Advertisement

“வாட்? அது நீங்களா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள் மீனா.

“யெஸ். நான் தான். நான் தான் அவங்களை வேண்டாம்னு சொன்னேன். அது குடும்பத்துக்காக. அப்புறம் வேற ஒரு பிரச்சனை”, என்றவள் அவனுக்கும் அவளுக்குமாக நடந்த அந்த விஷயத்தை சொல்ல விரும்ப வில்லை.

“நிஜமாவே அது நீங்களா மாலினி? அவன் சரியான பிராடு மாலினி. உங்க கல்யாணம் நின்னதும் இது தான் சாக்குன்னு உங்களை விட்டுக் கொடுக்க கூடாதுன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டான் போல? சாரதா அம்மாவும் மகன் கூட கூட்டு. எங்க வீட்ல எல்லாரும் அவன் ஏதோ கல்யாணம் நின்ன பொண்ணைக் கட்டி வாழ்க்கை கொடுத்துருக்கான்னு பெருமை பேசுறாங்க”

“அதுவும் உண்மை தானே?”

“அதானே, புருஷனை விட்டுக் கொடுக்க மாட்டிக்கீங்க பாத்தீங்களா? அவரை உங்களுக்கு பிடிக்குமா?”

“ம்ம்”, என்று சொல்லி வெட்கப் பட்டாள். அதை சந்தோஷமாக பார்த்தாள் மீனா.

“சரி மீனா, நான் கிளம்புறேன். ஒரு நாள் நீங்க கண்டிப்பா வீட்டுக்கு வரணும்”

“கண்டிப்பா வரேன்”

“அப்புறம் இன்னொரு விஷயம். சொல்லலாமா தெரியலை”

“சொல்லுங்க மாலினி”

“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க. உங்களுக்கு தான் உங்க மாமாவைப் பிடிக்கலையே? வேற யாரையும் கல்யாணம் பண்ண ரெடியா தானே இருக்கீங்க?”

“கண்டிப்பா. நீங்களே கூட எனக்கு மாப்பிள்ளை பாருங்க மாலினி”

“நான் பாக்கவே வேண்டாம். ஏற்கனவே மாப்பிள்ளை உங்களைப் பாத்தாச்சு”

“வாட் என்ன சொல்றீங்க?”

“எப்படி என்னைப் பத்தி பேசும் போது செழியன் முகம் பிரகாசமா மாறுதோ அதே மாதிரி உங்களைப் பத்தி பேசும் போது தினகர் அண்ணா முகமும் பிரகாசமா மாறுது”

“என்னது? தினகர் சாரா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

“நான் கண்டிப்பா அது தான்னு சொல்லலை. எனக்கு அப்படித் தோணுச்சு. வேணும்னா நீங்களே செக் பண்ணிப் பாருங்க. அதோ அவரே வராரே”, என்று மாலினி சொல்லும் போதே அங்கு வந்தான் தினகர்.

தினகரின் பார்வை ஒரு நொடி மீனா மேல் பதிந்து விட்டே மாலினி புறம் திரும்பியது. “இவன் என்னை சைட் அடிக்கிறானோ?”, என்று முதல் முறையாக சந்தேகம் கொண்டாள் மீனா.

அவள் நினைத்தது போல “என்ன மாலினி பேசியாச்சா?”, என்று கேட்ட தினகர் அவ்வப்போது மீனாவையே பார்க்க அவன் காதல் பார்வையை உணர்ந்து முதல் முறையாக மீனா மனதில் பெரும் சலனம். பார்வையால் அவளை வெட்கப் பட வைத்தான்.

அதைக் கண்டு கொண்ட மாலினி “பேசியாச்சுண்ணா. நான் கிளம்புறேன். அப்புறம் மீனா உங்க கிட்ட ஏதோ பேசணுமாம். பேசுங்க. நான் வரேன்”, என்று அவர்களை கோர்த்து விட்டுவிட்டே சென்றாள்.

“சொல்லுங்க மீனா, அக்கவுண்ட்ஸ் பத்தி பேசனுமா?”, என்று கேட்ட தினகர் அவளை ஆர்வமாக பார்த்தான்.

“நான் அக்கவுண்ட்ஸ் பத்தி பேசப் போறேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”, என்று எதிர் கேள்வி கேட்டாள் மீனா.

“நீங்க வேலைக்கு வந்து இத்தனை நாள்ல என் கிட்ட அதைப் பத்தி மட்டும் தானே பேசுவீங்க?”, என்று ஏக்கத்தோடு சொன்னான்.

அவன் ஏக்கத்தில் சுகமாய் நனைந்தவள் அவன் மனதை அறிய வேண்டி “எனக்கு நாளைக்கு லீவ் வேணும் சார்”, என்று கேட்டாள்.

“எடுத்துக்கோங்க மீனா. ஆனா எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“என்னை பொண்ணு பாக்க வராங்க சார். லீவ் எடுத்துக்கவா?”, என்று சவாலாக கேட்க அவன் முகம் கூம்பிப் போனது. “அடுத்த வாரம் லீவ் எடுத்துக்கோங்க மீனா. நாளைக்கு முகூர்த்தம். ஆள் அதிகமா வருவாங்க”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.

அவன் வெளிப்படையாக அவன் மனதைச் சொல்ல மாட்டான் என்று புரிந்தது. எல்லாம் வெளிப்படையாக பேசி விடும் மீனாவுக்கு அது எரிச்சலாக வந்தது.

“அடுத்த வாரம் என்னை பொண்ணு பாக்க வந்தா உங்களுக்கு ஓகே தானா தினா?”, என்று கேட்டாள்.

அவள் கேட்ட கேள்வியும், அவள் குரலில் இருந்த குழைவும், அவள் அழைத்த அவனது பெயரும் அவனை திக்குமுக்காட வைக்க அதிர்வாக அவளைப் பார்த்தான். அவன் முகத்தில் இருக்கும் பரவசத்தை ஆசையாக பார்த்தாள் மீனா. காதலிக்க படுவது கூட சுகம் தான் என்று அந்த நொடி உணர்ந்தாள்.

“மீனு…. சாரி…. மீனா …. நீங்க இப்ப… என்ன சொன்னீங்க?”, என்று அவன் தடுமாறி கேட்க “நான் ஒண்ணும் சொல்லலையே? கேள்வி தான் கேட்டேன்”, என்று சொல்லி அவனைச் சீண்டினாள்.

“ஒரு வேளை அவ சாதாரணமா பேசினது தான் எனக்கு அப்படி புரிஞ்சதோ?”, என்று எண்ணி அவன் குழப்பமாக அவளைப் பார்க்க “அடுத்த வாரம் வரைக்கும் தான் உங்களுக்கு டைம். அதுக்குள்ள என்னை பொண்ணு பாக்க வரலை அப்புறம் பாத்துக்கோங்க”, என்று அவள் போலியாக மிரட்ட அவன் முகம் மலர்ந்தது.

“உங்களுக்கு…. உனக்கு என்னைப் பிடிக்குமா மீனா?”, என்று சந்தோஷமாக கேட்டான்.

“ஹிம், வீட்ல பேசுங்க”, என்று சொல்லி விட்டு அவள் அங்கிருந்து வெட்கப் பட்டுக் கொண்டே ஓட அவசரமாக தன்னுடைய போனை எடுத்து செழியனுக்கு அழைத்தான். அவனோ போனை ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்தான். சரி அப்புறம் பேசிக்கலாம் என்று எண்ணிக் கொண்டு மீனாவைத் தேடிச் சென்றான்.

தன்னுடைய கணவனிடம் காதலைச் சொல்லலாம் என்று சந்தோஷமாக அலுவலகம் சென்றாள் மாலினி. ஆனால் அங்கே மீட்டிங் முடிந்து அவன் வீட்டுக்கு சென்று விட்டான் என்ற தகவல் கிடைத்தது. அவசரமாக வீட்டுக்குச் சென்றாள். “என்ன மா போயிட்டு வந்துட்டியா?”, என்று கேட்டார் சாரதா.

“ஆமா அத்தை”, என்று அவள் புன்னகைக்க “மாலினி, என்ன மா ரொம்ப சந்தோஷமா இருக்க?”, என்று கேட்டார்.

“சும்மா தான் அத்தை. அவர் எங்க?”, என்று கேட்டாள். மருமகளின் மனது புரிந்து ஒரு பெரு மூச்சை வெளியேற்றியவர் “அவன் இப்ப யூ.எஸ் கிளம்பனுமாம் மா. அதான் எல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்கான். போய்ப் பாரு. இன்னும் அவனுக்கு நேரம் சரியாகலையோ என்னவோ?”, என்று தனக்கு தானே பேசிய படி அமர்ந்து விட்டார்.

“என்னது பாரின் போறானா?”, என்று அதிர்ந்து அவசரமாக அறைக்குள் ஓடினாள். அங்கே பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பி இருந்தான் செழியன்.

“நான் பத்து நாள் யு. எஸ் போறேன். என் தொந்தரவு இல்லாமல் நிம்மதியா இரு”, என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

“செழியன் உங்க கிட்ட கொஞ்சம் நான் பேசணும். பிளீஸ்”

“இத்தனை நாள் பேசாததையா இப்ப பேசப் போற? எனக்கு டைம் ஆச்சு. பாய்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

அவனை என்ன சொல்லி தடுக்க என்று தெரியாமல் திணறினாள் மாலினி. அவள் கண்கள் கூட கலங்கும் போல இருந்தது. வாசல் வரை சென்ற செழியன் என்ன நினைத்தானோ மீண்டும் அவள் அருகில் சென்றான். அவள் குழப்பமாக பார்க்க கையில் இருந்த பெட்டியைக் கீழே வைத்து விட்டு “பிளீஸ் மாலினி, அன்னைக்கு செஞ்ச தப்பை மறுபடியும் செஞ்சிக்கிறேன். அதுக்கும் சேத்து தண்டனை கொடு”, என்றவன் அவள் என்ன என்று உணரும் முன்பே அவள் முகம் நோக்கிக் குனிந்து விட்டான்.

அன்றே அவள் மறுக்க வில்லை. இன்று மறுப்பாளா என்ன? அதிர்ந்த மனதோடு அப்படியே நின்று விட்டாள். அவளை இடையோடு சேர்த்து அணைத்தவன் தன்னுடைய இதழ்களை அவளுடைய இதழ்களோடு புதைத்தான். கண்களை இறுக மூடி அவன் முத்தத்தில் கரைய ஆரம்பித்தாள் மாலினி.

பிரிவின் வலி காரணமாக ஒரு முத்தத்தோடு விலகி விட எண்ணியவனுக்கு அது முடியாமல் போனது. அவளுடைய மென்மையான இதழ்களைச் சுவைக்கும் வேகம் எழ அவளுடைய உதடுகளை மொத்தமாக உள்வாங்கிக் கொண்டான்.

எந்த மறுப்பும் இல்லாமல் அவனுடைய முத்தத்தில் மூழ்கி இருந்தவளின் கரங்கள் தானாக உயர்ந்து அவனது சிகையைக் கோதியது. அவளது ஒத்துழைப்பையோ, மறுப்பில்லா நிலையையோ அவன் உணரவே இல்லை.

இப்போது விட்டால் கிடைக்காது என்று தோன்ற அவன் வேகம் கூடியது. அவளுடைய இதழ்களை வைத்து அவன் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க அவளுக்கோ உதடுகள் என்ற ஒன்று இருக்கிறது என்று கூட தெரியாமல் மருத்துப் போனது.

அவன் கைகள் அவளை இறுக்கி அனைத்துக் கொள்ள அவளுக்குமே அவனுக்குள் புதையும் வேகம். எப்போது அவளை அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்தான் என்பது கூட அவளுக்கு தெரிய வில்லை.

அவள் மேல் அழுத்தமாக புதைந்தவன் மீண்டும் மீண்டும் அவளுடைய இதழ்களைக் கவ்விக் கொண்டான். அவனுடைய கரங்கள் அவளுடைய வெற்றிடையில் பதிந்து அவள் மேனியில் அலைய ஆரம்பித்தது. ஆடைக்கு மேலாகவே அவளை அவன் உணரத் துவங்க அவளோ அவன் ஏற்படுத்திய அதிர்வலைகளில் இந்த உலகத்தில் இருந்தே மறைந்து கொண்டிருந்தாள்.

அவனுடைய கரங்களின் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு தான் அவளுக்குள் கிளர்ந்தது. அவள் தேகம் அவன் கரங்களுக்குள் நெகிழ்ந்து கொண்டிருக்க அதையும் அவன் உணர வில்லை.

“மாலு…”, என்று குளறலாக சொன்னவனின் உதடுகள் அவள் மேனியில் பயணிக்க துவங்கியது. அவன் செய்கைகளும் அவனது காதலும் சேர்ந்து அவளுக்குமே ஆசைத் தீயைப் பற்ற வைக்க அவனை இறுக்கி அனைத்துக் கொண்டாள்.

“இத்தனை நான் உன் கிட்ட இருந்து விலகி இருந்தாலும் உன்னைப் பாத்தே என் மனசைத் தேத்திக்குவேன் டி. இனி பத்து நாள் உன்னைப் பாக்காம எப்படி இருப்பேனோ தெரியலையே?”, என்று புலம்பிய படியே அவள் மேனியில் போராடிக் கொண்டிருந்தான்.

என்னை மொத்தமாக எடுத்துக்கோ டா என்று அவளது உள் மனம் கூட பேசியது. அவளை முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேகம், ஒரு பெண்ணை முழுதாக அடைய வேண்டும் என்ற வெறி அவன் நாடி நரம்பில் பயணிக்க அவனது உடை கசங்குவதைக் கூட அவன் உணரவில்லை.

ஒரு கட்டத்தில் தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல் அவளுடைய மேனியில் தன்னுடைய பல் தடத்தை பதித்து விட வலி தாங்க முடியாமல் “ஆஆ”, என்று அலறினாள் மாலினி.

அந்த சத்தத்தில் சுய உணர்வு வந்தவன் “என்ன செஞ்சிட்டு இருக்கேன் நான்? அன்னைக்கு செஞ்ச மாதிரியே இப்பவும்? நான் திருந்தவே மாட்டேனா?”, என்று எண்ணிக் கொண்டு படக்கென்று அவளிடம் இருந்து விலகி எழுந்தான்.

விலகிக் கிடந்த மேலாடையை சரி செய்த படி அவள் அவனைப் பார்க்க அவனோ அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் “சாரி மாலினி”, என்று சொல்லி விட்டு பெட்டியைத் தூக்கிக் கொண்டு சென்றே விட்டான்.

அவன் சென்றதும் குப்புற விழுந்து அழுதாள். அவளால் அவன் விலகிச் சென்றதை தாங்க முடியவில்லை. இப்போது நடந்த இந்த நிகழ்வுக்கு அவன் சாரி சொன்னதையும் அவளால் தாங்க முடியவில்லை.

அவளுடைய செல்களில் எதிர்பார்ப்புகள் இன்னும் மிச்சம் இருந்தது. உணர்வுகளை அடக்க கூடிய வல்லமை இருக்கும் பெண்ணாகிய அவளுக்கே இப்படி இருக்கிறது என்றால் அவன் அன்று நடந்து கொண்டது தவறே இல்லை என்று புரிந்தது. அவன் மீதிருந்த சிறு சிறு கசப்புகளும் விடை பெற்றுச் சென்று விட அவன் வேண்டும் என்ற தாகம் அவளுக்குள் அதிகமானது.

“ஏன் டா விலகிப் போன? என்னை மொத்தமா கொள்ளையடிச்சிட்டுப் போயிருக்க கூடாதா?”, என்று வாய் விட்டே புலம்பினாள்.

கீழே சென்ற செழியனோ “போயிட்டு வரேன் மா. அவளைப் பாத்துக்கோங்க”, என்று அவசரமாக சொல்லி விட்டு சென்று விட்டான். அதற்கு மேல் அன்னையின் முன்னே நிற்க அவனால் முடியாது.

காதல் தொடரும்….

Advertisement