னும் இன்னும் வேதனையை அளிக்க விசாலாட்சியின் முன்பு மனதையும் முகத்தையும் காட்ட விரும்பாது எழுந்து அறைக்கு சென்றுவிட்டாள் சஞ்சளா

Advertisement