Advertisement

“நம்ம பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிருச்சுன்னு நினைச்சு அந்த பையன் அந்த பொண்ணுக்கு சரின்னு சொல்லிருக்கலாம். இப்ப நம்ம பொண்ணுக்கு கல்யாணம் நின்னுருச்சுன்னு தெரிஞ்சா கண்டிப்பா அந்த பையன் மாலினியை விட்டு வேற பொண்ணை கல்யாணம் பண்ண மாட்டான்”

“என்னங்க சொல்றீங்க?”

“எனக்கு தோனினதைச் சொன்னேன். என்ன வேணும்னாலும் நடக்கலாம். பாக்கலாம், கடவுள் என்ன வச்சிருக்கார்னு. சரி பாப்பா கிட்ட அந்த அருணைப் பத்தி சொன்னியா?”

“இல்லைங்க, அதுக்குள்ள அவ கிளம்பிட்டா”

“சரி இப்ப போன் போட்டுச் சொல்லு. ஒரு வேளை இப்ப செழியன் அருணைப் பத்தி சொல்லும் போது மாலினியும் நம்பனும்ல?”

“சரிங்க”, என்று சொல்லி விட்டு மாலினியின் போனுக்கு அழைத்தாள். ஆனால் அதுவோ வீட்டுக்குள் அடித்தது. அவசரத்தில் போனை வீட்டில் வைத்து விட்டுச் சென்றிருந்தாள் மாலினி.

அலுவலகம் சென்ற மாலினியை வரவேற்றது செக்யூரிட்டி தான். அவளைக் கண்டதும் “என்ன மா கல்யாணப் பொண்ணு, என்ன இங்க வந்துருக்க? அதுவும் இன்னைக்கு?”, என்று கேட்டார்.

“சார் ஒரு பைல் கேட்டுருந்தாங்க அண்ணா. அதை எடுத்துக் கொடுக்க வந்தேன். அது காணலைன்னா வேற பைல் ரெடி பண்ணிக் கொடுக்கணும். அது முக்கியமான புராஜெக்ட். அதான் நானே அவசரமா கிளம்பி வந்தேன்”

“ஓ அப்படியா மா? முக்கியமான வேலை இருக்குறதுனால தான் சார் வந்துட்டாங்க போல? நீ உள்ள போ”

“சார் உள்ள தான் இருக்காங்களா அண்ணா?”

“ஆமா மா, சார் அப்பவே வந்துட்டாங்க”

“சரிண்ணா”, என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.

அவனுடைய அறைக் கதவை தட்டியதும் செழியனுடைய நாடி நரம்புகள் எல்லாம் பரபரத்தது. நிச்சயம் அவள் தான் என்று அவன் உள் மனது சொல்லியது. அப்போது அவனது போனுக்கு ஒரு மெஸ்ஸேஜ் வந்தது. அதை எடுத்துப் பார்க்கச் சொன்ன மூளையை அடக்கி விட்டு மனது சொல் படி “உள்ள வாங்க”, என்று அவளை அழைத்தான்.

உள்ளே வந்த மாலினி அவனைப் பார்த்ததும் திகைத்துப் போனாள். எப்போதுமே ஷேவ் செய்து நீட்டாக இருப்பவன் இப்போதோ பெரிய தாடியோடு இருந்தான். “இவனுக்கு என்ன ஆச்சு?”, என்று குழம்பினாள்.

கூடவே அப்போது கூட அழகாக இருக்கும் அவனை அவள் மனம் ரசிக்க தான் செய்தது. “ஏய், சும்மா இரு டி. உனக்கு நிச்சயம் ஆகிருச்சு”, என்று அவள் அடி மனம் எச்சரித்தது.

அதே நேரம் அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவளைக் காண்கையில்…. அவனுடைய நாடி நரம்பெல்லாம் உயிர்த்து முருக்கேறியது போல இருந்தது. அவளையே பார்த்த படி இருந்தான்.

அவள் அருகில் இருந்தால் மட்டும் இப்படி பட்ட உணர்வுகள் அவனுக்குள் கிளர்க்கிறது என்ற உண்மை இப்போது புரிந்தது. என்ன தான் அம்மாவுக்காக என்றாலும் மீனா அருகில் இருந்தால் இப்படி அவன் உணர்வதில்லையே. மாலினி மட்டுமே அவனை ஆணாக உணர வைத்துக் கொண்டிருந்தாள். ஆணுக்குரிய உணர்வுகள் அனைத்தும் அவளால் தான் மீட்டப் படுகிறது என்று உணர்ந்து கொண்டான்.

அவன் மனது அவளை ரசி டா என்று அவனைத் தூண்டியது. கண்களை இமைக்க கூட மறந்து அங்குலம் அங்குலமாக அவளை ரசித்துக் கொண்டிருந்தான் செழியன்.

அவள் தலையில் இருந்து ஆரம்பித்த அவன் பார்வை அவளுடைய நெற்றி.. கண்கள், மென்மையான இதழ்கள், கடைசியாக கழுத்தில் நிலைத்து பின் இறங்க ஆரம்பித்தது.

அவனுடைய பார்வையை எல்லாம் உணராமல் “பைல் கிடைச்சதா சார்?”, என்று கேட்டாள் மாலினி.

அவள் அப்படிக் கேட்டதும் அவன் கண்கள் டேபிள் மீதிருந்த பைலில் பதிந்தது. அவன் பார்வையைத் தொடர்ந்து அவளும் பார்க்க அங்கிருந்த பைலை அவளும் பார்த்தாள்.

“ஓ கிடைச்சிருச்சா? அப்படின்னா நான் வந்தது வேஸ்டா?”, என்று கேட்டாள் மாலினி.

“இந்த பைல் எங்கயும் காணாம போகலை மாலினி. நான் உன்னைப் பாக்கணும்னு தான் கூப்பிட்டேன்”, என்றான் செழியன்.

அவன் அப்படிச் சொன்னதும் அவன் சொன்ன விஷயமும் அவன் சொன்ன ஒருமை அழைப்பும் அவளை திகைப்புக்குள்ளாக்கியது.

“ஏன் இப்படி பண்ணினான்? இப்ப எதுக்கு என்னை இங்க வர வச்சான்? என்ன சொல்ல போறான்? மறுபடியும் காதலிக்கிறேன்னு சொல்லப் போறானா? அப்படிச் சொன்னா நான் என்ன பதில் சொல்ல? கடவுளே அப்பா இன்னைக்கு பத்திரிக்கை வாங்கிட்டு வந்திருப்பாங்க. இப்ப மறுபடியும் இவன் காதலைச் சொல்லி அதை  மறுக்குற மாதிரி சந்தர்ப்பத்தை உண்டாக்காதே”, என்று மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்டு “ஏன் சார் இப்படி பண்ணுனீங்க?”, என்று கேட்டாள்.

“முதல்ல இங்க வந்து உக்காரு”, என்று சொன்னதும் அவனுக்கு எதிரில் கிடந்த சேரில் அமர்ந்தாள்.

மற்றொரு சேரை அவன் அருகே இழுத்துப் போட்ட படி அதில் அமர்ந்த செழியன் “உனக்கு நடக்க இருக்குற கல்யாணத்தை நீ நிறுத்தணும் மாலினி”, என்றான்.

“சார் என்ன சொல்றீங்க?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள். அவன் வாயிலிருந்து இப்படி ஒரு விசயத்தை அவள் எதிர் பார்க்க வில்லை.

“பிளீஸ் நான் சொல்றதைக் கேளு மாலினி. இந்த கல்யாணம் உனக்கு வேண்டாம்”

“எதனால சார் அப்படிச் சொல்றீங்க?”

“அருண் அவ்வளவு நல்லவன் இல்லை மாலினி. அவன் உனக்கு எந்த விதத்துலயும் பொருத்தமா இருக்க மாட்டான்”

“சார், நீங்க என் கிட்ட காதலைச் சொன்னீங்க. நான் மறுத்ததும் நீங்க விலகிப் போனீங்க. அதனால உங்களை ஜெண்டில்மேன்னு நினைச்சேன். அந்த நினைப்பு அப்படியே இருக்கட்டும். தேவையில்லாதது எதையாவது பேசி அந்த பேரை கெடுத்துக்காதீங்க”

“எனக்கு உன் கிட்ட கிடைக்கிற நல்ல பேரை விட உன்னோட வாழ்க்கை முக்கியம் மாலினி”

“என் வாழ்க்கைக்கு என்ன? அது நல்லா தான் இருக்கும். அம்மா அப்பா பாத்த மாப்பிள்ளை. எனக்கும் பிடிச்சிருக்கு. இதுக்கு மேல என்ன வேணும்?”

“அவன் நல்லவனா இருக்க வேண்டாமா? அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்கு”

“நல்லா கதை கட்டுறீங்க சார்”

“நான் ஏன் உன் கிட்ட பொய் சொல்லணும்?”

“காரணம் இருக்கு. உங்களுக்கு நினைச்சதை அடையனும். அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவீங்க. நான் தான் பல தடவை பாத்துருக்கேனே? உங்க பிடிவாதம் எனக்கு தெரியும் சார். நீங்க காதலைச் சொன்ன பொண்ணு நான். அதனால நீங்க என் கல்யாணத்தை நிறுத்த இப்படிச் சொல்றீங்க”

“அது பிஸ்னஸ் மாலினி. ஆனா இது வாழ்க்கை”

“என் வாழ்க்கை மேல அக்கறை வச்சதுக்கு ரொம்ப நன்றி. நான் இப்ப கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு எழுந்தவள் வெளியே செல்ல ஒரு அடி நடந்தாள்.

“நில்லு மாலினி”, என்று சொன்னவனின் குரல் சற்று எரிச்சலோடு வெளி வந்தது.

“சார் பிளீஸ், இப்ப என் மனசு சரி இல்லை. நான் இப்ப போகணும்”, என்றாள். அவளால் செழியனின் நல்ல பெயர் குறைவதைத் தாங்க முடிய வில்லை.

“இதுக்கு ஒரு முடிவு தெரியாம உன்னை நான் போக விட மாட்டேன் மாலினி”

“என்ன சார் விளையாடுறீங்களா? என்னைத் தடுக்க நீங்க யார்? நான் போறேன்”, என்றவள் கதவு வரை சென்று விட்டாள். அவசரமாக அங்கே வந்த செழியன் அவளைப் போக விடாதவாறு அறைக் கதவை சாவியை வைத்துப் பூட்டி விட்டான்.

அவன் செய்கையை நம்ப முடியாமல் பார்த்தவள் “இப்ப உங்களுக்கு என்ன தான் வேணும்?”, என்று கேட்டாள்.

“எனக்கு முடிவு சொல்லிட்டு போ மாலினி”

“அதான் முடிவு சொல்லிட்டேனே. எங்க அப்பா அம்மா ஆசைப் பட்ட படி இந்த கல்யாணம் நடக்கும். அது தான் எனக்கு ஆசை”

“அந்த அருண் கெட்டவன் மாலினி”

“அவன் கெட்டவனாவே இருந்துட்டு போகட்டும். என் வாழ்க்கை அப்படி தான் இருக்கணும்னா இருந்துட்டு போகட்டும். நீங்க இதுல தலையிடாதீங்க”

“அப்படின்னா நான் சொன்னதை கேக்க மாட்ட?”

“கண்டிப்பா கேக்க மாட்டேன்”

“அப்படின்னா உன் வாழ்க்கையை காப்பாத்த எனக்கு இதை விட்டா வேற வழி தெரியலை டி”, என்ற படி அவளை நெருங்கினான்.

அவனுடைய டி என்ற அழைப்பு அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வைக் கிளப்பியது. அவனைக் குழப்பமாக பார்த்தவள் அவன் தன்னை நெருங்கி வரவும் பின்னால் நகர்ந்த படி “சார் வேண்டாம்”, என்று ஒரு விரல் நீட்டி மிரட்டினாள்.

“அவன் கெட்டவன்னு கிளிபிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்றேன். ஆனா நீ கேக்க மாட்டல்ல?”, என்ற படி அவளை நெருங்கினான்.

“என் வாழ்க்கையை காப்பாத்துறேன்னு சொல்லிட்டு நீங்களே அழிக்கப் பாக்குறீங்களே?”

“கண்டிப்பா உன்னோட வாழ்க்கை அழியாது மாலினி. உன் வாழ்க்கை என் கூட தான் அமையும்”

“நீங்க இப்ப என்னை ஏதாவது செஞ்சா நான் உங்களை கட்டிப்பேன்னு நினைக்கிறீங்களா? கண்டிப்பா மாட்டேன். நான் செத்து தான் போவேன் சார்”, என்றதும் ஒரு நொடி அதிர்ந்தான்.

தொடரும்….

Advertisement