Advertisement

“என்ன மாப்பிள்ளை நீங்க ஏ பொண்ணு அறிமுகமில்லாத யார்கிட்டயும் போன் போட்டு பேச மாட்டா நீங்க என்னடான்னா… நம்பரை கொடுத்து போன் பண்ண சொல்லிருக்கிங்க?” என்று மகவை பற்றி மெச்சுதலாய் கூறியவர்

 “ரொம்ப தங்கமான பொண்ணு மாப்பிள்ளை! கட்டுனா உங்கள தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கிறா அதான் பேசி முடிச்சிறலாம்னு வந்துட்டேன்”, தெரியவா போகிறது என்று கிலோ கணக்கில் பொய்களை மூட்டை மூட்டையாய் அள்ளி வைத்தார்

“எவ்ளோ நேரம் தான் ஒத்த கால்லயே நிப்பாங்க அத்தை கால் வலிக்காது” என்றவனின் பேச்சில் திருதிருவென முழித்தவர்

அவன் கூற்றின் பொருள் புரிந்து “மாப்பிள்ளைக்கு நக்கல் ஜாஸ்தி! போங்க மாப்பிள்ளை” என்று சிறு வெட்கம் எட்டி பார்க்க சிரித்தார் ராணி

‘கடவுளே..’ என்று விசாலாட்சியை பார்த்தவன் “முடியலைம்மா?” என்று முகத்தை சுருக்கி பாவனை செய்ய

“கொஞ்சம் பொறுத்துகோடா!” என்று பார்வையாலேயே பதில் கூறினார் விசாலாட்சி

“ம்மா வந்தவங்களுக்கு காபி கொண்டு வந்து கொடுங்க” என்று கோபத்தை அடக்கி கொண்டு கூற

விசாலாட்சியை மட்டம் தட்ட வேண்டி “மாப்பிள்ளைக்கு எம்மேல எவ்ளோ அக்கறை பாத்திங்களா சித்தப்பா! மதினியும் தான் இருக்காங்களே வந்து எவ்ளோ நேரம் ஆகுது ஒரு காபி தண்ணி கொடுக்கணும்னு தோணுச்சா?” என்று விசாலாட்சியை பார்த்து ஏளனமாக உதட்டை சுளித்து கொண்டவர் துவாரகேஷிடம் பேச்சை தொடர்ந்தார்

“சின்ன வயசுல இருந்தே அவளுக்கு நீங்கன்னா உசுரு எப்ப பாரு மாமாவ பாக்கணும் பாக்கணும்னு சொல்லிகிட்டே இருப்பா! கூறு கேட்ட சிறுக்கி, அவளுக்கு உங்க மேல கொள்ள பிரியம் மாப்பிள்ளை மீனாட்சி துவாரகேஷ் பேறே அற்புதமா பொருந்துதே” என்றவரின் கால்கள் தரையில் நிலை கொள்ளவில்லை

“கடவுளே வருஷத்துக்கு ஒரு லூசுகிட்ட கோர்த்துவிட்டு வேடிக்கை பாக்குறதே உனக்கு வேலையா போச்சு எப்டியாவது என்ன காப்பாத்துடா முருகா” என்று மனதில் வேண்டி கொண்டவனின் அலைபேசி சிணுங்கியது திரையில் மின்னிய புதிய எண்ணை கண்டு

“என்ன அத்தை உங்க பொண்ணு தெரியாதவங்ககிட்ட பேச மாட்டான்னு சொன்னிங்க இப்ப என்ன சொல்றிங்க?” என்று ஏளனமாக புருவம் உயர்த்தி திரையில் மின்னிய எண்ணை காண்பித்தான்

“அது.. அது.. நீங்க அவள கட்டிக்க போறவரு இல்லையா? அதான் நீங்க போன் பண்ண சொன்னதும் பண்றா?”, சிரித்து மலுப்பினார் ராணி

“நா போய் பேசிட்டு வறேன்” என்று எழுந்த துவாரகேஷ்

“ஏ இங்கயே பேசுனா என்ன?” என்று அவசரமாக ஒருவித பதட்டத்துடன் கூறியவரை கண்கள் இடுங்க புரியாமல் பார்க்க

“நாங்க எல்லா இருக்கோம்னு நினைக்காதீங்க மாப்பிள்ளை இங்க இருந்தமானிக்கையே பேசுங்க நாங்க எதுவும் நினைக்க மாட்டோம்”

“ஏ அத்தை உங்க பொண்ணுக்கு பேச்சு வராதா டிரான்ஸ்லேட் பண்ண ஆள் வேணுமா என்ன?” என்றான் கிண்டலாக

“அய்யோ அப்டியில்ல மாப்பிள்ளை ரொம்ப நல்லாவே பேசுவா, நா எதுக்கு சொல்றேன்னா.. அவ கொஞ்சம் கூச்ச சுபாவம் நா பக்கத்துல இருக்கேன்னு தெரிஞ்சா உங்ககிட்ட நல்லா பேசுவா அதுக்கு தான் சொன்னேன்”

“ஏ ராணி கட்டிக்க போறவங்க தனியா பேசுனாதா என்ன நீ பேசாம இரு” என்று அடக்கியவர் “நீங்க போய் பேசிட்டு வாங்க தம்பி பேசிட்டு வந்து நல்லா முடிவ சொல்லுங்க” என்று அனுப்பி வைக்க

வெள்ளை மீசையை பார்த்து புன்னகைத்தவன் ராணியை பார்த்து கொண்டே போனை உயிர்ப்பித்து தனியாக சென்று பேச தொடங்கினான் “என்னோட பேர் துவாரகேஷ்”

“இருந்துட்டு போங்க எதுக்கு என்ன கால் பண்ண சொன்னிங்க அதுவும் வீடியோ கால்?, எனக்கு நிறைய வேலை இருக்கு வெட்டிய பேசிட்டு இருக்க முடியாது” என்று முன்பின் அறியாதவனிடம் தன்மையாய் பேச வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் பொறிந்தாள்

அவளது வெடிக்கும் பேச்சில் நொடி பொழுது திகைத்தவன் பின் நிதானித்து கொண்டு “என்னங்க.. நீங்க! கல்யாணம் பண்ண போற பொண்ணுகிட்ட பேசனும்னு எனக்கு ஆசை இருக்காதா?, உங்க முகத்தை பாக்கணும்னு தான் வீடியோ கால் பண்ண சொன்னேன்”

“யாரு யார கல்யாணம் பண்ணிக்க போறாங்க?”

” உங்கம்மா எங்க வீட்டுக்கு வந்து மாப்பிள்ளை பேசிட்டு இருக்காங்க! ரெண்டுபேர துணைக்கு வேற கூட்டிட்டு வந்துருக்காங்க! உங்ககிட்ட பேசிட்டு தான் என்னோட முடிவை சொல்றேன்னு சொல்லிருக்கேன், நீங்க என்னடான்னா யாருக்கு கல்யாணம்னு கேக்குறீங்க?”

“இங்க பாருங்க எனக்கு எதுவும் தெரியாது அத்தை வீட்டுக்கு போய்ட்டு வாறேன்னு தான் சொன்னாங்க வேற எதுவும் சொல்லல” என்று வேண்டா வெறுப்பாக பதில் கூற

“அது உங்க விஷயம் உங்களுக்கு என்ன பிடிச்சிருக்காமே, என்னதான் கட்டிப்பேன்னு ஒத்த கால்ல நிக்கிறீங்கலாமே உங்கம்மா சொன்னாங்க!,

எனக்கு உங்கள பிடிச்சுருக்கு உங்க விருப்பம் என்னனு சொன்னா பேசி முடிச்சிறலாம்” என்று வேண்டுமென்றே அவளை சீண்டி கோபத்தை துண்டினான்

“ஏங்க எங்கம்மா தான் லூசுன்னா நீங்க அதைவிட லூசா இருக்குறிங்க அது பேச்ச கேட்டுகிட்டு என்கிட்ட பேசுறீங்களே..!, இங்க பாருங்க எனக்கு எதுவும் தெரியாது எனக்கு உங்கள கல்யாணம் பண்ணிக்க கொஞ்சம் கூட விருப்பம் இல்ல

என்னோட முடிவு இது தான் நா வேற ஒருத்தர விரும்புறேன் தயவு செஞ்சு நீங்களாவது புரிஞ்சுக்கோங்க அது பேச்ச கேட்டு நீங்க சரின்னு மண்டைய ஆட்டிட்டு பொண்ணு கேட்டு வந்திங்க ஊர் எல்லைய மிதிக்க முடியாது பாத்துக்கோங்க நா போன வைக்கிறேன்” என்று படபடவென பட்டாசாய் பொறிந்தவள் முகத்தில் அறையும் வண்ணமாக பட்டென அழைப்பை துண்டித்து விட்டாள்

உயிர் இழந்து பல நொடிகள் கடந்தும் அலைபேசியை வெறித்து கொண்டிருந்தவன் “சரியான திமிரு பிடிச்சவளா இருப்பா போல கொஞ்சம் கூட மரியாதை இல்லாம பேசுறா!, பேச்சுவாக்குல லூசுன்னு சொல்லிட்டாளே பாவி, இவகிட்ட சிக்க போறவன் நிலைமை அதோகதி தான் அம்மாவுக்கு கொஞ்சம்மும் சளைக்காத பொண்ணு நல்ல ஒத்துமை நல்லவேளை நா தப்பிச்சேன்” என்று நொடித்து கொண்டவன் அவள் பேசியதை ஜீரணிக்க முடியாது முணங்கி கொண்டே வர

‘என்ன சொன்னாளோ ஏது சொன்னாளோ?’ என்று மடியில் கனத்தை வைத்து படபடப்புடன் ஆர்வமாய் காத்திருந்தார் ராணி

தொண்டையை சீர் செய்து கொண்டு “என்னடா பையன் அப்ப ஒரு மாதிரி இப்ப ஒரு மாதிரி பேசுறானேன்னு நினைக்காதீங்க எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல! பொண்ணுகிட்ட பேசுன பிறகு தான் தெரிஞ்சது பொண்ணுக்கும் இதுல விருப்பம் இல்லன்னு, அதனால என்ன பண்றிங்க வந்ததுக்கு சாப்ட்டுட்டு ட்ரெயினோ பஸ்ஸோ பிடிச்சு ஊருக்கு கிளம்புங்க” என்றதும் தான் தாமதம்

விசுக்கென எழுந்து கொண்டவர் “என்ன மதினி உங்க பையன் இப்டி பேசுறான் நீங்க அவன பேசவிட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க? இதுக்கு தான் சொன்னேன் தனியா போய்பேச வேண்டானு” என்று விசாலாட்சியிடம் கோபமாக கொக்கரிக்க

“அத்தை இருங்க! அம்மா மேல எதுக்கு கோபப்டுறிங்க? வர்றவங்க இன்ன விஷயம்னு போன் போட்டுட்டு வந்துருக்கணும், எதுவும் சொல்லாம திடீன்னு வந்து கல்யாண பேச்சை எடுத்தா எப்டி அத்தை!, கேக்க வேண்டியவங்க கிட்ட கேக்காம நீங்களா அவசரப்பட்டு கிளம்பி வந்ததுக்கு எங்கம்மா! அதாவது உங்க அண்ணி எப்டி பொறுப்பாவங்கா?” என்று நக்கல் தோணியில் பேச

அவன் பேசுவதை கடுகடுப்புடன் கேட்டு கொண்டிருந்தவர் “பாத்தீங்களா சித்தப்பா உங்க முன்னாடியே அம்மாவும் மகனும் எப்டி பேசுறாங்கன்னு நா மட்டும் தனியா வந்துருந்தா வீட்டுக்குள்ளேயே சேத்துருக்க மாட்டாங்க வாசலோட பேசி அனுப்பிருப்பாங்க, ஏ பொண்ணுக்கு என்ன குறைச்சல் அவ சரின்னு சொல்லி தானே நா இங்க வந்தேன் போன் போட்டு அவகிட்ட என்னத்த பேசுனாரோ பாவம் பயந்துபோயி பிடிக்கலன்னு சொல்லிட்டா?” என்று அழுது புலம்ப தொடங்கினார்

“இது என்னம்மா பெரிய தலைவலியா இருக்கு” என்று எரிச்சலுடன் தாயை பார்க்க

மகனின் சங்கடமான பார்வையை கண்டு “என்ன அண்ணி நீங்க! பிள்ளைங்களுக்கு விருப்பம் இல்லன்னா நாம என்ன பண்ண முடியும்? உங்க பொண்ணுகிட்ட பேசிட்டு தானே வந்து சொல்றான்” என்றவர்

“டேய் துவா நீ மீனாட்சிக்கு போன் போட்டு கொடு நா பேசுறேன்” என்றதும் அழைப்பு விடுத்து ஸ்பீக்கரில் போட்டு கொடுத்தான்

மறுமுனையில் அழைப்பை ஏற்றதும் “ஏம்மா மீனாட்சி நா விசாலாட்சி அத்தை பேசுறேன் உங்கம்மா சென்னைக்கு வந்துருக்காங்க உனக்கு என்னோட பையன கட்டிக்க சம்மதமா?” என்று தயக்கம் ஏதுமின்றி மூவரின் முன்னாலேயே வைத்து கேட்க

“அத்தை உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன! அவருக்கிட்ட சொன்னது தான் எனக்கு உங்க பையன பிடிக்கல எங்கம்மா சொல்றாங்கன்னு நீங்க சரின்னு சொல்லிறாதீங்க! எங்கம்மா ஊருக்கு வந்ததும் அவங்ககிட்ட நா பேசுக்கிறேன், விருப்பம் இல்லன்னு சொல்லி ஊருக்கு அனுப்பி வைங்க”  என்று கூற வந்திருந்திருந்தவர்களின் முகம் விழுந்து போனது

“சரிம்மா இத கேக்க தான் போன் பண்ணேன் வச்சுடுறேன்!” என்று அலைபேசியை மகனிடம் கொடுத்துவிட்டு

 “இப்ப என்ன சொல்றிங்க அண்ணி உங்க முன்னாடி தானே பேசுனேன்! பேசுனது உங்க பொண்ணு தானே? என்னோட மகனுக்கு விருப்பமில்லாத எதையும் நா செஞ்சதில்லை செய்யவும் மாட்டேன்!” என்று கரராக கூறிவிட்டு “ஊர் பெரியவங்க  எங்கள மன்னிச்சிருங்க” என்று இருவரிடமும் மன்னிப்பு வேண்ட

“நீ எதுக்கும்மா மன்னிப்பு கேக்குற ராணி பேச்ச கேட்டு நாங்க வந்துருக்க கூடாது தப்பு எங்க மேலதாம்மா நாங்க வறோம்” என்று சங்கடத்துடன் கிளம்ப முயன்றவர்களை நிறுத்தியவர்

“எல்லாரும் இருந்து சாப்ட்டு போங்க பெரியப்பா”

“இல்லம்மா நாங்க கிளம்புறோம் பையனோட கல்யாணத்துக்கு சொல்லி அனுப்பு குடும்பத்தோட வந்து சாப்ட்டு போறோம்” என்றவர் “ராணி கிளம்பி வர்றயா இல்ல இருந்துட்டு நாளைக்கு வர்றியா?”

“மதிப்பில்லாத இடத்துல எனக்கென்ன வேலை நானும் வறேன் இனி இந்த வாசப்படிய மிதிப்பேன்” என்று சிலுப்பி கொள்ள

“ஏ அண்ணி இப்டி பேசுறீங்க” என்ற தாயை அடக்கியவன் “அம்மா விடுங்க அத்தை என்ன சொல்றாங்கன்னா மிதிச்சு வரமாட்டேன் குதிச்சு வருவேன்னு சொல்றாங்க அப்டி தானே அத்தை” என்று கிண்டல் செய்தவன் மீதப்பான பார்வையை செலுத்தினான்

மண்டிய புகைச்சலை அடக்கிக்கொண்டு வேகமாக ராணி வெளியேறிட “சரிம்மா நாங்க போய்ட்டு வறோம்” என்று வந்திருந்தவர்கள் கிளம்பி சென்றதும்

“அப்பாடா…” என்று சோபாவில் தொப்பென்று விழுந்தான் துவாரகேஷ் வீடே நிசப்தமாய் இருந்தது சற்று முன் நடந்ததை கண்கள் மூடி நினைத்து பார்த்து கொண்டிருந்தவனிடத்தில் ஆராயும் பார்வை செலுத்தியவர் “டேய் துவா சஞ்சளா ரெண்டு நாள் அங்கயே இருக்கட்டும் இங்க இருந்தா எதையாவது நினைச்சுகிட்டே இருப்பா” என்று முகம் சுருக்கி சொல்ல

“சரிம்மா” என்றவன் “ஒரு காபி கிடைக்குமா ம்மா தலைவலிக்கிது” என்று நெற்றியை அழுத்தமாய் தேய்த்துவிட்டபடி கேட்டான்

காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தவர் “டேய்.. துவா எனக்கு சஞ்சளாவ ரொம்ப பிடிச்சுருக்குடா பேசாம அவளையே கல்யாணம் பண்ணிக்கோயே?” என்று பட்டென கேட்டதும்

காபி குடித்து கொண்டிருந்தவனுக்கு புரை ஏற இருமி குரலை சீர் செய்தவன் “என்னம்மா கேட்டிங்க?”

“சஞ்சளாவ கல்யாணம் பண்ணிக்கிறயா? நா அவகிட்ட பேசுறேன்” என்று ஆர்வமாய் கேட்க

“இத நீங்க அவகிட்ட தான் கேக்கணும்”

“அப்டின்னா உனக்கு ஒகேவா?” விழிகள் வியப்பில் விரிந்தது விசாலாட்சிக்கு

“எனக்கு சம்மதம் தான் ஆனா இப்ப அவகிட்ட கேக்க வேணாம் நானே சொல்லிக்கிறேன், இங்க நடந்த எதுவுமே அவளுக்கு தெரிய வேணாம்மா ரெண்டு நாள் போகட்டும் இப்போ தான் அத்தையோட இழப்புல இருந்து கொஞ்சம் வெளிய வந்துருக்கா சர்ப்ரைஸ் கொடுத்து சொல்றேன் என்னோட விருப்பத்தை” என்று கூறியவன் டம்ளரின் அடிவரை காஃபியை உறிஞ்சிவிட்டு

“சரிம்மா நா கிளம்புறேன் நைட் வர லேட் ஆகும் நீங்க சாப்ட்டு படுங்க எனக்கு சேத்து சமைக்க வேணாம்” என்று கூறிவிட்டு பைக் சாவியை ஆள்காட்டி விரலில் சொருகி சுழற்றியபடி பிடித்த பாடலை வாயில் முணங்கி கொண்டே விஷ்ணுவின் இல்லம் கிளம்பினான் துவாரகேஷ்.

தொடரும்..

என் ஜீவன் உந்தன் சொந்தம் என்னுள்ளே ஆனந்தம்

நெஞ்சுக்குள் வாழும் தெய்வம் ஏற்றிடும் தீபம்

உனக்காக பிறந்தேன் உயிர்த் தீயை சுமந்தேன்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

நீரோடுநீராடும் நாணல்கள் போராடும்

இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும்.

Advertisement