Advertisement

அப்போதும் அவள் அழுததை அவள் கண்கள் காட்டிக் கொடுத்தது. “என்ன மா அழுதியா? கண்ணு எல்லாம் கலங்கிருக்கு”, என்று கேட்டார் அவர்.

“கொஞ்சம் வேலைல தப்பு பண்ணிட்டேன். அதான் சார் திட்டிட்டார். சாரைப் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே? வேலை சரியா இல்லைன்னா கோபப் படுவார். அதான் கஷ்டமா போச்சு. சரி நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.

செழியனோ குற்ற உணர்வில் மருகிக் கொண்டிருக்க அப்போது அவனது போன் ஒலித்தது.

சாரதா தான் அழைத்திருந்தார். அதை எடுக்க மனதில்லாமல் அப்படியே விட்டான். மீண்டும் அழைத்ததும் அதை எடுத்தான். ஆனால் அவனால் பேசத் தான் முடியவில்லை.

“செழியா”

“அம்மா”, என்று குற்ற உணர்வில் ஒலித்தது அவன் குரல். அதை அவரும் சரியாக புரிந்து கொண்டார்.  மாலினியை பொய் சொல்லி ஆபீஸ் வர வைத்ததற்கு தான் அவனுக்கு குற்ற உணர்வு என்று சாரதா புரிந்து கொண்டார்.

“என்னை மன்னிச்சிருப்பா. எப்பவுமே உன் பக்கம் நியாயம் இருக்கும், செழியன் எது செஞ்சாலும் சரியா இருக்கும்னு நினைக்கிற நானே உன்னைப் புரிஞ்சிக்கலையே? நீ செஞ்சது எல்லாம் சரி தான் பா. அம்மா தான் உன்னைப் புரிஞ்சிக்காம பேசிட்டேன். இப்ப சொல்றேன். நீ என்ன செஞ்சாலும் சரியா தான் இருக்கும். சரி வீட்டுக்கு வா பேசிக்கலாம்”, என்று சொல்லி போனை வைத்தார்.

“நான் செய்யுறது எல்லாம் சரி கிடையாது மா. நான் இப்ப செஞ்சதை கேட்டா கண்டிப்பா நீங்க என்னை மன்னிக்கவே மாட்டீங்க? ஒரு பொண்ணை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு காயப் படுத்தி அனுப்பிருக்கேன் மா. இதை என் வாயால எப்படி உங்க கிட்ட சொல்லுவேன்?”, என்று மனம் குமுறியவனின் கண்ணில் பட்டது அந்த மெஸ்ஸேஜ். சாரதா தான் அனுப்பி இருந்தார்.

“எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சு செழியா. அருண் கெட்டவன்னு மாலினி வீட்டுக்கு தெரிஞ்சிருச்சு. மாலினி கல்யாணம் நின்னுருச்சு. காணாம போகாத பைலை காணாம போச்சுன்னு சொல்லி அவளை படுத்தி எடுக்காம பத்திரமா அவளை வீட்டுக்கு அனுப்பி வை”, என்று வந்திருந்தது.

“ஐயோ கடவுளே”, என்று எண்ணிக் கொண்டு அந்த மெஸ்ஸேஜ் வந்த நேரத்தைப் பார்த்தான். மாலினி அறைக்குள் வரும் போது தான் வந்திருந்தது. “இதை முன்னேயே பார்த்திருந்தா இப்படி எல்லாம் நடந்திருக்காதே? அம்மா நான் இப்ப என்ன செய்வேன்? அவளை பத்திரமா அனுப்ப சொல்லிருக்கீங்க? ஆனா நான் பண்ணின காரியம் தெரிஞ்சதுனா என்ன சொல்வீங்களோ?”, என்று எண்ணியவனின் கண்களில் கண்ணீர் வந்தது.

இதற்கு மேல் இங்கே இருப்பது நல்லதல்ல என்பதால் வீட்டுக்கு செல்ல கிளம்பினான். அவனைப் பார்த்ததும் செக்யூரிட்டி ஓடி வந்தார். “என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க?”, என்று அவர் கேட்டதும் திகைத்துப் போனான்.

“இவருக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சா? மாலினி எல்லாம் சொல்லிட்டாளா?”, என்று குழம்பிய படி அவரைப் பார்த்தான்.

“பாவம் சார் அந்த பொண்ணு. இங்க வேலை பாக்குறதுலே அருமையான பொண்ணுன்னா அது மாலினி தான் சார். அப்படிப் பட்டவளைக் காயப் படுத்தி அனுப்பிட்டீங்களே? கண்ணு எல்லாம் கலங்கிருச்சு சார்”

……

“எதுக்குனு கேட்டேன். வேலைல தப்பு செஞ்சதுக்கு ரொம்ப திட்டிட்டீங்கன்னு சொல்லுச்சு”, என்று அவர் சொன்னதும் நிம்மதி பெருமூச்சு விட்டான். அந்த நிலையிலும் தன்னை விட்டுக் கொடுக்காத அவள் தேவதை இல்லாமல் யாராம்?

“சரி சரி, இனி யாரையும் திட்ட மாட்டேன். வேலையைப் பாருங்க”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

வீட்டுக்கு போனதும் அவனை வரவேற்றது சாரதா தான். அவனால் அவரை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. அவன் தலை குனிந்த படி அவர் எதிரே அமர “என்ன டா, அதான் சாரி சொல்லிட்டேன்ல? இன்னும் அம்மா மேல கோபமா?”, என்று கேட்டார் சாரதா.

“நீங்க தப்பே பண்ணாம சாரி கேட்டுட்டீங்க மா. நான் செஞ்ச தப்புக்கு என்ன பரிகாரம் செய்யப் போறேன்னு தெரியலை”

“என்ன டா சொல்ற? மாலினியை பொய் சொல்லி ஆபீஸ் வர வச்சதை சொல்றியா? அது பெரிய விஷயம் இல்லை டா. நான் என் ஃபிரண்ட் கிட்ட சொல்லி அருணைப் பத்தி விசாரிச்சேன். அவ தான் மும்பைல நடந்ததைச் சொன்னா. நான் அதைச் சொல்ல மாலினி வீட்டுக்கு போனேன். ஆனா அதுக்கு முன்னாடியே அருண் கல்யாணம் வேண்டாம்னு லட்டர் எழுதி வச்சிட்டு போய்ட்டானாம். மாலினி கல்யாணம் நின்னுருச்சு. அவ வாழ்க்கையை காபாத்தியாச்சு. இப்ப உனக்கு சந்தோஷம் தானே?”

“அம்மா”, என்று அழைத்தவனின் குரல் ஒரு மாதிரி இருக்க சாரதாவுக்கு திக்கென்று இருந்தது. அவன் கண்களில் பெருகிய கண்ணீரைக் கண்டு திடுக்கிட்டு தான் போனார். எந்த தாய்க்கு தான் மகனது கண்ணீரை பார்க்க சகிக்கும்?

“செழியா”, என்று அதிர்ந்து போய் அழைத்தார்.

“அம்மா, நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் மா”, என்று ஆரம்பித்தவன் தன்னுடைய செய்கையை அவரிடம் சொல்ல முடியாமல் திணறினான்.

“என்னன்னு சொல்லு செழியா? எனக்கு என்னவோ மாதிரி இருக்கு”

“என்னால மீனாவை கல்யாணம் பண்ணிக்க முடியாது மா”

“செழியா”

“மீனாவை மட்டும் இல்லை மா. என்னால வேற எந்த பொண்ணையும் கட்டிக்க முடியாது. அதுக்கான தகுதியை நான் இழந்துட்டேன்”, என்று அவன் சொன்னதும் இரண்டும் இரண்டும் நான்கு என்று கணக்கு போட்டவர் அதிர்ந்து தான் போனார்.

“செழியா, நீ மாலினியை…..”, என்று சாரதா கேட்க வர “இல்லை மா… இல்லை மா.. அப்படி எல்லாம் இல்லை மா…”, என்று அவசரமாக மறுத்தான்.

“அப்பாடி”, என்று அவர் மூச்சு விட “அவ கண்ணீரைப் பாக்கலைன்னா நான் அதை தான் மா செஞ்சிருப்பேன்”, என்று குண்டைத் தூக்கிப் போட்டான்.

“செழியா”, என்று அதிர்ந்து போய் அழைத்தார். “ஆமா மா, அவ கிட்ட ரொம்ப மோசமா நடந்துக்கிட்டேன் மா. அவ கண்ணீரைப் பாக்கலைன்னா இந்நேரம் அவளை நாசமாக்கிருப்பேன். என்னாலயே என் செய்கையை நம்ப முடியலை. உங்க வளர்ப்பு தப்பா போச்சு மா. அருண் கெட்டவன் கெட்டவன்னு சொல்லிட்டு நான் செஞ்ச செயலுக்கு என்ன பேர் மா? என் மாலினி அழுதுட்டே போயிட்டா மா. அப்ப கூட செக்யூரிட்டி கிட்ட என்னைப் பத்திச் சொல்லாம என்னை விட்டுக் கொடுக்காம பேசிட்டு போயிருக்கா. ஆனா அவளுக்கு நான் எவ்வளவு பெரிய காயத்தை கொடுத்துருக்கேன் தெரியுமா? அவளை ரேப் பண்ண பாத்துருக்கேன் மா. எனக்குள்ளே எந்த சாத்தான் புகுந்ததுன்னே எனக்கு தெரியலை மா. என்னால உங்களையும் சரி அவளையும் சரி நிமிர்ந்து பாக்கவே முடியலை”

மகனின் இமாலயத் தவறு புரிந்தாலும் பெரிதாக நடக்க வில்லை என்று நிம்மதியும் வந்தது தாய்க்கு. ஒரு பெண்ணாக அவன் தவறு புரிந்தாலும் ஒரு தாயாக மகனின் மனநிலை அந்த நேரத்தில் எப்படி இருந்திருக்கும் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

தன் முன்னே கூனி குறுகி அமர்ந்திருக்கும் அவனைத் தேற்றுவது இப்போது முக்கியம் என்று பட்டது. “ஒரு பொண்ணா நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை கொன்னு போடணும்னு எனக்கு வெறி வருது செழியா. எப்படி டா உன்னால அவளை அந்த மாதிரி பண்ண முடிஞ்சது? அந்த நிமிஷம் அவ மனசுக்குள்ளே செத்துருப்பா. காமம் அப்படிங்குறது காதலோட ஆரம்பிக்கணும் செழியா. காதல் இல்லாம இருந்தா அது நரகம். அந்த நரகத்தை நீ மாலினிக்கு காமிச்சிருக்க. அவ இதை எப்படி டா மறப்பா?”, என்று கேட்டார்.

“அம்மா…. அவளைக் காப்பாத்தணும்னா அவ என்னோடவளா மாறனும். அவளைக் கல்யாணம் பண்ணினா தான் காப்பாத்த முடியும் நினைச்சு அப்படி பண்ணிட்டேன் மா. என் தப்பு எனக்கு இப்ப புரியுது மா. இது தப்பு கூட இல்லை பாவம்”

“அவ கிட்ட மன்னிப்பு கேட்டியா?”

“கேட்டேன். ஆனா அவ மன்னிக்கலை. என் முகத்துல முழிக்க கூடாதுன்னு சொல்லிட்டா. எனக்கு செத்துறலாம்னு இருக்கு மா”

“என்ன வார்த்தை டா சொல்ற? ஒரு பொண்ணா நீ அவளுக்கு செஞ்சதுக்கு எனக்கு உன் மேல கோபம் வருது தான். ஆனா ஒரு அம்மாவா உன்னை என்னால புரிஞ்சிக்க முடியுது டா”

“அம்மா”

“ஒண்ணு கேக்கவா? மாலினி இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா நீ இப்படி நடந்துருப்பியா?”

“சத்தியமா இல்லை மா”

“மாலினி உன் மனசு முழுக்க நிறைஞ்சிருக்கா. அதனால தான் உன் மூச்சு காத்து அவ மேல பட்டிருக்கும். வேற பொண்ணுங்க நிழலை கூட நீ உன் மேல பட விட மாட்ட செழியா”

“அம்மா”

“ஆமா டா. அவளை நீ தொட்டது உன் காதல் கொடுத்த தைரியம். அது மட்டுமில்லாம அவ வாழ்க்கை பாழாகிருமோன்னு பயம். ஏன் இத்தனை மாசமும் மாலினி கூட ஒரே ரூம்ல தான் வேலை பாத்துருக்க? என்னைக்காவது உனக்கு இப்படி செய்யணும்னு தோனிருக்கா?”

“இல்லை மா”

“அவளைக் காப்பாத்தணும்னு நினைச்சதுல இப்படி நடந்துருச்சு. தப்புன்னு நீ உணரவும் செஞ்சாச்சு. அடுத்து என்னன்னு தான் பாக்கணும். இப்பவும் நீ செஞ்சது சரின்னு நான் சொல்லலை. ஆனா அதுக்காக நீ கெட்டவன், செத்து தான் போகணும்னு சொல்ல வரலை. செஞ்ச தப்பை திருத்திக்கிட்டு வாழ்ந்து காட்டு டா. அவ கிட்ட மன்னிப்பை வாங்கு. இல்லை நீ செஞ்ச தப்புக்கு அவ கிட்ட இருந்து தண்டனையை வாங்கு”

Advertisement