Pothipparuvam
அத்தியாயம் - 23
மழை லேசாகத் தூறிக் கொண்டிருக்க, அதை உணராமல், அந்தப் பூங்காவில் இருந்த இருவருமே மற்றொருவரின் அருகாமையை உண்மையா? என்று அலசி, ஆராய்ந்து, சகல செல்களாலும் அதைச் சார்ந்த உணர்வுகளாலும் உணர முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
அவள் முகத்தைக் கைகளால் மூடி அமர்ந்திருந்த பவியின் எதிரில் கால்களை அகட்டி, கைகளைப் பேக்கெட்டில் விட்டபடி நின்று...
அத்தியாயம்-22-1
“ஜெய்..நீ கேக் சாப்பிடவே இல்லையே டா...கொஞ்சம் தான் மிஞ்சி இருக்கு..நீ எடுத்துக்கோ.” என்று சொல்லி, ஒரு பிளேட்டில் மீதமாகியிருந்த கேக்கை அவன் முன் கொண்டு வைத்தார் ருக்மிணி. அவன் முன் வைத்த அந்தக் கேக்கை உற்றுப் பார்த்து கொண்டிருந்த ஜெய்யை வினோதமாகப் பார்த்தனர் அனைவரும்.
“என்ன டா..எடுத்துச் சாப்பிடாம இத்துணுண்டு கேக்கை வேடிக்கை பார்த்திண்டு இருக்க..நன்னா...
அத்தியாயம் - 22
பர்த்டே பார்ட்டி ஆரம்பித்து அரைமணி நேரமாகியிருந்தது. அந்தப் பிளாக்கின் குழந்தைகளுக்கு நடுவில் பட்டுப் பாவாடை, தோடு, ஜிமிக்கி, வளையல் என்று வளைய வந்து கொண்டிருந்த பர்த் டே கேர்ள் ஸமிக்ஷாவிற்கும் சாதாரண நாட்களில் ஷார்ட்ஸில் சுற்றிக் கொண்டிருந்த ஸமிக்ஷாவிற்கும் சம்மந்தம் இல்லாமல் இருந்தது.
குழந்தைகளின் எண்ணிக்கையைச் சரி பார்த்து சந்தோஷமடைந்தவள்,“ருக்கு பாட்டி கேக்...
அத்தியாயம் - 21
“ஹலோ…கம்..கம்..வெல்கம்". என்று சொல்லி, அவள் வீட்டு கதவைத் திறந்த பவியின் எதிரில் மிஸஸ் ஸென், நிவேதிதாவுடன் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் அந்தப் பெண் குழந்தை.
பவியின் வீட்டு வரவேற்பறைக்குள் நுழைந்த மிஸஸ் ஸென்னிற்கு அங்கே இருந்த அத்தனை பொருட்களும் அதன் அவசியத்தை உணர்த்தின. எந்த வித படோபடமோ, அலங்காரமோ இல்லாமல் ஸிம்பிலாக...
அத்தியாயம் - 20
காற்றும் மழையும் வலுக்க, நல்லபடியாக வீடு போய்ச் சேர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், வாகன நெரிசலில் விழி பிதுங்கி கொண்டிருந்தது சென்னை.
ஒரு டிராஃபிக் சிக்னலில், பத்து நிமிடங்களாக ஊர்ந்து கொண்டிருந்த போது, காரில் ஏற்பட்டிருந்த மௌனத்தைக் கலைத்தார் ருக்மிணி.
“ஏண்ணா..ஆத்துக்குப் போய் சேர எத்தன் நாழி ஆகும்? என்று கேட்டார்.
“நேக்குத் தெரியாது...
அத்தியாயம் - 19
“அவன் ஒரு பேச்சுக்கு சொல்றான்..இனிமே நம்மாத்துக்கு எங்கே வரப் போறான்..கல்யாணத்துக்கு தான் இப்பவே நேர்லே கூப்பிட்டாச்சே.” என்றார் சுகந்தி.
அதற்கு, பட்டென்று,“வர வேண்டாம்..நிம்மதி.” என்றாள் பவி. அதற்கு பின் மௌனமானார் சுகந்தி. அப்போது பவியின் ஃபோன் அழைக்க, அழைப்பை ஏற்று,
“சொல்லு டா” என்றாள்.
“ஆமாம்..இன்னைக்கு இங்கே வந்திட்டுப் போனர்..பெங்களூர்ல தான்..சென்னைலே..நேக்கு விவரம் தெரியாது..அம்மாகிட்டே பேசிக்கோ.”...
அத்தியாயம் - 18
அந்த மாலை வேளையில் பாலகிருஷ்ணனோடு வாக்கிங் சென்றான் ஜெய்.
“என்ன டா? காலைலே மழைலே சைக்கிளிங் செய்ய முடியலேன்னு இப்ப என்கூட வந்திருக்கியா?’ என்று கேட்டார் பாலகிருஷ்ணன்.
“ஆமாம் ப்பா…தீபாவளிக்கு அப்புறம் இப்படி தான இருக்கு..காலம்பற மழை..மத்தியானம் வெய்யில்..இராத்திரி திரும்ப மழை.”
காலனியின் மெயின் கேட் வழியாக வெளியே சென்று சுற்று சுவரை ஒட்டி நடந்தனர்.
“இந்த...
அத்தியாயம் - 17
வாசலில் நின்டிருந்த மிஸஸ் ஸென்னிடம்,“பெரிய பிளேட்டா?” எதுக்கு?” என்று கேட்டார் ருக்மிணி.
“ரங்கோலி போட்டிக்கு.” என்றார் மிஸஸ் ஸென்.
“ஓ..இன்னைக்குதானே ரங்கோலி போட்டி..பிளேட்லே ரங்கோலி போடப் போறேளா?” என்று ஆச்சரியப்பட,
“ஆமாம், தரைலே போட எனக்கு உதவி தேவை..அப்புறம் போட்டி முடிஞ்ச பிறகு அதை கிளீன் செய்யணும்..அதான் நிவேதிதாதோட டீச்சர்கிட்டே சின்ன கோலமா டிசைன் கேட்டேன்..அவங்க...
அத்தியாயம் - 16
விஜயதசமி அன்று காலையில், வீட்டில் பூஜையை முடித்துக் கொண்டு கோவிலுக்குப் புறப்பட்டு சென்றனர் சுகந்தியும் பவியும். பூரி ஜகன்னாதரை தரிசித்த பின் அங்கேயிருந்து ஆட்டோ பிடித்து சற்று தொலைவில் இருந்த வைஷ்னோ தேவி கோவிலைச் சென்றடைந்தனர்.
நவராத்திரி காரணமாகக் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்க, அம்பாளைத் தரிசிக்க வரிசையில் நின்று கொண்டனர்.
“திருச்சிலே, நினைச்சா...
அத்தியாயம்-15-1
“லைவ் மியூஸிக், டான்ஸுன்னு ஹாலே அல்லோகலப் படறது.” என்று சொல்லிக் கொண்டே வாசல் கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்தார் ருக்மிணி. வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த கொலுவின் அலங்கார விளக்குகள் மட்டும் எரிந்து கொண்டிருந்தன. மற்றபடி வீட்டை இருள் சூழ்ந்திருந்தது.
“ஜெய்..ஜெய்..எங்கே டா இருக்க?” என்று அழைத்தபடி, அனைத்து விளக்குகளையும் உயிர்ப்பித்தபடி அவனறைக்குச் சென்றார் ருக்மிணி. அங்கே, பால்கனியில்...
அத்தியாயம் - 15
“என்ன டீ இவ்வளவு சத்தமா இருக்கு?’ என்று பவியிடம் கேட்டார் படுக்கையறையின் கட்டிலில் அமர்ந்திருந்த சுகந்தி.
“டாண்டியா நைட் இன்னைக்கு..அதான் மியூஸிக் சத்தமா கேட்கறது.” என்றாள் பவி.
“சென்னைக்கு எப்ப இதெல்லாம் வந்தது டீ?”
“வெளியூர் மனுஷா வரும் போது அவளோட கலாச்சாரத்தையும் அவா கூடவே கூட்டிண்டு வரா..நமக்கு பிடிச்சதை நாம டைட்டா பிடிச்சுக்கறோம்.” என்றாள்...
அத்தியாயம் - 14
“பவி க்கா, இந்த தடவை சாக்லெட்ஸ் எல்லாம் ரொம்பவே டெலிஷியஸ்.” என்று சொல்லி அவன் வாயில் இன்னொரு சாக்லெட்டைப் போட்டுக் கொண்டான் தீபக்.
“நீ லீவுலே வரப் போறேன்னு தினமும் இராத்திரி சாக்லெட் பண்ணியிருக்கா…ஃபிரிஜ் பூரா ஸ்டாக் செய்து வைச்சிருக்கா..விதவிதமான ஃபிளேவர், ஷேப்ஸ்..A2I2” என்றார் சுகந்தி.
“ A2I2 வா? அப்படின்னா என்ன ம்மா?”...
அத்தியாயம் - 13
அந்த இரவு வேளையில் பேஸ்மெண்ட்டில் காரைப் பார்க் செய்துவிட்டு, மூன்று பேரும் லிஃப்ட்டில் அவர்கள் தளத்தை அடைந்த போது எதிர் ஃபிளாட்டில் ஒரே ஆர்ப்பாட்டமாக இருந்தது.
“இன்னும் பார்ட்டி முடியலை போல ண்ணா.” என்றார் ருக்மிணி.
“தெரியலை டீ..மிஸஸ் ஸென் ஆறு மணிக்குன்னு சொன்னா..இப்ப மணி எட்டாயிடுத்து.” என்று பேசியபடி அவரது ஃபிளாட்டின்...
அத்தியாயம் - 12
“அவளோட அப்பா வேலை விஷயமா வெளியூருக்குப் போயிருக்கான்..அவ பர்த்டே அன்னைக்கு சாயந்திரமா தான் திரும்பி வரான்..அதான் மூட் சரியில்லே.” என்றார் நிவேதிதாவின் பாட்டி.
“நாளனைக்கு இவ பர்த் டே..கரெக்டா?” என்று கேட்டாள் பவி.
“ஆமாம்..அதுக்கு அடுத்த நாள் நாங்க எல்லாரும் துர்கா பூஜாக்கு ஊருக்குப் போகப் போறோம்..அதனாலே பர்த்டே பார்ட்டி எதுவும் அரென்ஜ் செய்ய...
அத்தியாயம் - 11
வாக்கிங் முடித்து வீட்டிற்குள் நுழைந்த தீபக்,“அக்கா, நேத்து மீட்டிங்கலே நடந்ததை ஓனருக்கு ஃபோன்லே சொல்லிட்டியா?” என்று காலை டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த பவியிடம் கேட்டான்.
“இன்னும் இல்லை டா..சாயந்திரமா தான் சொல்லணும்.” என்றாள்.
“நேத்து இவளோட ஸ்கூல் ஃபங்ஷன் முடிஞ்சு இவ ஆத்துக்கு வர்றத்துக்கு லேட்டாயிடுத்து..நல்லவேளை மீட்டிங் அட்டெண்ட் செய்ய நீ இருந்த..இல்லேன்னா நான்...
அத்தியாயம் - 10
அந்தக் காலை வேளையில் டிஃபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெய்யை நிம்மதியாக சாப்பிட விடவில்லை ருக்மிணி. நேர்காணலுக்கு வந்திருந்த விண்ணப்பதாரர் போல் அவனைக் கேள்விகளால் தாக்கிக் கொண்டிருந்தார்.
“என்ன டா ஒரு நாளை போல காலம்பற விடியறத்துக்கு முன்னாடி சைக்கிள்ள கிளம்பினா சூர்யோதயம் ஆன அப்புறம் ஆத்துக்கு வர..இன்னைக்காவது சீக்கிரமா வந்திருக்கலாமே..உன்கிட்டே பேசணும்னு காத்திண்டு...
அத்தியாயம் - 9
அவர்கள் கீழே சென்ற போது நிறைய பேர் இரவு நேர வாக்கிங் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பிளாக் எதிரே இருந்த பூங்காவைத் தவிர்த்து விட்டு குடியிருப்புப் பகுதி முழுவதையும் ஒருமுறை வலம் வந்தனர் அம்மா, பெண் இருவரும்.
அன்று தான் அந்தக் குடியிருப்பின் அமைப்பையும் அதன் பிரம்மாண்டத்தையும் முதல் முறையாகப் பார்க்கிறார் சுகந்தி. ...
அத்தியாயம் - 8
வாசல் அழைப்பு மணி விடாமல் அழைக்க, டி ஷர்ட், ஷார்ட்ஸில் இருந்த ஜெய் கதவைத் திறந்தான். வெளியே அவர்கள் எதிர் ஃபிளாட்டில் குடியிருந்த ஆன்ட்டியும் அவருடைய பேத்தியும் நின்று கொண்டிருந்தனர். முந்தைய இரவு உடுத்தியிருந்த பைஜாமாவில், கையில் ஒரு டெட்டி பொம்மையைப் பற்றியபடி அந்தக் குழந்தையும், அந்தக் குழந்தையின் மற்றொரு கையைப்...
அத்தியாயம் - 7
“கடைக்கு எதுக்கு போற? உங்காத்துலே காத்து அடிக்கற பம்பு இருக்குல்ல..நீயே அடிச்சுக்கலாமே.” என்றான் ஜெய்.
“நான் தான் அடிச்சிண்டு இருந்தேன்.. ஆனா இப்பெல்லாம் வெளியே வரண்டாவுல நின்னு காத்தடிச்சா எங்கம்மா என்னைத் திட்டறா..காத்தடிகணும்னா ஆத்துள்ள சைக்கிளைக் கொண்டு வரச் சொல்றா..அதுக்கு முதல்லே நான் அதைக் குளிப்பாட்டணும்..
நீயே சொல்லு ஜெய் என்ன நியாயம் இது..ரோட்லே...
அத்தியாயம் - 6
அந்த விடியற்காலை வேளையில் அவனுடைய மரிடா சைக்கிளில் அவர்கள் குடியிருப்பை வலம் வந்து கொண்டிருந்தான் ஜெய். அவன் பைக்கின் வேகத்தைப் பார்த்து, நடை பழக வந்திருந்த பலர் சில நிமிடங்கள் நின்று வேடிக்கை பார்த்தனர். தலைக்கவசத்துடன் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்த வித்தியாசப் பார்வைகளுக்குப் பழகிப் போயிருந்தான் ஜெய்.
அதே அதிகாலை வேளையில்,...