Advertisement

“சொல்லு டி, உள்ள போகலாமா?”, என்று மீண்டும் கேட்டான் அவன். 

“ம்ம்”, என்று அவள் முணுமுணுக்க “போகவே மனசில்லை டி?”, என்றான். 

“ஏன்?”

“உள்ள போனா இதெல்லாம் கனவா போயிருமோன்னு பயமா இருக்கு”, என்று ஏக்கக் குரலில் சொன்னதும் தனக்காக அவன் பட்ட கஷ்டம் அவள் மனதை கசக்கிப் பிழிந்தது. 

“சாரி, என்னால தான் உங்களுக்கு ரொம்ப கஷ்டம்”

“விடு மாலு”

“நிஜமாவே உள்ள போகலாம். கண்டிப்பா இந்த கனவு முடிஞ்சு போகாது. நீங்க ஆசைப் படுற வரைக்கும் நீண்டு கொண்டே இருக்கும்”, என்று சொல்லிக் கொண்டே அவன் கண்களைப் பார்த்தாள். 

அவளை இழுத்து அணைத்த படி உள்ளே அழைத்துச் சென்றான். வீட்டுக்குள் சென்றதும் செழியனின் ஆசைப் பார்வையால் அவளுக்குள் காதல் தீயின் அனல் அடித்தது. அவன் காதலில் குளிர் காய ஆசைப் பட்டாள். பார்வையாலே அவளை மயக்கி கிறங்க வைத்துக் கொண்டிருந்தான் செழியன். அவளது மயக்கத்தை ரசிக்க வேறு செய்தான். 

“மாலு”, என்று உருகி வந்தது அவன் குரல். சில்லென்ற குளிர்காற்று இருவரின் மேனியையும் தீண்டியது. மாலினி வெட்கத்துடன் சிரித்தாள். வெட்கப் படும் போது அவள் அழகு இரண்டு மடங்காக மாறியது போல இருந்தது அவனுக்கு. 

“மாலு”

“ம்ம்”

“ஐ லவ் யு”

“ஐ லவ் யு டு செழியன்”, என்று அவள் சொன்னதும் “இது போதும்”, என்று தோன்றியது அவனுக்கு. இதற்கு மேல் அவனுக்கு வாழ்வில் என்ன வேண்டுமாம்? அவளை ஆவேசமாக தழுவிக் கொண்டவனின் ஆவேச முத்தங்களால் மூச்சு முட்டிப் போனாள். மூச்சு திணறினாலும் அவன் சுவாசமே அவளுக்கு சுவாசமானது விந்தை தான். 

அவளது தோளைப் பிடித்து இழுத்து அருகில் இருந்த சுவரில் சாய்த்தான். அவள் அங்கிருந்து விடுபட முடியாத படி தன்னுடைய கரங்களால் அவளுக்கு அரண் அமைத்தான்.

கண்களை விரித்தவாறு அசையாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மாலினி. “என்ன செய்து விடுவாய் பார்க்கிறேன்?”, என்ற அவளது சவால் விடும் பார்வை அவனை வெகுவாக தொல்லை செய்தது. 

அதனால் அவளை இன்னும் நெருங்கி நின்றான். இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளி சுத்தமாக குறைந்திருந்தது. அவன் அருகாமையில் தவித்தாள் மாலினி. அவளது தவிப்பும் படபடப்பும் அவனுக்கு ரசிக்கும் படியாக இருந்தது.

இன்னும் நெருங்கி அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவன் அணைப்பில் தன்னைத் தொலைத்தாள் மாலினி. என்ன நடக்கிறது என்று அவள் உணரும் முன்னரே அவள் இதழை தன்னுடைய இதழ்களால் தீண்டியிருந்தான். 

அவளுடைய இதழ்களை மொத்தமாய்த் தனக்குள் உள்வாங்கியவன் முரட்டுத் தனமாய் சுவைக்க ஆரம்பித்தான். கொஞ்சம் கூட எதிர்ப்பு இல்லாமல் அவனுக்குள் ஆனந்தமாக சிறை பட்டிருந்தாள் மாலினி. 

ஒரு கட்டத்தில் அவளும் அவன் செய்ததை திருப்பி செய்ய யார் யாரிடமிருந்து முத்தத்தை வாங்கினார்கள் என்பதே தெரியாமல் போனது. 

முத்தத்தில் முக்குளித்துக் கொண்டிருந்தவன் அவளை மொத்தமாக கொள்ளையிடத் துடித்தான். அவன் கரங்கள் இரண்டும் அவள் மேனியில் அழுத்தமாக பதியத் துவங்கியது. 

அவன் விரல்கள் அவள் மேனியில் ஊர்வலத்தை ஆரம்பிக்க எதிர்ப்பின்றி அவன் தேடலுக்கு வழி விட்டாள். 

முத்தமிட்டே அவளது உதடுகளை ஒரு வழி செய்தவன் தேடலில் அவளை சிவக்க வைத்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனது மொத்த உணர்வுகளும் அவளிடத்தில் வெளிப்பட அதை உணர்ந்து அதிர்ந்து போனாள் மாலினி. 

“என்னங்க?”, என்று சொல்லி அவனைக் கலைத்தாள். 

அவளுக்கு விருப்பம் இல்லையோ என்று எண்ணினாலும் அவனால் அவளிடம் இருந்து விலக முடியவில்லை. “ம்ம்”, என்று மட்டும் முணுமுணுத்தான். 

வேண்டாம் என்று சொல்வாளோ என்று எண்ணி அவன் உடலும் மனமும் ஏக்கம் கொண்டது. 

“இந்த சேலை ஒரு மாதிரி கசகசன்னு இருக்கு மாத்தவா?”, என்று அவள் கேட்டதும் “கண்ணா லட்டு தின்ன ஆசையா?”, என்று அவள் கேட்பது போல இருந்தது. 

“கண்டிப்பா… மாத்திக்கோ மாலினி”, என்று விட்டுக் கொடுத்தான். 

அவனிடம் இருந்து விலகியவள் அவனுக்கு முதுகு காட்டி நின்று “இந்த பிளவுஸ் நாட்டை கழட்டி விடுங்க”, என்றாள். 

“கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா?”, என்று கேட்பது போல இருந்தது. 

அதற்கு மேல் செழியனுக்கு அவன் உணர்வுகளை அவன் வசம் வைக்க முடிய வில்லை. அவளை நெருங்கியவன் அந்த முடிச்சை அவிழ்த்து விட்டான். அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த பட்டுப் புடவை அவளை விட்டுச் சென்றிருந்தது. 

அவளை அள்ளிக் கொண்டு கட்டிலில் கிடத்தியவன் அவள் மேல் படர்ந்தான். அவன் இதழ்கள் அவள் இதழ்களைக் கவ்விக் கொள்ள அந்த அழுத்தமான ஆழமான முத்தத்தில் இருவருக்குமே சிலிர்த்தது. 

தன்னுடைய தயக்கங்கள் விலக அவளுக்குள் மூழ்கினான் செழியன். எந்தவித தயக்கமும் இல்லாமல் தன்னை அவனிடம் ஒப்படைத்தாள் மாலினி. அவர்கள் இரவு விடியாமலே தொடர்ந்தது. 

நாட்கள் வாரங்களாகி மாதங்களாக ஓடியது. தன்னுடைய வாழ்வில் எப்படி பட்ட சந்தோஷத்தை இழக்க இருந்தோம் என்று அடிக்கடி எண்ணிக் கொள்வாள் மாலினி. 

அவன் மட்டும் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என்று அவளை திருமணம் செய்ய வில்லை என்றால் இந்த காதல் அவளுக்கு கிடைத்திருக்காதே. 

மாலினி தாய்மை அடைந்த போது சாரதா அவளை நன்கு கவனித்துக் கொண்டார். வசந்தா, கனகராஜ், பாலா மூவரும் அடிக்கடி வந்து அவளைப் பார்த்துக் கொண்டனர். 

அனைத்துக்கும் மேல் செழியனோ அவளை கண்ணில் வைத்து தாங்கினான் என்று தான் சொல்ல வேண்டும். உடம்பு உபாதைகளால் அவள் அவதிப் படும் போது அவளுக்கு துணையாக நின்றான். இப்போதெல்லாம் இருவருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் வருவதே இல்லை. 

அன்றில் பறவைகள் போல ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்திருந்தனர். 

“வீட்டுக்குள்ளயே இருக்க மாலு. எங்கயாவது வெளிய கூட்டிட்டு போன்னு அம்மா சொல்றாங்க? வா எங்கயாவது போகலாம்”, என்றான் செழியன். 

“இல்லை வேண்டாம்”

“ஏன் டா? பாலாவையும் அத்தை மாமாவையும் பாத்துட்டு வருவோம்”

“நேத்து தானே அவங்க வந்து பாத்துட்டு போனாங்க? வேண்டாமே?”

“அப்ப வேற எங்க போக சொல்லு? போகலாம்”

“பீச்சுக்கு போகலாமா?”

“சரி வா போகலாம், கிளம்பு”

“சரி”, என்ற படி அவள் கிளம்ப ஆரம்பிக்க அவனும் கிளம்பினான். 

“என்னங்க, இந்த முடிச்சு…;”, என்று அவள் சொல்ல “இந்தா வந்துட்டேன்”, என்று ஆவலுடன் அவளை நெருங்கினான். 

அவன் கண்களில் இருந்த விசமத்தில் அவனை முறைத்துப் பார்த்தாள் மாலினி. 

“திரும்பு டி”, என்றவனின் விரல்கள் அவள் முதுகில் ஊர்வலம் போக ஆரம்பிக்க “இன்னைக்கு பீச்சுக்கு அவ்வளவு தான்”, என்று எண்ணியவள் அதை அவனிடம் சொல்ல வில்லை. அவனுடன் இருப்பதை விட பீச்சா முக்கியம்?

இதற்கிடையில் தினகர் மீனா திருமணமும் நல்ல படியாக நடந்தேறியது. அதற்கு குடும்பத்துடன் சென்று வந்த செழியன் மனைவியை அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு சென்று விட்டான். 

போன முறை தவற விட்ட ஆசைகள் அனைத்தையும் இந்த முறை ஈடுகட்டும் வகையில் இருந்தது அவன் காதல். அதில் அவளுக்கு சந்தோசமே. 

அதன் பின் ஸ்கேன், வளைகாப்பு என்று நாட்கள் கழிய பிரசவ நேரத்திலும் அவளுடன் பக்க பலமாக இருந்தான். இருவரும் முதல் குழந்தை மகனாக இருக்க வேண்டும் என்று ஆசைப் பட அவர்கள் ஆசைப் படியே மகன் பிறந்தான். குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் வரை மாலினி அவளுடைய அம்மா வீட்டில் தான் இருந்தாள். தினமும் பகலில் குழந்தையையும் அவளையும் பார்க்க வரும் செழியன் இரவு மட்டும் வீட்டுக்கு சென்று விடுவான். சாரதாவை அவன் ஒரு நாளும் தனியே விட்டதில்லை. 

மகனுக்கு கடவுளின் நினைவாக ஆதி தேவ் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். பள்ளிப் படிப்பை முடித்திருந்த பாலா மருமகனைத் தூக்கிக் கொண்டே திரிந்தான். இரண்டு மாதங்கள் கழித்து மாலினி கணவன் வீட்டுக்கு சென்றாள். அவர்கள் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக சென்றது. அவர்களின் காதலும் துளி கூட குறைய வில்லை. 

……முற்றும்…..

Advertisement