ஜெய் சொன்னதைக் கேட்டவுடன் பவிக்கு இருமல் வர, உடனே அவனருகிலிருந்த டம்பளரை மறுபடியும் எடுத்துக் கொடுத்தான் ஜெய்.அவன் கொடுத்த தண்ணீரைக் குடித்த பவி,”போதும் ண்ணா..ரொம்ப ஓவரா போறேள்..இதைக் கட்டிக்கவே அம்மா உதவி தேவைப்பட்டது..மடிசாரைக் கட்டி விடுங்கோன்னு இராத்திரி அம்மா எதிர்லே போய்நிக்க சொல்றேளா?” என்று பொறுக்க முடியாமல் கேட்க,
“நிக்கெல்லாம் வேண்டாம்..நான் சொன்னேன்னு சொல்லு..அம்மா உடனே கட்டி விட்டுடிடுவா.” என்றான் மிரூத்யுஞ்ஜெய்.
‘இதென்னடா கண்ணராவி.’ என்று பவி நினைக்க, அதை அவளது முகபாவனையில் படித்த ஜெய்,
“நாட் கண்ணராவி மை ஐ கெண்டி (eye candy).” என்று சொல்லி பவியைப் பார்த்துக் கண்சிமிட்டினான்.
அவள் மனத்தில் நினைப்பதெல்லாம் ஜெய்க்கு எப்படித் தெரிய வருகிறதென்ற அதிர்ச்சியில், மறுபடியும் பவி இரும, அவர்களுக்குள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த ருக்மிணி, ஜெய்யினால்தான் பவிக்கு சிரமம் ஏற்படுகிறதென்று புரிந்து கொண்டு,
“ஜெய்..நாழி ஆகறது..சீக்கிரமாச் சாப்பிடு..புறப்படணும்.” என்று அவனை விரட்டினார்.
“நோக்கு ஒரு வேலை ம்மா..ஆத்துக்குப் போன அப்புறம் சொல்றேன்” என்று ருக்மிணிக்குத் தெரிவித்தவன், “அப்படியே நோக்கும் ஒரு வேலை பவி..உன்னோட மெயில் அட்ரெஸ்ஸை என்னோட ஷேர் பண்ணு.” என்று பவியிடம் கிசுகிசுத்தான்.
“என்ன சொல்லணுமோ என்கிட்டே நேரடியா சொல்லுங்கோ..மெயில் எதுக்கு?” என்று பவி கேட்க,
“இதை மெயில்லேதான் சொல்ல முடியும்…அட்ரெஸ் ஷேர் பண்ணு.” என்று பவிக்கு ஆர்டர் போட்டான் ஜெய்.
கல்யாண மண்டபத்திலிருந்து அவர்கள் அனைவரும் வீடு வந்து சேர்ந்த போது, இந்தமுறை, ஆர்த்தி கரைத்து ஜெய்யையும் பவியையும் ஆத்துக்குள் அழைத்தார் ருக்மிணி.
வீடு ழுழுவதும் கல்யாணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களால் நிரம்பியிருந்தது.மாலை ஐந்து மணி போல், சிரமப்பட்டு, பவியையும் ஜெய்யையும் கீதுவின் குடும்பத்துடன் வைஷ்ணோ தேவி கோவிலுக்குப் அனுப்பி வைத்தார் ருக்மிணி.
“இப்பவே எதுக்கு ம்மா? இன்னைக்கு நைட்டே கீது அவாத்துக்கு வேற போகணும்..இன்னொரு நாள் நாம எல்லாரும் சேர்ந்து கோவிலுக்கு போகலாமே.” என்று ஜெய் மறுக்க,
“அதைவிட வேற வேலை என்ன டா காத்திண்டிருக்கு நோக்கு? நாளைக்கு கூடுகட்டி ஸ்கூலுக்குப் போகணும்..,அவளே சமத்தா பாட்டி சொன்னதைக் கேட்கறா..நீயும் சமத்தா எல்லாரையும் அழைச்சிண்டு கோவிலுக்கு போய் அம்பாள் பெயருக்கு அர்ச்சனை பண்ணிட்டூ ஆத்துக்கு வா.” என்று அவனுக்குக் கட்டளையிட்டார்.
“நேக்கு மெயில்ஸ் அனுப்பனும் ம்மா..அதோட டைமிங் முக்கியம் ம்மா.” என்று ஜெய் அடம்பிடித்தவுடன்,
“கல்யாணத்தனைக்கு யாருக்கு டா மெயில்ஸ்? மெயில் அனுப்ப முகூர்த்தம் பார்க்கறவன் நீ ஒருத்தன் தான் டா.” என்று ருக்மிணி ஆரம்பித்தவுடன்,
“ஸ்டாப்…நான் இப்பவே கோவில் போறேன்..போதுமா? என்று ருக்மிணியிடம் சரணடைந்தான் ஜெய்.
அதைக் கண்டு கொள்ளாமல்,“உடனே கிளம்பினாதான் டிராஃபிக்லே மாட்டாம சீக்கிரம் திரும்பி வர முடியும்..இராத்திரி சாப்பாடு வெளிலே சொல்லியிருக்கு..அதை எடுத்திண்டு வர தீபக்கும் அப்பாவும் போகணும்.. அவா சாப்பாடோட திரும்பி வர்றத்துகுள்ளே நீகோவில் போயிட்டு வந்துடணும்..நம்ம சொந்தக்காராளுக்கு, பவியோட மாமா, மாமி அவா மாப்பிள்ளைகள்னு எல்லாருக்கும் அவா அவா சௌகர்யபடி டின்னர், பட்சணம் பேக் பண்ணனும்..கீதுக்கு பட்சணமெல்லாம் தனியா எடுத்து வைக்கணும்..ஏகபட்ட வேலை கிடக்கு..புறப்படாம பேசிண்டிருக்கான்.” என்று பொரிந்தார் ருக்மிணி.
“ருக்கு பாட்டி, மறக்காம பவி மாமியோட சாக்லெட்டையும் சேர்த்து பேக் பண்ணிடுங்கோ.” என்று சமத்து ஸமிக்ஷா அவள் சாமர்த்திய ஸமிக்ஷா என்று நிரூபித்தாள்.
அதைக் கேட்டு,“எல்லாரும் அவா அவா காரியத்துலே கருத்தா இருங்கோ.” என்றார் ருக்மிணி.
உடனே,“ருக்கூ டார்லிங், நான் சொன்னேனே அந்த வேலை..” என்று ஜெய் கொஞ்சலாக ஆரம்பிக்க,
“மிரூத்யுஞ்ஜெய்.” என்று குரலை ருக்மிணி உயர்த்த,
“கிளம்பறேன்.” என்று பதில் அளித்தான் ஜெய்.
ஸமிக்ஷா, கீதுவுடன் ருக்மிணியின் படுக்கையறையில் அமர்ந்திருந்தபடி அவளது கைப்பேசியைப் பார்த்து கொண்டிருந்த பவிக்கு, ஜெய் சொன்ன அந்த வேலை என்னவென்று புரிந்தவுடன் அவள் மனம் அவர்கள் இருவருக்குமிடையே நடந்த அந்த உரையாடலில் போய் நின்று கொண்டது. அப்போது,
”ஜெய்யோடது என்ன வேலை ம்மா? இன்னைக்குப் போய் எதுக்கு அவனைக் கோவிச்சுக்கற? நோக்கு முடியலேன்னா அந்த வேலையை நான் பண்ணிக் கொடுக்கறேனே.” என்று அன்பு மகளாக, அக்கறையான அக்காவாக உதவிக்கரம் நீட்டினாள் கீது.
உடனே பவியும் ருக்மிணியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அப்போது ருக்மிணியின் கண்களில் தெரிந்த கோபத்தைக் கண்டு கலவரமானாள் பவி.
“கீது, நாளைக்கு குழந்தைக்கு ஸ்கூலை வைச்சிண்டு இராத்திரி வரை நீ நம்மாத்துலே இருக்கறதே நேக்குப் பெரிய உதவிதான்..ஜெய் வேலையைப் பார்க்க தான் இப்ப பவி வந்துட்டாளே.” என்றார் ருக்மிணி.
அதன்பின் ஒரு நிமிஷமும் இளைப்பாற முடியாமல், கல்யாணத்திற்கு வந்திருந்தவர்களைத் திருப்தியாகக் கவனித்து, கீதுவின் மாமியார் மனம் கோணாமல் அவருக்கென்று தனியாக பருப்புத் தேங்காயிலிருந்து பட்சணம் வரை ஸ்பெஷலாக பேக் செய்து கொடுத்து, அனைவரையும் அனுப்பி வைத்து, களைப்பினால் கால் நீட்டி அமர ருக்மிணி நினைத்த போது, அவளின் காட்டன் மடிசார் புடவையுடன் அவரின் முன் போய் நின்றாள் பவி.
“வா..அவன்கிட்டே போய் எதுக்கு ஒன் க்நாட்டுன்னு சொன்ன?” என்று கோபத்துடன் கேட்டார் ருக்மிணி.
“நீங்க திரும்ப கட்டிவிட்டது ரொம்ப டைட்டாயிடுத்து ம்மா..என்னாலே சரியாச் சாப்பிட முடியலே..லூஸ் பண்ணிக்கோன்னு அவர் சொன்னார்..முடியாதுன்னு சொன்னேன்..ஏன்னு காரணம் தெரியணும்னு பிடிவாதமா இருந்தார்..ஒன் க்நாட்டை (one knot) தொட்டா என்ன ஆகும்னு கேட்டு அவருக்குப் புரிய வைச்சேன்.” என்று விளக்கிய பவிக்கு அவள் மனசை ஜெய் படம்பிடித்தை ருக்மிணியிடம் பகிர்ந்து கொள்ளத் தயக்கமாக இருந்தது.
“உண்மையா ஒன் க்நாட்டான்னு கன்ஃபர்ம் பண்ணிண்டு..நோக்கு கட்டி விட்டாதான் ஆச்சுன்னு ஒரே பிடிவாதம்…எதுக்குடான்னு கேட்டா, ‘ஃபன் வித் ஜீரோ அண்ட் ஒன் (fun with zero and one)’…நோக்குப் புரியாதுன்னு சொல்றான்..
நல்லவேளை இந்தச் சம்பிரதாயமெல்லாம் நம்மாத்தோட நடக்கறது..இல்லாட்டாலும் அவன் சொல்றதை நான் கேட்டுதான் ஆகணும்..கேட்காட்டா நான் மனசுலே நினைக்கறதையெல்லாம் சொல்லி என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவான்.” என்று புலம்பினார் ருக்மிணி.
மற்றவர்களின் மனtதைப் படிக்கும் ஜெய்யின் மேஜிக் பற்றி அறியும் ஆவலில்,”எப்படி ம்மா மனசுலே இருக்கறதைப் படிக்கறர்?” என்று கேட்க,
“அதுதான் பாட்டுன்னு சொன்னேனே…அவனோட B2I2 வைச்சு அவன் AI செய்யற வேலையைதான் பாட்டுன்னு சொல்றான்..அவன் இந்தியா வந்து இறங்கினதுலேர்ந்து பிரேக்கேயில்லாம அவனோட பாட் பயிற்சியை என்னை வைச்சு பண்ணிண்டு இருக்கான்.” என்றார் ருக்மிணி.
அவளுக்குத் தெரிந்தது A2I2 தான். அதென்ன புதுசா ‘AI’ என்று மேலும் ஆர்வமானாள் பவி.
அவள் கேட்காமலேயே அவளுக்குப் புடவையைக் கட்டி விட்டபடி பேச்சைத் தொடர்ந்தார் ருக்மிணி.”அவனோட பிளெஸ்ட் இண்டலிஜன்ஸ், பிளெஸ்ட் இண்டியுஷன் இரண்டும் சேர்ந்து அவனோட ஆர்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ் ஆகறது..அதை வைச்சு என் மனசைப் படிக்கறேன்னு அவன் நேக்குப் பைத்தியம் பிடிக்க வைக்கறான்.” என்றார்.
“நிஜமாவா ம்மா?” என்று பவி கேட்க,
“நிஜம் தான்..ஜெய் நிறுத்திக்கோடான்னா, கேட்க மாட்டேங்கறான்..அவனோட ஆராய்ச்சிலே நான் ஃபன் பார்ட்னு சொல்றன்..நம்மளோட மனசுல ஒரு நொடிலே எத்தனையோ கோடி எண்ணங்கள்..அதையெல்லாம் கட்டுப்படுத்திக்க நான் என்ன ஞானப் பிறவியா? ஆர்டினரி ருக்மிணி..
என் முகத்தைப் பார்த்து அவன் எதையாவது சொல்லிடப் போறான்னு அதை மூடிண்டா ஆத்து உள்ள சுத்த முடியும்? இல்லை ஒவ்வொரு வார்த்தையையும் யோசிச்சு யோசிச்சா பேச முடியும்? ஆத்துக்கு வரவா போறவா, பால்காரன், இஸ்திரிக்காரன், நிவேதிதா பாட்டின்னு எல்லார் மனசையும் தப்பில்லாம படிச்சு ஸையன்ஸ் பாட், ஸொஷியல் பாட்டுன்னு என்னைப் பாடா படுத்தறான்.” என்றார்.
அன்றைய மதிய உணவு நேரத்தில் அவள் மனதைப் படித்து, ஜெய் அவளைப் படுத்திய பாட்டை நினைத்து பார்த்தவளுக்கு, நான்கு மாதமாக அவனின் பாட்டுடன் ருக்மிணி படும் பாட்டை கேட்டு அவர் மேல் பவிக்கு பரிதாபம் ஏற்பட்டது.
உடனே,”பாவம் ம்மா நீங்க..எப்படி ம்மா அவரை சமாளிக்கறேள்?” என்றாள் பவி.
ஏற்கனவே அவனுக்குப் பிடிவாதம் ஜாஸ்தி…பிறவிக்குணம்…இப்ப அந்தப் பிறவிக்குணத்தோட பாட்டும் சேர்ந்திண்டிருக்கு…உன்னைக் கண்டுப்பிடிக்கணும்னு ரொம்ப பிடிவாதமா இருந்தான்..நீ இந்தாத்து மாட்டுப் பொண் ஆனதுக்கு அவன் AIயும் காரணம்…
அன்னைக்கு, உங்காத்துலே அவன் வாயே திறக்ககூடாதுன்னு நான் சொல்லியிருந்தேன்.. அதுதான் நான் சொன்னதை அவன் முதல் தடவையா கேட்டுண்டது.. அவன் எதுவுமே பேசாம சமத்தா இருந்ததுக்கு அவன் பாட்டுக்குதான் தாங்க்ஸ் சொல்லணும்..அது மட்டும் நடந்திருக்காட்டா அவன் அடுத்தாத்து ஜெய்யாதான் இருந்திருப்பான் உன் ஆத்துக்காரன் ஜெய்யா மாறியிருக்க மாட்டான்..நல்லவேளை நான் எதிர்பார்த்ததைவிட எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சுது..
உங்க கல்யாணத்தை சீக்கிரமா நடத்தணும்னு கிடைச்ச மண்டபத்திலே கல்யாணத்தை பண்ண வேண்டியதா போச்சு.. முழுசா ஒரு நாள் கூட மண்டபத்திலே இருக்கலே.. ஒரு சம்பிரதாயமும் சரியாப் பண்ண முடியலே…முகூர்த்தத்தை முடிச்சிண்டு நேரா ஆத்துக்கு வந்தாச்சு..நலங்குக்கு வாங்கின புடவையையாவது கோவிலுக்குக் கட்டிண்டு போனே..இப்ப சாந்தி முகூர்த்தப் புடவையை எப்ப கட்டிப்பியோ..
எதை நினைச்சு என்ன பண்றான்னு ஜெய்க்கு மட்டும்தான் தெரியும்…கல்யாணப் பர்சேஸ்லே புது சைக்கிள் வாங்கியிருக்கு..நம்மாத்துலே ஏற்கனவே கார், அப்பாவோட பழைய ஸுகூட்டி, இவனோட சைக்கிள் இருக்கு..எதுக்குடா இன்னொரு சைக்கிள்னு கேட்டா? வேற டயருக்காகப் புது சைக்கிள் வாங்கினேங்கறான்….ஒரு சைக்கிள் இருக்கும்போதே சனி, ஞாயிறு ஆத்துலே இருந்ததில்லே..இப்ப இரண்டு சைக்கிள்ளை வைச்சிண்டு என்ன பண்ணப் போறானோ?…எல்லார் மனசையும் அவன் படிக்கற மாதிரி, அவன் மனசை யாராவது படிச்சா தேவலே.” என்றார் ருக்மிணி.
ருக்மிணி சொன்னதைக் கேட்டு கொண்டிருந்த பவிக்கு ஜெய்யின்மடிசார் புடவை கோரிக்கையும் புது சைக்கிள் பர்சேஸும் கல்யாண சடங்குகளுக்கும் சாமான்களுக்கும் பொருந்தி வராமல் குழப்பத்தை ஏற்படுத்தின.
பவிக்கு மடிசாரைக் கட்டி முடித்தவுடன் அவளைப்பூஜை அறைக்கு அழைத்துச் சென்ற ருக்மிணி,”பகவானை வேண்டிக்கோ..இன்னைலேர்ந்து உன் பாடு..அவன் பாடு.” என்றார்.
பூஜையறையிலிருந்த சகல தெய்வங்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு ஜெய்யின் அறைக்குள் நுழைந்தாள் பவி.
“வா..வா வ்…வா வ்” என்று ஆர்வத்துடன் அவளை வரவேற்றான் ஜெய்.அவளுடையை முகபாவனையைக் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள் பவி.ஆனால், அவள் அவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கவில்லை. ஏனென்றால் பவியின் முகத்தைத் தவிர முழுமையாக அவளைப் பார்த்து கொண்டிருந்தான் ஜெய்.அவளது கடின முயற்சியைக் கைவிட்டு விட்டு அவனருகே படுக்கையில் அமர்ந்து கொண்டாள் பவி.
“பிராப்ளம் செய்யாம அம்மா புடவையைக் கட்டி விட்டாளா?” என்று அவன் கேட்க,
“கட்டி விட்டா..அதே சமயம் யார் பிராப்ளம்னு நேக்கு சொன்னா.” என்றாள்.
“யாரு?”
“நீங்க தான்.”
“நானா..சிவனேனு ஆத்து உள்ளேயே இருக்கேன்..அதான் நீ பக்கத்துலேயே இருந்தும் என் பார்வைலே படலே.” என்றான் ஜெய்.
“ஆத்து உள்ள இருந்திண்டே அம்மாவோட முகத்தைப் பார்த்து மனசைப் படிக்கறது, ஆத்துக்கு வர்றவா போறவா மனசைப் படிக்கறது..இதெல்லாம் சிவனேன்னு இருக்கற ஆள் செய்யற வேலையா? முகத்தைப் பார்த்துதான் மனசைப் படிக்க முடியுமா?பக்கத்து பில்டிங்லேர்ந்து வந்தகொழுக்கட்டை பிரசாதத்தைப் பார்த்தவுடனே அது பவி பண்ணினதுன்னு கண்டுப்பிடிக்க முடியதா?” என்று படபடவென்று பேசி முடித்தாள் பவி.
“அம்மாவோட பேசிண்டிருந்தியா? அதான் லேட்டா?” என்று நிதானமாகக் கேட்டான் ஜெய்.
“நீங்க இங்கே சிவனேன்னு இருந்த நேரத்திலே நான் இதை சுத்திண்டு இருந்தேன்..அதான் உங்களுக்கு லேட்டா, நேக்கு சீக்கிரமா வந்த மாதிரி தெரியறது.”
“கரெக்ட் அப்ஸர்வேஷன் (observation)” என்றான் ஜெய்.
“என்னோட யோசனையெல்லாம் சரியாதான் இருக்கு.. விநாயகர் சதுர்த்தி அன்னைக்குப் பிள்ளையார்கிட்டே உங்களைக் கண்ணுலே காட்டி கொடுக்க சொல்லி நான் ஸ்பெஷலா வேண்டிண்டேன் அதான் நீங்க என் கண்ணுலே பட்டேள்.” என்றாள் பவி.
“பகவானுக்கு ஒரே ஒரு டாட் (dot) போதும்…டேட்டா வேண்டாம்..என்னோட டாட் ‘ஜெய்’..அந்தப் புள்ளியை வைச்சு எல்லாத்தையும் நடத்திக் கொடுத்திட்டர்…
என்னோட கொழுக்கட்டை, கேக், சாக்லெட், ரங்கோலி தாலி எதுவுமே ஒரு பொட்டுகூட அது நான் தான்னு உங்களுக்குச் சொல்லலே..நானா இருக்கலாம்னு கூட சொல்லலே..என்னைப் போலேன்னு கூட சொல்லலே..அத்தனை டேட்டாவையும் என்னதான் பண்ணித்து உங்க பாட்?” என்று ஆதங்கத்துடன் கேட்டாள் பவி.
“சொன்னா..B2I2, AI எல்லாம் சொன்னா..எல்லாத்தையும் சொன்னா.” என்றாள் பவி.
“பவி, உன்னோட கொழுக்கட்டை, கேக், சாக்லெட், நிவேதிதாவோட ஒவ்வொரு ஆக்டிவிட்டியும் பார்த்து நேக்கு A2I2ந்னு தோணித்து..ஆனா கேபிட்டல் A2I2நு தோணினது ஸமிக்ஷா பிறந்தா நாள் போது தான்..
ஹவிங் தட் பீஸ் ஆஃப் கேக் ; வாஸ் நாட் எ பீஸ் ஆஃப் கேக் (having that piece of cake ; was not a piece of cake)..அதுக்கு அப்புறம் எது என்னை ‘D’ பிளாக்கிற்கு அழைச்சிண்டு போச்சுன்னு ஐயாம் ஸ்டில் டிரையிங் டு ஃபாதம் (I’m still trying to fathom)..என்னோட B2I2க்கு அப்பாற்பட்டு இருந்தது..ஸம்திங் ஃபினாமினல் (phenomenal).” என்றான் ஜெய்.