Advertisement

சமையல் அறையில் இருந்து வந்த வைதேகியை கண்டதும்அக்கா நீங்களும் வந்திருகீங்களா!” என்று ஆச்சரியத்தோடு கேட்டுவிட்டுபின்ன என்ன பாக்க வரலஎன்று சுணங்கியவள் வைசாலியை முறைத்து பார்க்க

என்ன எதுக்குமா முறைச்சு பாக்குற உன்னோட அக்கா தான் சொல்ல கூடாதுன்னு சொன்னா அவள கேக்குறத விட்டுட்டு என்ன முறைச்சா என்ன அர்த்தம்என்றதும்

என்ன க்கா இதுஎன்றவளை பார்த்து புன்னகைத்த வைதேகிஎப்டி இருக்க சஞ்சும்மா போன வாரம் பார்த்ததை விட ரொம்ப மெலிஞ்ச மாதிரி இருக்குஎன்று கரிசனம் மிகுந்த குரலில் கேட்டதும் சஞ்சளாவின் கண்களில் இருந்து நீர் வழிய தொடங்கியது

ப்ச் என்ன இது எதுகெடுத்தாலும் அழுதுகிட்டு தைரியமா இருக்கணும்என்று வைதேகி கண்ணிரை துடைத்துவிட

நீங்க மட்டும் வந்துருகீங்க விஷ்ணு அண்ணா வரலையா?” 

இல்லம்மா முக்கியமான வேலை இருக்குன்னு சிக்கிரமாவே கிளம்பி போய்ட்டாரு மதியம் லன்ஞ்சுக்கு இங்க வரேன்னு சொல்லிருக்காரு, சரி வா நாம சாப்டலாம் காலையில நீ எதுவுமே சாப்பிடலைன்னு ஆன்ட்டி சொன்னாங்க எங்களுக்கும் ரொம்ப பசிக்கிது உக்காருங்கஎன்றவள்ஆன்ட்டி  நீங்களும் உக்காருங்க நாம மட்டும் தானே சேந்தே சாப்டலாம்என்று விசாலாட்சியையும் அமர சொல்லி பரிமாற தொடங்கினாள்

நீண்ட நாட்களுக்கு பிறகு சஞ்சளாவின் முகத்தில் தெரிந்த புன்னகையில் மற்ற மூவரும் மன நிம்மதியுடன் உணவை பேச்சும் சிரிப்புமாக ருசித்து கொண்டிருக்க விஷ்ணு துவாரகேஷ் இருவரும் பேசி சிரித்தபடி உள்ளே நுழைந்தனர், உணவில் இருந்த கவனத்தை வாயில் புறம் திருப்பிய வைதேகிஉன்னோட அண்ணன பத்தி கேட்டயே இதோ அவரே வந்துட்டாருஎன்று குரலில் உற்சாகத்தை தேக்கி கொண்டு சஞ்சளாவிடம் கூறியவள்

ரெண்டு பேரும்  கை கழுவிட்டு வாங்க நா பரிமாறுறேன்என்று  எழுந்து கொள்ள 

உட்காருஎன்று கட்டளையாய் அமர சொல்லிய விஷ்ணுஉனக்கு எத்தனை தடவை சொல்றது பாதி சாப்பாட்டுல எந்திரிக்க கூடாதுன்னு நாங்களே போட்டு சாப்ட்டுகிறோம் நீ உக்காந்து சாப்பிடுஎன்று கண்டிப்புடன் கூறியதும் அமைதியாக அமர்ந்துவிட்டாள்

சிரிப்புடன் உள்ளே நுழைந்தவனின் புன்னகையெல்லாம் காணாமல் போனது சஞ்சளாவின் மாற்றத்தை கண்டு, பின்னோடு வந்தவனை காணவில்லையே என்று திரும்பி பார்த்த விஷ்ணு திகைப்புடன் நின்று கொண்டிருந்தவனை கண்டுடேய் என்ன அங்கயே நிக்கிற கை கழுவிட்டு வந்து சாப்டு வேலை இருக்குஎன்ற கணீர் குரலில் நடப்பிற்கு வந்தவன் தலை குனிந்த வண்ணம் நகர்ந்து செல்ல 

அவன் செயலை பார்த்து தலையை உலுக்கி கொண்ட விஷ்ணுஎன்ன சஞ்சளா எப்டி  இருக்கஎன்று கேட்டவாறே இருக்கையில் அமர்ந்தான்

நல்லா இருக்கே ண்ணா அக்கா சொன்னாங்க புது வீட்டுக்கு பால்காய்ச்ச போறத பத்தி கங்கிராட்ஸ் ண்ணாஎன்று புன்னகை முகமாய் வாழ்த்து சொல்ல

தாங்க்ஸ்மாஎன்றுவிட்டு அருகில் வந்தமர்ந்த துவாரகேஷை விழிகள் இடுங்க பார்த்தவன்வரும் போது நல்லா தானே இருந்தான்என்ற குழப்பம் மேலோங்க

என்னடா ஆச்சு உனக்கு! நீயே போட்டு சாப்பிடு எல்லாத்துக்கும் சொல்லிட்டு இருக்கணுமா என்னஎன்று எரிச்சலுடன் கூறிவிட்டு உணவில் கவனத்தை செலுத்த தொடங்க 

கனவா நனவா என்பது போல சஞ்சளாவின் புன்னகை பொதிந்த முகத்தை கண்ணிமைக்காமல் பார்த்து பார்த்து பூரித்து போன துவாரகேஷ் அவளிடம் இருந்த பார்வையை திருப்பாமல் அருகில் இருந்த வைஷாலியிடம்தாங்க்ஸ் டி ராட்சசி எதிர்பாக்காவே இல்ல ரொம்ப சந்தோசமா இருக்குஎன்று குரலில் துள்ளலுடன் கிசுகிசுப்பான குரலில் கூற

நன்றியெல்லாம் இருக்கட்டும் நா சொன்ன விஷயம் என்னாச்சுஎன்று உணவை வாயில் அடைத்து கொண்டே கேட்டாள் வைஷாலி 

அதெல்லாம் காலையிலேயே போன் பண்ணி சொல்லியாச்சு உன்னோட ஆளு இந்நேரம் கிளம்பி இருப்பான்என்றவன் சஞ்சளாவின் முகத்தை பார்த்து கொண்டு உணவை உண்ண தொடங்கினான்நீண்ட நாட்களுக்கு பிறகு மன நிம்மதியுடன் எந்த வித வலியும் வேதனையும் இல்லாமல் உணவு எளிமையாய் தொண்டையில் இறங்குவதை உணர்ந்தான் துவாரகேஷ்

மதிய உணவு முடிந்ததும் பேச ஆரம்பித்தவர்களின் பேச்சு மாலை வரை நீண்டு கொண்டே செல்ல  நால்வரும் இப்போது பேசி முடிப்பார்கள் அப்போது பேசி முடிப்பார்கள் என்று பொறுமையுடன் துவாரகேஷிடம் ருத்ரன் கொடுத்த பைல்களில் இருந்த  சில குறிப்புகளையும் மருத்துவ ஆய்வறிகளில் குறிப்பிட பட்டிருந்த முடிவுகளையும் பற்றி கலந்துரையாடி கொண்டிருந்த விஷ்ணு ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து சட்டென   எழுந்து கொண்டவன்

வைதேகி டைம் என்ன ஆச்சு இன்னும் கிளம்பாம பேசிட்டு இருக்கீங்கஎன்றவனின்  குரலில் தெரிந்த கடுமை வைதேகியை சங்கடத்திற்குள்ளாக்க 

சாரி மாமா இதோ இப்போ கிளம்பிடுறோம்என்று எழுந்து கொண்டவள்ஆன்ட்டி நீங்களும் எங்க கூடவே வந்துருங்க நீங்க மட்டும் தனியா இருந்து என்ன பண்ண போறீங்கஎன்றாள் விசாலாட்சியிடம்

சரிம்மாஎன்றவர் அவரது உடைமைகளை எடுத்து கொண்டு கிளம்பி வர முன்பே கால்டாக்ஸியை புக் செய்திருந்தான் விஷ்ணு நால்வரும் கிளம்பி இருக்க வாசலில் காரின் ஹாரன் சத்தம் கேட்டது நால்வரையும் காரில் ஏற்றி அனுப்பி விட்டு ஆண்கள் இருவரும்  காவல் நிலையம் கிளம்பி சென்றனர்

மாலை இருள் கவ்வும் நேரத்தில் வைதேகி விஷ்ணு இருவரின் குடும்பத்தினரும் வந்துவிட வீடே கலகலப்பை பூசி கொண்டது பேச்சும் சிரிப்புமாய் அன்றைய இரவு கழிய பால்காய்ச்சுவதற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து விட்டு மறுநாள் சிக்கிரம் எழ வேண்டும் என்று அனைவரும் உறக்கத்தை நாடி சென்றுவிட்டனர் பெரியவர்கள் மாடியில் சென்று படுத்துக் கொள்ள மற்றவர்கள் கீழே இருக்கும் அறையில் படுத்து கொண்டனர் 

படுக்கையில் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த வைஷாலி பொறுமை இழந்து ஹாலில் வந்து அமர்ந்து கொண்டு அலைபேசியில் சுவாரஸ்யமாக எதையோ பார்த்து கொண்டிருக்கவாசலில் அழைப்பு மணி சத்தம் தொடர்ந்து கேட்கவே 

திடுக்கிட்டு கடிகாரத்தை பார்க்க மணி பதினொன்று என காட்டியதுயாரு இந்த நேரத்துலஎன்றவாறே எழுந்து சென்று சந்தேகத்துடன் கதவை லேசாக திறந்து பார்த்தவள் எதிரில் துவாரகா விஷ்ணு இருவரும் நிற்பதை கண்டு நிம்மதியான மூச்சை வெளியிட்டு கதவை நன்றாக திறக்க உள்ளே வந்த விஷ்ணுஎன்ன வைசு கதவ திறக்க இவ்வளோ நேரமா எவ்ளோ நேரமா காலிங் பெல் அடிக்கிறதுஎன்று சலித்து கொண்டவன் அன்றைய வேலையின் அழுத்தம் காரணமாக களைப்பு மோலோங்க எதுவும் வேண்டாம் என்று அவனின் அறைக்கு சென்றுவிட 

வைசாலியை பார்த்து நமட்டு சிரிப்பை உதிர்த்த துவாரகேஷ்பேசி ஒரு முடிவுக்கு வந்தா சரிஎன்று முணுமுணுத்து கொண்டே விஷ்ணுவின் பின்னொடு சென்றான் 

அவனின் பேச்சிலும் சிரிப்பிலும் குழப்பம் அடைந்தவள்என்னாச்சு இவனுக்கு பார்வையே வேற மாதிரி இருக்குஎன்று அவன் சென்ற திசையை பார்த்து கொண்டே கதவை அடைக்க செல்ல சட்டென யாரோ கதவை பிடித்து நிறுத்துவதை உணர்ந்து திடுக்கிட்டு முன்னால்  பார்த்தாள்

கதவில் கைவைத்து முகில் நகையுடன் நின்று கொண்டிருந்தான் விஜயன் அவனை கண்டதும் சட்டென விழிகளில் ஈரம் சுரக்கவைசுஎன்று அழைத்தவனை பொருட்படுத்தாமல் வேகமாக அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள்

பெருமூச்சை வெளியிட்டு கொண்டு வந்த பேக்கை சோபாவில் வைத்தவன் அவளை பின்தொடர்ந்து அறைக்குள் நுழைய  வைதேகி சஞ்சளா இருவரும் உறங்கி கொண்டிருந்தனர்அவர்களின் உறக்கம்  கலைந்திடாதவாறுவெளிய வா உன்கிட்ட பேசணும்என்று மெல்லிய குரலில் ஜாடை செய்து அழைக்க

வெளியே வந்தவள்என்ன விஷயம் சொல்லுங்க விஜயன்என்றாள் எங்கோ பார்வையை பதித்தபடி

தயவு செஞ்சு பேசுடி எத்தனை நாளைக்கு பேசாம இருப்ப எத்தன மெஸேஜஸ், போன் கால்ஸ் ஏதாவது ஒன்னுக்கு ரிப்ளே பண்ணியா எதுக்குடி இப்டி பண்ற?” என்றான் கிட்டத்தட்ட இறைஞ்சும் குரலில் 

நா எதுக்கு உங்ககிட்ட பேசணும்  முதல நீங்க யாரு?” என்று முறுக்கி கொண்டு நின்றவளை தன்புறம் திருப்பியவன் அவளின் கரம் பற்றி தன் நெஞ்சில் வைத்துஎங்க இப்போ சொல்லு நா யாருன்னு உனக்கு தெரியாது? வேணுன்னே வீம்பு பண்ற வைசுஎன்றவனின் செயலில் திகைப்போ திகைப்பு தான் அவளுக்கு இது விஜயன் தானா என்ற சந்தேகமே எழுந்தது அவளிடத்தில் 

எனக்கு தெரியும் உன்னோட கோபம் பொய்யானதுன்னு  என்கிட்ட பேசாம மட்டும் இருக்காத வைசு உன்கிட்ட பேசலன்னா எனக்கு ஒரு மாதிரி இருக்கு! என்ன பாக்க பிடிக்காம தானே வேலைய விட்ட நீ இல்லாம எனக்கு வேலையே ஓடலை ஏதோ ஒன்ன இழந்த மாதிரி இருக்குஎன்று மனதில் உள்ளதை கொட்டியவனை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவளுக்குஅட ராமா இது கனவா இல்லை நனவா இவனுக்கு புத்தி வந்துருச்சா என்ன? இப்டி ஒரு மாற்றமா இந்த ஒரு மாசத்துல இது தெரிஞ்சிருந்தா முன்னாடியே இந்த மாதிரி பண்ணிருக்கலாமேஎன்று மனம் ஒரு புறம் ஏமாற்றம் அடைந்தாலும் தற்சமயம் அவன் நடந்து கொள்ளும் விதத்தை ஏதோ கனா காண்பதை போலா பார்த்து கொண்டிருந்த வைஷாலி 

நா யாரு உங்களுக்கு? நீங்க ஃபீல் பண்ற அளவுக்கு நா உங்களுக்கு முக்கியம் இல்லையே விஜயன்! நா பேசலன்னா விட்டது தொல்லைன்னு நீங்க நிம்மதியா இருக்க வேண்டியது தானே? என்னால யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்க கூடாதுன்னு தான் வேலைய விட்டேன் நா பண்ண வேலைக்கு நீங்க சந்தோஷப்படணும் அத விட்டுட்டு பீல் பண்ணிட்டு இருக்கீங்கஎன்று இதழில் கேலியான புன்னகை உறைய குத்தலாக வார்த்தைகளை வெளியிட்டாள் 

அவளின் கோபத்தை அமைதியாய் ரசித்தவன் 

நிஜமாவே நா உனக்கு என்ன உறவுன்னு தெரியாதுஎன்று பொடி வைத்து பேசவும்

பார்வையை கூர்மையாக்கி பார்த்தவளிடம்நீ என்னோட பெஸ்ட் பிரண்ட் வைசுஎன்றதும் கோபத்தில் வெடுகென கையை உருவிக் கொண்டவள்  

நீங்க என்ன விரும்பலனாலும் பரவாயில்ல ஆனா பிரெண்டுன்னு மட்டும் சொல்லாத விஜி தயவு செஞ்சு இங்க இருந்து போ”  என்று வேகமாக பேசியவள் அவன் இதழ்கடையில் புன்னகையை ஒளித்து வைக்க முயற்சி செய்வதை கண்டு கோபம் மேலோங்கியது 

உங்களுக்கு என்ன பாத்தா சிரிப்பா தான் இருக்கும்! இப்போ என்ன நா அழுகுறத பாக்கணும் அதானே வேணும் உங்களுக்கு நல்லா பாருங்க பாத்து ரசிங்க, நா வேதனைபடுறதா பாத்தாதானே உங்களுக்கு நிம்மதியா இருக்கும்என்ற போதே தொண்டை அடைத்து கண்களில் நீர் வடிய தொடங்கியது

எவ்ளோ அழுகணுமோ அதை இப்பவே அழுதுக்கோ வைசு அழுகதான்னு நா சொல்ல மாட்டேன் நாளைக்கு உன்னால அழ முடியாது!” என்று பூடகமாய் பேசியவன்நாளைக்கு ஈவ்னிங் காபி ஷாப்ல மீட் பண்ணலாம் வர மாட்டேன்னு சொல்லாத உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டி இருக்குஎன்று கூறிவிட்டு விறுவிறுவென சென்றுவிட

அவன் வேகமாக செல்வதை கண்டு நிந்தனையுடன் பார்த்தவள்என்ன பெரிய முக்கியமான விஷயமா இருக்க போகுது!, ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னா சொல்ல போறான் ம்ஹும் அப்டியே சொல்லிட்டாலும் உலகம் தலைகீழா கவுந்துறாதுஎன்று மனதில் ஏகத்துக்கும் நொடித்து கொண்டு 

பரவாயில்ல நாமலே மீட் பண்ணி பேசலாம்னு இருந்தோம் இப்போ அவனே கூப்பிடுறான் போய் தான் பாப்போம் என்ன நடந்துற போகுது எல்லாம் நன்மைக்கே நீ கவலைப்படாத வைசுஎன்று தனக்கு தானே மார்தட்டி ஆறுதலும் சொல்லிக்கொண்டாள் 

இதுவரை தன்னை வெறுத்து ஒதுக்கியவன் வார்த்தைகளை அம்பாக பிரயோகித்து ஒதுங்கி சென்றவன் வலிய வந்து பேசியது எதிர்பாரா விதமாக கையை பற்றியதுஎன அனைத்தையும் நினைத்து பார்த்தவளுக்கு மனதில் நம்பிக்கை பிறக்க, தான் நினைத்தது கைகூடும் என்ற எண்ணத்திலேயே உறக்கம் வர மறுத்தது அவளுக்கு

நாளைக்கு காலையில முதல் வேலையா அப்பாவுக்கு போன் பண்ணி மாப்பிள்ளை பாக்க வர வேணாம்னு சொல்லணும்என்று தனக்கு தானே பேசி கொண்டே குதூகலத்துடன் சஞ்சளாவின் அருகில் சென்று படுத்துக்கொண்டாள் 

தொடரும்..

காதலன் ஆணைக்கு காத்திருப்பேன்

கைக்கெட்டும் தூரத்தில் பூத்திருப்பேன்

உன் சுவாச பாதையில் நான் சுற்றி திருகுவேன்

உன் சுவாச பாதையில் நான் சுற்றி திருகுவேன்

என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கிறாய் என்ன நான் சொல்வேன்

Advertisement