“பவி க்கா, இந்த தடவை சாக்லெட்ஸ் எல்லாம் ரொம்பவே டெலிஷியஸ்.” என்று சொல்லி அவன் வாயில் இன்னொரு சாக்லெட்டைப் போட்டுக் கொண்டான் தீபக்.
“நீ லீவுலே வரப் போறேன்னு தினமும் இராத்திரி சாக்லெட் பண்ணியிருக்கா…ஃபிரிஜ் பூரா ஸ்டாக் செய்து வைச்சிருக்கா..விதவிதமான ஃபிளேவர், ஷேப்ஸ்..A2I2” என்றார் சுகந்தி.
“ A2I2 வா? அப்படின்னா என்ன ம்மா?” என்று தீபக் கேட்க,
“உன் அக்காவைக் கேளு..எல்லாத்துக்கும் A2I2 தான் அவளுக்கு..இந்தப் புது ஸ்கூல்லே அதை ஃபாலோ செய்து தான் சின்ன குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கறா.” என்றார் சுகந்தி.
உடனே,“திருச்சிலே அந்த ஃபிரிடம் இருக்கலை டா..இந்த பள்ளிக்கூடத்திலே டீச்சர்ஸுக்கு நிறைய ஃபிரிடம் இருக்கு..அதனாலே என்னோட கிளாஸ் குழந்தைகளுக்கு இண்ட்ரெஸ்டிங்கா எப்படி எல்லாத்தையும் கத்துக் கொடுக்கறதுன்னு யோசிச்சிண்டு இருப்பேன்..இப்ப வவ்வள்ஸோட சவுண்ட்ஸ் கத்துக் கொடுக்கறேன்..பிளாஸ்டிக் ஆல்ஃப்ட்ஸ் வைச்சு என்னோட கிளாஸ்லே இருக்கற இரண்டு குழந்தைகள்பெயர்,அஜய், விஜய் அதை ஃபார்ம் செய்ய கத்துக் கொடுத்தேன்..ஒருத்தனுக்கு “ஐ”, இன்னொருத்தனுக்கு “ஒய்” வருது கடைசிலே..ஸோ “ஒய்”கூட போடலாம் “ஐ” இடத்திலேன்னு குழந்தைகள் புரிஞ்சுண்டா.” என்று விளக்கினாள் பவி.
“வாவ்..எப்படி க்கா ஒரு பெயரை வைச்சு இப்படி யோசனை செய்யற?” என்று வியப்பாகக் கேட்டான் தீபக்.
அந்த இரண்டு பேர் பெயர்லேயும் இருக்கற ஒருத்தன் தான் இப்படி யோசிக்க கத்துக் கொடுத்தான் என்று மனத்தில் நினைத்துக் கொண்ட பவி,”அதுக்கு பெயர்தான் A2I2.” என்றாள்.
“நர்ஸரி குழந்தைகளுக்கு இதெல்லாம் ஞாபகம் வைச்சுக்க முடியுமா?” என்று சந்தேகமாகக் கேட்டான் தீபக்.
“அவாளுக்கு போர் அடிக்காம ரிபீட் பண்ணிண்டே இருக்கணும்..அப்பதான் மனசுலே பதியும்..இப்ப அதையே சாக்லெட் ஆல்ஃபட்ஸ்வைச்சு சொல்லிக் கொடுக்கப் போறேன்..அந்த சாக்லெட்டை அப்படியே அந்தக் குழந்தைக்கு கொடுக்கலாம்னு இருக்கேன்.” என்று சொன்ன பவி அறிந்திருக்கவில்லை அவளின் ஸ்டுடெண்ட் அவளின் அந்த ஐடியாவை ஏற்கனவே செயல்படுத்தி, அவளின் இன்ஸ்பிரெஷனுக்கு அவன் பெயரை சாக்லெட்டில் அமைத்துக் காட்டி அவனைக் கவர்ந்து விட்டாளென்று.
“சாக்லெட் கொடுத்து பல்லைக் கெடுக்கறேன்னு உன்னைப் பற்றி பேரண்ட்ஸ் கம்ப்ளெய்ண்ட் செய்வாளே.” என்றான் தீபக்.
“உனக்காக சாக்லெட் செய்யும் போதுதான் இந்த ஐடியா வந்தது..ஆல்ஃபட்ஸ் சாக்லெட் மொல்ட் அதுக்கு தான் வாங்கிண்டு வந்தேன்..பேர்ண்ட்ஸ் கம்ப்ளெய்ண்ட் பண்ணினா ஸ்டாப் பண்ணிட வேண்டியது தான்..அவா சொல்றதை இக்னோர் செய்ய முடியாது..குழந்தைகள் ஹெல்த் முக்கியம்.” என்றாள் பவி.
“வாரத்திலே ஒரு நாள் இந்த மாதிரி டிரை பண்ணு..எல்லா குழந்தைகளுக்கும் சாக்லெட், கேக்னா ரொம்ப பிடிக்கும்..நேத்து பர்த்டே பார்ட்டிலே குழந்தைகள் எல்லாரும் ஆசையா கேக்குக்காக வெயிட் பண்ணிண்டு இருந்தா..கேக்கையும் சாக்லெட்டையும் பார்த்து நிவேதிதாவுக்கு ஒரே சந்தோஷம்..ஆனா பார்ட்டிதான் டயத்துக்கு ஆரம்பிக்கலை..நான் போன போது அவளோட அப்பா ஊர்லேர்ந்து வந்திருக்கலே..என்னையும் கேக் கட்டிங் வரை வெயிட் பண்ண சொன்னா, நான் தான் கொஞ்ச நாழி இருந்துட்டு புறப்பட்டு வந்துட்டேன்,” என்றான் தீபக்.
“தாங்க்ஸ் டெலிவரி பாய்..நீ இருந்ததுனாலே உன் கைலே எல்லாத்தையும் கொடுத்து விட்டேன் இல்லைன்னா அவா பாட்டிதான் வந்து எடுத்திண்டு போயிருப்பா.” என்றாள் பவி.
“நோ பிராப்ளம்..அந்த ஸைட் போக ஆபர்சூனிட்டி கிடைச்சது..”A” பிளாக் ஃபிளாட்ஸ் பெரிசு..எல்லா ரூமுக்கும் பால்கனி இருக்கு..அவாளும் பதினைஞ்சாவது மாடி தான்.” என்றான் தீபக்.
“அவர் காலம்பற சூர்யோதயம் வரைக்கும் சுத்திண்டு இருக்கர்…நோக்குதான் பால்கனிக்கு வரவே பயமா இருக்கே எங்கேயிருந்து நீ பார்க்க முடியும்?” என்ற பவியின் பதிலில் பால்கனி பயத்தைப் பற்றி பேச்சு வந்தவுடன்,
“நீ தினமும் ஸ்லோகமெல்லாம் சொல்றயேடா..ஹாஸ்டல் போனதுலேர்ந்து நீ என்ன பண்ணிண்டு இருக்கேன்னு நேக்குத் தெரியவே மாட்டேங்கறது.” என்று பேச்சை மாற்றினார் சுகந்தி.
“காஷுவல்னு சொல்லிண்டு அடுத்த தடவை நீ வேற ஹேர் ஸ்டைலோட ஆத்துக்கு வந்தேன்னா உன்னை அடையாளம் தெரியலேன்னு அம்மா ஆத்து உள்ளையே விட மாட்டா.” என்று சிரித்து கொண்டே சொன்னாள் பவி.
“நான் பெத்த புள்ளையை நேக்கு அடையாளம் தெரியாதா..நேக்கு எல்லாரையும் அடையாளம் தெரியும்..இப்ப பார்த்தாகூட டவுன்ஷிப்லே நம்மளோட இருந்த அத்தனை பேரையும் நான் அடையாளம் கண்டு பிடிப்பேன்..நோக்குதான் ஜெய்யை அடையாளம் தெரியாதுன்னு சொல்லிட்ட.” என்றார் சுகந்தி.
“மொத்தமா தெரியாதுன்னு சொன்னேனா..அவன் மூஞ்சியும் பத்து வருத்திலே மாறிப் போயிருக்கும்..பக்கத்துலே பார்த்தாகூட அவனா என்கிட்டே வந்து பேசினாதான் நேக்கும் டவுட் வரமா அவன் தான்னு கண்டிப்பா சொல்ல முடியும்..நானா யார்கிட்டேயாவது போய் ஜெய் போல ஜாடைலே அவன் இருக்கான்னு பேச முடியுமா? அதைத் தான் அப்படிச் சொன்னேன்.” என்றாள் பவி.
“நீ சொல்றதும் சரிதான்..உன் முகம் கூட கொஞ்சம் மாறிப் போயிருக்கு..அப்ப நோக்கு இவ்வளவு தலைமுடி கிடையாது..நீ இத்தனை உயரமா இருக்கலே..சில பேர்தான் குழந்தைலே பார்த்தது போலவே இருக்கா.”என்று சொன்ன சுகந்தியின் மனது மீண்டும் நிவேதிதாவின் பர்த்டே பார்ட்டிக்குத் தாவியது.
“ஏன் டா..குழந்தைக்குப் பர்த் டே கேக் பிடிச்சுதா?” என்று கேட்டார்.
“நான் கொண்டு போன உடனேயே டப்பாவை திறந்து காட்ட சொல்லி, அதுலே இருந்த எல்லா ஷேப்ஸையும் ஹாப்பியா கை தட்டிண்டே ஐடெண்டிஃபை பண்ணினா.” என்றான் தீபக்.
“கேக் பண்றதது தான் நான்..அதை எப்படி பண்ணனும்ங்கறது எப்பவும் பவியோட ஐடியாதான்..அதே போல கேக்கோட சாக்லெட்ன்னு அவதான் ஆரம்பிச்சா..பர்த்டே குழந்தைகள்கிட்டே பேசி அவாளுக்குப் பிடிச்சதை அதுலே கொண்டு வர முயற்சி செய்வா..அதனால் தான் திருச்சிலே நம்ம கேக், சாக்லெட் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது..டவுன்ஷிப்லே இருக்கறச்சே ஒரே போல கேக்தான் பண்ணிண்டிருந்தேன்.” என்றார் சுகந்தி.
“கேக் ஷாப்லே கேட்லாக் வைச்சிருப்பா ம்மா…குழந்தைகளுக்குப் பிடிச்ச மாதிரிதான் அவாளும் பண்ணித் தருவா..அது பெரிய லெவல்..நாம சின்ன லெவல்.” என்றாள் பவி.
அதற்குள் டப்பாவைத் திறந்து இன்னொரு சாக்லெட்டை வாயில் போட்டுக் கொண்டான் தீபக்.
“டேய் போதும் டா..நோக்கும் பல் கெட்டுப் போயிடப் போகறது.” என்று சத்தம் போட்டார் சுகந்தி.
“அம்மா, நீயும் ஒண்ணு சாப்பிட்டு பாரு..அப்புறம் நீயும் ஒண்ணோட நிறுத்த மாட்ட.”
“பவி..அவனைக் கண்டிக்க மாட்டியா? சின்ன குழந்தையாட்டம் சாக்லெட் சாப்டிண்டு இருக்கான்.” என்று பவியிடம் சுகந்தி முறையிட அதைக் கேட்க பவி அங்கில்லை.பால்கனியில் நின்று கொண்டிருந்த பவி, மிஸஸ் ஸென்னின் அடுத்த வீட்டுக்காரன் தினமும் ஆதித்ய ஹிருதயம் சொல்லும் அமெரிக்கன் நின்ஜாவா?” என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தாள்.
“ஜெய், இன்னைக்குப் போதும் டா..உள்ள வை.” என்று அதட்டினார் ருக்மிணி.
“என்னோட ஷேர் கேக்கை நீயும் அப்பாவும் சாப்பிடுங்கோ..நான் உங்க சாக்லெட் ஷேரை எடுத்துக்கறேன்.” என்று சொல்லி, இதய வடிவில் இருந்த சாக்லெட்டை அவசரமாக வாயில் போட்டுக் கொண்டான் ஜெய்.
“என்ன டா இது..அமெரிக்காலேர்ந்து நீ வாங்கிண்டு வந்த சாக்லெட் அப்படியே இருக்கு..நேத்து பர்த்டே பார்ட்டிலே கொடுத்த சாக்லெட் டக்டக்குனு காலி ஆயிண்டிருக்கு.”
“நானும் சாப்பிட்டேண்டா..நன்னா தான் பண்ணியிருக்கா..போதும் நீ சாப்பிட்டது…ஸமிக்ஷாக்கு வை.” என்றார் ருக்மிணி.
“ஜஸ்ட் ஒன் மோர்.” என்று சொல்லி மறுபடியும் ஒரு சாக்லெட்டை வாயில் போட்டுக் கொண்டான் ஜெய்.
“அவளுக்குதான் நேத்து அமெரிக்காலேர்ந்து வாங்கிண்டு வந்தது கொண்டு போய் கொடுத்தாச்சே.” என்றார் பாலகிருஷ்ணன்.
“அமெரிக்காலேர்ந்து வாங்கிண்டு வந்ததுக்கும் ஆத்துலே பண்ணினதுக்கும் வித்தியாசம் இருக்கு ண்ணா..நீங்களும் ஒண்ணு சாப்பிட்டுப் பாருங்கோ.” என்று தனக்கு ஒரு சாக்லெட்டை எடுத்துக் கொண்டு பாலகிருஷ்ணனுக்கும் ஒன்று கொடுத்து விட்டு, டப்பாவை அவர் மூடுமுன் மறுபடியும் ஒன்று எடுத்துக் கொண்டான் ஜெய். அவன் கையைத் தட்டி விட பார்த்த ருக்மிணி தோல்வி அடைந்தார்.
“என்ன டா இது? சின்ன வயசுலே கூட நீ இவ்வளவு சாக்லெட் சாப்பிட மாட்ட..போதும்..பல்லு கெட்டுப் போயிட போகறது.” என்று அதட்டினார் ருக்மிணி.
அவனுடைய திடீர் சாக்லெட் டெம்ப்டெஷனுக்கு (temptation) காரணம் அதை உருவாக்கிய அவனின் இன்ஸ்பிரெஷன்தானென்று ஜெய்க்கும் அவனின் AI ஐக்கும் நில் ஸென்ஸெஷன் (nil sensation).