Advertisement

அவனை அறியாமலே அவளின் சிறு சிறு செய்கைகளை சேகரிக்க தொடங்கியது அவன் மனம் பொறுமையாய் பாலின் சூட்டை ஊதி ஊதி தணித்து ஒவ்வொரு மிடறாக குடித்து முடித்தவள் அருகில் இருந்தவனை பார்க்க அவளை தான் பார்த்து கொண்டிருந்தான் விஜயன் “என்ன” என்று புருவம் உயர்த்தி கண்ஜாடையில் கேட்க

ஒன்றும் இல்லை என்று கண்மூடி மறுப்பாய் தலையாட்டியவன் சட்டென கைகளை அவளின் வாயருகே கொண்டு போக வேகமாக தலையை பின் இழுத்து கொண்டவள் “என்ன பண்றிங்க விஜி”, அவள் குரலில் கீறலாய் சிறு கோபம் தொனித்தது

“இல்ல.. பால்” என்று தயங்கியபடி ஒற்றை விரலால் அவள் உதட்டின் மேல் வெள்ளை மீசையாய் படிந்திருந்த பாலின் சுவடை காண்பிக்க வேகமாக துடைத்து கொண்டவள் அவனின் தயக்கம் சுமந்த பார்வையை கண்டு “ஏதாவது பேசணுமா விஜி?”

ஆமாம் என்று தலையாட்டியவன் “தனியா பேசணும் நேத்து நைட்டு சொன்னேனே காபி ஷாப்ல மீட் பண்லாம்னு”

“ஓ.. ஓகே” என்று மறுவார்த்தை பேசாமல் எழுந்து சென்றுவிட

அதுவரை இருவரின் சம்பாஷனைகளை பார்த்து கொண்டிருந்த துவாரகேஷ் சலிப்பு தட்டியது போல “ம்ஹும் இவங்க ரெண்டு பேருக்கும் இதே வேலையா போச்சு இப்போ கொஞ்ச வேண்டியது கொஞ்ச நேரத்துல சண்டை போட்டு முகத்தை திருப்பிக்கிட்டு பாக்க பிடிக்காத பகையாளி மாதிரி கோவிச்சுட்டு போறது” என்று எண்ணியவன் கையில் இருந்த  பாலை அவசரம் அவசரமாக  குடிக்க தொடங்கினான்

வைதேகியை அழைத்து விஷயத்தை கூறிய விஷ்ணு காக்கி உடைய எடுத்து மாட்டி கொள்ள “நாளைக்கு போலாமே மாமா எல்லாரும் வந்துருக்காங்க அவங்க கேட்டா நா என்ன பதில் சொல்றது அப்பா அம்மா என்ன நினைப்பாங்க? ஏற்கனவே அவங்க முகமே சரியில்ல இதுல நீங்க வேற இப்டி பண்ணா எப்டி மாமா” என்று சோர்ந்து போன குரலில் பேச

சட்டையின் பொத்தான்களை மாட்டியவாறே “ப்ளீஸ் தேவிம்மா நா போய்ட்டு வேலை முடியவும் வந்துருவேன் முக்கியமான கேஸ் பத்தி கமிஷனர்கிட்ட ரிப்போர்ட் பண்ண வேண்டி இருக்கடா அதுவும் அவரே கால் பண்ணி வர சொல்லிருக்காரு இன்னைக்கு ஈவ்னிங் டெல்லி கிளம்புறாராம் சோ நா கண்டிப்பா போகணும் ப்ளீஸ் கோபப்படாத தேவிம்மா” என்று சமாதானம் செய்யும் விதமாக கண்களால் இறைஞ்ச

“ப்ச் என்னமோ பண்ணுங்க ஆனா ஒன்னு நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்ல மாமா இதுக்கு எதுக்கு எல்லாரையும் வர சொல்லணும் நாம ரெண்டுபேரே போதுமே பால் காய்ச்ச, எப்பவும் வேலை தான் முக்கியம்னா அதையே கட்டிக்க வேண்டியது தானே ” என்று சுள்ளென்று கோபம் காட்ட

கோபத்தில் சிரிப்பு எழுந்தாலும் அடக்கி கொண்டவன் பதிலுக்கு பதில் பேசினாள் வார்த்தைகள் முற்றி சண்டையாக மாறிவிடும் என்று எதுவும் பேசாமல் அமைதியாக சாக்ஸை மாட்டி கொண்டு”சரி தேவிம்மா நா கிளம்புறேன் எதுனாலும் நைட்டு பேசிக்கலாம்” என்றுவிட்டு அறை வாசல் வரை சென்றவன் திரும்பி பார்க்க நின்ற நிலை மாறாது முதுகு காட்டி நின்றிருந்தாள் வைதேகி

அவளின் வாட்டம் கண்ட முகம் நினைவில் வர அரைமனதுடன் செல்ல விருப்பமில்லாமல் “ப்ச் இவ வேற நேரம் காலம் தெரியாம முகத்தை தூக்கி வச்சுட்டு இப்டி இருந்தா எப்டி கிளம்பி போறது” என்று இம்சையாய் எண்ணியவன் “தேவிம்மா” என்று அருகில் வர

“அதான் போறீங்களே போய்ட்டு வாங்க நா எப்டி போனா உங்களுக்கு என்ன குடிகாரன் பேச்சை கூட ஒருவகையில நம்பிரலாம் ஆனா உங்க பேச்சை நம்பவே முடியாது விணு நேத்து நைட்டு என்ன சொன்னிங்க லீவ்ல இருக்கேன்னு தானே சொன்னிங்க இப்போ கமிஷ்னர் கூப்டாருன்னு கிளம்பி போறீங்க என்னைக்காவது ஒரு நாள் சொந்தங்களோட சந்தோஷமா இருக்கலாம்னு நினைச்சா இப்டி பண்றிங்க” என்றவளுக்கு கண்கள் கலங்கி கன்னத்தை தொட தயராய் இருந்தது

“அதுக்கெதுக்கு அழுகுற அழுகாம பேச தெரியாதா போயிட்டு ஈவ்னிங் வந்துருவேன் ப்ளீஸ்டா போக விடு முக்கியமான கேஸ் இப்போ தான் முடியிற நிலைமைக்கு வந்துருக்கு கமிஷ்னர் திரும்பி வர ஒரு வாரம் ஆகும் அவரே வர சொல்லிருக்கும் போது போகாம இருந்தா நல்லா இருக்காது ப்ளீஸ் ப்ளீஸ்…”என்று கன்னம் பிடித்து கெஞ்சியபடி கொஞ்ச

தீர்க்கமாய் பார்த்தவள் “சரி போயிட்டு வாங்க” என்று சன்னமாய் முறுவலித்து அவன் சட்டை காலரை சீர் செய்ய

“இது தான் என்னோட தேவிம்மா போயிட்டு சீக்கிரம் வந்துடுறேன்” என்று ரகசியம் போல முணுமுணுக்க அவளையும் மீறி வதனத்தில் வெட்கம் படர்ந்த புன்னகை அரும்பியது அவளிடத்தில் , துளைக்கும் பார்வையில் அவள் நாணத்தை ரசித்து கொண்டிருந்தவன் நெருங்கி சென்று “நிஜமாவே இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க தேவிம்மா” என்று காதோரம் காற்றில் தவழ்ந்து கன்னத்தை உரசி கொண்டிருந்த கேசத்தை ஒதுக்கி விட

கூச்சத்தில் சிலிர்த்தவள் “போதும் ஐஸ் வச்சது கிளம்புங்க நேரம் ஆகுது காணோமேன்னு தேடி வந்துற போறாங்க” என்று ஆருடம் கூறியவள் முகத்தை திருப்பி கொள்ள

“உள்ள வரலாமா?” என்று அலைபேசியை நோண்டி கொண்டே உள்ளே நுழைந்தவனின் குரலில் இருவரும் சட்டென விலகி நின்றனர் “சொல்லலை” என்று கணவனை பார்த்து நமட்டு சிரிப்பை உதிர்க்க

“அதான் வந்துட்டேயே அப்புறம் என்ன பர்மிஷன் கேட்டுகிட்டு உள்ள வா” என்றான் விஷ்ணு காட்டம் நிறைந்த குரலில்

நிமிர்ந்து பார்த்தவன் திருதிருவென விழிக்க துவாரகேஷை கண்டு சன்ன சிரிப்புடன் வெளியேறினாள் வைதேகி “உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல துவாரகா” என்று தலையில் கைவைத்து நொந்து கொண்டவனை புரியாமல் பார்த்தவன்

“நா இப்ப என்ன கேட்டுட்டேன்னு எனக்கு அறிவு இல்லன்னு சொல்ற?”

“ம்ம் தப்பா சொல்லிட்டேன் சாரி உனக்கு தான் மூளையே இல்லயே அது இருந்திருந்தா தான் அறிவு இருந்திருக்குமே” என்றவனை

“போதும் நிறுத்து” என்று கைகாட்டி தடுத்தவன் “எதுவா இருந்தாலும் போய்ட்டு வந்து நீ வஞ்சமில்லாம கொடு நா வாங்கிக்றேன் இப்போ கிளம்பலாம் டைம் ஆச்சு” என்று வேகமாக கூறவும்

“ஆமா அது தான் இப்போ முக்கியம்” என்றவன் அனைவரிடமும் கூறிவிட்டு காவல் நிலையம் சென்று ஆதாரங்களை வாங்கி கொண்டு இருவரும் கமிஷ்னர் அலுவலகம் விரைந்தனர்

கமிஷ்னர் அலுவலக வளாகத்தில் ஜிப்பை நிறுத்தி அதில் இருந்து இறங்கிய விஷ்ணு ஆதாரங்களை எடுத்து கொண்டுவருமாறு துவாரகேஷிடம் பணித்து விட்டு முன்னே செல்ல கோப்புகளையும் இதர சில ஆவணங்களையும் எடுத்துகொண்டு அவன் நடைக்கு ஈடு கொடுத்து பின் தொடர்ந்தான் அவன், அனுமதி வாங்கி கொண்டு இருவரும் உள்ளே செல்ல எதிர்பாராதா ஆளாக ருத்ரன் அமர்ந்திருந்தான் கமிஷ்னரின் எதிர் இருக்கையில் விஷ்ணுவை பார்த்து சிநேகமாய் புன்னகை காட்ட

பின்னால் வந்த துவாரகேஷ் குழப்பம் மேலோங்க மூவரையும் பார்த்து கொண்டிருந்தான் “இவனுக்கு இங்க என்ன வேலை” என்று மனம் கோபமாய் எண்ணினாலும் வெளியே காட்டி கொள்ளவில்லை, முதல் சந்திப்பின் விளைவு அவனை கண்டாலே துவாரகேஷிற்கு பாகற்காயாய் கசந்தது

“சாரி விஷ்ணு லீவ்ல இருந்த உங்கள டிஸ்டப் பண்ணிட்டேன்” என்று மன்னிப்பு வேண்டியவர் இருக்கையில் அமருமாறு கையால் சைகை காட்ட

“இட்ஸ் ஓகே சார் நீங்க கூப்ட்டா வர வேண்டியது எங்களோட கடமை” என்று பெருந்தன்மையாய் கூறியவன் “சார் கேஸ் பத்தின ஆதாரம் எல்லாமே இதுல இருக்கு அது மட்டுமில்ல குற்றவாளி யாரு எதுக்காக இப்டி பண்ணாங்குற டிடைல்ஸ் மொத்தமும் பைல்ல இருக்கு சார்” என்றவன் துவாரகேஷிடம் பார்வை செலுத்த

ருத்ரனையே பார்த்து கொண்டிருந்தான் அவன், அவனிடமிருந்த ஆதாரங்களை வாங்கி கமிஷ்னரிடம் ஒப்படைக்க படித்து பார்த்தவர் “என்ன விஷ்ணு இதுல ஏதேதோ ஃபார்முலா எல்லாம் இருக்கு அதுவுமில்லாம கேஸ் ரொம்ப தீவிரமா இருக்கும் போலயே” என்று சுவாரஸ்யமின்றி கோப்புகளை பார்வையிட்டு கொண்டே கேட்க

“ஆமா சார் இத படிக்கும் போது எங்களுக்கே ரொம்ப அதிர்ச்சியா தான் இருந்துச்சு  ஆள் யாருன்னு தெரிஞ்சா உங்களுக்கும் அதிர்ச்சியா இருக்கும் சார்” என்று பேண்ட் பாக்கெட்டில் இருந்த போட்டோவை எடுத்து நீட்டினான்  விஷ்ணு

புருவ மத்தியில் முடிச்சுகள் விழ யோசனையுடன் வாங்கி பார்த்தவரின் முகத்தில் அதீத அதிர்ச்சி வெளிப்பட்டது “விஷ்ணு இது.. “என்றவருக்கு வார்த்தைகள் சிக்கி கொண்டன

“ஆமா சார் ரெண்டு வருஷத்துக்கு முன்ன மெடிக்கல் ரிசர்ச்சுக்காக அவார்ட் வாங்கினா மிஸ்டர் சுரேந்தர் தான் அது பக்கத்துல இருக்குறது அவனோட அப்பா சாந்தமூர்த்தி, சமூக சேவகர் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் வள்ளல்ன்னு பேர் கொடுத்தது மட்டுமில்லாம போன வருஷம் அஹிம்ஸா விருது கொடுத்து கௌவரவிச்சாங்களே சாந்த மூர்த்தி அவரு தான் இதுல மெயின் குற்றவாளி! அவரு ஒரு டாக்டரும் கூட இந்த பார்முலாவோட ஐடியா மன்னனே அவர் தான் சார் புதுசா கண்டுபிடிச்ச மருந்தை டெஸ்ட் பண்றதுக்காக தான் அந்த பதினைஞ்சு பொண்ணுங்களையும் கடத்திருக்காங்க அதுமட்டுமில்ல இறந்து போன பொண்ணுங்களோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்” என்று துவாரகேஷிடம் இருந்து வாங்கி கொடுத்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான் விஷ்ணு

“என்னோட ரிலேட்டிவ் ஒருத்தவங்க இறந்துட்டாங்கன்னு சொன்னேனே அதுல இருந்த சந்தேகம் தெளிவாகிருச்சு யெஸ் சார் சிரஞ்சுல இருந்த மருந்தும் சுரேந்தர் அந்த பொண்ணுங்க மேல யூஸ் பண்ண மருந்தும் ஒரே ரிசல்ட் தான் காட்டுது, இறந்து போனவங்க எல்லாரும் நேச்சர் டெத் மாதிரி யாருக்கும் சந்தேகம் வராத அளவுல கிளவரா பிளான் பண்ணிருக்காங்க லேப் ரிசல்ட் அண்ட் இது தான் அந்த மருந்து” என்று சிறு கண்ணாடி பாட்டிலில் இருந்த சிவப்பு நிற மருந்தை நீட்டினான் விஷ்ணு

அதிர்ச்சி மேலோங்க விஷ்ணுவை பார்த்தவனின் மனதில் ஆயிரம் கேள்விகள் சந்தேகங்கள் “அப்டின்னா அமிர்தா அத்தை அட்டாக் வந்து சாகலையா? கொலை பண்ணிருக்காங்களா? ஏன் கொலை பண்ணாங்கா? என்ன காரணம்? ஏன் முன்னாடியே என்கிட்ட சொல்லலை? என்று விடை தெரியாத கேள்விகள் எழுந்தாலும் இதில் ருத்ரனின் பங்களிப்பு என்ன என்பதை அறிய அமைதியாக அமர்ந்திருந்தான் துவாரகேஷ்

“ஓ நெகட்டிவ் பிளட் தான் அவனோட ரிசர்ச்சுக்கு தேவைப்பட்டுருக்கு அதனால தான் அந்த குறிப்பிட்ட பிளட் குரூப் பொண்ணுங்கள மட்டும் கிட்னாப் பண்ணிருக்கான் கடத்தி கொலை செய்யப்பட்ட பொண்ணுங்க எல்லாருமே சோசியல் மீடியா மூலமா அவனுக்கு அறிமுகமானவங்க வேற ஊர் வேற மாநிலத்து பொண்ணுங்க சார், சதீஸ் அப்புறம் கருணாகரன் சார் இவங்க ரெண்டு பேருக்கும் உண்மை தெரிஞ்சதால விஷயம் வெளிய தெரிஞ்சிடும்ன்ற பயத்துல அவங்க ரெண்டுபேரையும் கொலை பண்ணிருக்கான் இந்த படம் இது தான் இந்த கேஸுக்கு ரொம்ப உதவியா இருந்தது” என்று இதுவரை சேகரித்த அனைத்தையும் விளக்கி முடிக்க

ஆதாரங்களை பார்த்து படித்து முடித்தவருக்கு கண்ணை கட்டி கொண்டு வந்தது அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு “நீ சொல்ற எல்லாமே ஓகே விஷ்ணு ஆனா.. நா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் வேற ஒன்னு இருக்கே அதை பத்தி கேட்க தான் வர சொன்னேன்” என்று வார்த்தைகளை மேலே தொடராமல் நிறுத்த

குழப்பமான பார்வையை விஷ்ணுவின் மேல் செலுத்தினான் துவாரகா

கண்கள் இடுங்க பார்த்தவன்  “என்ன விஷயம் சார் தெரியணும்?”

“அன்னைக்கு நைட் என்ன நடந்துச்சு அத சொல்லு சாந்த மூர்த்தியும் அவரோட பையனும் நேச்சர் டெத்ன்னு மத்தவங்க நம்பலாம் ஆனா நா நம்ப மாட்டேன் என்ன நடந்துச்சு விஷ்ணு” என்று சாவாதீனமாக கேட்டு இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டு அழுத்தமான பார்வையை அவன் மீது வைத்தார் கமிஷ்னர் சடகோபன்.

தொடரும்….

தினமும் புதிய கவிதைகள் படிக்க தந்தாய்

அடடா இனிக்கும் காயங்கள் எனக்கு தந்தாய்

புதிதாய் ஜோடி கிளிகள் பறந்தால் வானம் அழகு

உருகும் இதயமிங்கு அளந்தாள் எல்லாம் அழகே

காற்றும் ஓயும் ஒரு நாள் காதலுக்கு ஓய்வு என்றுமில்லையே

Advertisement