Advertisement

“மனசை மறைகிறது.. முதல கஷ்டமா தான் இருந்துச்சு!, ப்ச் போக போக பழக்கப்படுத்திக்கிட்டேன். வைஷ்ணவி விரும்புறது அத்தை மாமாவுக்கு பிடிக்கலை வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி வச்சு அப்றம் ஏதேதோ நடந்துருச்சு இப்போ யூஸ்ல இருக்கா வெல் செட்டில். அத்தையும் மாமாவும் அவ கூட தான் இருக்காங்க” என்றான் ஒருவித நிம்மதி படர்ந்த முகத்துடன்

“அன்னைக்கு யோசிச்சு பாத்தேன் என்னோட ராசி எனக்கு எந்த சந்தோஷத்தையும் கொடுக்காது, நா நேசிக்கிறது எதையும் எனக்கு கிடைக்காதுவிடாதுன்னு.  அதுவே மனசுல ஆழமா பதிஞ்சு  எனக்குள்ள ஒரு நெகட்டிவ் தாக்ட் வந்துருச்சு, அதான் உன்மேல எனக்கு இருந்த காதல கூட வெளிப்படையா என்னால சொல்ல முடியலை, உன்ன விரும்புறேன்னு சொன்னா எங்க உன்ன இழந்துருவேனோன்ற பயம் எனக்குள்ள இருந்தது!  அதான் உன்ன வெறுக்கிற மாதிரி உன்கிட்ட நடந்துகிட்டேன்” என்றவன்

“பிஜி பர்ஸ்ட் இயர், பர்ஸ்ட் டே வெல்கம் பார்ட்டி ஞாபகம் இருக்கா வைசு? ஆடிட்டோரியத்துல நீ பாடின மொக்க பாட்டுக்கு அசடு வழிய வாழ்த்து சொன்னேனே” என்று மலரும் நினைவுகளை உதிர்த்து வண்ணமாய் சிரிக்க

நினைவுகளை பின்னோக்கி செலுத்தியவள் “மறக்க முடியுமா? நா படினதை எல்லாரும் கிண்டல் பண்ணப்ப நல்லா இருக்குன்னு சொல்லி சிலிர்க்க வச்சியே அது தான்! அந்த நிமிஷம் தான்! உனக்குள்ள விழுந்தேன் இன்னும் எந்திரிக்கலை என்ன வசியம் பண்ணியோ கேடி”, வஞ்சமில்லாமல் புன்னகைத்து வாஞ்சையாய் அவனை பார்த்தாள்

“உன்ன பாத்ததும் என்னோட அம்மா முகம் தான் நியாபகம் வந்தது, ஆனா சகஜமா பேசி பழக அனுமதி கொடுக்கலை என்னோட மனசு. அதான் எனக்கு நானே ஒரு வட்டம் போட்டு வாழ்க்கைய நடத்திட்டு இருந்தேன்!,

இனி வட்டம் போட்டு ஒளிச்சுக்கிற வாழ்க்கை எனக்கு வேணாம் வைசு, நீ இல்லாத வாழ்க்கை எனக்கு எந்த சந்தோஷத்தையும் கொடுக்காதுன்னு இந்த ரெண்டு நாள்ல புரிஞ்சுக்கிட்டேன்.

உடம்புல பலம் இருக்கும் போது தெரியாது ஒரு துணை இருந்தா நல்லா இருக்கும்னு? தோல் சுருங்கி நரையும் தடுமாற்றமான நடையும் எட்டி பாக்கும் போது தான் மனசு ஏங்கும் ஆறுதலா தோள் சஞ்சுக்க தனிமைய விரட்டி அடிக்க பேச வச்சு மனசுல உள்ள கவலைய போக்க யாராவது துணைக்கு வரமாட்டாங்களா உங்காந்து நாலு வார்த்தை பேச மாட்டாங்களான்னு ஏங்கும். வாய் திறந்து சொல்ல முடியாம கொடுமையான வலியையும் வெறுமையும் கொடுக்கும். அந்த வலி எனக்கு வேணாம் வைசு நரை விழுந்து நடை தளர்ந்த பிறகும் காதல் செய்ய கடைசி வரைக்கும் நீ வேணும்” என்று அவள் கரங்களை அவன் கரங்களுக்குள் இணைத்து இறுக பிணைத்து கொண்டவன்

நிமிர்ந்து அவள் முகம் பார்த்து

“எனக்குள்ள பாதியா நீ இருப்பியா வைசும்மா சுக துக்கங்களை சந்தோஷமா ஷேர் பண்ணிக்கலாம் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கண்களில் காதலை தேக்கி கேட்க. மறுதலிக்க தோன்றவில்லை எற்பாடு முடிந்து யாமம் அகன்று வரும் வைகறையின் இதத்தை உணர்ந்தாள் அவன் வார்த்தைகளில்.

அவனின் கடந்த காலம் அவளுக்குள் சொல்லாவென வேதனையை தருவித்தாலும் சில்லிட்டு போகும் மழை சாரலாய் ஒரு துளி. சிலாகித்து சிலிர்க்க வைத்தது அவளை

ஒருபுறம் அழுகை மறுபுறம் சிரிப்பு என முகத்தில் அபிநயங்களை தோற்றுவிக்க விழிகள் விரிய அவனை பார்த்தாள் வைஷாலி

“பிலீவ் மீ வைசு. நிதானமா யோசிச்சு தெளிவா தான் பேசுறேன். உனக்கு குழம்பம் வேணாம், உண்மையாவே என்ன உன்னோட லைஃப் பாட்னரா ஏத்துகிறியா?” என்று மண்டியிட்டு தரையில் அமர்ந்து அவள் கரத்தினை அந்தரத்தில் ஏந்தி அலர்ந்த காதலுடன் கேட்க

இமை கொட்ட மறந்தவள் போலியான வீம்பை வரவழைத்து கொண்டு “ம்.. எல்லாம் ஓகே தான் ஆனா…” என்று யோசனையாய் இழுத்து அவன் முகத்தை பார்த்தபடி தாடையில் ஒற்றை விரல் தட்டி சிந்தனையில் உழன்றபடி

“என்னோட அண்ணனுங்க ரெண்டு பேர்கிட்ட கேட்கணுமே. அவங்க என்ன சொல்றாங்களோ அது தான் என்னோட முடிவு விஜி கண்ணா” என்றாள் அப்பாவியாய் உதட்டை பிதுக்கி

“உங்கப்பாவுக்கு நீ ஒரு பொண்ணு தான்னு கேள்விப்பட்டேன் இன்னொரு ஃபேம்லி இருக்கா?” என்று தீவிரமாக முகத்தை வைத்து கொண்டு கேட்டவனை முறைத்து பார்த்தாள்

“வாயிலேயே ரெண்டு போட்டேன்ன்னா” என்று கையை ஓங்கியவள்

“அண்ணனேன்னு சொன்னது விஷ்ணு துவாரகாவ. அவங்க என்ன சொல்றாங்களோ அது தான் என்னோட முடிவு!” என்று மிடுக்காக கூறியவள் அடுத்த நொடியே விஷ்ணுவிற்கு தொடர்பு கொண்டாள்

“ஹாலோ அண்ணா!” என்றதும் மறுமுனையில் திகைப்பை காட்டினான் விஷ்ணு

“அண்ணாவா..? யாரும்மா நீங்க? எங்கப்பாவுக்கு ரெண்டுமே பையன்ங்க தான் தங்கச்சின்னு யாரும் இல்லையேம்மா?” என்று வியந்து கேட்க

“டேய்! நான் தான் வைசு பேசுறேன் ஒரு மரியாதைக்கு கூப்பிட்டா ஓவரா ஓட்டுற” என்று வைஷாலி பல்லை கடிக்க

“அதானே பாத்தேன்! உன்னோட வாயில இருந்து இந்த வார்த்தை வந்ததே பெருசு, சொல்லு என்ன விஷயம்? இந்த நேரத்துல கால் பண்ணிருக்க. நேத்து அத்தனை தடவை போன் பண்ணோமே ஒரு தடவையாவது அட்டன் பண்ணியா பக்கி” என்றான் சிறு கோபத்துடன்

“நா ஒரே ஃபீலிங்ல இருந்தேன்டா அதான் அட்டன் பண்ணல இப்போ சரியாகிருச்சு அதான் நானே போன் பண்ணேன். நீ மட்டும் தான் இருக்கியா இல்ல அந்த எருமை மாடும் உன்கூட தான் இருக்கானா?” என்று துவாரகாவை கேட்க

“எல்லாரும் இங்க தான் இருக்கோம் உனக்கு யார் வேணும்னு சொல்லு அவங்ககிட்ட கொடுக்குறேன்”

“யார்கிட்டயும் கொடுக்க வேணாம் நீ போன ஸ்பீக்கர்ல போடு உங்க ரெண்டு பேர்க்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும், நீங்க என்ன முடிவெடுகிறீங்களோ அத பொறுத்து தான் இங்க ஒருத்தருக்கு பதில் சொல்லணும்?” என்று அருகில் இருப்பவனை பார்த்து கொண்டே பேசினாள்

ஒலிபெருக்கியை ஆன் செய்தவன் “ம் இப்ப சொல்லு  என்ன விஷயம் என்ன முடிவு தெரியணும்?”

“வீட்டுக்கு விஜி வந்துருக்கான்டா வந்தவன் ஃபிளாஷ்பேக் ஓபன் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறயான்னு கேக்குறான். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல அதான் உங்களுக்கு போன் பண்ணேன் நீங்க என்ன சொல்றிங்க?” என்று எதிர்பார்ப்பு விழிகளில் தேங்க பார்வையை அலைபாய விட்டபடி கேட்க

“என்ன கேட்டா நீ அவன கல்யாணம் பண்ண வேண்டாம்னு தான் சொல்லுவேன்” என்றான் பட்டென துவாரகேஷ்

“எனக்கும் துவாராக சொல்றது தான் சரின்னுபடுது..” என்று விஷ்ணுவும் உடன் சேர்ந்து ஒத்து ஊத

“டேய் நேரம் பாத்து பழிவாங்காதீங்கடா, நானே இப்ப தான் ஒரு நல்ல முடிவுக்கு வந்துருக்கேன் கெடுத்துறாதிங்கடா. நா பாவம் இல்லையா என்ன பாத்தா உங்களுக்கு பாவமா தெரியலை?” என்று ஸ்ருதி இறங்கிய குரலில் பேச

“கொஞ்சம் பாவமா தான் இருக்கு…” என்று வார்தைகளை இழுத்து பரிவு காட்டிய விஷ்ணு “அப்படின்னா ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்கலாம். எங்க தங்கச்சி கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும் நீ நூறு கொட்டு வாங்கிக்கணும், ஆளுக்கு நூறு கொட்டு இதுக்கு சரின்னா கல்யாணத்த பத்தி பேசலாம்?” என்று விஷ்ணு ஒப்பந்தம் போட

“டேய்.. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல?”

“நீ பண்ணதுக்கு இது கூட இல்லைன்னா எப்டி விஜிகண்ணா? ம் சீக்கிரம் பதில சொல்லு அக்ரிமெண்ட் ஒகேவா? இல்லையா? வக்கீல் வெயிட்டிங்ப்பா” என்று துவாரகா அவசரப்படுத்த

“ப்ச் என்னமோ பண்ணி தொலைங்க எனக்கு என்னோட வைசு கிடைச்சா போதும்” என்று சரணாகதி அடைந்திட

“பாத்தியாடா ரெண்டு நாளா என்ன நிலைமையில இருந்தான் உடம்பு சரியானதும் ஊமையனுக்கு பேச்ச பாத்தியா?” என்றான் துவாரகேஷ் நக்கலாக

சன்னமாய் சிரிப்பலைகள் எழுந்தது.

“டேய் உன்னோட மாமனார் கிட்ட ஏற்கனவே பேசியாச்சு அவரும் சரின்னு சொல்லிட்டாரு. மேரேஜ் இன்விடேஷன்னோட தான் நீ இந்த பக்கமே வர்ற அதுவரைக்கும் நீ அங்கயே இரு” என்று விஷ்ணு மிரட்டல் மொழியில் சொல்ல

“நீ சொன்னாலும் சொல்லலைனாலும் நா கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு தான் வருவேன்” என்று அசடு வழிந்தவன் “சரிடா நீங்க உங்க வேலைய பாருங்க எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு வச்சுடுறேன்” என்று தொடர்பை துண்டித்துவிட்டு மையலுடன் பாவையை நோக்கியவன்

“இப்போ சொல்லு என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே?” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்க

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சியின் பரவசம் கமழ்ந்தது. நலிந்து போன காதல் நன்னீரில் நாணம் அவிழ்த்த மலராய் அவள் கன்ன கதுப்புகளில் சிவப்பேற நாணத்தின் தயக்கமும் தடுமாற்றமுமாய் அவனை ஏறிட்டவள் “எனக்கு சம்மதம்” என்று முகில் நகை புரிந்து தலையை ஆட்டினாள் வைஷாலி

அவன் கைகளுக்குள் அவள் கரத்தினை அடைத்தவன்

“ரொம்ப சந்தோஷமா இருக்கு. சாகாவரம் கேள்விப்பட்டுருக்கியா வைசு? அது மாதிரி ஒரு பீல் உண்டாகுது. எப்பவும் நம்மளோட இந்த பந்தம் மாறாது”, தீராத காதலில் யாகம் வளர்த்து தீட்சை பெற்ற தீர்க்கதரிசியாய் அறுதியிட்டு உரைத்தான்

“கடைசி வரைக்கும் உனக்கு உறுதுணையா இருப்பேன் வைசும்மா இது நா உனக்கு பண்ணி கொடுக்குற சத்தியம் ” என்று கள்ளத்தனதுடன் காதல் பார்வை பார்க்க

பேச்சுக்கள் இதமாய் முற்றுப்பெற்றிட விடியலும் விடைபெறும் விதமாய் அந்திவானம் அந்தகாரம் பூச தொடங்கி இருந்தது. வெளியே சென்று வருகிறேன் என்ற கிருஷ்ணன் அதுவரை வாசலில் தான் அமர்ந்து கொண்டிருந்தார். பேசி முடிவுக்கு வந்தாயிற்றா என்பதை உறுதி செய்ய இருமி செருமியவர்

“உள்ள வரலாமா இல்ல அப்டியே காலையில வரைக்கும் வெளியவே நிக்கவா?” என்று வெளியில் இருந்து வந்த உரத்த குரலில் காதல் பார்வை மறைந்து கள்ள சிரிப்பு மலர்ந்தது

இருவரும் விலகி அமர்ந்து

“உள்ள வங்கப்பா” என்று எதிர்க்குரல் கொடுக்க

உள்ளே வந்தவர் “என்னம்மா பேசி முடிவுக்கு வந்தாச்சா கோபம் எல்லாம் போயிருச்சா இல்ல மிச்சம் மீதி ஏதாவது இருக்க? இருந்தா சொல்லு சீக்கிரமே ஒரு கால்கட்டை போட்டுருவோம் மாப்பிள்ளை வெய்ட்டிங் இன்னைக்கு உன்ன பொண்ணு பாக்க வரதா சொல்லிருக்காங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க” என்று தீவிரமாக உரைத்து மகளின் தலையில் இடியை இறக்கியவர் விஜயனை பார்த்து நமட்டு சிரிப்பை உதிர்க்க

கிருஷ்ணனின் கூற்றை புரிந்து கொண்ட விஜயன் மௌனமாய் இருந்தான்.

வேகமாக “அப்பா.. யார கேட்டு இப்டி ஒரு ஏற்பாடு பண்ணிங்க?ஏதோ கோபத்துல சீக்கிரமே மாப்பிள்ளை பாருங்கன்னு சொன்னேன். என்னோட பேச்சை கேட்டு நிஜமாவே அவங்களை வர சொல்லிருவீங்களா?” என்று கோபத்தில் பொங்கியவள்

“என்ன விஜி நா பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீங்க எதுவுமே பேசாம அமைதியா இருக்கீங்க, அப்பாகிட்ட சொல்லுங்க நாம ரெண்டு பேரும் விரும்புறோம்னு” என்று படபடவென பேசியவளுக்கு அழுகையை வந்துவிடும் போல இருந்தது

“ப்ச் நாம என்ன பண்ண முடியும் வைசு. உங்கப்பாக்கு என்ன பிடிக்கலையோ என்னவோ? அவரு இப்டி ஒரு முடிவெடுத்த பிறகு நா சொல்றதுக்கு எதுவும் இல்ல அவ்ளோ தான்!” என்று போலியாய் வருத்தம் காட்டி பேச

ஒரு கணம் இருவரையும் உற்று பார்த்தவள் இருவரும் தன்னை கேலி செய்கிறார்கள் என்று புரிந்ததும் “ரெண்டுபேரும் கிண்டல் பண்ணறிங்க தானே?” என்று கேட்க

“அது இப்ப தான் உனக்கு புரியிதா மை ச்சைல்டு?” என்று கேலி பேசியவரை முறைத்து பார்த்தவள்

“என்னப்பா நீங்களுமா?” என்று சிணுங்க

“பின்ன என்னம்மா. எவ்ளோ கோபம் இருந்தாலும் எந்த வித்ததுல எப்டி பேசி புரிய வைக்க முடியனும்னு நிதானமா யோசிக்கணுமே தவிர எடுத்தோம் காவுத்தோம்னு எதையும் பேசிற கூடாது. ஒருவேளை விஜயன் வந்து உன்கிட்ட மனசுவிட்டு பேசலைன்னா, விருப்பம் இல்லாம நீ சொன்னதை கேட்டு நானும் ஏதோ ஒரு பையனை பாத்து கல்யாணம் பண்ணி வச்சுறுப்பேன் உன்னோட சந்தோஷம் மட்டுமில்ல ஒட்டு மொத்த சந்தோஷமும் போயிருக்கும். மனசுவிட்டு பேசுனா எப்பேர்ப்பட்ட விஷயமா இருந்தாலும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துறலாம்” என்று வாழ்க்கை அனுபவத்தை எடுத்துரைக்க

“உண்மை தான் ப்பா சாரி ப்பா இனிமே எந்தவொரு விஷயத்துலயும் அவசரம் காட்ட மாட்டேன்” என்று மன்னிப்பு வேண்டும் குரலில் வருந்த

“அய்யோ..!” என்று அலறியவனை என்னவென்று இருவரும் பார்த்தனர்

Advertisement