Advertisement

அவன் பேசிய விதமே  அவளுக்கு அதிருப்தியை அளிக்க, அடுத்தநொடி முகம் சப்பென்று வாடி போனது. கூம்பிய முகத்துடன்”நா அப்பவே சொன்னேன் மாமா எப்பவும் போல நார்மலாவே ரெடியாகுறேன்னு இவங்க தான் கேட்கலை” என்று வைஷாலி சஞ்சளாவின் மீது குற்றம் சுமத்தியவள்,

நிஜமாவே நல்லா இல்லையா மாமா? இன்னைக்கு ஒரு நாள் இந்த டிரெஸ்ஸ போட்டுக்க சொல்லி கம்பல் பண்ணாங்க மேக்கப் வேணாம்னு தான் சொன்னேன் பிடிச்சு உக்கார வச்சு அடிச்சு விட்டுடாங்க உங்களுக்கு பிடிக்கலைன்னா இப்பவே மாத்திட்டு வந்துடுறேன்” என்று திரும்பி செல்ல எத்தனித்தாள் வைதேகி.

ஏய் வைத்தி நில்லு” என்று பிடித்து நிறுத்திய வைஷாலி “அவன் தான் கிண்டல் பண்றான்னா நீயும் மாத்திட்டு வறேன்னு போற” என்று கோபம் காட்டியவள்,

ஏண்டா இந்த காஸ்டியூம்க்கு என்ன குறைச்சல் போட மாட்டேன்னு சொன்னவளை ஒருவழியா தாஜா பண்ணி பேசி போட வச்சு கூட்டிட்டு வந்தா நீ என்னமோ.. என்ன எதுக்குன்னு கேள்வி கேட்டு கிண்டல் பண்ற. எவ்ளோ அழகா நீட்டா மேக்கப் போட்டுவிட்டுருக்கேன் ப்ளீச்சிங் பவுடருன்னா சொல்ற. இரு பிளீச்சிங் பவுடரை எடுத்துட்டு வந்து உன்னோட முகத்துல அப்பி வைக்கிறேன்” என்று பல்லை கடித்து கொண்டு பேசினாள் வைஷாலி.

அவள் பாவனையில் அடக்க மாட்டாமல் நகைத்தவன் “ஏய் நா நல்லா இல்லன்னு சொல்லவே இல்லையே பக்கி என்ன கோலம்னு தானே கேட்டேன் நீ எதுக்கு எண்ணையில பட்ட தண்ணி மாதிரி வெடிக்கிற சும்மா சீண்டி பாத்தேன்” என்றவன் “என்னோட தர்ம பத்தினி இவ்ளோ அப்பாவியா இருப்பான்னு தெரியாம போச்சு” என்று வைதேகியை பார்த்து பாவமாய் உரைத்து, 

நல்லா இருக்கு தேவிம்மா உனக்கு பிடிச்சிருக்கு தானே? அப்றம் எதுக்கு மாத்த போற வந்து உக்காரு சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா” என்று கண்சிமிட்டி சிரித்தவன் வைதேகியை அருகில் அமர்த்தி கொண்டான்.

அவன் செயலை பார்த்து சிரித்த துவாரகேஷ் “டேய் நல்லாவே பிளேட்ட திருப்புற” என்று தலையாட்டி பெருமையாய் சொன்னாலும் அதில் கோர்த்துவிடும் எண்ணம் தெரிந்தது.

நீ வேற ஏண்டா நிஜமாவே விளையாட்டுக்கு தாண்டா சொன்னேன்” என்று சமாளித்தவனை கண்டு சிரிப்பு பொங்க,

நம்பிட்டேன்” என்றான் நம்பாத தோரணையில்.

சரி போதும் விடுடா” என்ற விஜயன் “கொண்டு வந்த கிஃப்ட் எங்க அதை எடு முதல எதுக்கு வந்தோமோ அதை விட்டுட்டு உப்பு சப்பில்லாத விஷயத்துக்கு விவாதம் பண்ணிட்டு இருக்கீங்க” என்று துவாரகாவை அதட்ட,

என்ன கிஃப்ட் யாருக்கு? என்கிட்ட எதுவுமே சொல்லல”, அதிர்வோடு கேட்டான் விஷ்ணு.

ஸ்மால் சர்ப்ரைஸ் உனக்கு தாண்டா ஏதோ எங்களால முடிஞ்ச சின்ன பரிசு மறுப்பு சொல்லாம வாங்கிக்கணும் அவார்ட் வாங்குனதை கொண்டாட வேணாம்னு சொல்லிட்ட எங்களால அப்போ எதுவும் கொடுக்க முடியல ஒர்க் பிரசர்ல எதையும் ரிலாக்ஸா பண்ண முடியலை.

சோ டிரிப் பிளான் பண்ணதுமே முடிவு பண்ணிட்டோம் உனக்கு ஏதாவது பிரசன்ட் பண்ணனும்னு அதான், நாங்க மூணு பேரும் சேந்து உனக்கு ஒன்னு வங்கிருக்கோம் பாத்துட்டு எப்டி இருக்குன்னு சொல்லு” என்று பேண்ட் பாக்கெட்டில் இருந்து துவாரகா எடுத்து நீட்டிய பரிசு பொருளை வாங்கி விஷ்ணுவிடம் நீட்டினான் விஜயன்.

டேய் ஏண்டா இப்டி பண்றிங்க சும்மா இருக்க மாட்டீங்களா” என்று சிரித்துகொண்டே கூச்சத்தில் நெளிந்து நெற்றியை தேய்த்தவன் பாக்ஸை திறந்து பார்க்க, மெல்லிசான தங்க சங்கிலி பளிச்சென்று மின்னியது.  

கையில் எடுத்து பார்த்தவனின் பார்வை டாலரில் பதிய”ஹேய் நல்லா இருக்குடா யாரோட செலக்சன்”, விஷ்ணு ஆச்சரியமாய் கேட்க,

வேற யாரு எல்லாம் நம்ம துவாரகா தான்.போனதுமே செலக்ட் பண்ணிட்டான் பாத்ததுமே எங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு” என்று வைஷாலி பதில் அளிக்க,

பாருடா உங்களுக்கு இந்த அளவுக்கு ரசனை இருக்கா மாமா” என்று நேரம் பார்த்து வாரினாள் சஞ்சளா.கண்கள் இடுங்க மனைவியை முறைத்து பார்த்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் சிரிப்பை அடக்க முடியாது சிரித்துவிட்டான் துவாரகேஷ்.

மேலதிகாரியிடம் பல்ப் வாங்கிய தருணங்கள், அந்நேரத்தில் தோன்றிய அடக்கமுடியாத சிரிப்புகள், அதனால் விளைந்த அர்த்தமற்ற கோபங்கள், அதை தணிக்க நடு இரவில் எழுப்பி அதிர்ச்சி கொடுத்து உறங்கவிடாமல் தொல்லை செய்த சமாதானங்கள்’ என வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை மனம்விட்டு பகிர்ந்து கொண்டனர் நண்பர்கள் நால்வரும். அழியாத நினைவுகளை அலசி பார்ப்பதே தனி ஆனந்தம் தான்!.

சிறிது நேரம் பேச்சும் சிரிப்புமாக சென்றது. அதன் பிறகு இரவு உணவு அவரவர் பிடித்தம் போல உணவை ஆர்டர் செய்து உண்டு விட்டு மீண்டும் பேச்சுக்களில் மூழ்க, நேரம் பத்தை கடந்து பயணம் செய்ய தொடங்கியிருந்தது.

ஹே செம்மை பேக்ரௌண்ட் சூப்பர் கிளைமேட்யா இந்த நேரத்துல மெலோடி சாங் இருந்தா நல்லா இருக்கும்” என்று வைஷாலி பார்வையை நாலாபுறமும் பரவவிட்டவாறே உடல் சிலிர்த்தாள்.

அதுகென்ன அதான் ஃபோன் இருக்கே என்னோட மொபைல்ல மெலோடி சாங்ஸ் நிறைய இருக்கு உனக்கு என்ன சாங் வேணும்னு சொல்லு ப்ளே பண்றேன்” என்றாள் வைதேகி.

நோ மொபைல்” என்று இருவரின் பேச்சில் இடை புகுந்த விஷ்ணு “சாங் கேக்குறதை விட பாடுறது நல்லா இருக்கும் சோ ஒரு கேம் ஆடலாம் ஓகே”.

கேமா! என்னடா சொல்ற?”, துவராகா குழப்பத்துடன் கேட்க,

ஆமா முதல யாரவது ஒருத்தர் பாடுங்க பாட்டோட கடைசி எழுத்து எதுல முடியுதோ அந்த எழுத்துல ஆரம்பிக்கிற வேற சாங் பாடனும்.யாரும் யாருக்கும் சொல்லி கொடுக்க கூடாது” என்று விளையாட்டின் விதிமுறைகளை பற்றி விளக்கினான் விஷ்ணு.

சரியென்று ஐவரும் தலையாட்ட முதல் பாடலை வைதேகியே தொடங்கினாள் பார்வை மணலில் பதிந்திருந்தாலும் அவளின் கவனமெல்லாம் அவனே. “அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்” என்று மெண்மையான குரலில் பாட, எண்ணம் மட்டுமல்ல அவன் விழிகளும் அவள் மீதே நிலைத்து நின்றன.

வைதேகி முடித்த எழுத்தில் இருந்து விஷ்ணு தொடங்க, அடுத்து விஜயன் வைஷாலி அவர்களை தொடர்ந்து துவாரகா சஞ்சளா என கூச்சத்தி நெளிந்து தயங்கினாலும் ஒவ்வொரு பாடலையும் அனுபவித்து பாடினர், அரங்கேறும் அனுபவங்கள் அனைத்தும் புதிதாய் இருந்தது அவர்களுக்கு. 

லேட் ஆச்சு நாம மட்டும் தான் இருக்கோம்னு நினைக்கிறேன்” என்ற வைதேகியை தொடர்ந்து சஞ்சளாவும் “ஆமாம்” என்று ஆமோதிக்க,

இன்னும் ஒரு சாங் மட்டும் தேவிம்மா தூக்கம் வரல ரூமுக்குள்ள முழிச்சிட்டு இருக்குறதுக்கு இங்க உக்காந்துட்டு இருக்கலாமே. ரொம்ப வருஷம் ஆச்சு இந்த மாதிரி எல்லாரும் ஒன்னா ஜாலியா இருந்து” என்றதும் அமைதியாக இருந்து கொண்டாள் வைதேகி.

கடைசியா ஒரே ஒரு சாங் போதும் முடிச்சுக்கலாம்” என்ற விஷ்ணு “டேய் விஜி நீ எப்பயாவது தோணுனா பாடுவியே உன்னோட பேவரைட் அதை பாடுடா கேக்கணும்னு ஆசையா இருக்கு” என்றவனை தொடர்ந்து,

துவராகவும் “ஆமாண்டா ரொம்ப நாள் ஆச்சு உன்னோட வாய்ஸ்ல அந்த சாங் கேட்டு” என்று கண்களை சுருக்கி புன்னகையுடன் ஊக்க,

சரியென்று தலையாட்டியவன் குரலை சீர் படுத்தி வைஷாலியை பார்த்து ‘உன்னை கண்ட நாள் ஒளிவட்டம் போல் உள்ளுக்குள்ளே சுழலுதடி..’ என்று இரண்டாவது சரணத்தில் இருந்து தொடங்கினான் விஜயன். அவன் பாட தொடங்கியதும் வைஷாலியின் விழிகள் வியப்பில் விரிந்தன. அடிக்கொரு தரம் பார்வை அவள் மீது படிவதும் மீள்வதுமாய் இருக்க அவளின் ஆச்சர்ய பார்வை அவனுக்கு முகில்நகையை உண்டு பண்ணியது. 

இதுவரை அவன் பாடி கேட்டதில்லை பாடலின் உள்ளே அழைத்து செல்லும் அவன் குரல் கேட்டு அடி நெஞ்சில் ஏதோ ஒரு உணர்வு பிசைய விழிகளில் லேசாய் ஈரம் படர தொடங்கியது அவளுக்கு. மகுடிக்கு மயங்கிய பாம்பை போல இமை மூடி ரசித்து கொண்டிருந்தவளின் விழிகள் தன்னிச்சையாய் நீரை சொரிய, 

அவள் விழி நீரை கண்டு திகைத்து போனவன் பாடுவதை நிறுத்தி விட்டு “வைசும்மா” என்று தோளிலில் தட்டி “என்னாச்சு எதுக்கு அழுகுற” என்று பதட்டத்துடன் கேட்டான் விஜயன்.

என்னனு தெரியலை நீங்க பாடுறதை கேட்டதும் அழுகை வந்துருச்சு” என்றாள் வைஷாலி சிறு கோவலுடன்.

அவ்ளோ கேவலமா இல்லையே நல்லா தானே பாடுனான்” என்று முகத்தை தீவிரமாக வைத்து, கேலி இழையோட பேசிய துவாரகாவை முறைத்து பார்க்கவும் ‘லவ் எமோஷன்’ என அமைதியாகி விட்டான்.

ஒரு மாதிரி ஃபீல் ஆகிருச்சு விஜி நல்லா பாடுறீங்க இந்த பாட்டை ஏற்கனவே கேட்டுருக்கேன் ஆனா அதுல வராத ஃபீல் உங்க வாய்ஸ்ல கேட்கும் போது உண்டாகுது நிஜமாவே என்னமோ பண்ணுது பழைய ஞாபகங்கள் எல்லா கண் முன்னாடி வந்து போகுது” என்று மனதின் உள்ளே இருந்து கூறியவள் அவன் கரம் பற்றி கண்ணீருடன் புன்னகைக்க, சலுகையாய் தோளில் சாய்த்து கொண்டான் வைஷாலியை. 

அடடா என்ன ஒரு காட்சி! இப்டி உன்ன குடும்பமா பாக்கும் போது எவ்ளோ சந்தோஷமா இருக்கு. இதற்கு தானே ஆசைப்பட்டோம் பாலகுமரா! இதை போய் மிஸ் பண்ண பாத்தியே” என்று துவாரகா வேடிக்கையாய் பேசினாலும் அதில் ஆத்மார்த்தமான அன்பு நிறைந்திருந்தது.

உண்மை தாண்டா தப்பு பண்ண பாத்தேனே ஒழிய தவறவிடலை பிடிச்சுகிட்டேன் எனக்கு பிடிச்சவளை என்ன பிடிச்சவளை கெட்டியா பிடிச்சுகிட்டேன்” என்றான் வைஷாலியை பார்த்து நகைத்து கொண்டே. 

சரி இந்த சந்தோஷமான நேரத்தை பதிவு பண்ண வேணாமா? சோ லேட்ஸ் டேக் எ செல்பீ. ஸ்மைல் ப்ளீஸ்…” என்று துவாரகா பளிச்சென்று பல்லை காட்ட, மற்றவர்கள் புன்னகைக்கவும் படம் பிடித்து கொண்டான் அலைபேசியில்.

வானவில்களின் முகம் வண்ணமாய் ஜொலிக்க

ஆளுமை நிறைந்த இரவின் இனிமையில்,ஆழியின் ஆலாபனையில் புண்கள் தாங்கிய புல்லாங்குழல்கள் புன்னாகவராளியில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குழலோசையாய் ராகம் மீட்க, இன்னிசை வெண்பாவாய் தொடர்ந்தது பூரணம் நிறைந்த வாழ்வின் பந்தம்.

குறள்:781 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.

(சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?.)

நிறைவு..

நிலவு வளரும் வளர்ந்து தளரும் அன்பில் ஏது தேய்பிறை அன்புக்கொரு எல்லை இல்லை கண்ணம்மா

மலர்கள் உதிர கிளையில் குதிக்கும் குருவிக்கென்றும் விடுமுறை கொள்ளை இன்பம் நட்பில் உண்டு கண்ணம்மா

வானில் திரண்ட மேகத்தில் மின்னல் வானை பிரிக்காது

எங்கள் இடையில் யார் வந்த போதும் நெஞ்சம் பிரியாது

துயர் போனது நேற்றோடு இனி என்றும் ஆனந்தம் கொண்டாடு…

Advertisement