Monday, May 12, 2025

    Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum

    அத்தியாயம் 18 காயப் படுத்துவாய் என்று தெரிந்தே உன்னைக் காதலிக்கிறது என் இதயம்!!! “இதோ வரோம் அத்தை”, என்று சொல்லி விட்டு செழியனை அழைக்க வந்த மாலினியின் காதில் விழுந்த வார்த்தைகள். “இன்னும் நமக்குள்ள வாங்க போங்க வேணுமா?”, என்பது தான்.    அதைக் கேட்டு புசுபுசுவென்று கோபம் மேலே எழும்பியது. கோபத்துடன் கீழே வந்து விட்டாள். “ஆக இவன் கெட்டவன் தான்....
    அவளுக்கு வேலைக்குச் செல்லும் ஆசை இருந்தாலும் அவர்களாக அதைப் பற்றி பேசாததால் அமைதியாக இருந்தாள். அவனுக்கும் அவளை ஆஃபிஸ்க்கு அழைக்க ஆசை தான். ஆனால் அங்கே நடந்ததை நினைத்து எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளை அழைப்பது என்று எண்ணி மௌனமாக இருந்தான். அடிக்கடி மாலினி அவளுடைய வீட்டுக்கும் சென்று வருவாள். காலையில் கிளம்பும் போது...
    அவனைக் கண்டதும் மாலினி கண்கள் வியப்பில் விரிந்தது. சத்தியமாக அவள் அவனை அங்கே எதிர் பார்க்க வில்லை. “அருண் நீங்களா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள். “எப்படி இருக்க மாலினி?”, என்று கேட்டான் அருண். “நல்லா இருக்கேன். நீங்க? இங்க எப்படி? எப்படி இருக்கீங்க?” “நான் நல்லா இல்லை மாலினி. உன்னை மாதிரி ஒரு பொண்ணை இழந்து நான் எப்படி...
    அத்தியாயம் 17  காதலின் வலி ஒரு நாள் உனக்கு உணர்த்தும் எந்தன் உண்மையான காதலை!!! “என்ன முறைக்கிற? நீ சொன்னதை தானே சொன்னேன்? ஆனா நீ வேஸ்ட் கா. அத்தானைப் பார்க்க இன்னும் பிரம்மாண்டமா கம்பீரமா இருக்கு. ம்‌ம் யார் மாதிரி தெரியுமா? ஆன், நம்ம பொன்னியின் செல்வன் மாதிரி. அவ்வளவு ஒரு கம்பீரம் தெரியுமா?”, என்று அவன் கேட்டதும்...
    “நீங்க சொல்ற பொய்யான நியாயத்தை எல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. நீங்க செஞ்ச எதையும் என்னால மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது. உங்க இஷ்டத்துக்கு உங்களுக்கு பிடிச்ச காதல் மனைவியா மாற என்னால இந்த ஜென்மத்துல முடியாது. நீங்க அப்படி எல்லாம் நான் இருக்கணும்னு ஆசைப் பட்டா அது உங்க பேராசை. உங்க அம்மா...
    மோகனச் சிலை போல இருந்த தோற்றம் சாதாரணமான அவனைக் கவிஞனாக மாற்ற ஆரம்பித்தது. லேசாக ஈரப் பதத்துடன் இருந்த அவளது உதடுகளைக் கண்டவன் “வாயா டி இது? இந்த பேச்சு பேசுற?”, என்று புன்னகைத்துக் கொண்டான். அவள் சற்று அசைந்து நேராக படுக்க, உணர்வு வந்தவன் அவசரமாக பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டான். அவன் குளித்து முடித்து...
    அத்தியாயம் 16  மூச்சுப் பேச்சில்லாமல் தவிக்கும் எந்தன் காதலுக்கு உயிர்க் கொடு பெண்ணே!!! அவள் கத்தினாலும் அவன் அமைதியாக இருந்தது அவளை அதிகம் பாதித்தது. அவன் எதிர்த்து சண்டை போட்டால் அவள் நிச்சயம் பதிலுக்கு பதில் பேசியிருப்பாள். அவன் அமைதியாக இருப்பது அவளுக்கு இயலாமையைச் தந்தது. அதனால் தன்னை நினைத்தே அவளுக்கு அழுகை வந்தது. அழுது கொண்டே “எனக்கு கடவுள் கொடுத்த...
    அப்போது வசந்தா அந்த அறைக்குள் வந்தாள். அம்மாவைக் கண்டதும் ஏனென்றே தெரியாமல் அழுகை வந்தது. இது வரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் அவள் கண்ணில் இருந்து கொட்டியது.  அவள் கண்ணீரைக் கண்டு மனம் வருந்தினாலும் அதைப் பற்றி பேசாமல் “தூங்குறதுக்கு முன்னாடி பேசலாம்னு வந்தேன் டா. டிரஸ் மாத்திகோ மாலு. அப்புறம் தைரியமா இருக்கணும்....
    அடுத்த நாளே மகனை அழைத்து திருமணத்துக்கு அரை மனதாக சம்மதம் சொன்னார். அவன் முகம் அப்படியே மலர்ந்து போனது.  “செழியா எனக்கு என்னமோ நாம தப்பு பண்ணுறோமோன்னு தோணுது டா. ஒரு பக்கம் மீனா வீட்ல என்ன சொல்லுவாங்களோன்னு இருக்கு. இன்னொரு பக்கம் மாலினி உன் முகத்தைக் கூட பாக்க விரும்பலை. அவ எப்படி உன்...
    அத்தியாயம் 15  நிலையில்லாத உலகில் நிரந்தரமாக நிற்கிறது நம் காதல் என்னும் நங்கூரம்!!! “என்ன விஷயம் மேடம்?”, என்று கேட்டாள் மாலினி.  “உன் கிட்ட நான் மன்னிப்பு கேக்கணும் மா” “மேடம், நீங்க போய் என் கிட்ட மன்னிப்பு கேக்குறதா?” “அப்படி ஒரு பிள்ளையை பெத்ததுக்கு மன்னிப்பு கேட்டு தான் ஆகணும்”, என்று சாரதா சொன்னதும் தலை குனிந்து கொண்டாள் மாலினி. “இவன் அதை...
    “அம்மா” “நாளைக்கு மாலினி வீட்ல போய் பேசணும். அவ கிட்ட மன்னிப்பு கேக்கணும். அதுக்கப்புறம் அவ என்ன செய்யுறாளோ அது நடக்கட்டும்” “அம்மா” “விடு டா, போய் ரெஸ்ட் எடு”, என்று அவனைத் தேற்றி அனுப்பி வைத்தவரின் மனதில் பாரம் சூழ்ந்தது. மாலினி வீட்டுக்கு போன போது பாலா மட்டும் தான் வீட்டில் இருந்தான். வசந்தா பக்கத்து வீட்டுக்கு சென்றிருந்தாள்....
    அப்போதும் அவள் அழுததை அவள் கண்கள் காட்டிக் கொடுத்தது. “என்ன மா அழுதியா? கண்ணு எல்லாம் கலங்கிருக்கு”, என்று கேட்டார் அவர். “கொஞ்சம் வேலைல தப்பு பண்ணிட்டேன். அதான் சார் திட்டிட்டார். சாரைப் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே? வேலை சரியா இல்லைன்னா கோபப் படுவார். அதான் கஷ்டமா போச்சு. சரி நான் கிளம்புறேன்”, என்று...
    அத்தியாயம் 14  எந்தன் உயிராகவும் உறவாகவும் இருக்கும் நீயா என்னை வெறுப்பது?!!! பின் “உன்னை கண்டிப்பா சாக விட மாட்டேன் மாலினி. உன்னை எப்படிக் காப்பாத்தணும்னு எனக்கு தெரியும்”, என்ற படி அவளை நெருங்கினான். அவள் சுவரோடு சாய்ந்து பல்லி போல நிற்க அவளை ஒட்டி நின்றான் செழியன். இருவருக்கும் இடையில் ஒரு இன்ச் இடைவெளி மட்டும் தான் இருந்தது. அவனது...
    “நம்ம பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிருச்சுன்னு நினைச்சு அந்த பையன் அந்த பொண்ணுக்கு சரின்னு சொல்லிருக்கலாம். இப்ப நம்ம பொண்ணுக்கு கல்யாணம் நின்னுருச்சுன்னு தெரிஞ்சா கண்டிப்பா அந்த பையன் மாலினியை விட்டு வேற பொண்ணை கல்யாணம் பண்ண மாட்டான்” “என்னங்க சொல்றீங்க?” “எனக்கு தோனினதைச் சொன்னேன். என்ன வேணும்னாலும் நடக்கலாம். பாக்கலாம், கடவுள் என்ன வச்சிருக்கார்னு. சரி...
    “யார் என்ன சொன்னாலும் நம்பீருவீங்களா சார் நீங்க? அவங்களுக்கு கொஞ்சமா செட்டில்மெண்ட் பண்ணிட்டு எல்லா சொத்தையும் நாங்க எடுத்தது உண்மை தான். ஆனா அவங்களுக்கு பங்கு கொடுக்க அது ஒண்ணும் பூர்வீக சொத்து இல்லை. என் கணவர் சம்பாதிச்சது. அது என் மகனுக்கு தானே போகணும்? அவரோட தம்பி தங்கைக்கா போகணும்?” “என்னது பூர்வீக சொத்து...
    அத்தியாயம் 13  நீ சண்டையிடும் போது வரும் வலியை விட நீ பேசாமல் இருக்கும் போது வரும் வலி பெரியது பெண்ணே!!! “யார் மாலினி கால் பண்ணுறா?”, என்று கேட்டாள் வசந்தா. அவளுக்கு அழைப்பது ஒரு வேளை அருணாக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது. “எங்க கம்பெனி எம்.டி தான் மா கூப்பிடுறார். இரு என்னன்னு கேட்டுக்குறேன்”, என்று சொல்லி அதை எடுத்து காதில்...
    “ஆமா, என் மகன் இந்த கல்யாணம் வேண்டாம்னு எழுதி வச்சிட்டு எங்கயோ காணாம போய்ட்டான்” “என்ன சொல்றீங்க?” “ஆமா, நாங்களே திகைச்சு போய் தான் இருக்கோம். எப்படி இதை உங்க கிட்ட சொல்றதுன்னு தெரியலை. ஆனா சொல்லாம இருக்க முடியாதுன்னு தான் உங்களை கூப்பிட்டேன்” “என்ன இப்படிச் சொல்றீங்க? என் பொண்ணோட வாழ்க்கைங்க. இப்ப வந்து இப்படிச் சொல்றீங்க?...
    நிச்சயம் இதை அனுப்பினது அருண் தான் என்று செழியனுக்கு புரிந்தது. அவனைத் தவிர வேறு யாரும் இவ்வளவு கீழ்த் தனமாக டைப் செய்து அனுப்ப முடியாது என்று தெரிந்து கொண்டான். ஆனால் இதைச் சொன்னால் சாரதா நம்பனுமே என்று எண்ணி அன்னையைப் பார்த்தான்.  “அன்னைக்கு என் கிட்ட என்ன டா சொன்ன? பிடிக்காத பொண்ணை தொந்தரவு...
    அத்தியாயம் 12  அழகான புரிதல் இருந்தால் என்றுமே பிரிவு கிடையாது உனக்கும் எனக்கும்!!! “ஆமா மாமா, செழியன் குடும்பமே பொறாமை பிடிச்ச குடும்பம். எங்க பெரியப்பா நல்லவர் தான். ஆனா எங்க பெரியம்மா அப்படி கிடையாது. இவனைத் தூண்டி விடுவாங்க. இவனும் எங்களுக்கு சேர வேண்டிய சொத்தை எல்லாம் ஆட்டைய போட்டுட்டான். அதெல்லாம் நாங்க பொறுத்து தான் போனோம். ஆனா...
    “அம்மா” “என்ன சொன்ன நீ? உன் மாலினியா? எவ்வளவு தைரியம் இருந்தா இந்த வார்த்தையை என் கிட்டயே சொல்லுவ? அப்ப மீனா யார் டா? அவளுக்கு நீ என்ன பதிலைச் சொல்லப் போற? உன் கிட்ட கேட்டுட்டு தானே முடிவு பண்ணினேன்? பெரிய இவனாட்டம் டயலாக் பேசின. இப்ப வாய் கூசாம என் மாலினின்னு சொல்ற?” “அம்மா...
    error: Content is protected !!