Advertisement

அவ்வப்போது சஞ்சளாவின் பார்வை துவாரகேஷை தீண்டி சென்றது அவன் பார்வை உணவை தவிர வேறு எங்கும் பாயவில்லை என்றதும் வேண்டா வெறுப்பாக வாயில் அடைத்த உணவை கல்லை விழுங்குவது போல கடினபட்டு விழுங்க தொடங்கினாள்.

சாரதாவிற்கு மருந்து கொடுத்து போர்வையை போர்த்தி படுக்க வைத்து விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்த வைஷாலி “அப்பா உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்காவா?” என்று கேட்க

“இல்லம்மா கொஞ்ச நேரம் போகட்டும், அம்மா தூங்கிட்டாங்களாம்மா?” என்று கையில் வைத்திருந்த செய்தித்தாளை புரட்டியபடி கேட்க

“ம் தூங்கிட்டாங்க ப்பா” என்றுவிட்டு எப்போதும் போல அறைக்குள் சென்று அடங்கி கொண்டாள்

அன்றைய செய்திதாளில் வெளியான பரபரப்பான செய்தியை முதல் முறை படிப்பது போலவே மூன்றாவது முறையாக அதிதீவிரம் காட்டி மும்முரமாய் படித்து கொண்டிருந்த கிருஷ்ணன்

அழைப்பு மணி ஓசை கேட்டு வேகமாக சென்று கதவை திறக்க

எதிரில் சோர்வுடன் நின்றிருந்த விஜயன் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவனது தீடீர் வருகையை திகைத்து விழித்தவர் “என்ன விஜயன் சொல்லாம கொல்லாம வந்துருக்கீங்க உள்ள வாங்க” என்று முகம் கொள்ளா புன்னகையுடன் அழைக்க

“இல்ல அங்கிள் வைசு..?” என்று தயங்கியவனை ஒரு கணம் ஆழ்ந்து நோக்கியவருக்கு இருவருக்கும் இடையில்  நடந்தது புரியவில்லை என்றாலும் என்ன நடக்க போகிறது என்பது புரிந்தது

“இதோ வர சொல்றேன் ப்பா” என்றுவிட்டு மகளின் அறைக்குள் சென்றார் கிருஷ்ணன்

‘என்ன பேசுவது எப்படி பேசுவது அதை விட அவளது பார்வையை எப்படி எதிர்கொள்வது?’ என்று தவிப்போடும் ஒருவித படப்படப்போடும் நின்று கொண்டிருக்க

உள்ளே எரிந்த விளக்கின் வெளிச்சத்தில் இன்னும் உறங்கவில்லை போல என்று கதவை தட்டி உள்ளே சென்றவர் “வைசுகுட்டி உன்ன பாக்க ஒருத்தர் வந்துருக்காரும்மா உன்கிட்ட தான் பேசணுமாம் என்னனு கேட்டுட்டு வந்து படுத்துக்கோடா” என்று கெஞ்சலாய் அழைக்க

“யாருப்பா இந்த நேரத்துல? நீங்களே யாருன்னு கேட்டு பேசி அனுப்பிருங்கப்பா எனக்கு தூக்கம் வருது” என்று உறக்கம் கலையாத குரலில் கூறிவிட்டு புரண்டு படுக்க

“இல்லடாம்மா உன்கிட்ட தான் பேசணுமாம் அவர பாத்தா பாவமா இருக்கு வந்து என்னனு மட்டும் கேளுடா” என்று படுத்திருந்தவளின் கைபிடித்து வற்புறுத்தி அழைத்து வந்தார் கிருஷ்ணன்

“ப்ச் யாருப்பா..?” என்றவாறே வாசலை பார்த்தவளுக்கு கோபத்தில் முகம் இறுகியது பேசிய வார்த்தைகள் நினைவை எட்ட தந்தையின் முன் எதையும் காட்டிக்கொள்ள கூடாது என்று முகத்தை இயல்பாக காட்டி கொண்டு “அவர உள்ள வர சொல்ல வேண்டியது தானே ஏன் வெளிய நிக்கிறாரு?” என்றாள் குரலில் அடக்கப்பட்ட கோபத்துடன்

“நா கூப்பிட்டேன் ம்மா உள்ள வர தயங்குறாரு, இப்போவாவது உள்ள வாங்க விஜயன்” என்று வற்புறுத்தி அழைக்க

தயக்கமும் தவறிழைத்த உணர்வும் இணைந்த நடையில்  உள்ளே வந்தவன் “அங்கிள் நா வைசுகிட்ட தனியா பேசணும்”

“தாரளாமா பேசுங்க என்கிட்ட எதுக்கு பர்மிஷன் கேக்குறீங்க, வைசுகுட்டி  நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க எனக்கு கொஞ்சம் வெளிய இருக்கு போய்ட்டு சீக்கிரம் வந்துடுறேன்” என்ற கிருஷ்ணன் ‘இருவரின் கோப தாபங்கள் முற்று பெறட்டும்’ என்று இருவருக்கும் தனிமை அளித்துவிட்டு வெளியே கிளம்பி சென்று விட

“உக்காருங்க விஜயன்” என்றவள் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு அருகில் இருந்த மர சேரில் அமர்ந்து கொண்டாள்

சற்று நேரம் இருவரும் பேசவில்லை யார் முதலில் மௌனத்தை உடைப்பது என்ற தயக்கம் இருவருக்குள்ளும் எழ ‘பேச வந்தது அவன் தானே? அவனே பேசட்டும்’ என்று வீம்பாக அவளும்

‘எப்படி தொடங்குவது’ என்ற தவிப்பில் அவனும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் அமர்ந்திருந்தனர்

இது இப்போதைக்கு முடிவு பெற போவதில்லை என்று எண்ணினாளோ என்னவோ தரையை வெறித்தபடி அமர்ந்திருந்தவனை கண்டு “பேசணும்னு சொல்லிட்டு இப்டி அமைதியா இருந்தா எப்டி? என்ன விஷயம்னு சொல்லுங்க விஜயன் அப்பா இப்போ வந்துருவாரு” என்று குரலில் காட்டிய எரிச்சல் அவள் முகத்திலும் பிரதிபலித்தது

“சாரி வைசு” என்றான் விஜயன் கம்மிய கமரிய குரலில்

“எதுக்கு சாரி? நீங்க என்ன தப்பு பண்ணிங்க?”

“காஃபி ஷாப்ல உன்கிட்ட பேசுனதுக்கு என்ன மன்னிச்சிறு வைசு நா அப்டி பேசிறுக்க கூடாது!”

“அய்யோ.. என்ன சார் நீங்க? எவ்ளோ அழகா பொறுமையா யோசிச்சு உங்க முடிவ சொல்லிருக்கீங்க முட்டாளா இருந்த எனக்கு புத்தி வர வச்சுருக்கிங்க நீங்க போய் என்கிட்ட சாரி கேக்கலாமா..?” என்றவளின் வார்த்தைகளில் ஏளனம் மட்டுமல்லாது கோபமும் சேர்த்து கொண்டது

“வைசு உன்னோட கோபம் நியாயம் தான், அந்த நேரத்துல உன்னோட மனசு எவ்ளோ வலிய அனுபவிச்சிருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியிது!” என்றவனின் பேச்சு அவளின் நிலைகுத்திய அடிபட்ட பார்வையில் தடைபட்டு போக

“அப்டி பாக்காத வைசு” என்றான்  வலி நிறைந்த குரலில்

“நா சாதாரணாமா தான் பாக்குறேன் நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க விஜயன்” என்று அலட்சியமாய் கூறியவள் அவன் செயலில் திகைத்து போனாள்

அவளின் குற்றம் சாட்டும் பார்வையை பொறுத்து கொள்ள முடியாமல் சட்டென அவள் மடியில் தலை வைத்து வயிற்றை ஒட்டியபடி முகம் புதைத்து கொண்டான் விஜயன் மூச்சு விட கூட மறந்து சிலையாய் சமைந்திருந்த வைஷாலி அவனின் விசும்பல் ஒலியில் உணர்வு பெற்றாள்

 “நீ பாக்குற பார்வை என்ன ஒரு குற்றவாளி மாதிரி உணர வைக்குது உன்ன ஏத்துக்கவும் முடியல உன்ன விட்டு விலகவும் முடியல மனசு சொல்லுது நீ வேணும்னு ஆனா புத்திக்கு புரிய மாட்டிங்கிது ரொம்ப பயமா இருக்கு வைசு, உன்ன இழக்க  விரும்பலை நீ எனக்கு வேணும் உன்ன இழந்துற கூடாதுன்னு தான் மனச கல்லாக்கிட்டு உன்கிட்ட அப்டி பேசுனேன்

 மத்தபடி நீன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் நிஜமாவே உன்ன நேசிக்கிறேன் உன்ன ஒவ்வொரு தடவை காயப்படுத்தும் போதும் என்னோட மனசு வலிக்கிற வலி எனக்கு தான் தெரியும்?

 உனக்குள்ள என்னோட அம்மாவ பாத்தேன் இப்பவும் பாத்துட்டு இருக்கேன் வைசும்மா நா பேசுனது தப்பு தான் என்ன மன்னிச்சிறு அவசரபட்டு பேசிட்டேன் சாரிடா” என்று சிறு பிள்ளை போல உடல் குலுங்க தேம்பி அழுபவனை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தாள் வைஷாலி

‘கரும்பாறைக்குள் இத்தனை பலவீனமா இவன் கண்களும் நீர் சிந்துமா?’ என எண்ணியவளுக்கு அவனின் அழுகை வேதனை அளிக்க

பரிவாய் தலையை வருடி கொடுத்தவள் விஜயனின் அழுகையை கேட்க சகிக்காது அவன் முகத்தை கைகளால் ஏந்தி ஈரம் படர்ந்த விழிகளுக்குள் தன்னை புதைத்து கொண்டவள் பின் கண்ணீரை துடைத்துவிட்டு இதமாய் நெற்றியில் இதழ் பதித்து அவன் முகம் காண கசங்கி கந்தலாய் காட்சியளித்தது

மனம் கனிவுற காயத்திற்கு மருந்திடும் மயிலிறகை போல “எதுக்கு விஜி பயப்படுறீங்க நா உங்கள விட்டு எங்கயும் போக மாட்டேன் எனக்குள்ள உங்க அம்மாவ பாக்குறேன்னு சொன்ன பிறகு உங்கள வெறுக்க முடியுமா இல்ல விட்டு விலக தான் முடியுமா?, நீங்களே என்ன விட்டு விலகுனாலும் நா உங்கள விட்டு விலக மாட்டேன் இப்போவயாது உங்க மனசுல என்ன இருக்குன்னு சொல்லுங்க விஜி!” என்று இதமாக அவன் கேசத்தை வருடியபடி கேட்டாள்

அவள் குரலும் கரகரத்தது ஆனால் காட்டிகொள்ளவில்லை

மீண்டும் அவள் மடியில் தலை சாய்த்தவன் “வைசும்மா நா ராசியில்லாதவனா?” என்று குரலில் வேதனையை அடக்கி கொண்டு கேட்க

கேசத்தை வருடிய கரங்கள் ஸ்தம்பித்து போக அவன் வார்த்தையில் திடுக்கிட்டு போனவள் “அப்டின்னு யார் சொன்னது? நீங்க ரொம்ப லக்கி மேன் தெரியுமா விஜி? உங்க மேல அன்பு செலுத்த இங்க எத்தனை பேர் இருக்கோம் நீங்க ஏன் இந்த மாதிரி நினைக்கிறீங்க?” என்று சிறு பிள்ளையிடம் பேசுவது போல பேசியவளின் கரங்கள் தன்னிச்சையாய் அவன் கேசத்தை வருட தொடங்கியது

“இல்ல வைசு எனக்குள்ள ஒரு எண்ணம் இருந்துட்டே இருக்கு நா அப்டிதானோன்னு?” என்று அடிமனதில் ஆழமாய் பதிந்து போன நிகழ்வுகள் அப்பட்டமாய் அவன் மனக்கண் முன் தோன்ற கண்களை இறுக மூடி திறந்தான்

“நா ஆசைப்பட்டது எதுவும் எனக்கு கிடைச்சதில்லை நா நேசிச்சவங்க யாரும் என்கூட இருந்ததில்ல பிறந்த உடனே அப்பாவோட உறவை இழந்தேன் அப்பாவோட பாசம் எப்டி இருக்கும்னு தெரியாம வளந்தவன் நான்?

நா பிறந்த நேரம் அம்மாவுக்கு வாழாவெட்டின்ற பட்டம் கிடைச்சது ரொம்ப கஷ்டப்பட்டு காவயிரும் அரைவயிருமா சாப்ட்டும் சாப்டாமா அஞ்சு வயசு வரைக்கும் வளத்தாங்க பாசத்துக்கு கொஞ்சமும் குறை வச்சது இல்ல அவங்க வாழ்க்கைய கெடுக்க வந்தவன்னு ஒரு நாளும் என்ன நினைச்சது இல்ல

நல்லா போயிட்டு இருந்த என்னோட வாழ்க்கையில!” என்று நிறுத்தியவனின் உடல் குளிரில் நடுங்கும் கோழி குஞ்சாய் நடுங்கியது முன்னைவிட பயத்தில் அவள் இடையை இறுக அணைத்து கொண்டான்

அவன் நடுக்கத்தை உணர்ந்தவள் “விஜி கண்ணா  விஜிம்மா என்னாச்சு? சொல்ல கஷ்டமா இருந்தா சொல்ல வேணாம்?” என்று தடுக்க

“இல்ல! நா சொல்லுவேன் சொல்லணும்னு தோணுது மனசுல இருக்குறதை யார்கிட்டயாவயது சொன்னா தான் என்னோட பாரம் தீரும் ப்ளீஸ் என்ன சொல்ல விடு..” என்று அழுத்தமாய் கூற அமைதியானாள் பெண்ணவள்

“இப்பவும் என்னால மறக்க முடியலை நினைக்காம இருக்கவும் முடியலை அந்த சம்பவத்தை அன்னைக்கு எனக்கு ஸ்கூல் லீவ் அம்மாவும் நானும் காட்டுல வேலை பாத்துட்டு இருந்தோம் அம்மாவை முழுசா சிரிச்ச முகமா பாத்த கடைசி நாள் அது தான்” என்று விக்கி விம்மினான்

“தீடீர்னு ஒரு சத்தம் என்ன ஏதுன்னு பாக்க போன இடத்துல இடத்துல..!” என்று திக்கி திணறியவனின் குரல் நடுங்கி நொடி பொழுதில் உடல் முழுதும் வியர்க்க தொடங்க

என்னவோ ஏதோ என்று பதறி போனவள் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து திறந்து அவனிடம் நீட்டினாள் நடுங்கும் கரங்களுடன் வாங்கி குடித்தவன் பதட்டம் தணிய ஆசுவாசப்படுத்தி கொண்டு மீண்டும் தொடர்ந்தான்

சொல்ல முடியாமல் அவன் சிரமப்படுவதை பார்க்க முடியவில்லை என்றாலும் பேசட்டும் என்றும் அமைதியாக கேட்க தொடங்கினாள் வைஷாலி.

தொடரும்

அன்பே அன்பே நீ என் பிள்ளை தேகம் மட்டும் காதல் இல்லை

பூமியில் நாம் வாழும் காலம் தோறும் உண்மையில் உன் ஜீவன் என்னைச் சேரும்.

Advertisement